Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

காதலின் வலி

Recommended Posts

காதலின் வலி

நீண்டிருந்த

கடற்கரை மணல்

வந்து கரையை

தொட்டு விட்டு

மீளும் அலை

கடலை அள்ளி

தின்று

ஏப்பம் விடத் துடிக்கும்

வானம் கடலுடன்

கைகோர்த்தபடி

கட்டித் தழுவியது

நடுக்கடலில்

தவிக்குது

துடுப்பிழந்த

ஒரு படகு

கரைசேரும் ஆவலுடன்

காதலில் விழுந்த

என் இதயம் போல

- தியா -

Share this post


Link to post
Share on other sites

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்ப சகலரையும் பொதுவான பெரும் வலி சூழ்ந்து கொன்டதால் உங்கள் காதல் வலி க்கு கருத்து எழுதாமல் விட்டிருக்கலாம்.இப்ப நான் கூட உங்களை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில்தான் இதை பதிகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

துடுப்பு இழந்த படகாக வலிக்கும் இதயம் ஒரு நாள் .........வலிமை பெறும் . வலி புரிகிறது

தொடருங்கள் உங்கள் கவிதைகளை. நிலாமதி அக்கா .

Share this post


Link to post
Share on other sites

 உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்ப சகலரையும் பொதுவான பெரும் வலி சூழ்ந்து கொன்டதால் உங்கள் காதல் வலி க்கு கருத்து எழுதாமல் விட்டிருக்கலாம்.

சஜீவன் ,

உங்கள் கருத்து சரியானதுதான் இது எனது முதல் படைப்பு தொடர்ந்து தாயகம் பற்றிய படைப்புக்களை நான் தருவேன்.

நிலாமதி உங்கள் கருத்துக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

"காதலின் வலி" தியாவின் கன்னிக்கவிதை அழகு. யாரையோ நீங்கள் யாழில் நினைவூட்டுகிறீர்கள்(கவிதையி

Share this post


Link to post
Share on other sites

தீயாவுக்கு

காதலின் வலி சொன்ன உங்கள் கன்னிக் கவிதை அழகு... மேலும் தொடர வாழ்த்துக்கள்..

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ^_^

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது :wub::)

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது :wub::)

காதலின்றி முனியுமில்லை.. ^_^

Share this post


Link to post
Share on other sites

காதலின்றி முனியுமில்லை.. :rolleyes:

ச்ச ...நம்ம விளக்கம் எல்லோருக்கும் தெரியும் போல :rolleyes::rolleyes::lol:

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது

சொந்த மண்ணின்

பெருமைகளை

சுவையுடனே சொல்ல

என் நா

எப்போதும் தடுத்ததில்லை

கிட்டிப் புள்ளடித்து

கிளித்தட்டு மறித்து

எட்டியெட்டி நின்று

கெந்தித்தொட்டு விளையாடி -எம்

செம்மண் பூமியிலே

பட்டகதை சொல்லிடவா?

கன்னியம்மன் கோயிலிலே

காரிருள் பூசைவேளையிலே

எம்

சுட்டிப் பருவமதில்

கள்ளன் பொலிஸ்

விளையாடி

விழுந்துடைபட்ட கதை

சொல்லிடவா?

அகதியாகி

அல்லல் பட்டு

அலைந்த போது

அரை றாத்தல் பாணுக்கு

அஞ்சு மணிநேரம்

வரிசை கட்டி நின்ற

சோகக்கதை சொல்லிடவா?

புழுத்த பயற்றையும்

உழுத்த உழுந்தையும்

சோற்றுக் குதவாத

அரிசியையும்

அகதிக்கென்று தந்திடவே

அதை

கை கட்டி நின்று

வாங்கியுண்ட

கதை சொல்லிடவா?

செம்மணி தாண்டி வந்து

கிளாலிக் கரையினிலே

மழை நீரை

குடைபிடித்து

மடிச்சீலை

அதில் நனைத்து

அடிநாக்கில்

பிழிந்து விட்டு

தாகம் தணித்த அந்த

தவிப்புக் கதை

சொல்லவா?

தமிழனுக்கு

தோழ் வலிமையுண்டு

தோழமை உணர்வுண்டு

விரைவில் மீண்டு புது

யுகம் படைக்கும்

வெறியுண்டு

தமிழனாய் வாழ்வோம்

தலை நிமிந்து நிற்போம்

Share this post


Link to post
Share on other sites

அகதியாகி

அல்லல் பட்டு

அலைந்த போது

அரை றாத்தல் பாணுக்கு

அஞ்சு மணிநேரம்

வரிசை கட்டி நின்ற

சோகக்கதை சொல்லிடவா?

ஒருகணம் கடந்தகாலம் சட்டென படம் போலவிரிந்தது சோகம் என்னவென்றால் நிகழ்காலம் அதைவிடக்கொடுமையானதாக இருக்கிறது...பாராட்டுக்கள் தியா தொடர்ந்தெழுதுங்கள்..

Share this post


Link to post
Share on other sites

அகதியாகி 

அல்லல் பட்டு 

அலைந்த போது 

அரை றாத்தல் பாணுக்கு 

அஞ்சு மணிநேரம் 

வரிசை கட்டி நின்ற 

சோகக்கதை சொல்லிடவா?

இது தமிழனுக்கென்று எழுதப்பட்ட தலைவிதியோ என்னவோ இன்னமும் முடிந்தபாடில்லை.

காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்கு நன்றி ஜீவராஜ்

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம்.    நன்றி சிறி, ஆமாம் எனக்கும் தான் நேற்று வியப்பாக இருந்திச்சு, வழக்கமாக நான் கொடுக்கும் பணங்களைதான் அவா யாருக்கும் கொடுப்பா ஊருக்கு போகும்போது. இப்ப ரியூஷனில்  உழைப்பதால் அவரின் வங்கிகணக்கில் கொஞ்ச காசிருக்கு. அதை நல்ல வழியில் செலவழிக்க பழுக்கனும்.. சின்னவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணமிருக்கு. 
    • இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் TOM ROBST கோப்புப்படம் வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு.  இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே.  அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை கடந்த இரண்டு மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறது அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை.  ஒரு புறம் பெருக்கெடுக்கும் வருடாந்திர வெள்ளம், மறுபுறம் மண் சரிவு, இன்னொரு பக்கத்தில் தற்போது பெருகிவரும் கொரோனா தொற்று என்று முப்புறமும் பேரிடர்கள் சூழ்ந்து தாக்கும் நிலையில், இடி மின்னலை முன் கணிப்பதற்கான இந்த தொழில்நுட்பம் அந்த மாநிலத்துக்கு ஒரு சிறு ஆசுவாசத்தை வழங்குகிறது.  அசாம் மாநில உள்துறை செயலாளரும், அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான மு.ச.மணிவண்ணன் இந்த தொழில்நுட்பம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். மு.ச.மணிவண்ணன் "அமெரிக்க நிறுவனமான எர்த் டாட் நெட் இந்த தொழில்நுட்பத்தை எங்களுக்கு வழங்குகிறது. ஏற்கெனவே ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.  இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும்" என்கிறார் மணிவண்ணன். "இடி மின்னலின் பாதையை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறோம். அதே நேரம் அசாம் மாநிலத்தில் எங்கேயாவது இடி தாக்கும் என்றால் அது குறித்து 45 நிமிடம் முன்பே கணித்துவிடும் அமெரிக்க நிறுவனம் அது குறித்து, அந்த ஊர் எந்த வட்டத்தில் வருகிறதோ அந்த வட்டாட்சியருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். உடனடியாக வட்டாட்சியர் அதைப் பற்றி குறிப்பிட்ட ஊருக்கு அழைத்து எச்சரிக்கை விடுப்பார் என்று கூறும் மணிவண்ணன், இதற்காக வட்டவாரியாக உள்ளூர் அதிகாரிகளின் எண்கள் எர்த் டாட் நெட்டிடம் பகிரப்பட்டுள்ளன என்கிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் முதல், அதாவது கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக கூறும் அவர், இதுவரை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாக இருந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். "கடந்த ஆண்டு அசாமில் இடி மின்னல் தாக்கில் 42 பேர் இறந்துள்ளார்கள். இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த கிராமத்தில் இடி தாக்கப் போகிறது என்று 45 நிமிடம் முன்பாகவே செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாகவே இருந்துள்ளன. ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. இதற்காக, ஊராட்சிகளுக்கு ஒலி பெருக்கிகளைத் தந்து அதன் மூலம் அறிவிப்பு செய்யலாமா என்பது போன்ற யோசனைகள் இருக்கின்றன" என்றார் மணிவண்ணன். உயிர் காக்கும் தொழில்நுட்பம்  இதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கிறதா என்று கேட்டபோது, வெறும் இரண்டு மாதம் முன்பிருந்துதான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்துபார்த்தால், கடந்த ஆண்டை ஒப்பிட எவ்வளவுதூரம் இடி மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்பது தெரியவரும். அப்படி ஒரு ஆய்வை செய்ய சிறிது காலம் பிடிக்கும் என்கிறார் மணிவண்ணன்.  "மகவு பிறப்பதும், மழை வருவதும் எப்போது நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது" என்று கூறும் பழமொழி ஒன்று தமிழில் உண்டு. ஆனால், புயல், மழை போன்றவற்றை கணிக்கும் தொழில்நுட்பத்தில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதன் மூலம் புயல் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.  சுனாமியை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் ஏற்பாடுகள் வந்துவிட்டன. நிலநடுக்கத்தை முன் கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்துவந்தாலும் ஒரு நிமிடத்துக்கு முன்பு அதைக் கணிப்பதுகூட இன்னும் சவாலானதாகவே இருக்கிறது.  இந்நிலையில் இடி மின்னல் என்னும் ஓர் இயற்கை இடர்ப்பாட்டை முன் கணிக்கும் தொழில்நுட்பம் மனித உயிரிழப்புகளை தவிர்ப்பதில் உதவி செய்யக்கூடும்.  தமிழகத்திலும் ஆண்டுதோறும் இடிமின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் தமிழ்நாட்டுக்கும் எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடும்.    https://www.bbc.com/tamil/science-52926994  
    • இன்று சந்திரக் கிரகணம் நிகழும் நேர விபரங்கள் 2020ஆம் ஆண்டுக்கான 2 ஆவது சந்திர கிரகணம் இன்று 05ஆம் திகதி நடைபெறுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15மணியளவில் கிரகணம் ஆரம்பமாகிறது. அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று நிகழவுள்ள சந்திரக் கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திரக் கிரகணம் என அழைக்கவுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை வைத்து ஒரு கடித்தது போல நிழல் மறைத்திருக்கும். அதனால்தான் இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ளனர். சந்திரனின் 57சதவிகிதம் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தாண்டு நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. ஜனவரி 10-ஐ தவிர்த்து, இன்று 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. -(3)   http://www.samakalam.com/செய்திகள்/இன்று-சந்திரக்-கிரகணம்-ந/ சந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி காணலாம்? கிருத்திகா கண்ணன் பிபிசி தமிழ் EPA இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், ஜூன் 5ஆம் தேதி மற்றும் ஜூன் 6ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.  இந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.  தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும்.  சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான கிரகணம் அல்ல.  சந்திர கிரகணத்தின்போது, நடுவில் இருக்கும் 'அம்ரா' (Umbra) எனப்படும் பூமியின் நிலவின் உட்பகுதி நிலவின் மேற்பகுதி மீது விழும்.  அவ்வாறு விழும் நிழல், நிலவை முழுமையாக மறைப்பதால், நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். அதுவே 'பிளட் மூன்' (குருதி நிலவு) என்று அழைக்கப்படுகிறது. பெனம்ரா சந்திர கிரகணம் என்றால் என்ன? நாளை, ஜுன் 5ஆம் தேதி இரவு முதல் நிகழப்போகும் சந்திர கிரகணம், பெனம்ரா (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. EPA கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.  இதே போன்ற 'புறநிழல் நிலவு மறைப்பு' எனப்படும் சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் நிகழ்ந்தது. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன், "இது பெனம்ரா கிரகணம் (புறநிழல் நிலவு மறைப்பு) என்பதால், சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் முழுமையாக பார்க்க முடியாது." என்கிறார். "இத்தகைய கிரணத்தின்போது, சூரியனின் ஒளி, சிறிதளவு நிலவில் நேரடியாக விழும். அதனால், நிலவின் வண்ணத்தின் ஏற்படும் மாற்ற பெரிதாக நம் கண்களுக்கு தெரியாது," என்று விளக்குகிறார்.  நாளை சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் (கதிரவ மறைப்பு) இரண்டு வாரங்களில் நிகழவுள்ளது.  அது ஜூன் 21ஆம் தேதி காலை 9.15 முதல் மதியம் 3.04 வரை நிகழும்.   https://www.bbc.com/tamil/science-52919587