-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
பால் மாவின், விலையில் மாற்றம். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 24ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பால்மாவின்-விலையில்-மாற்/ -
By தமிழ் சிறி · Posted
வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/வடக்கில்-இடம்பெற்ற-ஊழல்/ -
By தமிழ் சிறி · Posted
தமிழ் பெண்களின் நெற்றிப்பொட்டு விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் பேணிப்பாதுகாத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாட்டின் பிரஜைகள் என்ற சமத்துவத்திற்காக அவர்கள் ஏங்கி நிற்கின்ற சூழலில் மிகமுக்கிய விடயமாக கடவுச்சீட்டில் நெற்றிப் பொட்டை நீக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அறிவிப்பொன்றை குடிவரவு, குடியகவல்வு திணைக்களம் செய்துள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. நெற்றிப்பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நெற்றிப்பொட்டு வைப்பது பரம்பரை ரீதியாக கடத்தப்பட்ட பழக்கமாகவும் விஞ்ஞான ரீதியிலும் இன, மத, சமூக அடையாளகமாகவும் அது காணப்படுகின்றது. போர் உக்கிரமாக நடைபெற்ற காலங்களில்கூட தமிழ் பெண்கள் தமது நெற்றிப்பொட்டு வைக்கும் பாரம்பரியத்தினை கைவிட்டிருக்கவில்லை. அவ்வாறான சூழலில் சர்வதேச நியமனங்களின் பிரகாரம் கடவுச்சீட்டு உருவாக்கப்படுகின்றது என்பதற்காக ஒரு இனத்தின் பாரம்பரிய பழக்கத்தையும் வழக்கத்தையும் மாற்ற முயல்வதானது பெரும் தவறான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக பலதரப்பட்டவர்களும் பெண்கள் அமைப்புக்களும் என்னைத்தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். அதனடிப்படையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இந்த நெற்றிப்பொட்டு விவகாரத்தினை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக உறுதியளித்தார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான பிரதிபலிப்பினை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்துள்ளேன். தமிழினத்தின் பாரம்பரிய செயற்பாடுகளையும் பண்புகளையும் மறுதலிக்கும் எந்தவொரு விடயத்திற்கும் ஒருபோதும் துணைபோவதற்கோ இடமளிப்பதற்கோ முடியாது” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/தமிழ்-பெண்களின்-நெற்றிப்/ -
By தமிழ் சிறி · Posted
காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு திருகோணமலை – உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவர்கள் இருவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று காலை படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் காணாமல்போன ஏனைய இருவரை தேடும் நடவடிக்கை நேற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/காணாமல்போன-மீனவர்களை-தேட/ -
By தமிழ் சிறி · Posted
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது, இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது.ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.இந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்.Read more at: https://tamil.oneindia.com/news/delhi/why-tamils-in-sri-lanka-are-not-covered-under-cab-rajnath-singh-explain-370782.html
-