Jump to content

ஊடகங்களில் காசா யுத்தமும் வன்னி யுத்தமும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசா நிலை வேறு வன்னியில் உள்ள நிலை வேறு. காசாவில் வைத்தியசாலை.. பாடசாலை தாக்கப்பட்டால்.. அதை சர்வதேச ஊடகங்கள் படம் பிடிக்க.. செய்தியாக்க இஸ்ரேல் அனுமதிக்கிறது. ஆனால் சிறீலங்கா.. அப்படி அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்றி.. அப்படி சம்பவங்களே நடக்கவில்லை என்று மறுதளிக்கிறது. சிறீலங்கா இப்படிச் செய்ய இந்த உலகம் தான் அதற்குக் கற்றுக் கொடுத்ததும்.

போர்க்களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி செய்தியாளர்களை பிரேமதாச அரசு விரட்டி அடித்தது. அன்றிலிருந்து.. சர்வதேச செய்தியாளர்கள் உட்பட உள்ளூர் செய்தியாளர்கள்.. அங்கு போக அனுமதிக்கப்படுவதில்லை.

காசா பிரச்சனை தொடர்பில் கமாஸ் வெளியிடும் செய்திகளை அல்ல ஊடகங்கள் காவி வருகின்றன. ஆனால் வன்னி போர்களத்தில்.. மக்கள் அவலம் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பினர் தான் பெரும்பாலும் செய்திகளை வெளி உலகுக்கு தந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டும் தான் அங்கு பணியாற்ற முடிகிறது. மற்றவர்கள் பணியாற்ற சிறீலங்கா அரசு அனுமதிப்பதில்லை. அந்த வகையில்.. புலிகள் மீதான நம்பிக்கை உள்ள ஊடகங்கள் அவற்றை வெளியிடுகின்றன. இல்லாதவை தவிர்க்கின்றன.

அடிப்படையில்.. சிறீலங்கா அரசின் இன அழிப்புப் போரே இஸ்ரேலின் போரை விட மிக மோசமானது. இஸ்ரேல்.. உணவு வழங்கலுக்காக போரை நிறுத்துகிறது. ஆனால் சிறீலங்காப் பிரதமரோ.. வன்னியில் உள்ளவர்களுக்கு நாம் தான் உணவூட்ட வேண்டி இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார். உணவை ஆயுதமாகப் பாவிக்க தூண்டுகிறார். அதுமட்டுமன்றி.. காசாவில் தாக்குதல் என்றால் மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் துடிக்கிறார்கள். ஆனால் வன்னியில் பிரச்சனை என்றால் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு.. வவுனியா.. திருமலையில் தமிழர்கள் வாழாதிருக்கின்றனர். சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு ஊர்வலம் போகின்றனர்..! இந்த நிலையா.. இருக்கிறது... மேற்குக் கரையில்..???!

பலஸ்தீனர்களுக்கு இனப்பற்று அதிகம். தேசப்பற்று அதிகம். அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருப்பினும்.. பலஸ்தீனம் என்று வரும்போது.. எல்லா பலஸ்தீனர்களும் ஒன்றாகி விடுகின்றனர். ஆனால் நம்மவர்கள் அப்படியா..??! குழம்பிய குட்டையில்.. மீன்பிடிக்க என்றே.. ஒரு எட்டப்ப கூட்டமும்.. அதன் வழி நடக்க மந்தைகள் போன்ற மக்கள் கூட்டமும் நம்மிடம் இருக்கிறதே. அது எமது சாபக்கேடு.

நம்முடைய தமிழர் ஒருவரே காசா பற்றி செலுத்தும் அக்கறையை வன்னி மீது செலுத்த முடியவில்லை. அவர் கமாஸை காரணம் காட்டி காசா மக்களைப் புறக்கணிக்கவில்லை. ஆனால் வன்னி என்றதும்.. விடுதலைப்புலிகளை காரணம் காட்டி மக்களை புறக்கணிக்கின்றார். இப்படியானவர்களை ஐ நா பிரதிநிதிகளாக்கி வைத்திருப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

கமாஸ்.. பெண்களை போராளிகளாக்கிக் கொண்டிருக்கிறது. தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அப்படி இருந்தும்.. மேற்படி பெண்மணி.. காசா மக்களிற்காக உரையாற்றுகிறார். ஆனால்.. வன்னி மக்கள் என்ற உடன்.. விடுதலைப்புலிகள் தான் முன்னிறுத்தப்படுகின்றனர்.. அது ஏன்..??! வன்னி மக்கள் செய்த.. பாவமா..???! புரியாத உலக நியதி.. இது..! முதலில் இதற்கு விளக்கம் சொல்லட்டும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

எங்கட சனங்கள் கூடினாலே எங்கட பிரச்சனையை கதைக்கிறங்களில்லை..... எப்பிடியாது கதையை தொடக்கி இது இதுகளை செய்யவேணுமெண்டு தொடங்கினா திடீர்திடீரெண்டு காணாமல் போறங்கள். கனகவேண்டாம், இங்க யாழ்க்களத்திலேயே எத்தனைபேர் இருக்கிறங்கள் கிளி போனதோட போனாங்கள் இதிரும்பி வாரதா கனேல்லை.

சிலபேர் என்னடாவெண்டா ஊருக்கு இனி பிரச்சனை இல்லாமல் போய்வரலாமாம்.... இப்பிடி இருக்கு எங்கட தமித்தேசியம்.

பலஸ்தீனர்களிடம்.. அரசியல் வேறுபாடுகள் உள்ளன. பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால்.. பலஸ்தீன தேசம் என்ற உடன்.. இஸ்ரேல் அடிக்கிறது என்ற உடன்.. அவர்கள்.. முதலில்.. தமது தேசத்தை.. மக்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். ஒற்றுமைப்படுகின்றனர்.

ஆனால்.. நம்மில் உள்ளவர்கள்.. சொந்த மக்களின் அழிவிலும்.. எப்படி சிங்களவனுக்கு சேவகம் செய்து பிழைப்பை ஓட்டலாம் என்றே நினைக்கின்றனர். இதுதான்.. அவர்களின் போராட்டம்.. உலக கவனத்தை அதிகம் பெறவும்.. நாம்.. எமது மக்களின் துயரை வெளிக்கொணரக் கூட படாதபாடு பட வேண்டியும் இருக்கிறது.

தென்னிலங்கையில்.. கிளைமோர் வெடித்தால் அழுகிறான்.. ஆனந்த சங்கரி. வன்னியில் பாடசாலை.. வைத்தியசாலை தாக்கப்பட்டு மக்கள் காயமடைந்ததும்.. அதை புலிகளாகத்தான் பார்க்கிறான். ஆனால் காசாவில்.. அவை தாக்கப்பட்டால் கமாஸின் இடங்களாக இனங்காணப்படுவதில்லை. காரணம்.. நடுநிலைச் செய்தியாயளர்களை இஸ்ரேல் அனுமதிப்பதுதான். பலஸ்தீனர்களும் அனுமதிப்பதுதான்.

எப்பவாவது.. டக்கிளஸ் தேவனந்தா.. முரளிதரன்.. சங்கரி.. வன்னி மக்களின் சமீபத்திய இழப்புக்கள் குறித்து பேசியிருக்கின்றனரா.. இல்லை. மாறாக.... பாதை திறப்புக்கு விழா எடுக்கின்றனர். கூட்டம் சேர்க்கின்றனர். சிங்கக் கொடி ஏற்றுகின்றனர். பிற மாவட்ட தமிழர்கள்.. ஒரு அடையாள வேலை நிறுத்தம்.. அல்லது ஹர்த்தாலைக் கூட வன்னி துயரை வெளிப்படுத்த நடத்த முன்வரவில்லை. ஆனால் எங்கோ இருக்கும் திருமாவளவன்.. உண்ணா நோன்பிருக்கிறார்.

கேடுகெட்ட ஈனப்பிறப்புக்கள்.. நம்ம தமிழர்கள்..! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

பலஸ்தீனர்களுக்கு இனப்பற்று அதிகம். தேசப்பற்று அதிகம். அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருப்பினும்.. பலஸ்தீனம் என்று வரும்போது.. எல்லா பலஸ்தீனர்களும் ஒன்றாகி விடுகின்றனர். ஆனால் நம்மவர்கள் அப்படியா..??! குழம்பிய குட்டையில்.. மீன்பிடிக்க என்றே.. ஒரு எட்டப்ப கூட்டமும்.. அதன் வழி நடக்க மந்தைகள் போன்ற மக்கள் கூட்டமும் நம்மிடம் இருக்கிறதே. அது எமது சாபக்கேடு.

நம்முடைய தமிழர் ஒருவரே காசா பற்றி செலுத்தும் அக்கறையை வன்னி மீது செலுத்த முடியவில்லை. அவர் கமாஸை காரணம் காட்டி காசா மக்களைப் புறக்கணிக்கவில்லை. ஆனால் வன்னி என்றதும்.. விடுதலைப்புலிகளை காரணம் காட்டி மக்களை புறக்கணிக்கின்றார். இப்படியானவர்களை ஐ நா பிரதிநிதிகளாக்கி வைத்திருப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

யாழில் எழுதும் பலர் (நம்மவர்களில் பெரும்பாலானோர்) டெனிஸ் ரசிகர்கள் போன்றவர்கள்.

யார் வெல்கிறார்களோ அந்தப் பக்கம் போவர்கள். இல்லாட்டி காணமலே போவார்கள்.

இவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடி என்ன பிரயோசனம்.

உண்மையானவன் தோற்றாலும் நிற்பான்.

Link to comment
Share on other sites

தமிழ்நெற் மற்றும் WAFA பலஸ்தீனத்தின் செய்தி சேவைகளின் archive இல் போய் கடந்த வாரங்களில் வந்த இராணு செய்திகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கவும்.

http://www.tamilnet.com/

http://english.wafa.ps/

Link to comment
Share on other sites

யாழில் எழுதும் பலர் (நம்மவர்களில் பெரும்பாலானோர்) டெனிஸ் ரசிகர்கள் போன்றவர்கள்.

யார் வெல்கிறார்களோ அந்தப் பக்கம் போவர்கள். இல்லாட்டி காணமலே போவார்கள்.

இவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடி என்ன பிரயோசனம்.

உண்மையானவன் தோற்றாலும் நிற்பான்.

ம்.ம்.ம்.என்னத்தை சொல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்முடைய தமிழர் ஒருவரே காசா பற்றி செலுத்தும் அக்கறையை வன்னி மீது செலுத்த முடியவில்லை. அவர் கமாஸை காரணம் காட்டி காசா மக்களைப் புறக்கணிக்கவில்லை. ஆனால் வன்னி என்றதும்.. விடுதலைப்புலிகளை காரணம் காட்டி மக்களை புறக்கணிக்கின்றார். இப்படியானவர்களை ஐ நா பிரதிநிதிகளாக்கி வைத்திருப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

பெயர் தான் தமிழ் ,மற்றவை எல்லாம் மேற்குலக கிறிஸ்துவ நாகரிகமும்.ஜனநாயக கொள்கைகள்தான் அவரின் பின் புலம் .

Link to comment
Share on other sites

இந்தமாதிரி காசைக்குடுத்துட்டம் இனி அவயல் அடிபடத்தான் வேண்டுமெண்டு அடம்பிடிக்கிறவங்களும் இருக்கிறாங்கள்...

என்னதான் இருந்தாலும் கடைசிவரை எங்கள் இனத்துக்காக வாழவோம் இனத்துக்குகாகவே சாவோமென்று இருப்பவர்கள் மிகக்குறைவுதான்.... வெளில இருக்கிறாக்கள் ஒன்றும் சாகத்தேவையில்லை குறைந்தது வாழவாவது முயற்ச்சிக்கலாமே?

சாகுறதுக்குத்தான் ஆரோ பெத்தபிள்ளைகள் வன்னில இருக்கிறாங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனர்களிடம்.. அரசியல் வேறுபாடுகள் உள்ளன. பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால்.. பலஸ்தீன தேசம் என்ற உடன்.. இஸ்ரேல் அடிக்கிறது என்ற உடன்.. அவர்கள்.. முதலில்.. தமது தேசத்தை.. மக்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். ஒற்றுமைப்படுகின்றனர்.

ஆனால்.. நம்மில் உள்ளவர்கள்.. சொந்த மக்களின் அழிவிலும்.. எப்படி சிங்களவனுக்கு சேவகம் செய்து பிழைப்பை ஓட்டலாம் என்றே நினைக்கின்றனர். இதுதான்.. அவர்களின் போராட்டம்.. உலக கவனத்தை அதிகம் பெறவும்.. நாம்.. எமது மக்களின் துயரை வெளிக்கொணரக் கூட படாதபாடு பட வேண்டியும் இருக்கிறது.

தென்னிலங்கையில்.. கிளைமோர் வெடித்தால் அழுகிறான்.. ஆனந்த சங்கரி. வன்னியில் பாடசாலை.. வைத்தியசாலை தாக்கப்பட்டு மக்கள் காயமடைந்ததும்.. அதை புலிகளாகத்தான் பார்க்கிறான். ஆனால் காசாவில்.. அவை தாக்கப்பட்டால் கமாஸின் இடங்களாக இனங்காணப்படுவதில்லை. காரணம்.. நடுநிலைச் செய்தியாயளர்களை இஸ்ரேல் அனுமதிப்பதுதான். பலஸ்தீனர்களும் அனுமதிப்பதுதான்.

எப்பவாவது.. டக்கிளஸ் தேவனந்தா.. முரளிதரன்.. சங்கரி.. வன்னி மக்களின் சமீபத்திய இழப்புக்கள் குறித்து பேசியிருக்கின்றனரா.. இல்லை. மாறாக.... பாதை திறப்புக்கு விழா எடுக்கின்றனர். கூட்டம் சேர்க்கின்றனர். சிங்கக் கொடி ஏற்றுகின்றனர். பிற மாவட்ட தமிழர்கள்.. ஒரு அடையாள வேலை நிறுத்தம்.. அல்லது ஹர்த்தாலைக் கூட வன்னி துயரை வெளிப்படுத்த நடத்த முன்வரவில்லை. ஆனால் எங்கோ இருக்கும் திருமாவளவன்.. உண்ணா நோன்பிருக்கிறார்.

கேடுகெட்ட ஈனப்பிறப்புக்கள்.. நம்ம தமிழர்கள்..! :rolleyes: :rolleyes:

" எங்கட சனங்கள் கூடினாலே எங்கட பிரச்சனையை கதைக்கிறங்களில்லை..... எப்பிடியாது கதையை தொடக்கி இது இதுகளை செய்யவேணுமெண்டு தொடங்கினா திடீர்திடீரெண்டு காணாமல் போறங்கள். கனகவேண்டாம்இ இங்க யாழ்க்களத்திலேயே எத்தனைபேர் இருக்கிறங்கள் கிளி போனதோட போனாங்கள் இதிரும்பி வாரதா கனேல்லை.

சிலபேர் என்னடாவெண்டா ஊருக்கு இனி பிரச்சனை இல்லாமல் போய்வரலாமாம்.... இப்பிடி இருக்கு எங்கட தமித்தேசியம்."

இன்று இலங்கைத் தீவிலுள்ள முழுத் தமிழர்களுமே, இந்திய அரசின் துணையுடனான சிறீலங்கா அரசின் கொலைவலயத்துள் அகப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். இந்த நிலையிலேதான் இனப்படுகொலை மற்றும் படுகொலைகள், அரங்கேறிவருகிறது. இதிலே இந்த ஒட்டுக் குழுக்களின் காட்டிக் கொடுப்பு முதல் கொலை செய்வது வரை அடக்கம். இந்த நிலையில் தமிழர்கள் நினைத்தாலே கொன்று விடுவார்கள். பத்திரிகையாசிரியரையே படுகொலை செயபவர்கள் வேறையாரை விடுவார்கள். சரி அங்கிருப்போரை விடுவோம். நம்மில் எத்தனை பேர் செய்கிறோம் என்பதே முக்கியமானதோர் கேள்வி. நம்மில் எத்தனை பேர் தமிழ்மானம் காத்தல் என்பதை ஒரு கடைமையாகக் கொள்கின்றனர். சிந்திப்பார்களா?

இந்த ராதிகா குமாரசாமி அக்காவின்ர மின்னஞ்சலுக்கு எங்கட நிலமையை அனுப்பிக் கேட்கலாம். எங்கட கண்டணங்களை எழுதலாம்.

மின்னஞ்சல் தெரிந்தவர் யாழில் இணைத்துவிடுங்கள். நன்றி !

- எதிரியை எமக்குச் சாதகமான நேரம் வரும்வரை வேண்டுமாணால் தோளில் தூக்குவதில் கூடத் தவறில்லை -

-------- நொச்சியான் ---

Link to comment
Share on other sites

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

2.இல்லாவிடில் எதிர்பாராத ஒரு சம்பவதாள் புலிகல் தமது திட்டங்கலில் மாறுதல் செய்ய வேன்டி ஏற்பட்டதா?

3.ஆனால் நாம் சர்வதேச நாடுகலிடம் போரை நிருத்தும்படி வேண்டுவது அவமானத்திற்கு உரியது அன்று, ஏன் என்றால் புலிகல் 2000 ஆண்டு உச்சத்துஇல் இருந்தப் போது இலங்கை இரானுவத்தை காத்தது இதே நாடுகள் தான் யால்பாணம் 2000 இல் கைபற்ரி இருந்தால் இபோது தனி நாடு ஒன்று உருவாகி இருக்கும். அதே போல் 1987 இலும் புலிகலை காத்த்து இந்தியா தான். அதுமட்டுமல்ல புலிகல் ஒன்றும் இலஙகை இரணுவதுடன் மட்டும் மோதவில்லய் கிட்டாதட்ட 7 நாடுகளுடன் போராடுகிறர்கல்

ஒரு விடயத்தை நாம் மறக்கக் கூடாது புலிகல் இப்போரில் வெல்லத் தேவை இல்லை DRAW காணும் அது வெற்ற்க்குச் சமன்

ஆனால் இராணுவம் புலிகலை 100% வென்றே ஆக வேண்டும்

இன்கு போராட்டததை காக்க வேண்டும், போர் வேற்றிக்கும் போராட்ட வெற்ரிக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.

Link to comment
Share on other sites

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

அண்ணா உங்களின் இந்தக்கேள்விக்கு பல பதில்கள் தரலாம்

இருந்தாலும் ஒருபதிலே இப்பொதைக்கு பொருத்தமானது... அதாவது நிலமைகள் எப்பவும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

சந்தர்ப்ப சூழலுக்கேற்ப புலிகளின் இதற்போதய பின்னகர்வுகள் தவிர்க்க முடியாதது மாத்திரமில்லை சரியாந்தும் கூட.

எதிர்ச்சமரையும் யுத்தத்தையும் தொடர்ந்து செய்வதால் ஆவது என்ன? போராட்டம் அடுத்த நிலைக்கு போகவேண்டும்.

இதை வெளில உள்ள நாங்கள் தான் அதிகமாச்செய்யவேண்டும்.

விடுதலைப்பாதை எப்பவுமே பலதிருப்பங்களுடையதுதான் இதுக்கு நாங்கள் ஒன்றும் விதி விலக்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

2.இல்லாவிடில் எதிர்பாராத ஒரு சம்பவதாள் புலிகல் தமது திட்டங்கலில் மாறுதல் செய்ய வேன்டி ஏற்பட்டதா?

3.ஆனால் நாம் சர்வதேச நாடுகலிடம் போரை நிருத்தும்படி வேண்டுவது அவமானத்திற்கு உரியது அன்று, ஏன் என்றால் புலிகல் 2000 ஆண்டு உச்சத்துஇல் இருந்தப் போது இலங்கை இரானுவத்தை காத்தது இதே நாடுகள் தான் யால்பாணம் 2000 இல் கைபற்ரி இருந்தால் இபோது தனி நாடு ஒன்று உருவாகி இருக்கும். அதே போல் 1987 இலும் புலிகலை காத்த்து இந்தியா தான். அதுமட்டுமல்ல புலிகல் ஒன்றும் இலகை இரணுவதுடன் மட்டும் மோதவில்லய் கிட்டாதட்ட 7 நாடுகளுடன் போராடுகிறர்கல்

ஒரு விடயத்தை நாம் மறக்கக் கூடாது புலிகல் இப்போரில் வெல்லத் தேவை இல்லை DRAW காணும் அது வெற்ற்க்குச் சமன்

ஆனால் இராணுவம் புலிகலை 100% வென்றே ஆக வேண்டும்

ன்கு போராட்டதை காக்க வேண்டும், போர் வேற்றிக்கும் போராட்ட வெற்ரிக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.

உங்கட கேள்விகளூக்கு விளக்குமாறு சீ...விளக்கம் பெறுமாறு பல தகவல்களைத் தரலாம் பாருங்கோ முதலில் எழுத்திப்பிழைகள் இல்லாமல் எழுதிப்பழகுங்கோ. எழுத்துப்பிழைகள் கண்ணைக்குத்திக்கிழிக்குது.

Link to comment
Share on other sites

யூதர்கள் முழு உலகுக்கும் காட்டி பலஸ்தீனியர்களை அழிக்கிறார்கள்.. சிங்களவர்கள் ஒருவருக்கும் (ஊடகத்துக்கும்) தெரியாமல் தமிழர்களை அழிக்கிறார்கள். மொத்தத்தில் உலகம் பார்வையாளர்களாக தான் இருக்கிறர்கள். ஏனெனில் இறப்பது தமிழரும் பலஸ்தீனியரும் தானே.

Link to comment
Share on other sites

பாலஸ்தீனர்களிற்கு இந்தளவு ஊடக முன்னிலை இருந்தும், சர்வதேச அனுதாபம் சார்பாக இருந்தும் என்ன பயன் என்பவர்கள் உணர மறுப்பது இறுதி இலக்கை அடைய எமது போராட்டம் பயணப்பதற்கு இருக்கும் தூரம் எவ்வளவு என்பதை.

பாலஸ்தீனப் போராட்டத்தை ஒப்பிடுவது அவர்களிற்கு இருக்கும் பலம் என்ன அதை எப்படி சாதித்தார்கள் அந்த நிலைக்கு நாம் எப்படி வரமுடியும் அதன் அவசியம் என்ன என்ற சிந்தனைகளை தூண்டுவதற்கே.

பாலஸ்தீனர்கள் - இஸ்ரேலியர்கள் என்ற 2 தரப்புகளில் அரசியல் பொருளாதார இராசதந்திர மற்றும் இராணுவ பலங்கள் என்பவை ஒப்பிடக் கூட முடியாதவை.

ஈழத்தமிழர் - சிங்களவர் என்ற 2 தரப்புகளிற்கிடையில் இருக்கும் அரசியல் பொருளாதார இராசதந்திர மற்றும் இராணுவ பலங்கள் என்பவை எல்லாம் சிங்களவர்களிற்கு சார்பாக இருந்தாலும் ஓரளவு ஒப்பிடக் கூடிய அளவு இடைவெளியில் இருக்கிறது.

எமக்கு தேவையான பொருளாதார அரசியல் இராசதந்திர மற்றும் இராணுவ பலத்தை எமது மக்களிடம் இருந்து அவர்களின் அறிவியல் பூர்வமான செயற்பாடுகள் கொண்டு தான் கட்டியெழுப்ப முடியும். இதை வேறு எவரும் எமக்கு நன்கொடையாக உதவியாகத் தரப்போவதில்லை.

எம்மை ஒரு அரசியல் சக்த்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ள குறைந்த பட்ச இராணுவ பலம் தேவை. அதன் பின்னர் நாம் சொந்த முயற்சியில் கட்டியெழுப்பும் இராணுவபலத்தை நியாயப்படுத்த அங்கீகாரம் பெற வேண்டிய தேவை இருக்கிறது. அந்த நியாயப்பாட்டை உருவாக்கி அங்கீகாரம் பெற்று கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலம் பாதுகாக்கப்பட இராசதந்திர செயற்பாடுகள் ஊடக முனைப்புகள் அவசியம். ஒரு நவீன தேசத்திற்கு உரிய அலகுகளாக இவை எல்லாமே ஒன்றை ஒன்று பாதுகாத்து பலப்படுத்திய படி தொடர்புபட்டதாக இயங்குகிறது.

போராட்டம் இறுதி இலக்கை அடைந்து வெற்றிகரமாக முடிவிற்கு வர நாமும் பல முனைகளில் முதலீடுகளை நேரம் பொருளாதார அறிவியல் ரீதியில் செய்ய வேண்டியிருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் எமக்கிருக்கும் இராணு பலத்தோடு பாலஸ்தீனர்களிற்கு இருக்கும் ஊடக முன்னிலை மற்றும் சர்வதேச அனுதாபம் கிடைக்கப் பெற்றால் அதன் ஒன்று திரண்ட தாக்கம் போராட்டத்தில் எதிரிமீது எப்படி இருக்கும்?

இந்த நிலை சமாதான காலத்தில் இருந்திருந்தால் சவால்கள் எப்படி கைய்யாளப்பட்டிருக்கும்? இதற்கான முதலீடுகள் முயற்சிகள் புலம்பெயர்ந்தவர்கள் கைகளில் தான் இருக்கிறது தாயகத்தில் இருப்பவர்கள் கைகளில் அல்ல.

இந்தக் காரணத்திற்காகத்தான் பாலஸ்தீனம் இங்கு ஒப்பிடப்படுகிறது.

அந்த பலம்தானே இப்ப கேள்விக் குறியோடு இருக்கு ,அரசில பலமே ஆத பாதளத்தில் இருக்கிறது புலம்பெயர் மக்களின் முயற்சியோ சான் ஏற முழம் சறுக்கிறது போல நிலமை அடுத்து இந்தியா பெயரை சொல்லும் போதே பெரிய கொட்டாவி வருது.........

Link to comment
Share on other sites

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

சரி அவர்கள் களத்தில் நின்று மடிகிறார்கள் அவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறது. ஆனால் வெளியில் நின்று உசுப்பேத்தி என்ன இன்னும் அடிக்கிறாங்களில்லை என்று புறுபுறுத்து பழங்கதை பேசியவர்கள் தான் குற்றவாளிகள்.

Link to comment
Share on other sites

அந்த பலம்தானே இப்ப கேள்விக் குறியோடு இருக்கு ,அரசில பலமே ஆத பாதளத்தில் இருக்கிறது புலம்பெயர் மக்களின் முயற்சியோ சான் ஏற முழம் சறுக்கிறது போல நிலமை அடுத்து இந்தியா பெயரை சொல்லும் போதே பெரிய கொட்டாவி வருது.........

இராணுவத்துறை அரசியல் துறை இராசதந்திர துறை ஊடகத்துறை என்று ஒண்டை ஒண்டு பலப்படுத்திய படி பின்னலாக இருந்தால் தான் ஒட்டுமொத்த பலம் பேணப்படும். ஒன்று பலமாக இல்லாவிட்டால் அதன் ஊடக மற்றவை பலமிழக்கப்பட்டு அழிக்கப்படும். அது தான் கடந்த 3..4 வருடங்களாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.

இந்தியா கருணா ஆனந்தசங்கரி டக்கிளஸ் மகிந்த எண்டு இரை மீட்டு கொட்டாவியும் சூ*வும் விட்டது தான் புலம்பெயர்ந்தவர்கள் செய்த சாதனை.

Link to comment
Share on other sites

பாலஸ்தீனர்களிற்கு இந்தளவு ஊடக முன்னிலை இருந்தும், சர்வதேச அனுதாபம் சார்பாக இருந்தும் என்ன பயன் என்பவர்கள் உணர மறுப்பது இறுதி இலக்கை அடைய எமது போராட்டம் பயணப்பதற்கு இருக்கும் தூரம் எவ்வளவு என்பதை.

பாலஸ்தீனப் போராட்டத்தை ஒப்பிடுவது அவர்களிற்கு இருக்கும் பலம் என்ன அதை எப்படி சாதித்தார்கள் அந்த நிலைக்கு நாம் எப்படி வரமுடியும் அதன் அவசியம் என்ன என்ற சிந்தனைகளை தூண்டுவதற்கே.

பாலஸ்தீனர்கள் - இஸ்ரேலியர்கள் என்ற 2 தரப்புகளில் அரசியல் பொருளாதார இராசதந்திர மற்றும் இராணுவ பலங்கள் என்பவை ஒப்பிடக் கூட முடியாதவை.

ஈழத்தமிழர் - சிங்களவர் என்ற 2 தரப்புகளிற்கிடையில் இருக்கும் அரசியல் பொருளாதார இராசதந்திர மற்றும் இராணுவ பலங்கள் என்பவை எல்லாம் சிங்களவர்களிற்கு சார்பாக இருந்தாலும் ஓரளவு ஒப்பிடக் கூடிய அளவு இடைவெளியில் இருக்கிறது.

எமக்கு தேவையான பொருளாதார அரசியல் இராசதந்திர மற்றும் இராணுவ பலத்தை எமது மக்களிடம் இருந்து அவர்களின் அறிவியல் பூர்வமான செயற்பாடுகள் கொண்டு தான் கட்டியெழுப்ப முடியும். இதை வேறு எவரும் எமக்கு நன்கொடையாக உதவியாகத் தரப்போவதில்லை.

எம்மை ஒரு அரசியல் சக்த்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ள குறைந்த பட்ச இராணுவ பலம் தேவை. அதன் பின்னர் நாம் சொந்த முயற்சியில் கட்டியெழுப்பும் இராணுவபலத்தை நியாயப்படுத்த அங்கீகாரம் பெற வேண்டிய தேவை இருக்கிறது. அந்த நியாயப்பாட்டை உருவாக்கி அங்கீகாரம் பெற்று கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலம் பாதுகாக்கப்பட இராசதந்திர செயற்பாடுகள் ஊடக முனைப்புகள் அவசியம். ஒரு நவீன தேசத்திற்கு உரிய அலகுகளாக இவை எல்லாமே ஒன்றை ஒன்று பாதுகாத்து பலப்படுத்திய படி தொடர்புபட்டதாக இயங்குகிறது.

போராட்டம் இறுதி இலக்கை அடைந்து வெற்றிகரமாக முடிவிற்கு வர நாமும் பல முனைகளில் முதலீடுகளை நேரம் பொருளாதார அறிவியல் ரீதியில் செய்ய வேண்டியிருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் எமக்கிருக்கும் இராணு பலத்தோடு பாலஸ்தீனர்களிற்கு இருக்கும் ஊடக முன்னிலை மற்றும் சர்வதேச அனுதாபம் கிடைக்கப் பெற்றால் அதன் ஒன்று திரண்ட தாக்கம் போராட்டத்தில் எதிரிமீது எப்படி இருக்கும்?

இந்த நிலை சமாதான காலத்தில் இருந்திருந்தால் சவால்கள் எப்படி கைய்யாளப்பட்டிருக்கும்? இதற்கான முதலீடுகள் முயற்சிகள் புலம்பெயர்ந்தவர்கள் கைகளில் தான் இருக்கிறது தாயகத்தில் இருப்பவர்கள் கைகளில் அல்ல.

இந்தக் காரணத்திற்காகத்தான் பாலஸ்தீனம் இங்கு ஒப்பிடப்படுகிறது.

மிகத் தெளிவான விளக்கம் கு.போ. நன்றி.

Link to comment
Share on other sites

எம்மை ஒரு அரசியல் சக்த்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ள குறைந்த பட்ச இராணுவ பலம் தேவை. அதன் பின்னர் நாம் சொந்த முயற்சியில் கட்டியெழுப்பும் இராணுவபலத்தை நியாயப்படுத்த அங்கீகாரம் பெற வேண்டிய தேவை இருக்கிறது. அந்த நியாயப்பாட்டை உருவாக்கி அங்கீகாரம் பெற்று கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலம் பாதுகாக்கப்பட இராசதந்திர செயற்பாடுகள் ஊடக முனைப்புகள் அவசியம். ஒரு நவீன தேசத்திற்கு உரிய அலகுகளாக இவை எல்லாமே ஒன்றை ஒன்று பாதுகாத்து பலப்படுத்திய படி தொடர்புபட்டதாக இயங்குகிறது.

நன்றி குறுக்ஸ்.

Link to comment
Share on other sites

தாயகத்து நிலவரங்களுக்கு சமாந்தரமாக புலம்பெயர் தமிழர்களின் போராட்டமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் செய்யத்தவறி விட்டோம்.

இனியாவது புலம்பெயர் தமிழர்கள் யாவரும் ஒற்றுமையாக தீவிரமாக செயற்படவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.