Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

Recommended Posts

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

வீரகேசரி நாளேடு 1/15/2009 9:51:29 PM - வன்னியில் முல்லைத்தீவு பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதையடுத்து அங்கிருந்து மக்கள் யாழ். குடாநாட்டுப் பகுதிக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் வந்தவண்ணமுள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று புதன்கிழமை இரவு இயக்கச்சி பகுதிக்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு தங்கியிருந்த மக்களை வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இவர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட பலர் கடும் நோய்வாய்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வந்த மக்கள் மிகவும் பசிக் களைப்புடன் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்தவாறு வருகை தந்துள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ். குடாநாட்டுக்கு பாதுகாப்பு தேடி வரும் வன்னி மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு பொது அமைப்புகளிடமும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னிப் பகுதியிலிருந்து வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு இன்று 403 பேர் வந்துள்ளனர். வன்னி அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து வருகை தந்த சுமார் 1277 பொதுமக்கள் நேற்று படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சுமார் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1808 க்கும் மேற்பட்டோர் இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தடைந்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • August 21, 2019 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn   இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில் சில விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு செயல்பாட்டாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக திருமணம் செய்யப்பட வேண்டிய வயது, பதிவு செய்யும் நடைமுறை மற்றும் திருமணம் செய்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அமைவான விதிகள் உள்ட்ட விடயங்களில் திருத்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அந்த திருத்த சட்ட மூலத்திற்கான யாப்பை  மேற்கொள்வதற்கான சட்டவரைவு தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக, தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://globaltamilnews.net/2019/129306/
  • "அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை" இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார். ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பிடித்த சிப்பாய்தான் இவர் என்பது உறுதி செய்யப்படவில்லை அவர்தான் அபிநந்தனை பிடித்தார் என்ற இந்திய ஊடகங்களின் கூற்றை பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. இருவரும் வேறுவேறு நபர்கள் என்றும், எனினும் பாகிஸ்தானின் சிப்பாய்கள் அபிநந்தனை உள்ளூர் மக்கள் தாக்காமல் தங்களின் பிடியில் எடுத்து அவர் உயிரை காப்பாற்றியதற்கு இந்தியா நன்றி கூற வேண்டும் என்றும், படைகள் அவரை காப்பாற்றவில்லை என்றால், அவர் கோபம் நிறைந்த அந்த கூட்டத்தால் கொல்லப்பட்டிருப்பார் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார். மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவித்தது. வீர தீர செயல்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் "வீர் சக்ரா". https://www.bbc.com/tamil/global-49421309
  • Kaanjcha, நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன். மன்னிக்கவும். விடுமுறை முடியவந்து நீங்கள் தந்த தரவுகளையும் படித்து விட்டு, பதிலிடுகிறேன். 
  • மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம் தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு பாராளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "மாகாண சபைத் தேர்தலை நடத்த வழிசெய்யும் விதத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இது சிறந்த - ஆக்கபூர்வமான வழிமுறையாகும். 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழேயே கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.  நல்லாட்சி அரசு அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், புதிய தேர்தல் முறைமை ஒன்றை நடை முறைப்படுத்தும் நோக்கோடு 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் விகிதாசாரப் பிரதிநித்துவம் மற்றும் தொகுதிவாரி கலந்த இரட்டைத் தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டிருந்தமையால் அச்சட்டத்தின் கீழ் மாகாணங்கள் தோறும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யவேண்டிருந்தது. ஆனால், எல்லை நிர்ணய விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்ட காரணத்தால் இது இழுபறி நிலையை அடைந்தது. இந்தப் பின்புலத்தில்தான் 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் இரத்துச் செய்யப்பட்ட  1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தைத் திரும்பக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் சுமந்திரன். அவருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்" - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/63088   மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் ;எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிபர் சட்டவரைபொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பழையமுறையில் தேர்தலுக்குச் செல்லவேண்டும் என பிரதான கட்சிகள் கூறிவருகின்றபோதும், அதற்குத் தேவையான சட்ட மாற்றத்தைக் கொண்டுவர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளது. . இவ்வாறான நிலையிலேயே பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிநபர் சட்டவரைபொன்றை சமர்ப்பித்துள்ளார். அதேநேரம், பழைய முறையில் தேர்தலை நடத்தமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன, உயர்  நீதிமன்றத்தில் பொருட்கோடல் மனுவொன்றை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் நாளைமறுதினம் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ள நிலையிலேயே சுமந்திரன் இத் தனிநபர் சட்டவரைபை பாராளுமன்றத்தில் கையளித்துள்ளார்.  https://www.virakesari.lk/article/63125
  • ( எம்.மனோசித்ரா ) கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் பின்னரே இந்த விடயம் குறித்து உறுதிப்படக் கூற முடியும்.  அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஏகமனதாக கோரிக்கை விடும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  https://www.virakesari.lk/article/63122