Jump to content

இலங்கைப் பிரச்னை-இம்மாதம் 23ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இம்மாதம் 23ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கைப் பிரச்சனையில் தலையிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த என்ன தடை உள்ளது என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும். விடுதலைப்புலிகள் அப்பாவிப் தமிழர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. நடுநிலையாளர்கள் மூலம் இதனை நிரூபித்தால் அவர்களை எதிர்த்தும் போராடத் தயார்.

இலங்கைப் பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

ஆதாரம்: தினமணி

ஜெயலலிதாவுக்கு கம்யூ. எதிர்ப்பு

இலங்கை பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய கருத்தை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. இந்த பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 23ந் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் அரசியல் நிலைமை குறித்தும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதி களில் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடை பெறுகிறது. தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நாளை முதல் தொடங்கும்.

இலங்கை சென்ற வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன், இலங்கை அதிபருடன் போர்நிறுத்தம் பற்றி பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் போர்நிறுத்தம் செய்வதற்காக சிவசங்கர் மேனனை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இலங்கை ராணுவ தளபதி பரத் பொன்சேகா சிறந்த போர் தளபதியாக தெரிகிறார் என்றும், இந்தியா இலங்கை இடையே நட்புறவு என்றும் இல்லாத அளவுக்கு செழுமையாக உள்ளது என்றும் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டு தமிழர்கள் மீது முப்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அது பற்றி சிவசங்கர் மேனன் எதுவும் சொல்லாதது தமிழக மக்களின் வேண்டுகோளை மத்திய அரசு மறுத்து விட்டது. தமிழர்களை அவமதித்து விட்டது என்பது உறுதியாகிறது.

எனவே மத்திய அரசை கண்டித்து வரும் 23ந் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை பிரச்சனையில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பிரகடனம் வெளியிடப்படும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை பிரச்சனை குறித்து தாம் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியதாகவும், இந்த பிரச்சனையில் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்து முடித்து விட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவால் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருப்பதால் கருணாநிதி தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இலங்கை பிரச்சனையில் தம்மால் ஏன் செயல்பட முடியாமல் போனது என்பது பற்றியும் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும். எந்த தியாகமும் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறும் கருணாநிதி, என்ன தியாகம் செய்யப் போகிறேன் என்பதை கூறினால் அந்த தியாகத்தை செய்வதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.

தமிழர்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்று ஜெயலலிதா கூறியிருப்பதை ஏற்க முடியாது. இந்த குற்றச்சாட்டை ஜெயலலிதா மட்டுமின்றி வேறு சிலரும் கூறி வருகின்றனர். அதனை நிரூபிக்க நான்கு நடுநிலையாளர் களை இலங்கைக்கு அனுப்பி பார்வையிட மத்திய அரசும், இலங்கை அரசும் அனுமதி அளிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துவது நிரூபிக்கப்பட்டால் நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்க்கவும் தயாராக இருக்கிறோம்.

அப்பாவி தமிழர்களை கொலை செய்யும் எண்ணம் சிங்கள ராணுவத் திற்கு இல்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பதும் தவறானது. தேர்தலுக்காக இலங்கை பிரச்சனையை யாரும் பயன்படுத்த கூடாது. அது ராஜபக்சே தமிழர்கள் மீது வீசும் குண்டுகளை விட கொடுமையானது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, நிர்வாகி கள் கோபு, எம்எல்ஏ பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆதாரம்: மாலை முரசு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எமக்காகக் குரல் கொடுப்போருக்கு ஆதரவு கொடுப்போம்...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.