Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

காதலை பூ என்று நினைத்தேன்

Recommended Posts

காதலை பூ என்று நினைத்தேன்

பெண்ணே

நீ

தொட்டவுடன்

வெடித்துவிட

மிதிவெடியா

அல்லது

சீறிவந்து

உயிர் குடிக்கும்

ஆட்லறியா

கண்ணிமைக்கும்

நொடிப்பொழுதில்

கதையை

முடித்துவிடும்

கண்ணி வெடியா

சன்னமாய்

போகின்றாய்

மின்னலாய்

ஒளி வீசுகின்றாய்

பல்குழல்

பீரங்கி போல

படபடென்று

பேசுகின்றாய்

உன்னைப்

பக்கத்தில்

வந்து பார்க்க

மனம் ஏவுதடி

கால்கள்தான்

ஏனோ

தடை சொல்லுதடி

Share this post


Link to post
Share on other sites

ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம்

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

அருமையான கற்பனை எல்லாம் பட பட என்று வெடிச்சத்தம் கேட்ட

மாதிரிக்கிடக்கு. அருமை அருமை உங்கள் கவிதை. தொடரட்டும் உங்கள்

கவிப்பயணம். வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

Share this post


Link to post
Share on other sites

[code]ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம் 

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

அருமையான கற்பனை எல்லாம் பட பட என்று வெடிச்சத்தம் கேட்ட

மாதிரிக்கிடக்கு. அருமை அருமை உங்கள் கவிதை. தொடரட்டும் உங்கள்

கவிப்பயணம். வாழ்த்துக்கள்

என்னசெய்வது வன்முறைதானே ஜெயிக்குது

Share this post


Link to post
Share on other sites

ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம்

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

தீயாவுக்கு

மிக அருமையாக இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். தமிழர் போராட்டத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கும் சொற்களை உவமானமாகப் பயன்படுத்தி கவிதை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.... ஆனால் ஒருவிடயத்தில் எனக்கு உடன் பாடு இல்லை... உங்கள் கவிதையில் அல்ல அதற்கு கருத்துச் சொன்னவர்களின் கருத்தில்....

அதாவது பயங்கரவாதச் சொற்கள் என்று.. உங்கள் கவிதையில் குறிப்பிட்ட ஆயுதங்களை எங்கள் போராளிகளும் பாவிக்கிறார்கள் தானே...! பயங்கரவாத ஆயுதங்கள் என்றால் அதைப் பாவிக்கும் எங்கள் போராளிகளையும் நாங்களே பயங்கரவாதிகள் என்று கூறுவதாக அர்த்தப் படாதா...? உலகம் எங்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கட்டும் அந்த நிலை விரைவில் மாறும் ஆனால் நாங்கள் மனதளவிலேனும் எங்கள் போராளிகலையோ போராட்டத்தையோ பயங்க்கரவாதத்துடன் சம்மந்தப் படுத்தக் கூடாது. இது தாழ்மையான என் கருத்து....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தீயாவுக்குமிக அருமையாக இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். தமிழர் போராட்டத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கும் சொற்களை உவமானமாகப் பயன்படுத்தி கவிதை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.... ஆனால் ஒருவிடயத்தில் எனக்கு உடன் பாடு இல்லை... உங்கள் கவிதையில் அல்ல அதற்கு கருத்துச் சொன்னவர்களின் கருத்தில்....அதாவது பயங்கரவாதச் சொற்கள் என்று.. உங்கள் கவிதையில் குறிப்பிட்ட ஆயுதங்களை எங்கள் போராளிகளும் பாவிக்கிறார்கள் தானே...! பயங்கரவாத ஆயுதங்கள் என்றால் அதைப் பாவிக்கும் எங்கள் போராளிகளையும் நாங்களே பயங்கரவாதிகள் என்று கூறுவதாக அர்த்தப் படாதா...? உலகம் எங்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கட்டும் அந்த நிலை விரைவில் மாறும் ஆனால் நாங்கள் மனதளவிலேனும் எங்கள் போராளிகலையோ போராட்டத்தையோ பயங்க்கரவாதத்துடன் சம்மந்தப் படுத்தக் கூடாது. இது தாழ்மையான என் கருத்து....

:rolleyes: ஐயோ இது என்ன வம்பாப் போச்சு, எனக்கு இந்தக் கவிதையை வாசிக்க நாம்

அனுபவிச்ச கொடுமையான வாழ்க்கை கன்னிவெடி, ஆட்லறி செல், விமானக்குண்டு வீச்சு

என்று அந்த பயங்கரமான நாம் அனுபவிச்ச சூழல்தான் ஞாபகத்திற்கு வந்திச்சு

அதனால்த்தான் அப்படி எழுதினேன் மற்றபடி நமது அண்ணாமார், அக்காமாரை

நான் எப்படி பயங்கரவாதிகள் என்று சொல்லுவேன். ? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

:o ஐயோ இது என்ன வம்பாப் போச்சு, எனக்கு இந்தக் கவிதையை வாசிக்க நாம்

அனுபவிச்ச கொடுமையான வாழ்க்கை கன்னிவெடி, ஆட்லறி செல், விமானக்குண்டு வீச்சு

என்று அந்த பயங்கரமான நாம் அனுபவிச்ச சூழல்தான் ஞாபகத்திற்கு வந்திச்சு

அதனால்த்தான் அப்படி எழுதினேன் மற்றபடி நமது அண்ணாமார், அக்காமாரை

நான் எப்படி பயங்கரவாதிகள் என்று சொல்லுவேன். ? :o

இனியவளுக்கு

உங்கள் மனம் நோகக் கூடியதாக நான் ஏதாலும் சொல்லியிருந்தால் என்னை மன்னிக்கவும். உங்கள் கருத்தில் பயங்கரவாத ஆயுதங்கள் என்ற பதம் பாவிக்கப் பட்டதால் நான் அவசரப்பட்டு கருத்துக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். பின்னர் உங்கள் அவசரமான பதிலிலிருந்து அது எதேச்சையாக வந்த வார்த்தைகள் என புரிந்து கொண்டேன். என்னை மின்னிக்கவும்

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

பரதேசி, இனியவள்,இளங்கவி உங்கள் கருத்துக்கள்

வாதப்பிரதி வாதங்களுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை தியா. கற்பனை அருமை.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

என்ன தலை ஏன் பொறிவெடி வைக்கப்போறியள் ?

பொறுமை பொறுமை :wub:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

அமைதி தயா அண்ணா. சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். :lol:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

தயா பொறுமையாக பேசித் தீர்க்கலாமே ரொம்ப பயமாயிருக்கு

அழுதுடுவன்...

சாந்தி, நுணாவிலான் இருவரும் எனக்கும் தயாவுக்கும் இடையில் மத்தியஸ்தத்துக்கு வருவீர்களா?

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களில் 505 பேருக்கு கொரோனா ; டாக்டர் அனில் ஜாசிங்க Bharati May 31, 2020வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களில் 505 பேருக்கு கொரோனா ; டாக்டர் அனில் ஜாசிங்க2020-05-31T06:29:07+00:00 வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார். http://thinakkural.lk/article/44301
    • மலையகத்துக்கு விடுதலை கோரி இளைஞன் போராட்டம்!       மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி தனி நபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (30) காலை முதல் ஈடுபட்டார். நுவரெலியா – பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 வயது) என்ற இளைஞரே, மட்டக்களப்பு ஒளவையார் சிலைக்கு கீழ் அமர்ந்து, “மலையகத்தின் ஒரு குரல்”, “விடுதலை வேண்டும்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். போராட்டம் தொடர்பாக குறித்த இளைஞன் தெரிவிக்கையில், ‘பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான், எனது தந்தை உயிரிழந்தமையினால் தாயார் மற்றும் இரு சகோதரிகளுடன் கடந்த ஜனவரி மாதம், மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் வந்து குடியேறினோம். கடந்த 26 வருடங்களாக டன்சின் கிராமத்தில் தான் வசித்து வந்தோம். இன்று வரை எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு எமது மக்கள் பல அவலங்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் வாழத் தொடங்கும்போது நீ மனிதனாகின்றாய். நீ உன் குடும்பம் வாழ்வது போல உன் சமூகம் வாழ வேண்டும் என்கின்றபோது நீ மாமனிதனாகின்றாய் என அறிஞர்களின் கோட்பாட்டு தத்துவங்களின் அடிப்படையில் நான் எனது சமூகத்தை நேசிக்கத் தொடங்கினேன். வாக்குகளுக்காக வருகின்ற தலைவர்கள் அதே பாதையில் வருகின்றார்கள், செல்கின்றார்கள். அதேபோல எமது மக்களுக்கு ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் வந்து பார்ப்பதும் இல்லை, நிவாரணம் வழங்குவதும் இல்லை, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் இல்லை இப்படி பல உள்ளன. கம்பனிகளிடம் கேட்டால் நஷ்டத்தில் செல்லுகின்றது என்கின்றனர். இதனை அரசு கேட்க வேண்டும் அல்லது நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் கேட்க வேண்டும் அல்லவா? நாங்கள் அனுப்பிய ஆறுமுகம் தொண்டமான், திகாம்பரம் எங்களுக்காக பேசவில்லை பணத்துக்காக பேசினார்கள். கொரோனா நோய் வந்ததன் பின்னர் எங்கள் மக்கள் உழைத்துதான் சாப்பிட்டனர். இங்கு 85 வீதமான உரிமை கிடைக்கின்றது பாதிக்கப்பட்டால் கேட்டு கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஆனால் எங்கள் மக்களுக்கு அப்படியல்ல. எது எப்படி இருந்தாலும் உழைத்துதான் வாழவேண்டும் எல்லோரும் முககவசம் போட்டு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். எமது மக்கள் பலாக்காயை மட்டும் உண்டு வாழுகின்றனர். அரசு கொரோன நோயின் பின்னர் வீட்டுத் தோட்டங்கள் செய்யுங்கள் என்கின்றனர். ஆனால் எங்கள் மக்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்ய இடமில்லை. ஏனைய சமூகம் வாழுவது போல எமது மக்களும் வாழ நிலங்களை பகிர்ந்தளித்து கொடுக்க வேண்டும். மலையக மக்கள் இதுவரைபட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று தோட்டங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்’. – என்றார். https://newuthayan.com/மலையகத்துக்கு-விடுதலை/  
    • இது குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவித்துள்ளதாவது- அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர். அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிசடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்படலாம் என அறிக்கையொன்றில் மருத்துவர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இரண்டாம் சுற்று வைரஸ் பரவல் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இறுதிசடங்குகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இறுதிசடங்குகளை குடும்பஉறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் தொண்டமானின் உடலிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மக்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது,கலக்கமடைந்துள்ள ஆதரவாளாகள் பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்து அஞ்சலி செலுத்த முயல்கின்றனர் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.                       https://seithy.com/breifNews.php?newsID=246791&category=TamilNews&language=tamil
    • அனைத்து கிரிக்கெட் மேட்ச்களும் ‘பிக்சிங்தான்’- தரகர் சஞ்சீவ் சாவ்லா அதிர்ச்சித் தகவல்  2000-ம் ஆண்டு உலகை உலுக்கிய, ஹேன்சி குரோனியே சிக்கிய கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய தரகர் சஞ்சீவ் சாவ்லா, அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளும் பிக்சிங் செய்யப்பட்டதுதான் என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். டெல்லி போலீஸுக்கு இவர் அளித்த வாக்குமூல அறிக்கையில், “எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நியாயமாக நடப்பதில்லை, மக்கள் பார்த்த அனைத்து மேட்ச்களும் பிக்சிங் செய்யப்பட்டவைதான்” என்று கூறியுள்ளார். Powered by Ad.Plus      மேலும் கிரிக்கெட் போட்டிகள் திரைப்படங்கள் போல் வேறு ஒருவரால் இயக்கப்படுவடுதான் என்றும் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் ரொம்ப வருடங்களாக இந்த சூதாட்டத் தொழில் செய்து வருவதாகவும், ஆனால் தன்னால் பெயர்கள் எதையும் கூற முடியாது ஏனெனில் இது பெரிய சிண்டிகேட், லாபி, நிழலுலக தாதாக்கள் ஈடுபடும் தொழில், அவர்களைப் பற்றி தான் வாயைத் திறந்தால் கொல்லபடுவேன் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் சஞ்சய் சாவ்லா. விசாரணை காவலதிகாரி டிசிபி கிரைம் பிராஞ்ச் ஜி.ராம்கோபால் நாயக் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக இன்னொரு குண்டையும் போட்டுள்ளார் சஞ்சய் சாவ்லா. திஹார் ஜெயலில் இருக்கும் சாவ்லா மார்ச் 28ம் தேதி கரோனா காரணமாக ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். ஆனால் டெல்லி கோர்ட் அதை நிராகரித்து விட்டது. ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் சாவ்லாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/sports/557111-all-cricket-matches-which-people-see-are-fixed-claims-bookie-sanjeev-chawla-1.html  
    • நல்லதொரு முடிவு. ஒரு மிருகத்திடமிருந்து தூர விலகியிருப்பது நல்லது