Jump to content

மாயா அருட்பிரகாசத்திற்கு (M.I.A.) ஆஸ்கார் பரிந்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது.

மேலதிக விபரம்

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnation.org/diaspora/unitedkingdom/mia.htm

இவருக்கு Grammy nomination உம் கிடைச்சிருக்கு "Paper planes" என்ற பாடலுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் . இவவோட பாடல்கள் அனைத்தும் சூப்பர்

Link to comment
Share on other sites

இவருடைய பேட்டி மாதிரி ஒன்டு Cnn இல் இப்போ கொஞ்சம் முந்தி போச்சு. நான் போடைக்க முடிஞ்சுது. இனப்பிரச்சனை சம்மந்தமாக ஏதோ சொன்ன மாதிரி தெரிஞ்சுது.

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

இந்த மாயா தமிழுலகிற்கு அறிமுகமான போது எங்கள் தமிழ் உணர்வாளர்கள் குதித்த குதி தெரியாதோ நிழலி ?

தாவணிக்குள் தமிழ்மொழியறிவு தெரியாத பொம்மைகளைத்தான் எங்களது தந்தையருக்கும் அன்னையருக்கும் வளர்க்கத் தெரியும். இப்படியொரு பெண்ணை வளர்த்தால் தமிழ்ப்பண்பாட்டை எப்படி சந்ததிக்கடத்தல் செய்வது ?

மாயாவின் தந்தையார் தனது மகளுக்கு இப்படியொரு விருது கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமையென்று சொன்னதாக ஒரு பத்திரிகை தனது கருத்தொன்றை ஒட்டியிருந்தது. இதில் என்ன பெண்ணியமிருக்கென அந்தப்பத்திரிகையின் மடல்களொன்றில் எழுதப்பட்டிருந்தது.

தனது மகளுக்கு விருது கிடைத்தது பற்றி அந்தத் தந்தை ஏதாவது சொல்லியிருப்பார். ஆனால் தந்தையில் உள்ள கசப்பை மகள் மீது கொட்டிக் கொள்ளும் இத்தகைய கருத்துக்கள் கடிதங்களை எங்கள் பத்திரிகைகள் வெளியிடுவதில் என்ன மகிழ்ச்சியோ ?

மாயாவின் தந்தை அருளர் எழுதிய 'இலங்காதேவி' நாவல் ஒரு சிறந்த நாவல்.

எனது தனிவிருப்பு எனது மகளும் இத்தகையதொரு மகளாக வேண்டும். :mellow:

எமது பிள்ளைகள் தமிழோடு தமிழர்களோடு ஒட்டுகிறார்களில் என்றதொரு குற்றச்சாட்டு எங்களில் பலரிடம் இருக்கிறது. காரணத்தை யாராவது ஆய்ந்தார்களா ? எம்மிடமிருந்து கிடைக்காத வரவேற்பு அவர்களுக்கு அன்னியர்களிடமிருந்து கிடைக்கிறது. ஆக அவர்கள் தமிழர்களுடன் தமிழுடனான உறவை துண்டித்துக் கொள்கிறார்கள். இந்தச் சிக்கலை புரிந்தால் எங்கள் இளையோர் எங்களுக்குப் பலம் தரும் தூண்காளவார்கள்.

மாயாவுக்கு எங்கள் ஊடகங்கள் இதுவரை எந்த முக்கியத்தையும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் மாயா இன்னும் நிறையவே செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

மாயா பற்றிய அறிவிப்புக்கு நன்றிகள் MI7'. அருளரின் புத்தகம் லங்கா ராணி அதை நான் தவறா இலங்காதேவி என எழுதிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றிகள் MI7'.

பெண்ணியத்துக்கு எந்த வகையில் பெருமை என்பதை அருளர் என்ன பொருளில் கூறினார் என்பது தெரியாது. ஆயினும் ஒரு தமிழ்ப்பெண் ஒரு விருது பெற்றிருக்கிறாள் அதையேன் நாமே விட்டேற்றித்தனமாக பார்க்க வேண்டும் ? நீங்கள் லண்டனில் இருப்பதால் அருளர் பற்றிய அரசியல் கருத்துக்கள் அடிப்படையில் யோசிக்கலாம். ஆனால் நான் யேர்மனியிலிருந்து கொண்டு அந்தக் கருத்தை பார்த்ததால் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

பெண்ணியக்காரர்களாக நிர்மலாக்கா ராயேஸ்அக்கா போன்ற பெண்ணியவாதிகளைப் பற்றி கேட்டுச் சலித்ததாலோ என்னவோ மாயா பற்றிய எங்கள் தமிழ்ப்பார்வைகளில் இன்னும் அரசியல்சாயம் ஊறுகிறது.

பத்திரிகையில் வந்தது வாசகர் கருத்தல்லவா ? ஆக ஒரு வாசகரின் கருத்தை ஆசிரியபீடம் அனுமதித்தே ஆக வேண்டும் அல்லவா ? ஒரு வாசகருக்கு உள்ள அதே உரிமையோடுதான் நானும் ஒரு வாசகியாக இங்கு எழுதியிருக்கிறேன். இங்கு யாரையும் தூக்கி நிமிர்த்தும் எண்ணமில்லை. புரிந்து கொள்ளுங்கள் MI7'. :)

எமது ஊடகங்கள் என நான் குறிப்பிட்டது தமிழ் ஊடகங்கள் என்ற பொருளில். நீங்கள் குறிப்பிட்ட ஒரு அச்சு ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஊடகத்தை இங்கு எதுவும் நெற்றிக்கண் சுட்டி எதுவும் சொல்லவில்லை. பொருள் மாறி அர்த்தம் கொண்டுள்ளீர்களா தெரியாது ?

நமது தமிழ் ஊடகங்கள் நிறையவே இருக்கிறது. அவை யார் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்து முக்கியத்துவத்தை மாயாவுக்குக் கொடுத்தார்கள் ?

Link to comment
Share on other sites

name='MI7' பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

இதன் அர்த்தம் புரியவில்லை. விளக்கினால் புரிந்து கொள்ளலாம். நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

மாயாவின் வெளித்தெரியும் மார்புக்குள்ளால் நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் பெண்ணியம் வாழ்க கோ.MI7'பி.

இலங்காராணியின் அழகை நன்றாகத்தான் இந்தப்படம் ஊடாக ரசிக்கிறீர்கள் ! வாழ்க ஊடகப்பணியும் உங்கள் பெண்ணியக்கற்பனையும் கருத்தும்.

சரி தமிழ் உணர்வுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? விளக்குவீங்களா உங்கள் மொழியில் ?

Link to comment
Share on other sites

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

பெண்ணியக்காரர் பெருமை கொள்வதாக நீங்கள் தான் கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள். அவசரத்தில் சரியாக முடிக்காமல் விட்டீங்களா ? அவசியத்தால் முடிக்காமல் விட்டீங்களா ? மூடிகளை கவனமாக அணியுங்கள்.

உங்களுக்கு தற்போது லண்டனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் லண்டன் மேய்ப்பர் தலைமையை யார் பறிப்பது அல்லது மேய்ப்பது என்பதுதான். அதனை பறிக்க அருமையான முயற்சிகள் மாயாவைச் சாட்டாக வைத்து நடாத்துகிறீர்கள். சரி அதை லண்டனில் செய்யுங்கோ. ஆனால் சாவுக்குள் நிற்கும் மக்களைப்பற்றி யார் ஒருவரி சொன்னாலும் அவர்களை நாங்கள் உள்வாங்க வேண்டும். (உங்களுக்கு இதெல்லாம் சரிவராது)

தமிழ் உணர்வென்று வைத்து இன்று நாம் யேர்மனியக் குழந்தைகளுடன் உங்கள் இரண்டாவது சந்ததியை ஒன்றாக நிறுத்திப் பேச விட்டுப் பாருங்கள் உணர்வு எங்கிருந்த ஊற்றெடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

மூச்சுவிடவே ஆங்கிலம் அல்லாது மூச்சுவிட முடியாத சந்ததியை உருவாக்கியது மட்டுமன்றி அந்தச் சந்ததிக்கு தமிழின் வாசமே அறிவிக்காமல் அருளரையும் இன்னும் உள்ளவர்களையும் சிண்டு முடித்துக் குந்துரஞ்சும் தொழிலைச் சரிவரச் செய்யுங்கோ தமிழ் இனப்பற்று உங்களால் காக்கப்படும்.

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது.

தனிமடலைப்பாருங்கள் இவ்வசனத்துக்கான பதில் அனுப்பியுள்ளேன்.

நான் எந்தப்பத்திரிகைக்கும் பங்குதாரரில்லை. :icon_idea:

தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். எல்லாரையும் நீங்கள் தான் மேய்க்க வேண்டும் என்ற தலை ஆசையை விட்டிட்டு உணர்வு மிக்க சந்ததியை நிலைநாட்டுங்கள். ஏதாவது உங்களால் மாயாபோல செய்ய முடியுமென்றால் (இல்லாட்டியும் காரியமில்லை) செய்யுங்கோ. லண்டனில் பிரபல தொலைக்காட்சிகள் ஊடகங்கள் இருக்கின்றன தானே அவற்றில் ஏதாவது ஒரு துரும்பையேனும் எடுத்துப் போடுங்கோ தினம் சாகும் தமிழருக்காக. (கனக்க செய்யிறோம் இதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாச் சொல்லவோ எண்டு கேக்காதையுங்கோ) எல்லாரும் செய்யினம் ஏதோ ஒரு வகையில். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

Link to comment
Share on other sites

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

சரி நாவடக்கம் நாவடக்கம் :icon_idea:

இலங்காராணியை நேரமிருக்கேக்க வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

முதலில் எனது நிலைப்பாட்டை விளக்குகிறேன் ..

- மாயா என்கிற அற்புதமான ராப் பாடகி மீது எனக்கு அபிமானமிருக்கிறது

- அவரது "பேப்பர் பிளேன்" பாடலை "சிலம்டோக் மில்லியனரில்" இன்னமும் மெருகூட்டி அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார

Link to comment
Share on other sites

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

ஐயம் விலகியும் விலகாதது போல நடிக்கிறீங்கள். :huh: வேறு ஏதும் எழுதவில்லை. நீங்கள் கொண்டுள்ள தவறான வியாக்கியானத்துக்கத் தான் எழுதியுள்ளேன்.

- மாயா அண்மையில உலகளவில் பிரசித்திபெற்ற ஊடகங்களில் ஈழத்தில் மக்கள் படும் அவலம் பற்றியும், தனது அடையாளம் பற்றி விளக்கியிருக்கிறார். கொஞ்சம் வளர்ந்தாலே, தங்கள் அடையாளங்களை மறைப்பவர்களுக்கிடையில், அவர் துணிச்சலாக கருத்துத் தெரிப்பது. உணமையில் மெச்சத்தக்கது. மற்றவர்கள் எல்லோரும் மிகுந்த சிரமப்பட்டு செய்யும் கவனயீர்ப்பை .. தனது கலைத்துறை திறமைகளை பாவித்து இலகுவாகச் செய்கிறார் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பாராட்டுகிறீர்கள் ஒரு பக்கத்தால் முறுபக்கத்தால்...!!!! :icon_idea:

Link to comment
Share on other sites

- மாயா தனது பேட்டிகளில், விடுதலைப்புலிகள் பற்றிச் சொன்ன கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும். வட்டமும் சதுரமும் போன்று வேறுபட்டவர்கள் என்று குறிப்பிட்டது அவரது அறியாமையைக் காட்டினாலும், விடுதலைப்புலிகளை அல்கைதாவுடன் ஒப்பிட்டமை தவறானது.

இதற்குள்ளும் உங்கள் புலமையை திறமையாக வெளிப்படுத்துகிறீர்கள். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தவறான புரிதல்களுடன் தமிழர்கள் பற்றி ஒரு உலக ஊடகத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் மாயா.

அல்கைதாவுடன் மாயா புலிகளை ஒப்பிட்டது பிழை. ஆனால் புலிகள் என்பதன் அர்த்தம் அனைத்துலக ஊடகங்களில் 'கிளர்ச்சியாளர்கள்' எனவே விளிக்கிறார்கள். ஏன் இந்த வார்ர்தையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ? எங்கே உங்கள் திறமையால் 'கிளர்ச்சியாளர்கள்' என்ற சொல்லை "விடுதலைப்போராளிகள்" என்று சொல்ல வையுங்கள் பார்ப்போம்.

30ஆண்டுகள் கடந்த நிலையில் தான் ஈழம் பற்றி எதையாவது உலக ஊடகங்களில் சொல்ல முடிகிறது. அதிலும் அங்கை ஆங்கிலப் பிழை இங்கை பெண்ணியப்பிழையென்று முட்டையில் புடுங்கும் மேதாவித்தனத்தை என்னென்று சொல்ல ?

- அவரது அரசியல் கருத்துகளில் உள்ள தெளிவின்மையை தவிர்த்தால், அவரை மதிக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப் பெண் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

இந்த முரண்பாட்டை ஏன் மாயாவுக்கு அல்லது அவர் சார்ந்தவர்களுக்கோ கேட்கவில்லை நீங்கள் ? நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

ஆனால் அவர் பெண்ணியவாதிகளுக்கு பெருமை சேர்க்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திரும்பவும் முட்டையில் புடுங்குகிறீர்கள். :icon_idea: அருளர் மாயாவின் தந்தை அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆக இதற்கான பதில் அருளரிடம் நீங்கள் கேட்டாலே பதில் கிடைக்கும். :huh:

பொதுவாக உடல் கவர்ச்சி, பாலுணர்வை தூண்டும் விடயங்கள் போன்றவற்றில் பெண்ணியவாதிகள் ஈடுபடுவதில்லை. அதற்காகவே மாயாவின் படத்தை இணைத்திருந்தேன். அதுதவிர, வேறெந்த விகல்ப்பமான எண்ணங்களும் எனக்கு இல்லை.

இந்த விவாதத்துக்கு புறம்பான விடயங்களை தவிர்த்து, பெண்ணியம் தொடர்பில் இவ்விடயத்தை விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

இங்கு நாங்கள் முரண்படவில்லை. கருத்துப்பரிமாறிக் கொள்கிறோம் அவ்வளவுதான். இதனை உங்களுடன் முரண்பட்டுக் கொள்கிறேன் என நீங்கள் நினைப்பது தவறு.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

அவர்களுக்கு தங்கள் கருத்தினைக் கூற இருக்கிற உரிமைபோல் எனக்கு அதனை எதிர்த்துக் கருத்து எழுத இல்லையா?

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

நான முன்னரே எழுதிய மாதிரி, அவர் பெண்ணிய வாதிகளின் கருத்துக்களுக்கு முரணாக, பெண் என்பவள் போகப் பொருள் என்பது போல நடந்து கொள்கிறார் என்பதைச்சுட்டிக்காட்டவே அந்தப்பட்த்தை தேர்ந்தெடுத்து இணைத்தேன்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

நான் அறிந்தவரை பெண்ணியம் என்பது:

பால்களுக்கிடையில், அரசியல், பொருளாதாரம், சமூக மட்டம் ஆகியவற்றில் சமஉரிமையை ஏற்படுத்துவது. பெண்ணியவாதிகள் எனக் கருதப்படுபவர்கள், இந்த உரிமைகளுக்காக போரிடுபவர்கள்.

இதில் மாயா அடங்கவில்லை. அருந்ததி ராய், மேதா படகர் (நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவி) போன்றோரை பெண்ணிய வாதிகள் என்று குறிப்பிடுவேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க. சானியா மைனோ காண்டி, (சோனியா காந்தி), மடோனா, பிறிற்னி பியர்ஸ் போன்றோரை பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மாயாவையும் அப்படிச் சொல்லலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :icon_idea:

உங்களுக்கு என்னுடன் கருத்தாடுவதில் உடன்பாடு எனின் சம்பந்தமில்லாத விடயங்களை இங்கு சேர்க்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.