Jump to content

மாயா அருட்பிரகாசத்திற்கு (M.I.A.) ஆஸ்கார் பரிந்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாயா அருட்பிரகாசம்.. மாதங்கி அருட்பிரகாசம்.. என்பவர் ஒரு ராப் பாடகி. அவர் அத்துறையில் என்னென்ன வழிகளை கையாண்டால் மக்கள் புகழைப் பெறலாமோ அதனைக் கையாள்கிறார். அது அவரின் தொழில் ரகசியம்.

தன்னை அவர் தமிழராக இனங்காட்டிக் கொள்வது அவரின் சொந்த விருப்பு. அதன் பால் அவர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை தனது ரசிகர்களின் முன் கொண்டு வருவது வரவேற்கப்படுகிறது.

ஆனால் இங்கு சிலர் ஒரு சமன்பாட்டைப் போட நினைக்கிறார்கள். மாயா = பெண்ணியம்= தமிழர் = ஈழப் பிரச்சனை = உலகப் பிரச்சனை.

இது தவறு. மாயா தன்னை ஈழத்தமிழராகக் காட்டிக் கொள்வது நிஜத்தைப் பிரதிபலிக்க விரும்பும் அவரின் நல்ல எண்ணம். தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சனையை தனது அறிவோடு... ரசிகர்களிடம் பரிமாறிக் கொள்வது அவரின் கலையுலக ரசிகர்களுடனான பிணைப்பை.. தான் சார்ந்த சமூகத்தின் மீதான நன்றி உணர்வைக் காட்டுகிறது. இவை வரவேற்கப்படுகின்றன. அதற்காக தவறான அரசியல் கண்ணோட்டங்களை அவர் வெளியிடுவது வரவேற்கப்பட முடியாதது.

மாயா.. ராப் இசைப்பாடகியாக தன்னை உருமாற்றிக் கொள்வது.. ஈழத்தமிழர்களின் உருமாற்றம் அன்று. மேடை ஏறிறவன்.. போடும் பாத்திரத்துக்காக.. கோவணத்தோடு வருகிறான் என்பதற்காக.. பார்வையாளர்களும்.. கோவணத்தோடுதான் போகனும் என்றில்லை. மேடை ஏறியவனின்.. குடும்பமும்.. சுற்றமும்.. சமூகமும்.. கோவணம் மட்டுமே கட்டணும் என்றில்லை.

மாயாவே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.. கவர்ச்சி.. என்பது எமது சமூகத்தால் அவ்வளவு விரும்பப்படும் விடயம் அல்ல. அதையெல்லாம் தாண்டி நான் தனி ஒருத்தியாக இங்கு இருக்கிறேன் அதாவது தனி ஒரு தமிழிச்சி இத்துறைக்குள் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். ஆக மாயா யதார்த்ததை உணர்கிறார். ஆனால் மாயாவை காட்டி.. பிழைக்க நினைப்பவர்களோ.. யதார்த்ததிற்கு அப்பால் அவரை வைத்துப் பார்க்க விளைகின்றனர்..! பெருமையும் அடித்துக் கொள்கின்றனர்.

இன்னொரு விடயம்.. மாயாவை சிறீலங்கன் என்று சொல்லி சில சிங்கள ஊடகங்களும் அவருக்கு கிடைக்கும் புகழால் தமக்குப் பெருமை என்று எழுதிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிங்களவர்களின் ஆங்கில ஊடகங்கள். ஆனால் மாயாவுக்கு போட்டியாக சிங்களவர்களை களமிறக்கி தோற்றதன் பின்னேதான் இந்த நடிப்பை அவர்கள் நடிக்கிறார்கள்.

மாயாவை ஒரு ராப் பாடகியாக.. இனங் காண்பதையே என்னைப் போன்றவர்கள் செய்வார்கள். அது தொடர்பில் விமர்சனங்களை வைக்கவும்.. எமக்கு உரிமை இருக்கும் என்று நினைக்கிறேன். அதை அவர் ஈழத்தமிழர்.. ஈழப்பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பவர் என்பதுற்குள்.. இழுத்துக் கொள்வது.. அவரின் துறைசார் வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இன் தராசு போன்ற விளக்கம் எனக்கு பிடித்து இருக்கு மிகவும் சரியே .o

ஒரு சின்ன திருத்தம் அருட்பிரகாசம்..............பிரகாரம் அல்ல ஒரு kiristian name . பெயர் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இன் தராசு போன்ற விளக்கம் எனக்கு பிடித்து இருக்கு மிகவும் சரியே .o

ஒரு சின்ன திருத்தம் அருட்பிரகாசம்..............பிரகாரம் அல்ல ஒரு kiristian name . பெயர் ..

திருத்திட்டன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அக்காச்சி. :icon_idea:

Link to comment
Share on other sites

ஏற்கனவே இதனை இன்னொரு இடத்திலும் இணைத்துள்ளேன். ஆயினும், அவசியம் கருதி இங்கும் இணைக்கின்றேன்

---------------------

நாம் மாயா பெண்ணியவாதியா இல்லையா....அவாட மார்பு தெரியுதா இல்லையா.... அவா கவர்ச்சி (?) உடை உடுத்தியமையால் தமிழச்சியா இல்லையா என்று கூடி விவாதித்து பொழுதை கழிக்கும் நேரத்தில் எம் இனத்தினை பூண்டோடு அழிக்கும் சிங்களவன் அவாவின் பேட்டியை ஏண்டா போட்டாய் என்ற ரீதியில் PBS இற்கு பதில் எழுதிக் கொண்டு தம் இனவழிப்பை நியாயப் படுத்தி கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கே சென்று அவர்களின் பதில்களைப் பார்க்க

இணைப்பு

வெட்டி பொழுதோடு வீண் கதைகள் பேசியே தமிழன் ஒற்றுமை இன்றி சாவான் என்று சிங்களவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் நன்கு புரிந்த ஒரு விடயத்தினை நாங்கள் மேலும் மேலும் நிரூபித்தே சாவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='nedukkalapoovan' date='Feb 14 2009, 12:59 PM' post='490330

மாயாவை ஒரு ராப் பாடகியாக.. இனங் காண்பதையே என்னைப் போன்றவர்கள் செய்வார்கள். அது தொடர்பில் விமர்சனங்களை வைக்கவும்.. எமக்கு உரிமை இருக்கும் என்று நினைக்கிறேன். அதை அவர் ஈழத்தமிழர்.. ஈழப்பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பவர் என்பதுற்குள்.. இழுத்துக் கொள்வது.. அவரின் துறைசார் வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கும்..! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='nedukkalapoovan' date='Feb 14 2009, 12:59 PM' post='490330

மாயாவை ஒரு ராப் பாடகியாக.. இனங் காண்பதையே என்னைப் போன்றவர்கள் செய்வார்கள். அது தொடர்பில் விமர்சனங்களை வைக்கவும்.. எமக்கு உரிமை இருக்கும் என்று நினைக்கிறேன். அதை அவர் ஈழத்தமிழர்.. ஈழப்பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பவர் என்பதுற்குள்.. இழுத்துக் கொள்வது.. அவரின் துறைசார் வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கும்..! :o

இது தொடர்பாக எனது கேள்வி நெடுக்ஸ் மாயாவை ராப் பாடகியாக நீங்கள் இனம் கண்டால் இதே யாழில் பிரிதொரு மாயா பற்றிய ஆக்கத்தில் நீங்கள் மாயா புலியைப் பற்றி கதைக்கவில்லை என ஏன் வருத்தப்பட்டிர்கள்? இதே மாயா அந்த பேட்டியில் புலியைப் பற்றி கதைத்திருந்தால் உங்கள் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

மாயா அரசியல்வாதியோ.. தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியோ அல்ல. அவரிடம் போய் புலிகளைப் பற்றி கதையுங்கள் என்று கேட்பது நியாயமல்ல. அவராக உணர்ந்து தனது இனத்தின் துன்பத்தை அவர் சார்ந்த இனம் என்ற அடிப்படையில் வெளிப்படுத்துவதையே வரவேற்கிறேன். அதேவேளை சில உண்மைக்குப் புறம்பான அவர் அதிகம் அறியாத விடயங்களை தனது மக்கள் சார்பான கருத்தாக வெளியிடுவது அவ்வளவு சிறப்பானதல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகளை அல்குவைடா அமைப்போடு ஒப்பிட்டுப் பேசியது ஏற்புடைய ஒன்றல்ல..! அதையே சுட்டிக்காட்டி இருந்தேன். மற்றும்படி.. மாயாவை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக நான் ஏற்றுக் கொண்டு கருத்துரைக்கவில்லை..! :D

Link to comment
Share on other sites

நிழலி சுட்டிக்காடியவற்றோடி இரண்டு விடயங்களைச் செய்யலாம், வீணாக நாங்கள் இங்கே நேரத்தைச் செலவிட்டு முட்டி மோதிக் கொண்டிராமல்.

ஒன்று மாயாவிற்கு ஆதரவு தரும் வேலைகளைச் செய்வது.

இரண்டு மாயாவுடன் தொடர்பேற்படுத்தி அவருக்கு அரசியர் தெளிவை ஏற்படுத்துவகு இதனை அவரின் இணயப்பக்கம் மூலமாக அவரின் fஏஸ் புக் பக்கதினூடாகச் செய்யலாம்.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் இருப்பவர் என்னும் நிலையில் அவரின் கருதுக்கள் பலரையும் சென்றடையும், ஆகவே அவர் எமது பிரச்சினை பற்றி என்ன சொல்கிறார் என்பது முக்கியமானது.ஆகவே அவரை வெரும் ரப் பாடகி என்று கணிப்பது தவறானது.அரசியல் வாதிகள் தான் அரசியல் பேசுகிறார்கள் என்னும் கருத்து தவறானது.சமூகப்பிரஞ்சை உடைய எல்லோருமே அரசியல் பேசுகிறரகள்.மாயாவின் பாடல்கள் எல்லாமுமே அரசியலைப் பேசுகின்றன.இதனையே அவரும் தனது நோக்கமகாகக் கூறி உள்ளார்.

அவரின் அரசியல் என்பது அருளரிலிருந்தே வருகிறது என்பதை அவரின் பாடல்களில் இருந்து வரும் அரசியலை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்.அருளர் புலிகலுடன் வன்னியில் இருந்த காலத்திலும் தற்போது லண்டனில் இருக்கும் காலாதிலும் வரும் பாடல்கல் மாயாவின் பேட்டிகளை உற்று நோக்கினால் இந்த வித்தியாசத்தை விளங்கிக்கொள்ளலாம்.ஆகவே மாயவுடன் நாம் தொடர்ந்து பேச வேணும் சில உண்மைகளைத் தெளிவு படுத்த வேனும்.அதோடு முக்கியமாக் அருளருடனும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து பேசுவதன் மூலமே முரண்பாடுகளைத் தீர்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த சாதாரண மக்களே அறிகின்ற உண்மைகளை.. இவ்வளவு வெளித்தொடர்புள்ள மாயாவும் அவரின் அப்பாவும் அறியாமலா இருப்பார்கள். இல்ல அறிந்தும் தமது பழைய நிலைப்பாடுகள் தான் சரியானவை என்று மாற்றத்தை விரும்பாத சக்திகளாக அவர்கள் இருக்க விரும்புகின்றனரா (இதற்கான வாய்ப்புக் குறைவு என்பதை மாயாவின் ஈழத்தமிழர் துன்பத்தைச் சொல்லனும் என்ற மனநிலை எடுத்துக்காட்டுகிறது..!) அல்லது வெளிச்சக்திகளின் அழுத்தத்துக்குப் பயந்து அப்படி இருக்கின்றனரா என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றிற்கும் முன் வாற ஞாயிறு ஆஸ்கார் விழா.

கிராமி கைதவறிச் சென்றாலும் ஆஸ்கார் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கு.

வாழ்த்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த சாதாரண மக்களே அறிகின்ற உண்மைகளை.. இவ்வளவு வெளித்தொடர்புள்ள மாயாவும் அவரின் அப்பாவும் அறியாமலா இருப்பார்கள். இல்ல அறிந்தும் தமது பழைய நிலைப்பாடுகள் தான் சரியானவை என்று மாற்றத்தை விரும்பாத சக்திகளாக அவர்கள் இருக்க விரும்புகின்றனரா (இதற்கான வாய்ப்புக் குறைவு என்பதை மாயாவின் ஈழத்தமிழர் துன்பத்தைச் சொல்லனும் என்ற மனநிலை எடுத்துக்காட்டுகிறது..!) அல்லது வெளிச்சக்திகளின் அழுத்தத்துக்குப் பயந்து அப்படி இருக்கின்றனரா என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! :rolleyes:

நாங்களும் இப்ப Genocide ஐத்தான் தூக்கிப் பிடிக்கிறம்.

அவவும் அது தான் செய்யுறா.

Link to comment
Share on other sites

எல்லாவற்றிற்கும் முன் வாற ஞாயிறு ஆஸ்கார் விழா.

கிராமி கைதவறிச் சென்றாலும் ஆஸ்கார் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கு.

வாழ்த்துவோம்.

வாழ்த்துவோம். மாயாவின் ஆதரவை தமிழர்களுக்காக வேண்டுவோம்.

நாங்களும் இப்ப Genocide ஐத்தான் தூக்கிப் பிடிக்கிறம்.

அவவும் அது தான் செய்யுறா.

உண்மை.

எங்கள் எவராலும் சொல்ல முடியாத உண்மையை மாயாவால் சொல்ல முடியும்.

நிழலி சுட்டிக்காடியவற்றோடி இரண்டு விடயங்களைச் செய்யலாம், வீணாக நாங்கள் இங்கே நேரத்தைச் செலவிட்டு முட்டி மோதிக் கொண்டிராமல்.

ஒன்று மாயாவிற்கு ஆதரவு தரும் வேலைகளைச் செய்வது.

இரண்டு மாயாவுடன் தொடர்பேற்படுத்தி அவருக்கு அரசியர் தெளிவை ஏற்படுத்துவகு இதனை அவரின் இணயப்பக்கம் மூலமாக அவரின் fஏஸ் புக் பக்கதினூடாகச் செய்யலாம்.

இதுதான் தற்போது செய்ய வேண்டியது.

மாயாவின் மாயாவின் தந்தையாரின் கடந்த கால அரசியலை சிலர் இப்போதும் தூக்கிப்பிடித்து தங்கள் இருப்பை தக்க வைக்கும் முயற்சியின் வெளிப்பாடே மாபற்றிய அருளர் பற்றிய தற்போதைய கடுப்பு.

இன்னும் சுயவிருப்புக்களுக்காக ஒரு இனத்தின் கண்ணீரை பலியாக்காமல் சில ஞானிகள் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய தேவை. இல்லை இன்னும் மாயாவின் சட்டைக்குள் பெண்ணியம் தேடுவது தான் முடிவென்றால் தேடட்டும். அத்தகையோரை விட்டுவிட்டு நமது வேலைகளைப் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த சாதாரண மக்களே அறிகின்ற உண்மைகளை.. இவ்வளவு வெளித்தொடர்புள்ள மாயாவும் அவரின் அப்பாவும் அறியாமலா இருப்பார்கள். இல்ல அறிந்தும் தமது பழைய நிலைப்பாடுகள் தான் சரியானவை என்று மாற்றத்தை விரும்பாத சக்திகளாக அவர்கள் இருக்க விரும்புகின்றனரா (இதற்கான வாய்ப்புக் குறைவு என்பதை மாயாவின் ஈழத்தமிழர் துன்பத்தைச் சொல்லனும் என்ற மனநிலை எடுத்துக்காட்டுகிறது..!) :

அப்படியான மனநிலையிருந்தால் தமிழர் பற்றி நிச்சயம் மாயா கதைத்திருக்கமாட்டார். 30ஆண்டுக்கு மேலான ஒரு இனத்துயரை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் சொல்லிவிடவா முடியும். எத்தனைபேரை இந்தக் காலம் மாற்றியிருக்கிறது. மாயாவின் ஆதரதை வேண்டுவதே நாம் ஒவ்வொருவரும் தற்போது செய்ய வேண்டிய கடமை.

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை பெண்ணியம் என்பது:

பால்களுக்கிடையில், அரசியல், பொருளாதாரம், சமூக மட்டம் ஆகியவற்றில் சமஉரிமையை ஏற்படுத்துவது. பெண்ணியவாதிகள் எனக் கருதப்படுபவர்கள், இந்த உரிமைகளுக்காக போரிடுபவர்கள்.

இதில் மாயா அடங்கவில்லை. அருந்ததி ராய், மேதா படகர் (நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவி) போன்றோரை பெண்ணிய வாதிகள் என்று குறிப்பிடுவேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க. சானியா மைனோ காண்டி, (சோனியா காந்தி), மடோனா, பிறிற்னி பியர்ஸ் போன்றோரை பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மாயாவையும் அப்படிச் சொல்லலாம்.

ஒருவருக்கும் விளங்காமல் பின் நவீனம் முன் நவீனம் சொல்வோர் போல பெயர்களை அடக்கியுள்ளீர்கள்.

பெண்ணியவாதிகளாய் யாரும் இருந்துவிட்டுப் போகட்டும்.

சோனியா , சந்திரிகா போன்றோருடன் ஒப்பிடுதளவிற்கு மாயா தாழ்ந்து போய்விடவில்லை. மாயா எங்கள் மகள். அரசியலை நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டுக்குள்ளிருந்து அறிந்து வந்தவள். மாயாவின் வரவு தமிழ்ப்பெண்களுக்கான முதல் திறவுகோல். அவளை என் வீட்டு மகளாக வரவேற்கிறேன். பெண்ணியம் புலம்பலியம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் எத்தனை பேரின் குழந்தைகளுக்கு புலத்தில் பிறந்தாலும் தமிழ் எழுத படிக்க தெரியும்? ஆனால் மாயாவிற்கு தெரியும். தனது ஆளுமையைப் பயன்படுத்தி தன் இனம்,சமூகத்துக்கு நல்லது செய்யும் மாயா போற்றுதலுக்கும்,மரியாதைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please do a google search using the following words and you'll see tons of materials.

arundhati roy feminist

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்களில் எத்தனை பேரின் குழந்தைகளுக்கு புலத்தில் பிறந்தாலும் தமிழ் எழுத படிக்க தெரியும்? ஆனால் மாயாவிற்கு தெரியும். தனது ஆளுமையைப் பயன்படுத்தி தன் இனம்,சமூகத்துக்கு நல்லது செய்யும் மாயா போற்றுதலுக்கும்,மரியாதைக்கு
Link to comment
Share on other sites

Star rapper's war views turn off Sri Lankan youth

8 hours ago

COLOMBO (AFP) — She's the songbird of the hit movie "Slumdog Millionaire" but in her native Sri Lanka suspicions about Oscar-nominated hip-hop star M.I.A.'s political sympathies have cost her success and fans.

Born in Britain to Sri Lankan parents -- both ethnic Tamils -- the 32-year-old rapper, whose real name is Mathangi Arulpragasam, grew up in the island's conflict-ridden north.

It's an experience she has said informs her music and she is unapologetic about her outspoken condemnation of the atrocities that have taken place during more than three decades of civil war.

After Arulpragasam's family fled to India and then back to London, she studied music and went on to achieve the sort of fame that saw her performing live, heavily pregnant, at this month's Grammy awards ceremony in Los Angeles.

Her song "Paper Planes," on the "Slumdog Millionaire" soundtrack, was nominated for a Grammy as record of the year.

"O Saya," her collaboration with Indian composer A.R. Rahman for the film, is up for a best-song Oscar.

While the accolades flood in, however, she said in a recent interview with www.dailybeast.com that her current focus is not on awards but on the Tamil struggle for a separate homeland in Sri Lanka.

Her father is said to have been a Tamil militant linked to a group known for its bombing campaign in the capital Colombo in the mid 1980s.

The Tigers' 37 years of armed struggle is said by the government to be nearing an end with security forces on the verge of crushing the rebels, who are now coralled in a narrow jungle strip in the island's northeast.

Arulpragasam, in her interview with the US-based website, described the current situation as one of "systematic genocide and ethnic cleansing".

"I actually come from there and the fact is that this is happening now," she is quoted as saying.

"I lived in Sri Lanka when the campaign for ethnic cleansing started and if I could stop it and see the end of it in my lifetime that would be amazing. I can't justify my success otherwise."

Such comments have not endeared her to parts of Sri Lanka's majority Sinhalese community, with some people accusing her of sympathising with the Tigers -- branded a terrorist organisation by the European Union and the US.

The music video of her song "Bird Flu" shows children dancing in front of what looks like the Tamil Tiger insignia of a roaring tiger.

"M.I.A.'s lyrics and style of music don't appeal to people here," said local rapper Krishan Maheson, who released an unofficial re-mixed version of "Paper Planes" in her native Tamil.

Maheson, also a Tamil, said he received hate mail for promoting the song.

"The feedback was 'why are you working with her? She's a terrorist'. Having said that, she deserves credit for her artistry and fame," Maheson told AFP.

Her music is not played on Sri Lankan radio or television -- which, like music retailers, dropped her for fear of offending the government as the war dragged on -- or in nightclubs.

Her fans must make do with Internet sites such as youtube.com or myspace.com.

"I think there is lot of political pressure not to play her music because of the hype surrounding her work," said local musician Eshantha Peiris.

Local song writer and jazz musician Dilip Seneviratne, who is Sinhalese, said: "She generates a lot of hype about her roots, about the war, but her stage presence and what she sang (at the Grammy's) turned me off."

Critics such as US-based Sri Lankan rapper DeLon have accused her of glorifying terrorism and called her a "terrorist chick".

Sri Lankan music fans have a broad spectrum of genres to choose from, with everything from pop, jazz, heavy metal and rock dominating the airwaves, and Western classical concerts playing to packed houses.

Local rap and pop performers who record in English is also popular, so there is little indication in the vigorous blogosphere debate on M.I.A. that the Sri Lankan music scene is poorer for her absence.

"M.I.A doesn't have a clue about Sri Lanka," says blogger Surekha Ratnatunga.

"She is the voice the world will listen to, but makes the same mistake as the government, by acknowledging the plight of only a portion of Sri Lankan population."

M.I.A.'s songs contain their fair share of violent imagery and the chorus of "Paper Planes" is peppered with percussive gunshot sounds as a backdrop to the implicitly violent lyrics: "All I want to do is - Bang! Bang! Bang! - And take your money".

But the artist insists her creativity is born of her own experience.

"If you think lyrics about guns are bad, I shouldn't have been shot at when I was seven years old," she told the Wall Street Journal.

She said "Paper Planes" refers to the stereotypes that Third World immigrants to the West often suffer.

"It's about people driving cabs all day and living in a (expletive) apartment and appearing really threatening to society. But not being so," she told Houston Chronicle newspaper.

"I've seen people get massacred in front of me. When you come from that kind of background, you do become matter of fact and tell it like it is," she said.

http://www.google.com/hostednews/afp/artic...BkJBm6CmQjeEEjA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான முன்னரே எழுதிய மாதிரி, அவர் பெண்ணிய வாதிகளின் கருத்துக்களுக்கு முரணாக, பெண் என்பவள் போகப் பொருள் என்பது போல நடந்து கொள்கிறார் என்பதைச்சுட்டிக்காட்டவே அந்தப்பட்த்தை தேர்ந்தெடுத்து இணைத்தேன்.

நான் அறிந்தவரை பெண்ணியம் என்பது:

பால்களுக்கிடையில், அரசியல், பொருளாதாரம், சமூக மட்டம் ஆகியவற்றில் சமஉரிமையை ஏற்படுத்துவது. பெண்ணியவாதிகள் எனக் கருதப்படுபவர்கள், இந்த உரிமைகளுக்காக போரிடுபவர்கள்.

இதில் மாயா அடங்கவில்லை. அருந்ததி ராய், மேதா படகர் (நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவி) போன்றோரை பெண்ணிய வாதிகள் என்று குறிப்பிடுவேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க. சானியா மைனோ காண்டி, (சோனியா காந்தி), மடோனா, பிறிற்னி பியர்ஸ் போன்றோரை பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மாயாவையும் அப்படிச் சொல்லலாம்.

உங்களுக்கு என்னுடன் கருத்தாடுவதில் உடன்பாடு எனின் சம்பந்தமில்லாத விடயங்களை இங்கு சேர்க்காதீர்கள்.

பெண்ணியவாதி என்பவள் பெண்கள் உரிமைக்காக போராடுவது [உ+ம்]ஒரு குக் கிராமத்திற்கு சென்று அப் பெண்களுக்கு கல்வியறிவு ஊட்டல்,தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தல் பெண்களை ஆண்களுக்கு நிகராக கல்வி,தொழில் வாய்ப்புகளில் தயார் செய்தல்.சுருக்கமாக சொல்வதானால் ஆண்,பெண் சமம் என புரிய வைத்தல்.

அருந்ததிராய் எங்கே பெண்களுக்காக போராடினார் என கூற முடியுமா? அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும்,தொழிலாளர்கள

Link to comment
Share on other sites

எமது கலைஞர்கள் வளராததற்கு

இங்கே நடைபெறும் வாதம் ஒரு உதாரணம்.

மாயா

யாராகவும் இருக்கட்டும்

ஒஸ்கார் கிடைக்க வாழ்த்துங்கள்.

அது போதும்

அதைவிட்டு விட்டு

அவர் குறித்த பின்னணிகளை தேடியலைய வேண்டாம்.

ஒவ்வொரு கலைஞருக்கும் அல்லது மனிதனுக்கும்

தனிக் கருத்துகள் இருக்கும்.

அதற்காக எனக்கு பிடித்த விதத்தில் அவர் இருக்க வேண்டும் என

நினைப்பது அடி முட்டாள்தனம்.

மாயா அவராகவே இருந்து விட்டுப் போகட்டும்.

மாயாவுக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

மாயா அருள்பிரகாசத்துக்கு என் வாழ்த்துக்கள். அவர் எனது தூரத்து உறவினர். அவரது தந்தையாரின் பெற்றோரும் எந்து தந்தையரும் நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள். பின்னர் மாயாவின் பாட்டனார் வன்னியில் தென்மேற்க்குப் பகுதிக்கும் எனது தந்தையார் மல்லாவிக்கு அண்மையில் வடகாட்டுக்கும் பெரும் விவசாயிகளாக குடிபெயர்ந்தனர். மாயாவின் தந்தையாரை நான் முதன் முதலாக 1885ல் தமிழகத்தில்தான் சந்தித்தேன். தோழர் பாலகுமாரனோ கி.பி.அரவிந்தனோ முகிலனோ என்னை அழைத்துச் சென்றதாக நினைக்கிறேன். மாயா அப்போது சின்னப்பெண். தந்தையார் கொள்கைக்காக ஏற்றுக்கொண்ட வறுமையுள் நசிந்துபோகாது துருதுருவென்று மிகுந்த நம்பிக்கை தருகிற சிறுமியாக இருந்தார்.

ரூசியாவில் பயின்ற பொறியியலாளரான அருளர் அப்போது ஈறோஸ் அமைப்பின் மூலவர்களுள் ஒருவராக இருந்தார். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால பங்காளிகளுள் அவரும் ஒருவர். எமது சாபக்கேடான இயக்க மோதல்கள் ஆரம்பிக்காமல் ஐக்கியமுன்னணி அணுகுமுறை வளர்ந்திருக்குமானால் அருளர் போன்ற பலர் பெரும் அள்வில் பங்களிப்புச் செய்திருக்கக் கூடும். தன் வேரை மறக்காத மக்கள் கலைஞரான மாயா அருள்பிரகாசத்துக்கு எனது வணக்கங்களும் பாராட்டுகளும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயாவின் தந்தையாரை நான் முதன் முதலாக 1885ல் தமிழகத்தில்தான் சந்தித்தேன்.

நீங்கள் பாபாவா? :(

(கோபித்துக்கொள்ளாதீர்கள்! :( )

Link to comment
Share on other sites

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால பங்காளிகளுள் அவரும் ஒருவர். எமது சாபக்கேடான இயக்க மோதல்கள் ஆரம்பிக்காமல் ஐக்கியமுன்னணி அணுகுமுறை வளர்ந்திருக்குமானால் அருளர் போன்ற பலர் பெரும் அள்வில் பங்களிப்புச் செய்திருக்கக் கூடும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஐயா ஜெயபாலன் அவர்களுக்கு,

ஆயுதப்போராட்ட ஆரம்பம் எங்கிருந்து எந்த நதியிலிருந்து ஊற்றெடுத்தது என்பதா இப்போதைய பிரச்சனை ?

எத்தனை நாளுக்கு இன்னும் இயக்க மோதல் சகோதர மோதலென்று சுற்றிச் சுற்றிக் கடந்தகாலக் கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கப்போ

Link to comment
Share on other sites

சாந்தி, உங்க கருத்து எதுவோ அதை நீங்க சொல்லுங்க. பயனுள்ளதை எடுத்துக்கிறன். அல்லது தாண்டிப் போய்கிண்ணே இருக்கிறன். எனக்கு எதை எப்படி எழுதுவது என்று பாடம் நடத்தாதீங்க. நான் யாழில் எழுதுவதற்காக சிந்திக்கிறவனல்ல. சொல்ல வேண்டிய எல்லா இடங்களிலும் தொடற்ச்சியா சொல்லுகிற விடயங்களில் மிக மிகச் சிலதை மட்டுமே உங்கள் போன்றோரின் வெறுப்பை தாங்கிக்கொண்டு இன்னும் யாழில் எழுத முனைகிறேன். நான் எதைச் சொன்னாலும் வரலாற்றுக்கும் அடுத்த தலைமுறைக்கு பொறுப்பாகத்தான் சொல்கிறேன். யாழில் எபோதவது ஒருமுறைதேனே எழுதிறன். இதுகூட பிடிக்கலையென்றால் 'டோய் இனி அத்தி பூத்தாப்போலதன்னும் நீ யாழில் எழுததே" என்று மட்டும் சொல்லலாமல்ல போயிருவமல்ல.

புண்படுவதா? நானா? உங்கள் பேச்சைக் கேட்டா? என்ன ஜோக் அடிக்கிரீங்களா? .பல தடவை துப்பாக்கிகள் அழுத்தப்பட்ட் ட நெற்றி அம்மு இது. நெற்றிக் கணனைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிற பரம்பரை அம்மு என் பரம்பரை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.