Jump to content

இவ்வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்து வாழ முடியுமா...?? பார்த்து முடிவை எடுங்கள்... வன்னி நிலபரம்...


Recommended Posts

எங்கட உறவெல்லாம் இப்படி சாகுதே ஈவிரக்கமில்லாத சிங்களவன்.. இப்படி குஞ்சுகளும் குழந்தைகளும் சின்னபின்னமாகிறத சிரிச்சுகொண்டு இரசிக்கிற இனத்துரோகிகள்..தமிழ்சனம் செத்துப்போக திட்டம் போடற ஆட்கள்.. ஆயுதம் கொடுக்கிற நாடுகள்.. யாருக்குமே தெரியாத மனிதவுரிமைகள்... எவனுக்கும் அருகதை இல்லை மனிதவுரிமை பற்றி கதைக்கிறது..

அவன் நினைக்கலாம் அதுக்குள்ள இருக்கிற பூக்களும் புலியெண்டு... ஆனால் இதப்பார்க்கிற ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும்.. ஒவ்வொரு பிரபாகரனாக மாறலாம் என்றதை சரித்திரம்காட்டட்டும் தமிழ் வெல்லட்டும்.. மக்கள் உயிர் காப்பற்றப்படட்டும் தயவு செய்து நீங்கள் மட்டுமில்லாமல் எல்லாத் தெரிந்த நல்ல மனித உள்ளங்களையும் சேர்த்து ஒரே மூச்சாய் ஒத்துழையுங்கள். பாடுபடுங்கள் பகலிரவாய்..எனக்கென்னஇன்று இனியும் இருக்காதீரகள்...

மற்றவர்கள்யாருமே இல்லை..

நீங்கள்தான்

நீங்கள்தான் ஒவ்வொரு கையும்.. ஒவ்வொரு உயிரைக்காக்கும்..தயை செய்யுங்கள்

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பை செய்ய முன்வாருங்கள்.எதிரி தனக்கு சேர்த்த நண்பர்களை விட நாங்கள் பல நண்பர்களை உருவாக்குவதன் மூலம் தான் உலக அபிப்பிராயத்தை எம்பால் திருப்ப முடியும்.

Link to comment
Share on other sites

சிங்களவன் தமிழனை சக நாட்டவனாக மட்டும் இல்லை. மனிதனாக கூட மதிக்க இல்லை...

Link to comment
Share on other sites

பரவாயில்லை மோகன் அண்ணா. ஆனால் 7 பில்லியன் மக்கள் வாழும் உலகில் மனிதாபிமானம் மிக்க பல மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் நாம் எப்படி நடத்தப்படுகிறோம் என்ற செய்தியி கொண்டு செல்வதில் நாம் ஏன் தாமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த மக்கள் நினைத்தால் ஆயிரம் சி,என்.என் ஆகவோ , ஆயிரம் பி.பி.c யாகவோ மாற்றலாம். எம்மில் தான் உள்ளது. யூத இனம் சாதித்த போது எம்மால் மட்டும் ஏன் முடியாது.?

Link to comment
Share on other sites

எம் தோள் மேல் ஏற்றி வைக்கப்பட்டுள்ள கடமையை நாம் சரிவரச் செய்வோம். எமது இலட்சியம் நிச்சயம் வெல்லும்.

ஜானா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வடமராட்சி கிழக்கில் கடலில் நீராடிய சிறுவனை காணவில்லை! By T. SARANYA 30 JAN, 2023 | 03:39 PM யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவன் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு,  பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/147038
  • யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்று சாதனை ; சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி By T. SARANYA 30 JAN, 2023 | 02:38 PM யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்குஅவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடுகடந்த 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில்  நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய  பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது இது ஒரு வரலாற்று மைல்கல்  என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார். வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாத்து சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு  வரலாற்று சாதனை. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக  நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவதுசிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள்  மருத்துவ பரிசோதனைகள்  முன்னெடுக்கப்பட்டு  சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/147027
  • 'திட்டமிட்டுக் கொள்ளை' - ஹிண்டன்பர்க் விமர்சனம்; அதானி பங்குகள் மீண்டும் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மூன்றாவது நாளாக கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன.  அதானி குழுமம் தனது மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டியது, பங்குச்சந்தைகளில் திருகு வேலைகளை செய்தது என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் விளைவுகளை இன்றும் பங்குச்சந்தைகளில் காண முடிந்தது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் மீது எழுந்துள்ள சந்தேக மேகங்கள் இன்னும் விலகாததால் முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்த வண்ணம் உள்ளனர். இதனால், பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் இருக்கின்றன.  அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?3 மணி நேரங்களுக்கு முன்னர் வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?28 ஜனவரி 2023 நரேந்திர மோதியுடன் நட்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி வெளிப்படை பேச்சு8 ஜனவரி 2023 அதானி குழுமத்தில் 5 நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவு கடந்த புதன்கிழமையன்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக இன்றும் அதானி குழுமத்தில் மொத்தமுள்ள 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.      வாரத்தின் முதல் வேலை நாளான இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே, அதிகபட்சமாக அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் பங்குகளின் மதிப்பு ஒரு கட்டத்தில் 20 சதவீதம் சரிந்து, ரூ. 2,347 ஆக இருந்தது.  அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் 18.66 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 16.11 சதவீதமும், அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 5 சதவீதமும் சரிவை கண்டன.  பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் ஏறுமுகம் அதானி குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஏறுமுகமாக இருந்தது.  அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் 6.15 சதவீதம் ஏற்றம் கண்டு 2,931.95 ரூபாயாக இருந்தது. அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் பங்கு மதிப்பு 3.58 சதவீதம் உயர்ந்து 620 ரூபாயானது.  ஏ.சி.சி., அம்புஜா பங்குகள் ஏற்றம் - என்.டி.டி.வி. பங்குகள் சரிவு அதானி குழுமம் தவிர, கௌதம் அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டின் பங்குகளும் சிறிய அளவில் ஏற்றம் கண்டன. அண்மையில் அதானி வாங்கிய என்.டி.டி.வி. லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறைந்துள்ளது.  அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்கு வெளியீடு நிலவரம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தாலும் கூட, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட கூடுதல் பங்குகளின் விலை குறைக்கப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையன்று திட்டமிட்டபடி, ரூ.20,000 கோடி மூலதனம் திரட்டும் பொருட்டு கூடுதல் பங்கு வெளியீட்டில் இறங்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அந்த நாள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சுமார் ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் ஆயின.  பங்குச்சந்தையில் வீழ்ச்சிப் பாதையில் இருந்த அதானி குழுமத்தில் முதலீடு செய்ய தயக்கம் நிலவியதால், இன்றைய தினம் அதானி எண்டர்பிரைசஸ் வெளியிட்ட கூடுதல் பங்கின் விலை 10 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஒருவேளை கூடுதல் பங்கு வெளியீட்டில் இருந்து கூட அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பின்வாங்கக் கூடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.  ஆனால், கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கூடுதல் பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டுள்ளது. அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு உயர்வு கண்டது.  பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்தியா மீதான தாக்குதல் இது" என அதானி குழுமம் சாடல் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் இதுவரை எதிர்கொண்டிராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத சூழலில், "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்" என்று அதானி குழுமம் சாடியுள்ளது.  ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு பதிலளித்து 413 பக்கள் கொண்ட விளக்க அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது.  உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும், ஒழுங்கு விதிகள்படி தேவையானவற்றை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.  "இந்திய சட்டங்கள் மற்றும் கணக்கியல் தரநிலைகளின் கீழ் 'தொடர்புடைய தரப்புகள்' எனத் தகுதிபெறும் நிறுவனங்களுடன் நாங்கள் மேற்கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் எங்களால் முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன," என்று தனது அறிக்கையில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.  அடிப்படையில் "ஷார்ட் செல்லராகவும்" செயல்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்கு விற்பனையில் ஆதாயம் ஈட்டும்  நோக்கில் ஆதாரங்களை குறிப்பிடாமல் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக  அதானி குழுமம் விமர்சித்துள்ளது.  மேலும் அந்த அறிக்கையில், "இதில் ஆதாயம் பெறும் நோக்கமே நிறைந்துள்ளது. ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது-  ஹிண்டன்பர்க் கடும் எதிர்வினை அதானி குழுமத்தின் விளக்க அறிக்கைக்கு உடனடியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது. நாங்கள் வெளியிட்ட விரிவான அறிக்கையில் எழுப்பியிருந்த 88  கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.  "இந்தியா துடிப்பான ஜனநாயக நாடாகவும், பிரகாசமான எதிர்காலம் கொண்ட வல்லரசாக வளரும் நாடாகவும் திகழ்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படுவதாக நம்புகிறோம். இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசக் கொடியை போர்த்திக் கொண்டுள்ளது," என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.  பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்தை கலங்கடிக்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டி, 88 கேள்விகளை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க்.   மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.  அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச்சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.  https://www.bbc.com/tamil/articles/c512y7zr1n7o
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.