Jump to content

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்


Recommended Posts

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்

செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர்.

இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இன்று செம்புகுமார் மற்றும் ஆறுமுக நயினார் என்ற இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாமகவினர், பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இரு மாணவர்களையும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே நான்கு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மயக்கமடைந்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

thatsTamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன உணர்வுமிக்க இளைஞர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன உணர்வு மிக்க இளைஞர்கள் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள்.

உண்ணாவிரதம் வேண்டாம். கரம் இணைத்து இருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தயவு செய்து உங்கள் பட்டினி போராட்டத்தை நிறுத்தி , வேறுவழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் மாணவர்களே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு சோதரர்களே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்,உங்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம்.ஈழத்தமிழர்களை மதிக்காதவர்களுக்கும் தனி தமிழீழத்தை அங்கீகரிக்காதவர்களுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்று காட்டுங்கள் அதுவே போதும்.

Link to comment
Share on other sites

அன்பான தமிழ்நாட்டு உறவுகளே உண்ணாவிரதத்தை கைவிட்டு எமக்கு நிறைய வழிகளில் உதவலாம். உங்களின் உயிரை பாரத தேசம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உங்களின் உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனையே கணக்கெடுக்காத இந்திய மத்திய அரசு இந்த மாணவர்களை எம்மாத்திரம் ஒற்றுமையே பலம் இணைந்திருங்கள் எங்களுடன் மாணவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரத மாணவர் உடல் நலம் பாதிப்பு

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக நேற்றும்(24.1.09) உண்ணாவிரதம் இருந்தார்கள்.

திரைப்பட நடிகர் சத்யராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மற்றும் டைரக்டர் செல்வமணி, கவுதமன் ஆகியோர் நேற்று செங்கல்பட்டுக்கு வந்து உண்ணாவிரத பந்தலில் சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இதில் உண்ணாவிரதம் இருந்த கெம்புகுமார் என்ற சட்டக்கல்லூரி மாணவரின் உடல் நலம், திடீர் என்று பாதிக்கப்பட்டது.

பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. , அவரை மருத்துவனைக்கு அழைத்துச்சென்றார்.

நன்றி: நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக உருண்டையின் முகங்களாக தெரியும் பல நாடுகளும் அவற்றினை ஆளும் சட்டங்களும் அதனை அமல்படுத்தும் நிர்வாக மையங்களுமே மிக மோசமான தனி மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த உதாரணங்களாகும்,உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு எனக்கூறப்படும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது என்றால் அதற்கு அரசியல் வாதிகள் குற்றம் கூறுவது தமிழர்களையே.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரச இயந்திரம் தனது கடமையை ஒழுங்கு பட செய்து தனிமனித சுதந்திரத்தைப்பேணுவதை விடுத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதிலும்,அரசியல் காழ்ப்புணர்ச்சி பழிவாங்கலுக்கு அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தனி மனித உரிமைகளுக்கெதிரான மோசமான பயங்கரவாதிகளாகி விட்டார்கள்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்தால் ஆயுதக்கலாச்சாரம் வளர்ந்துவிடும்,பூங்கா சுடுகாடாகிவிடும் என்று இந்த அரசியல் குண்டர்கள் கூறிக்கொண்டே அரங்கேற்றும் அரசியல் படுகொலைகள் எண்ணில்லடங்காது.

தமிழன் சுதந்திரமாகக்கருத்துக்கூறம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.