Jump to content

300க்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்றைய தாக்குதலில் பலி, 200 பேர் காயம்


Newsbot

Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

:lol: 100 civilians feared killed, countless wounded, artillery barrage on 'Saftey zone'

[TamilNet, Monday, 26 January 2009, 09:06 GMT]

Hundreds of wounded patients were going to die without medical treatment as Sri Lanka Army (SLA) was continuously engaged in a most inhumane artillery barrage on civilian populated 'safety zone' in Udaiyaarkaddu Monday morning, according to initial reports from the medical sources in Udaiyaarkaddu. All the civilians were remaining under the bunkers for more than 5 hours. The makeshift hospital at Udaiyaarkaddu was on total disarray as 10 patients were killed and four ambulances damaged. The doctors have called for the ICRC, which is also helpless under the bunkers, the reports said.

Sri Lanka Army (SLA) which wants to see the civilians surrender, by bringing them to their extreme limits, has caused the carnage.

There is nobody available to help the wounded, according to the initial reports from the medical sources.

TamilNet correspondent who reported from the area on Sunday said:

"The message the Sri Lankan forces were passing to the civilians of Vanni, by repeated and unprovoked attacks, is that they should subjugate themselves by walking into the territories in the hands of the Sri Lanka Army (SLA)."

"People are not prepared to surrender themselves. They seem very concerned of the future course of the struggle and were concerned of their sons and daughters."

"The Sri Lankan military is testing the breaking point of the people."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28144

இது தான் களயதார்த்தம் ஆனால் நாங்களோ ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களையும் குழப்பும் விதமாக வாந்தி எடுத்து கொண்டு திரிகிறோம்

Link to comment
Share on other sites

சசி முடியுமானால் முக்கியமானவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்து தாருங்கள்.

Link to comment
Share on other sites

இது தான் களயதார்த்தம் ஆனால் நாங்களோ ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களையும் குழப்பும் விதமாக வாந்தி எடுத்து கொண்டு திரிகிறோம்

இச்செய்தியை 100 பேர் வாசிப்பார்கள்,இருவர் பதில் கருத்து எழுதுவார்கள்.

ஆனால் வாந்தி செய்திக்கு 50000 வாசகர்கள் ,250பதில் கருத்துக்கள்.இதுதான் உலகம். :lol:

Link to comment
Share on other sites

இந்த செய்திகளை முடிந்தளவுக்கு வெளியுலகுக்கு விரைவாக கொண்டுவருவதன் மூலம் அதை தடுத்து நிறுத்த முயல்வோம். தயவு செய்து வதந்திகளை பரப்பும் தவறான செயலில் அறிந்தோஅறியாமலோ நீங்களும் இணைந்து கொள்ளாதீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இன அழிப்பை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தவேண்டும் :lol:

Link to comment
Share on other sites

இச்செய்தியை 100 பேர் வாசிப்பார்கள்,இருவர் பதில் கருத்து எழுதுவார்கள்.

ஆனால் வாந்தி செய்திக்கு 50000 வாசகர்கள் ,250பதில் கருத்துக்கள்.இதுதான் உலகம். :lol:

வெறுமனே எமக்குள் கருத்து எழுதி குய்யோ முறைNயுh கத்துவதால் மட்டும் பிரயோசனம் இல்லை. உலகத்தின் கண்களுக்கு கொண்டு செல்ல என்னையா செய்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

வெறுமனே எமக்குள் கருத்து எழுதி குய்யோ முறைNயுh கத்துவதால் மட்டும் பிரயோசனம் இல்லை. உலகத்தின் கண்களுக்கு கொண்டு செல்ல என்னையா செய்கிறீர்கள்.

உலகத்தின் கண் குருடு என்று தெரிந்ததால் நாங்கள் ஒண்றும் செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 க் கணக்கான எறிகணைகள் மழை போல்.. தொடர்சியாக பொழியப்பட்டுள்ளன. :unsure:

ஐசிஆர்சி கூட ஒரு வார்த்தை சொல்லாமல்.. தானும் பதுங்கு குழிக்குள் ஒளித்திருக்கிறது.

எனிச் சொன்னாலும்.. செல் எந்தத் திசையில் இருந்து வந்தது என்பதை அணுமானிக்க முடியவில்லை என்று சிறீலங்கா சிங்களப் பயங்கரவாதப் படைகள்.. தொடர்ந்தும் இவ்வாறான மனிதப் படுகொலைகளை செய்ய ஊக்குவித்துக் கொண்டே அறிக்கை விடும்.

காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்ல மருத்துவ காவு வண்டிகளும் இல்லை. அவையும் செல் வீச்சில் சேதமடைந்துள்ளன.

அப்போ.. எமது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது..?! நாம் என்ன செய்வது.. அவர்களை காப்பாற்ற...???!

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும்.. எமது மக்களின் இரத்தத்தால் நிரப்பப்படுகிறது என்பதை உணர வேண்டும்.. திட்டங்களை விரைந்து தீட்டி.. இனப் படுகொலையின் உச்சக் கட்டத்தில் இருந்து எமது மக்களை அடித்துப் பணிய வைக்கும் உலகின் செயல்களில் இருந்து காக்க வேண்டும்..! :lol:

DSC00745.jpg

DSC00743.jpg

http://www.votradio.com/gallery/categories.php?cat_id=114

Link to comment
Share on other sites

சிங்ள வெறியர்கள் இன சுத்திகரிப்பினை அருமையாக திட்டம் தீட்டி நடத்திக்கொண்டிருக்கின்றாா ்கள்.

எமது அடிவருடிகளும் அவர்களுக்கு துணை போகின்றனர்.

உயிரிழந்த தமிழ்மக்களுக்கு அஞ்சலிகள்.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தம்மால் இயன்றவரை இச்செய்தியினை சர்வதேச மயப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 க் கணக்கான எறிகணைகள் மழை போல்.. தொடர்சியாக பொழியப்பட்டுள்ளன. :unsure:

ஐசிஆர்சி கூட ஒரு வார்த்தை சொல்லாமல்.. தானும் பதுங்கு குழிக்குள் ஒளித்திருக்கிறது.

எனிச் சொன்னாலும்.. செல் எந்தத் திசையில் இருந்து வந்தது என்பதை அணுமானிக்க முடியவில்லை என்று சிறீலங்கா சிங்களப் பயங்கரவாதப் படைகள்.. தொடர்ந்தும் இவ்வாறான மனிதப் படுகொலைகளை செய்ய ஊக்குவித்துக் கொண்டே அறிக்கை விடும்.

காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்ல மருத்துவ காவு வண்டிகளும் இல்லை. அவையும் செல் வீச்சில் சேதமடைந்துள்ளன.

அப்போ.. எமது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது..?! நாம் என்ன செய்வது.. அவர்களை காப்பாற்ற...???!

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும்.. எமது மக்களின் இரத்தத்தால் நிரப்பப்படுகிறது என்பதை உணர வேண்டும்.. திட்டங்களை விரைந்து தீட்டி.. இனப் படுகொலையின் உச்சக் கட்டத்தில் இருந்து எமது மக்களை அடித்துப் பணிய வைக்கும் உலகின் செயல்களில் இருந்து காக்க வேண்டும்..! :lol:

எல்லோரும் காக்கவேணும்

எழுதவேண்டும்

எடுத்துச்செல்லவேண்டும்..............

........

இப்படியே ஆளாளுக்கு மாறிமாறி புலம்பியதைத்தவிர..................????

என்ன செய்யப்போகின்றோம் ............????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் காலை உடையார் கட்டில் அமைந்துள்ள சிவிலியன் பாதுகாப்புப் பிரதேசம் மீது சிங்கள ஆக்கிரமிப்பு ராணூவம் நடத்திய மிக மோசமான மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு இன்னும் படுகாயப்பட்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் எந்தவித மருத்துவ உதவிகளுமின்றி இறக்கும் தறுவாயில் இருப்பதாக அறியவருகிறது.உடையார் கட்டிலிருந்து வந்த ஆரம்ப தகவல்களின் படி எல்லாப் பொதுமக்களுமே சுமார் 5 மணித்தியாலாங்களுக்கும் மேலாக பதுங்கு குழிகளுக்குள் இருந்ததாகத் தெரிய வருகிறது. உடையார்கட்டில் இடம்பெயர்ந்து இயங்கி வந்த மருத்துவமனையும் முற்றாக செயல் இழந்துள்ளதோடு அங்கு 10 பொதுமக்கள் கொல்லப்பட்டு 4 அம்புலன்ஸ் வண்டிகளும் அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய போதும், அவர்களும் பதுங்கு குழிகளுள் இருந்தபடியினால் எந்த உதவியுமே கிடைக்கவில்லை.

அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் வெளிப்பகுதிகளில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் அவசர மருத்துவ உதவிகளை வேண்டியிருப்பதோடு, சிவிலியன் பாதுகாப்பு வலயத்தில் நடக்கும் அப்பட்ட கூட்டுக் கொலையைத் தடுத்து நிறுத்தும்படியும் வேண்டியிருக்கின்றனர்.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான அழிப்பு எறிகணைத் தாக்குதல் எனக் கருதப்படும் இத்தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான எறிகணைகள் அரச பயங்கரவாதத்தால் ஏவப்பட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பொதுமக்களைச் சரணடைய வைத்து அவர்களை தாக்குப்பிடிக்கும் அளவின் எல்லைக்கே கொண்டு சென்று அடிபணியவைக்கும் நோக்குடன் சிங்கள ராணுவம் நடத்தியுள்ள இந்த கொலைத் தாக்குதலில் பெரும் மனித அவலம் ஏற்பட்டிருக்கிறது.

காயப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு அங்கு எவருமே இருக்கவில்லை என்று ஆரம்பகட்ட மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை வவுனியாவை வந்தடைந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இமெல்டா சுகுமார், தன்னால் அங்கு இனிமேல் பணி புரிய முடியாதெனவும், நிலமை சீராகும்வரை தான் அங்கு மீண்டும் செல்ல முடியாதெனவும் கூறியுள்ளதோடு, தனது பணியாட்களையும் அங்கிருந்து வேளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்பகுதியிலுள்ள தமிழ்நெட் செய்தியாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செய்தியின்படி, இவ்வாறான கூட்டுப் படுகொலைத் தாக்குதல்களின் மூலம் சிங்கள ராணுவம் வன்னி மக்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்னவென்றால், தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு, சிங்கள ராணுவம் அக்கிரமித்துள்ள பகுதிகளுக்குள் வந்து தம்மிடம் சரணடைய வேண்டும் என்பதுதான்.

"ஆனால் மக்களோ சரணடைவதற்குத் தயாராக இல்லை, அவர்கள் போராட்டத்தின் எதிர்காலம் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார்கள், தங்களது மகன்மார் மற்றும் மகள்மார் பற்றிக் கவலை கொண்டுள்ளார்கள்".

"சிங்கள ராணுவம் மக்களின் பொறுமையின் எல்லையச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது"

நன்றி தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தம்மால் இயன்றவரை இச்செய்தியினை சர்வதேச மயப்படுத்துங்கள்.

சர்வதேசம் என்ன கிழித்துவிட்டார்கள்???

100 பேர் அல்ல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டாலும் வாயை பொத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

சிங்கள ராணுவம் மக்களின் பொறுமையின் எல்லையச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது"

என்ன பொறுமை? யாழ்ப்பாணத்தில் ஓட வழியில்லாமல் திரும்பி யாழுக்கு போனது போல் தங்கள் கட்டுப்பாட்டுக்கு வருவார்கள் என்று அடிக்கிறார்கள்.

உண்மையில் அரசுக்கு வந்தாலும் சந்தோசம் வராவிட்டாலும் சந்தோசம் யாருக்ம் கேக்க மாட்டார்கள் என்று தெரிந்தால் அடித்து கொண்டு இருப்பார்கள்

முக்கியமாக இவர்கள் பக்கத்து வடக்கு நாட்டையும் முக்கிய நட்பு நாடுகளையும் போருக்கு ஆதரவு தரச்சொல்லி கேக்கும் போஒது மக்களுக்கும் இழப்பு வரும் என்று நல்லவர் கள் போல சொல்லி இருப்பார்கள் அதுக்கு பக்கத்து வடக்கு நாடு சொல்லி இருக்கும் நான் இருக்கேன் இழப்பை வெளியில் சொல்ல கூடிய பலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் தான் இருக்கு அந்த கோமாளிகளை நான் பார்க்கிறேன் என்று.

இன்று இஸ்ரேல் அரசு சொல்லி இருக்கு தனது இராணுவம் மீது போர்குற்றம் சுமத்தினால் தாங்கள் கைவிட மாட்டோம் என்று இது போதாத இலங்கைக்கு????????

இந்தியனை நண்பனாக வைத்து இருங்கள் ஆனால் நல்லவனாக நம்பி இருக்க வேண்டாம்

சர்வதேசம் என்ன கிழித்துவிட்டார்கள்???

100 பேர் அல்ல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டாலும் வாயை பொத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.

நீங்கள் நினைப்பது தவறு சர்வதேசன் பொங்கி எழுந்து புலிகள் மீது கடும் நிபந்தனை போட்ட போகிறார்கள்

அதே போல் மனுக் கொடுக்கும் மனுநீதி சோழன்களுக்கும் அதே தான் சொல்ல போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Here is the text of the letter by Bishop Savundaranayagam of 25.01.2009.

"We are very grateful to you for your concern for the civilians who have taken refuge in Vanni in the on-going War. We thank you sincerely for declaring a part of the west of Mullaitivu as safety one. The area indicated is small and uninhabitable considering the large number of the people who are congregating in this area. Some of the Priests and the Sisters who are with the displaced people have informed me that they are with the people who have assembled in the Churches which are in the Eastern part of Mullaitivu (Mathalan, Valiayarmadam, Mulivaikal, Iranapalai and eastern sector of Puthukudiyiruppu). I have requested to treat them also as safety areas for the thousands of people gathered in these places and thus assuring the safety of the priests and religious also. As the Bishop responsible for these areas they have made this urgent request to me. The G.A. of Mullaitivu also has made at this proposal to the ICRC requesting them to explore the possibility of declaring the above areas as safety zone with the permission of SL Security Forces.

Our only motive in requesting your Excellency for the extension of the safety zone is to preserve as much as possible the lives of the civilians in these areas. My Priests and Sisters have told me that they will not abandon the people but move along wherever the people are going. Having lived with them always and suffering with them. They will not leave them at this time of crisis. This has been always the practice of the Catholic priests, to be among the people even in the time of danger.

We are also urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery-shells and rockets at the Army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people. I insist that both parties must observe the safety zone strictly.

Therefore, I am pleading with your Excellency to consider declaring the western portion of Mullaitivu also a safety zone for the sake of the innocent civilians.

We are not against the war but our priority is the safety of every innocent civilian in those areas of war." (PRIU).

Courtesy: Presidential Media Unit

defence.lk

Link to comment
Share on other sites

மக்கள் எவ்வழியிலும் காப்பாற்றப்படவேண்டும்.. இதனை மேலும் தடுக்க உடனடியாக புலம்பெயர்மக்கள் பலவழிகளிலும் முயற்சி செய்யவேண்டும்.. இலங்கையரசினை நெருக்கடி கொடுத்து போர் நிறுத்தம் உடன் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு தேவையான மருத்தவுதவிகள் மேற்கொள்ளப்படவேண்டும்... ஒவ்வொரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொண்டர் அமைப்புகள், மூலம் அந்த நாடுகளின் அரசுக்களின் மூலம் இலங்கையரசை நெருக்கி உடன் எதாவ்து வழியில் எம்மக்கள் காப்பாற்றப்பட்வேண்டும்.

மக்கள் இல்லாத மண் எதற்கு எமக்கு? மக்களைப்பாதுகாக்காத எந்த நாடும் இனி எமக்கு தேவையில்லை..

தயவு செய்து எல்லோரும் உங்களால் முடிந்த வழிகளில் உலகத்தின் கவனத்திற்கு உடன் கொண்டுவாருங்கள்...

உலகத்தின் கவனத்தைக்கொண்டுவரும் வழியில் ஒவ்வொரு நாடுகளிலும் பெரும் முடக்கக்கூடிய பெரும் போரட்டங்களை முக்கிய இடங்களில் உடன் செய்து தொடர்போரட்டஙளை செய்யுஙள்..

ஐரோப்பிய நாடளுமன்றத்தை உடன் மக்கள் முற்றுக்கை இடுங்கள்.. முடிவு கிடைக்கும் வரை தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இனப்படு கொலையை நிறுத்த போராட்டங்கள் ,உண்ணாவிரதங்களை புலம்பெயர் தமிழர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், மேலதிகமாக என்ன செய்யலாம், இஸ்ரேலின் அனியாத்தை காட்டியது போண்று உலக தொலைகாட்சிகள் இவற்றை வெளிக்கொண்டு வந்தால் இவை வெளிவரும் ,அவை நடைபெறாத போது நாம் வேறு வழியில் முயற்சிக்கவேண்டும்,

ஒவ்வொரு கள உறவும் ஜந்து ஆறு யூத்ரூப் கணக்குகளை உருவாகவேண்டும், அங்கிருந்து வரும் ஒளிப்பதிவுகளை தமது தமது நாட்டு மொழியில் தலைப்பிட்டு தரவேற்றம் செய்ய வேண்டும், இதை கூட்டாக பெருமளவில் செய்யும் போது பல மக்களது பார்வைக்கு செல்லும், ஒளிப்பதிவுகள் வர பிந்தும் சமயத்தில், புகைபடங்களை கொண்டு சிலைட்சோக்களை உருக்வாக்கி செய்தியின் இணைப்பையும் கொடுக்கவேண்டும், ஒருவர், இருவர்மட்டும் கோரக்காட்சிகளை தரவேற்றும்போது சிங்களவர்கள், முறைப்பாடுகளை செய்து யூத்ருப் அவற்றை நீக்கி விடுகின்றது, பெருமளவில் தரவேற்றம் செய்யப்பட்டால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது, கணக்குகளை முடக்க முடக்க புது புது கணக்குகளை உருவாக்கி தரவேற்றம் செய்ய வேண்டும், இன்னமும் கோகுல்.யாஹூ, மற்றவற்றிலும் இற்றை தரவேற்றவேண்டும், இணைய தரவேற்றங்கள் முடங்கும் அளவிற்க்கு பெருமளவில் தரவேற்றம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட மகக்ளுக்காவது இவற்றை கொண்டு செல்லலாம், பெருமளவில் இஸ்ரேலின் கொடுமைகள் காட்சிகளாக வெளிவந்ததால்தான் அங்கு போர் நிறுத்தம் வந்ததை நாம் மறந்து விட கூடாது, எமக்குள்ள வழிகளில் முடிந்த வரை முயற்சி செய்வோம்.

இந்த போராட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ள வைக்கமுடியும், ஏனெனில், வேலைக்கு லீவு எடுக்கவேண்டியதில்லை,பிள்ளைக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது திட்டமிடப்பட்ட இன ஒழிப்பா? அல்லது கல்மடுத் தாக்கத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிடப்பட்ட இன ஒழிப்பா? அல்லது கல்மடுத் தாக்கத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடா?

வன்னி மக்களை இலக்காக்கி.. தம்மீதான தாக்குதலை தணிக்கச் சொல்லி யாழ் ஆயர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது..!

Heavy fighting prevailed in the area as the terrorists made several attempts to breach the Army forward boundary yesterday. Troops successfully thwarted all these attempts of the terrorists. Both radio monitoring reports and ground sources confirmed heavy damages to the terrorists. Troops too sustained damages.

------------

We are also urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery-shells and rockets at the Army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people. I insist that both parties must observe the safety zone strictly. - bishop

defence.lk

-------------

ஆயர் அப்படி சொல்லி அறிக்கை விட்டிருப்பதாக அரசு சொல்கிறது..

ஆனால் வன்னியில் உள்ள செய்தியாளர்கள் இவ்வாறு சொல்கின்றனர்..

TamilNet correspondent who reported from the area on Sunday said:

"The message the Sri Lankan forces were passing to the civilians of Vanni, by repeated and unprovoked attacks, is that they should subjugate themselves by walking into the territories in the hands of the Sri Lanka Army (SLA)."

"People are not prepared to surrender themselves. They seem very concerned of the future course of the struggle and were concerned of their sons and daughters."

"The Sri Lankan military is testing the breaking point of the people."

தமிழ்நெட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் போராட்டங்கள் உண்ணாவிரதங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், அனைவரும் வீதிக்கு இறங்க வேண்டும், போர் நிறுத்தம் ஏற்படும் வரை எமது போராட்டங்களை நிறுத்தகூடாது , போராட்டங்கள் மூலம் அந்த அந்த நாடுகளுக்கு நாம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும், அனைத்து மக்களும் இதில் இணைந்து கொள்ளவேண்டும். முடிந்த வரை அவலத்தை உலக மகள் முன் கொண்டு வருவோம் , எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும், முயற்சி செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

We are also urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery-shells and rockets at the Army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people. I insist that both parties must observe the safety zone strictly.

Therefore, I am pleading with your Excellency to consider declaring the western portion of Mullaitivu also a safety zone for the sake of the innocent civilians.

We are not against the war but our priority is the safety of every innocent civilian in those areas of war." (PRIU).

இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? போர் நடப்பதே தமிழர்களை அழிக்கும் நோக்குடன் தான் எனும் போது, "தமிழர் அழியாது போர் நடத்துங்கள், நாங்கள் போருக்கு எதிரானவர்கள் இல்லை" என்று ஒரு தமிழ் மதகுருவே சொல்லுகிறார் என்றால் நாங்கள் தலையைக் கொண்டுபோய் எங்கு மோத?

புலிகள் போகும் இடமெல்லாம் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து செல்லும் போது " மக்களுக்கிடையில் இருந்து நீங்கள் ராணுவத்தின் மேல் தாக்குதல் நடத்த வேண்டாம், இதனால் மக்கள் கொல்லப்படுவதுதான் அதிகரிக்கும்" என்று ஒரு புதிய கண்டுபிடிப்பை இவர் செய்திருக்கிறார். இது சிங்க்ளம் செய்யும் "மக்களைக் கேடயங்களாகப் புலிகள் பாவிக்கிறார்கள்" என்பதிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்று எவராவது சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

) Video made while shells were falling. Shows the search for the injured & scenes at the displaced/makeshift hospital where doctors work with almost no medical supplies:

http://www.youtube.com/watch?v=eyfXwUlOCn0

2) Interview with woman from Children's Home for the Vision, Hearing & Learning Impaired that was shelled by the Govt of SL on 22 Jan 2009:

http://www.youtube.com/watch?v=8FCFs5_Mzl8

3) Interview with woman whose 2 children were killed in a Sri Lanka Army shelling:

http://www.youtube.com/watch?v=xAxeJUuLfUM

4) Interview with displaced woman (Tamil with English subtitles)

http://www.youtube.com/watch?v=p8qG04rscB8

5) Interviews with civilians injured by shelling & doctor who treated them

http://www.youtube.com/watch?v=OBA3VQqdfBk

6) Injured & their relatives at the hospital after a Sri Lanka Army shelling:

http://www.youtube.com/watch?v=JjPhq2Fbmzk

TRO YouTube Channel - for more videos:

http://www.youtube.com/user/TROKilinochchi

Link to comment
Share on other sites

எங்களுக்குள்ளே இந்த அவலச் செய்தி முடங்கி எந்த பிரயோசனமும் இல்லை. இவ்வாறான ஆங்கிலச் செய்திகளையும் காணொளி இணைப்புகளையும் அரசியல் சாட் ரும்களில் வெட்டி ஒட்டுங்கள். தனி நபர்களுக்கும் ஒவ்வொருவராக எத்தனை பேருக்கு அனுப்ப முடியுமோ அனுப்புங்கள். (உதாரணம் யாகூ) ஆங்கிலத்தில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு பின்னூட்டத்தினூடு செய்திகளை தெரியப்படுத்த முயற்சியுங்கள். கணனிக்கு முன்னால் இருந்து எங்கெல்லாம் பரப்ப முடியுமோ அங்கெல்லாம் கொண்டு செல்லுங்கள். எமக்குள் புளுங்கி வேதனைப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை. இந்த அவலங்களை எந்ததெந்த வகையில் வெளி உலகத்திற்கு கொண்டு செல்ல முடியுமோ அனைத்து சிறு வளிகளையும் முயற்ச்சியுங்கள். இது எமது மனிதாபிமான கடமை.

Link to comment
Share on other sites

என்ன கள நிர்வாகத் தாருக்கு பொறுமை நல்லெண்ணம் மனிதாபிமானம்....கசக்குதோ !!!!

Link to comment
Share on other sites

நான் மேற்கண்ட யுரியூப் இணைப்பை 200ற்கும் மேற்பட்ட பத்திரிகை நிறுவனங்களுக்கு அனப்பியுள்ளேன்! தயவு செய்;து இதை எங்கெங்கு அனுப்ப முடியுமோ அங்கெல்லாம் அனுப்பவும்!

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.