Jump to content

ஒரு தமிழனாய்......


Recommended Posts

ஒரு தமிழனாய்

--------------------------

என் மனதைப் போலவே

கூதிரின் காத்தும்

கூவிச் சில்லிடுகின்றது

பனியைப்போல உறைக்காவிட்டாலும்

மனதை குடையும் வெம்மையின் சூடு

என்னைப் போலவே இன்னும்

உறையாமல்

எல்லாவற்றைப் பற்றியும்

பாடும் என் பாடல்கள்

பாட முடியாது தோற்கும்

இடம் என் சந்ததிகள்

என்னைப்போலவே முறையறியாது

குழம்பித் தவிக்கும் அவள்

தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது

மறந்து போன இன்பங்களைப் போல

உன் ஊரில் பாம்புண்டா ?

அவள் பயங்கள் பாம்பாய்ச்

சுற்றுகின்றன.

"பெக்கர்ஸ்"

அகதியாய் வந்தவர்களும்

பெக்கர்ஸ் தானே

வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே

எல்லாவற்றையும் தாண்டி

மூவேந்தர் பற்றியும்

பாரி முல்லை தேர்

ஒளவை தமிழ்சங்கம்

பற்றியெல்லாம் எப்போ

சொல்லி ஓய்வது..?

இன்னும் அகதியாய்

இருக்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போலவே முறையறியாது

குழம்பித் தவிக்கும் அவள்

தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது

மறந்து போன இன்பங்களைப் போல..............

என்னை போலவே குழம்பித

தவிக்கும் அவள் தமிழ் .............

என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ................நல்ல கவி வரிகள் ...தொடருங்கள் .மேலும் மேலும்

பதிவுக்கு நன்றி ..........அக்கா நிலாமதி .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அழகான கவிதை ! தொடருங்கள் ! உங்கள் கவிதை பூச்செடிகள் இன்னும் நிறைய உருவாகி ஒரு தோப்பு உருவாகிட வாழ்துகின்ரேன்.

Link to comment
Share on other sites

ஒரு தமிழனாய்

--------------------------

எல்லாவற்றையும் தாண்டி

மூவேந்தர் பற்றியும்

பாரி முல்லை தேர்

ஒளவை தமிழ்சங்கம்

பற்றியெல்லாம் எப்போ

சொல்லி ஓய்வது..?

இன்னும் அகதியாய்

இருக்கும் வரை

வரலாறு சொல்லியே இன்னும் அகதி வாழ்வும் அவலமும் எங்களை விடாக்கண்டனாய்..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனியைப்போல உறைக்காவிட்டாலும்

மனதை குடையும் வெம்மையின் சூடு

என்னைப் போலவே இன்னும்

உறையாமல்

யாதார்த்தம் பேசும் கவிதை தொடரட்டும் உம் கவிப்பயணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.