Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்

Recommended Posts

கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின்

வீரவணக்கம்...

(முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்)

ஈழத்தமிழர்களின் விடிவிற்காய்

ஈழமைந்தர்கள் குருதி சிந்தி

இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி

இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன

உன் உயிர் தியாகம் இன்று உலகையே

எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது.

உனக்காக ஒரு கவிதை எழுத - நம்

பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில்

எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன.

ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள்

கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள்

காற்றோடு காற்றாய் பறந்து விட்டன

மறத்தமிழனாய் இன்று - நீ

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்....

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே

உனக்கு என்றும் ஈழத்தமிழர்களின் வீரவணக்கங்கள்

ஈழத்தமிழர்க்காய் உன் உயிரைத் தியாகித்த

தமிழ்நாடு தந்த உத்தம தமிழனே.

என்றுமே நம் வேள்விப் பயணம் தொடரும்...

எறோ... நம் வேள்வி ஈடேறும்

தமிழர்களின் உணர்வுகள் வீறு கொண்டு எழுந்துவிட்டன

இனி தடைகள் எல்லாம் நமக்கு தடைக்கற்களல்ல

தமிழீழம் இதோ இனி நம் கையில்...

ம் சாந்தி, ஓம் சாந்தி,, ஓம் சாந்தி,,,

தமிழீழப் புலம்பெயர்வாழ் மக்கள்

Share this post


Link to post
Share on other sites