Jump to content

மீண்டும் அரங்கேறவுள்ள ஏமாற்று நாடகம் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

125000 தமிழ் மக்கள் பங்கு பற்றி லண்டனில் வரலாற்றை எழுதிய .....

சில நூறு ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட லெஸ்ரர் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வர முடியுமானால், பத்தாயிரத்து மேற்பட்ட ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட கரத் தோமச் வரமுடியாதா???????????

இக்கெள்விக்கு இன்று பதில் சொல்லட்டும்!!

Link to comment
Share on other sites

பொண்ட்007 சொன்ன மாதிரி, இக்கூட்டம் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு திரு கரத் தோமஸ் பம்மாத்து விட ஏற்பாடு செய்ததாக போனவர்கள் கூறுகிறார்கள். போன பலர் திரு கரத் தோமஸை கடுமையாக, அவர் முன்பே விமர்சித்ததாகவும், இனியும் ஏமாற மாட்டோம் என்று கூறி வந்ததாகவும் தகவல்.

நீண்ட காலமாக பிரித்தானிய தமிழ் மக்களின் 99 வீதமானவர்கள் தொழில்கட்சிக்கே வாக்களித்தும், அதன் அங்கத்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எமக்கு தொழில் கட்சி செய்ததெல்லாம் .... அண்மைக்காலமாக சந்திக்கு வந்திருக்கிறது.

இவர்களும் நினைக்கிறார்கள், பிரித்தானிய தமிழ் மக்களுக்கு வேறு ஒரு மாற்றுவழியும் இல்லை, என்ன செய்தாலும் எமக்கே வாக்களிப்பார்கள்!!! இதை மாற்ற வேண்டும்!!!

தமிழர்கள் அதிகமாக வாழும் ஈஸ்ராம், வோல்தம்ஸ்ரோ, லூசியம், வெம்பிளி, கரோ .... போன்ற ஏறக்குறைய இருபது தொகுதிகளில் நாம் ஏன் தொழில் கட்சிக்கு மாற்றீடான இன்னொன்றை தேடக்கூடாது???????

அடுத்த தேர்தலில் பழமைவாத கட்சியான கொன்சவேட்டிவ் வெற்றி பெறுமென பெரும்பாலான தரவுகள் கூறுகின்றன. நாம் ஏன் கொன்சவேட்டிவ் கட்சியை அணுகக்கூடாது????

ஏற்கனவே குறைடன் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் கொன்சவேட்டிவ் கட்சி உள்ளூராட்சி தேர்தலுஇல் பங்கு பற்றியவர்.

மற்றும் சிங்களவரான நிரன்ஞன் தேவா, தற்போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளை தடுத்தும் வருகிறாராம். நாம் அக்கட்சியுள் நுளைந்தால் இவரது சில நடவடிக்கைகளை தடுத்தும் நிறுத்தலாம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் நிச்சயம்.

இலங்கைத்தமிழரின் பிரச்சனை வைத்து ஈழத்தமிழன் என்று சொல்கின்றவன் தொடக்கம் எல்லாம் உலகம் முழுவதும் பெரிய கூட்டமே நன்றாக ஏமாற்றி பிழைக்கிறது... பல வருடங்களாக..

பிரச்சனைகளில் பிழைப்பவர்கள் பிரச்சனைகளைத்தீர்ப்பார்களா?

இனி சாதாரண தமிழ்மக்கள் தெருவில் இறங்கினால் தான் தமிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வரும்..

எவனையும் நம்ப முடியாத நிலை.. போரட்ட கால இழுத்தடிப்பு சமாதான சாத்தான்களின் சதி.. போரட்டத்தை தமக்கு சாதகமாற்றி சுய நல வசதி வாழ்க்கை.. வெட்கம் கெட்ட பிழைப்புகள்.. வாழ்க வளர்க... உங்கள் சந்ததியும் கைகட்டி பொய் சொல்லி கூனிக் குறுகி.... நாசமாய் போகட்டும்...

காலம் ஒரு நாள் எமது இனத்திற்கு இன்னல் விளைவித்தவர்களை சங்காரம் செய்யும்.. விடுதலைக்காக தினமும் தமது இளம் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிரைவிடும் மானத்தமிழர்கள் ஒரு புறம்..

மானத்தை விற்று வயிறு பிழைக்கும் மானம் கெட்ட தமிழினம் ஒரு புறம்

விடுதலை எப்போது எண்ணி தெருவில் இறங்கும் அப்பாவி தமிழினம் ஒரு புறம்..

எம்மினம் எம்மக்களை விற்கும் போது வெள்ளையளை குறை சொல்லி என்ன பலன்?

எனவே எம்மினமே நீங்களே எப்போதும் விழிப்பாக அனுபவஙளில் இருந்து பாடங்கள் கற்று, பாடம் புகட்டி நல்ல வழிகாணுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்துடனோ இந்தியாவுடனோ கதைத்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை, செவிடன் காதில் ஊதிய சங்கே.

எனக்கு தெரிந்த சில தமிழ்நண்பர்கள் தொழில் கட்சி உறுப்பினராய் உள்ளனர். அவர்கள் தொழில் கட்சி பிரமுகர்,மேயர், பாராளுமன்ற உறுப்பினர்

போன்றவர்களுடன் எமது நெருக்கடி நிலமையை பற்றி பேசும் போது ,அவர்கள் தமது அரசு இலங்கை அரசின் அட்டூழியங்களுக்கு எதுவும்

சொல்லப்போவது இல்லை, ஏனெனில் அது ஒரு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு ,உங்கள் போராட்டம் தான் பயங்கரவாதம் என

முத்திரை குத்த முயல்கிறார்கள் என விரக்தியுடன் சொல்கிறார்கள்.

பி.பி.சி போன்ற ஊடகங்களே எமக்கு நடக்கும் அட்டூழியங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த நாட்டின் பெரும்பாலான துறைகளில் இந்தியரின் ஆதிக்கமே பரவியிருப்பதும் எம் நியாயமான போராட்டத்தினை வெளிக்கொணர

முடியாவண்ணம் தடுத்து வரும் ஒரு காரணியாகும்.

சீக்கியரின் போராட்டத்தினை எவ்வாறு இந்தியா நசுக்கியதோ, அதே முறையை இலங்கைக்கு கற்பித்து வருகிறது.

மிகமோசமான வெளியுறவு கொள்கைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் சாடியும் மூடியும் போன்றவை. அமெரிக்கா கூட தன்நிலை மாறினாலும்

இவை மாற்ற மாட்டா

Link to comment
Share on other sites

நன்றிகள் தயா!! ......... உறுதியாக எமது ஆதங்கங்களை சொல்வதற்கான தருணம் வந்து விட்டது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா, சசிகலா, ... போன்ற ஈழத்தமிழ் கவுன்ஸிலர்கள் முதலில், எம்மின அழிப்பில் பிரித்தானிய பங்குக்காக தொழில்கட்சியில் இருந்து விலகி தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்!!

நாங்க்கள் ஈஸ்ராம் கவுன்ஸிலரும், ஒட்டுக்குழு அரசியல்வாதியுமான போல் சத்தியநேசனிடம் இந்த கோரிக்கையை வைக்க முடியாது!! அவர் தனது எஜமானர்களான சிங்களத்தின் சொல்களுக்கு ஆடுபவர். அவரை விடுவோம், அடுத்த கவுன்ஸில் தேர்தல்வரை!!!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.