Jump to content

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!

தி.வழுதி

வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி.

"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772.

அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே.

இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.

தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல.

ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை.

"அன்னை சோனியாவின் ஆன்மா கரையப்போவதில்லை"

இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே.

இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.

இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.

இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.

இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட - அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி - சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.

ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா.

பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும்.

ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்.

தனக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே இவன் சிரிக்கின்றான்

பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.

பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.

என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.

சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.

நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று.

உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!

எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.

உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.

இந்தியா நடத்தும் போர்: இனி நடக்க முடியாதவள் ஆனாள் தங்கை

ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.

மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி -

ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது.

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்.

"வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்.

மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல.

எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும்.

இப்போது -

எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும்.

உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் -

அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது.

அந்த சரியான இலக்கு - இந்தியா.

என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.

இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும்.

லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.

தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.

எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.

தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.

தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும்.

ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.

அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும்.

உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை:

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும்.

படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

நாம் தெளிவாக இருப்போம் -

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும்.

ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

ஓவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது.

செயற்படுவோம், இப்போதே!

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

நன்றி : புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இந்தியக் குடிமகனாக இருக்க வெட்கப்படுகிறேன்! வேதனைப்படுகிறேன்! :icon_idea:

Link to comment
Share on other sites

சரியான அவசியமான கருத்துக்கள். ஒவ்வொரு புலம் பெயர் நாட்டிலும் உள்ள இந்திய தூதரகத்தினை முற்றுகையிட்டு அதன் கொடூர இனவழிப்பை உலகுக்கு முன் கொண்டுவரல் வேண்டும். இந்தியா என்றால் அஹிம்சை என்றதை மாற்றி, இந்தியா என்றால் குரூர படுகொலை செய்யும் நாடு என்று உலகை சொல்ல வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோ என்ற பார்ப்பன வெறியரின் கருத்தை அறிந்து கொள்ளவும். இவரது கருத்துத்தான் இந்திய ஆளும் கும்பல்களின் கருத்து. CNN போன்ற அனைத்துலக ஊடகஙகளில் இருக்கும் இந்திய வெறியர்களுக்கு அனிதா பிரதாப் போன்ற பத்திரிகையாளர்களோ. ராம் ஜெத்மலானி போன்ற சட்ட வல்லுனர்களோ கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த வக்கிரப் பிறப்புத் தான் தெரிந்திருக்கிறது.

http://uk.youtube.com/watch?v=IQX29Wusebs

Link to comment
Share on other sites

9-11 பிறகு இஸ்லாமிய உலகு புஸ் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யாது முழு அமெரிக்காவிற்கும் எதிராக பிரச்சாரம் செய்திருந்தால் புஸ் செய்தது எல்லாம் சரி என்ற நிலைப்பாடு தான் இன்றுவரை நிலைத்திருக்கும்.

எமக்கு எதிராக இயங்கும் காங்கிரசையும் பார்பணியத்தையும் மாத்திரம் தெளிவாக இனங்கண்டு விமர்சிப்பது ஆரோக்கியமானது. பொதுப்பட இந்தியா தான் இந்தியாவே தான் என்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிரியாக நாமே வரிந்து கொள்கிறோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9-11 பிறகு இஸ்லாமிய உலகு புஸ் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யாது முழு அமெரிக்காவிற்கும் எதிராக பிரச்சாரம் செய்திருந்தால் புஸ் செய்தது எல்லாம் சரி என்ற நிலைப்பாடு தான் இன்றுவரை நிலைத்திருக்கும்.

எமக்கு எதிராக இயங்கும் காங்கிரசையும் பார்பணியத்தையும் மாத்திரம் தெளிவாக இனங்கண்டு விமர்சிப்பது ஆரோக்கியமானது. பொதுப்பட இந்தியா தான் இந்தியாவே தான் என்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிரியாக நாமே வரிந்து கொள்கிறோமா?

குறூக்ஸ் இது தொடர்பான எனது கேள்வி இந்திய அரசியலில் மாற்றம் வந்தால் அது ஈழ அரசியலில் மாற்றத்தை கொண்டு வருமா?

அத்வானி போன்றோர் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தாலும் அவர்களும் பிராமணர்களே.அவர்கள் எந்த வித நிபந்தனையும் அற்று ஈழக் கோரிக்கைக்கு ஆதவு அளிப்பார்களா?[உ+ம்]புலிகள் இந்துத்துவ கொள்கையை தான் கடைப் பிடிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்களா? என்னை பொறுத்த வரை இந்தியா அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்பதாகும்.இந்தியனின் காலில் விழுறதையும் பார்க்க பாக்கிஸ்தான்காரனின்ட காலில இலங்கையில் உள்ள முஸ்லீம்களை காரணம்[ அவர்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என சொன்னால்] காட்டி விழுந்திருந்தால் எப்பவோ எங்களுக்கு ஆதரவு தந்திருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறூக்ஸ் இது தொடர்பான எனது கேள்வி இந்திய அரசியலில் மாற்றம் வந்தால் அது ஈழ அரசியலில் மாற்றத்தை கொண்டு வருமா?

அத்வானி போன்றோர் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தாலும் அவர்களும் பிராமணர்களே.அவர்கள் எந்த வித நிபந்தனையும் அற்று ஈழக் கோரிக்கைக்கு ஆதவு அளிப்பார்களா?[உ+ம்]புலிகள் இந்துத்துவ கொள்கையை தான் கடைப் பிடிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்களா? என்னை பொறுத்த வரை இந்தியா அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்பதாகும்.இந்தியனின் காலில் விழுறதையும் பார்க்க பாக்கிஸ்தான்காரனின்ட காலில இலங்கையில் உள்ள முஸ்லீம்களை காரணம்[ அவர்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என சொன்னால்] காட்டி விழுந்திருந்தால் எப்பவோ எங்களுக்கு ஆதரவு தந்திருப்பான்.

ரதி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்

நமது தமிழ்க் குடிப் பெருமக்கள் அன்றிலிருந்து செய்த தவறு இதுதான். இந்தியா என்ற அந்த ஏகாதிபத்தியப் பிசாசிடம் அபரீதமான நேசத்தையும் நம்பிக்கையையும் காட்டியதுதான்.

பாகிஸ்தான் என்ன நினைக்கிறது தெரியுமா? நாம் இந்தியாவை நேச நாடு நேச நாடு என்று தோத்திரம் பாடுவதால் நாளை தமிழீழம் அமைந்தால் நாம் இந்தியாவோடுதானே ஒட்டுவோம் என நினைத்து அது எங்களை ஆதரிக்க மறுக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் எங்களை எதிர்ப்பதற்கு இதுதான் காரணம். சிங்களமும் இந்தியாவை எதிர்ப்பதுபோல் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் காட்டிக்கொண்டு அதி புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறது. உண்மையில் மோடன் சிங்களவன் இல்லை நாம்தான். அவனிடமிருந்து நாம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது.

அது மட்டுமல்ல முஸ்லீம்கள் எனக் கூறிக்கொள்ளும் இஸ்லாமியத் தமிழர் நம்மவர்களே. அவர்கள் ஒன்றும் அரேபியாவிலிருந்தோ ஆப்கானிஸ்தானிலிருந்தோ வரவில்லை. சிங்களப் பெருந்தேசியத்திற்கெதிரான போரில் நாம் அவர்களையும் இணைக்க வேண்டும். 1915 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய இனக் கலவரத்தில் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக நமது பச்சைத் தமிழர் சேர்.பொன்.இராமனாதன் நடந்து கொண்ட சிங்களச் சார்பு நிலை இங்கு கவனிக்கத் தக்கது. இது போன்ற நிகழ்வுகளால் தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு எங்கள் மீது ஒரு வெறுப்பு வந்திருக்கலாம்.

ஆனால் தமிழ் நாட்டில் அது நடக்கவில்லை . 1930 களில் நடந்த தமிழ்த் தேசியப் போராட்டங்களில் இஸ்லாமியத் தமிழர்களும் பங்கெடுத்தனர். இன்றும் தமிழீழத்தை முழு மூச்சாக ஆதரிக்கும் இஸ்லாமியத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கு உள்ளனர்.

இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு ஆதிக்கத்திற்கு எதிரான ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தமிழ் நாடு வேறு. (நாம் இங்கு எதிர்ப்பது வல்லாதிக்க வெறி கொண்ட இந்திய நடுவண் அரசைதான்) அவர்கள் நமது சகோதரர்கள் எமது உயிர்கள். எங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது போல் அவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் நாமும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

கடந்த காலத்தைப் பார்த்தால் இந்திராகாந்திக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர் நோக்கி எடுத்த நிலைப்பாடுகள் பாதகமானவை. ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுக கடந்த காலத்தில் காங்கிரஸ் போன்று ஈழவிரோதமாக இருக்கவில்லை.

ஈழத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் சைவர்கள் (அதை இந்து மதத்தினுள் அடக்கி இந்துக்கள் என்று பொதுவாக கூறுகிறார்கள்). ஈழத்தில் இந்துத்துவ கொள்கையை கடைப்பிடிக்க சொல்லி கேட்டு பயனில்லை. மதம் ஈழத்தின் அரசியாப்பிற்குள் புகுந்தால் இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது போல் எம்மால் ஒன்றை தாங்க முடியாது.

காங்கிரசும் ஒரு தொகுதி பார்ப்பணர்களும் அடிப்படையில் கடுப்பாக இருப்பது

தமது கட்டுபாட்டில் இருக்காது புலிகள் சுதந்திரமாக இயங்கியது வழர்ந்தது

தவறாக இந்திய இராணுத்தின் பலம் பிரயோகிக்கப்பட்ட பொழுது அதை எதிர்கொண்டது மாத்திரமல்லாது உயிரிழப்புகளை தொடராது அரசியல் இராசதந்திர நகர்வுகள் மூலம் தகுந்த நேரத்தில் அவர்களை வெளியேற்றியது.

இவை அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால் ஊடகங்களிற்கும் மக்களிற்கும் ராஜீவ் காந்தி கொலையை உணர்வுபூர்வமாக சித்தரித்து பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் என்றெல்ல மேல சொன்ன 2 இற்கும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது.

இந்தப் பலவீனத்தை நன்கு உணர்ந்த படி சிங்களத்தின் இராசதந்திரம் சீனா பாக்கிஸ்தான் போன்றவர்களின் உதவியுடன் இந்தியாவின் ஈழம் சார்ந்த கொள்கையை தனக்கு சார்பாக முடக்கி வைத்திருக்கிறது.

இந்த தற்காலிக முடக்கத்தை முறையடிப்பது எமது கடமை. அதற்கு பாக்கிஸ்தானோடோ அல்லது சீனாவோடு உறவு கொண்டு செய்ய முடியாது. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது தமிழர் தாயகத்தை கொலைக்களமாக வைத்திருக்க அல்ல. ஈழத்தில் தமிழர் சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவோடு உறவுகள் சீர்செய்யப்பட வேண்டும் (போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டாலும்).

Link to comment
Share on other sites

அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51637

திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது.

இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை.

தமிழ் நாட்டின் ஆதரவுடன் எதிர்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. இந்திராவின் மரணத்துக்குப் பின்னர் ரஜீவ் தலைமையில் இந்தியாவில் தொடர்ந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் சிக்கல்கள் முற்றியது. எம்.ஜி.ஆரின் மரணம், கலைஞர் தொடர்பான எங்கள் அணுகுமுறை இரஜீவ் அரசின் ஆதிக்க மனப்பாங்கு எமது அரசியல் எல்லாம் நிலமையை சீர்குலைத்தன. அதன்பின்னர் இரண்டு வரலாற்றுத் தவறுகள் இடம்பெற்றன. ஒன்று இந்தியா தமிழர் பங்குபற்றாத ஒரு உடன்பாட்டை இலங்கை அரசுடன் செய்தமை. இது இந்திய படையின் தக்குதல் நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தது. இரண்டாவது வரலாற்றுத் தவறாக அரச அடைக்கலமாக தமிழகத்தில் இருந்த பத்மநாபா கொலை, அதனைத் தொடர்ந்த ரஜீவ் கொலை என்பவற்றையே குறிப்பிடுகிறேன். இதன் பின்னர் காங்கிரஸ் அரசுகள் இலங்கை அரச பயங்கரவாதத்துக்குச் சார்பான நிலையே எடுத்தன. கான்கிரஸ் அற்ற அரசுகளுக்கு நீதிமன்ற வளக்கு நிலவரங்கள் தடையாக இருந்த்தது. இன்று பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட்டுகளும் புதிய நிலைபாடு எடுத்துள்ளனர். இதற்க்கு நமக்கு ஆதரவாகத் தமிழ் நாடில் வளர்ந்துள்ள ஆதரவு மட்டுமே முக்கிய காரணமாகும்.

அரசியல் ரீதியான நமது பங்களிப்பு இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸை காங்கிரஸ் தலைவியை எதிர்த்துக் குரல் கொடுப்பது உயர்ந்த பட்ச்சம் இன்றைய இந்திய அரசுக்கு எதிரான குரல் மட்டுமே. அத்தகைய போராட்டம் வேறு. தூதரகங்களை முடகுவது என்பது அடிப்படையில் இரண்டு பாரிய இராஜதந்திரத் தவறுகளை உள்ளடக்கியுள்ளது. மேற்க்குநாடுகளில் அரசியல் ரீதியாகப் போராடுவதையே அது மேற்க்கு நாடுகளின் மனசைப் பாதிக்குமென்று திரு வழுதி சொல்கிறார். எனினும் அத்தகைய ஊர்வலங்கள் அனுமதியுடன் இடம்பெறும் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகள் ஆகும். ஆனால் மேற்க்கு நாடுகளின் பாதுகாப்பில் உள்ள தூதரகம் ஒன்றை முடக்க முனைவதுதான் மேற்க்கு நாடுகளை அதிகம் பாதிக்கும் செயலாகும். இத்தகைய முயற்ச்சி மேற்க்கு நாடுகளால் சட்டபூர்வமான அரசியல் அரசியல் எதிர்ப்பாக எடுக்கப்பட மாட்டாது. இது பி.கே.கே போன்ற அமைப்புகளின் மேற்குலக கிழைகளின் மட்டத்துக்கே எங்கள் அமைப்புகளையும் கீழ்ப்படுத்தும்.

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி என்கிற திரு வழுதியின் கூற்று அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றுடனான மோதலை இந்தியாவுடனான மோதலாக மாற்றுவது தமிழ் நாட்டின் எழுச்சியின் அடிப்படைகள் பறிய தெளிவின்மையையே காட்டுகிறது. இன்னும் நான்குமாதத்தில் ஆட்ச்சி மாறும்போது இந்தக் கோசம் செம்மைப் படுத்தமுடியாத பாதிப்புகலை ஏற்படுத்தியிருக்கும். இது தமிழக எழுச்சியை வளர்ப்பதற்க்குப் பதிலாக சீர்குலைப்பதற்க்கே உதவும்.

எனவே மக்கள் எதிர்ப்பையும் தமிழக எதிர்ப்பையும் இலங்கை அரசுக்கெதிரான எங்கள் போராட்டமாக்குவது முற்றிலும் சாத்தியம். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றின் அணுகுமுறைக்கு எதிரான போராட்டமாக்குவதும் சாத்தியமே. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக வழர்ப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமுமில்லை அவசியமும் இலை.

தமிழ்நாடில் வெண்ணை திரண்டுவரும் சமயத்தில் அதிதீவிர அணுகுமுறைகளால் தாழியை உடத்து விடாதீர்க.

-வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய பார்பாணிய சிந்தனையால் ஊறிய "றோ" தான் இதனை முன்நின்று செய்கின்றது. ஆனாலும் இவர்களின் எந்த சிந்தனையும் ஈடறே போவதில்லை. இவர்கள் முன்நின்று இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து கொள்வார்களே தவிர வேறொன்றும் ஆவப்போதில்லை. தமிழருக்கான விடிவு வரும் வரையில் ஸ்ரீலங்காவில் வெடிசத்தம் இனி எந்த காலத்திலும் ஓயபோவதில்லை. யாழ்பாணத்தில் குண்டு வெடித்தால் கொழும்பு வரையிலும் அதிர கூடி மிக சிறிய நாடான ஸ்ரீலங்கா ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தியிருக்க கூடிய போரையே இந்தியாவின் கீழ்தரமான சிந்தனைக்கு உட்பட்டு தற்காலிக பதவி ஆசைகளை முன்வைத்து தொடர்கின்றது. ஆப்கானில் கூட அமெரிக்க படைகள் வெளியேறினால் தலிபான்களுடன் உடனடியா பேச்சுவார்த்தைக்கு போக வேண்டிய நிலையில் தான் ஆப்கான் அரசு உள்ளது. ஆப்கானுக்கே இந்த நிலையேனில் ஸ்ரீலங்காவிற்கு? புலிகள் தற்காலிகமாக தமது சிர்த்தார்தங்களை கொஞ்சம் கைவிட்டு தமது தலைமையை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் இதில் அவர்கள் எடுக்கும் முடிவிலேயே எதிர்கால நிலைமைகள் மாறும். புலிகளின் தலைமை அவ்வாறான முடிவை எடுக்க மாட்டார்கள் என்ற முடிவான எண்ணம் இந்தியாவின் பார்பாண கொலைவெறி "றோ"விடம் இருக்கிறது. இந்தியாவின் தேர்தல் மாற்றங்கள்..... உலகின் பொருளாதார சீரளிவு போன்றவை றோ வின் ஆகங்காரத்தில் கொஞ்சம் ஆட்டத்தை உண்டுபண்ணும். அப்போது ஸ்ரீலங்காவில் பாணுக்கே மக்கள் வரிசை கட்ட கூடிய காலம் வரலாம். பொருளாதார சீரளவிவு என்பது இப்போதுதான் ஆரம்பித்து இருக்கின்றது வரும் ஆடி மாதத்தில் தான் அது பெரும் வீழ்சியை எட்டும் என்று வணிக அறிஞர்கள் எதிர் கூவுகின்றார்கள். ஆடவடி தனங்களுக்கும் ஆட்கொலைக்கும் துணைபோவார்களே தவிர பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியாவோ பாகிஸ்தானோ சீனாவோ ஸ்ரீலங்காவிற்கு துணைபோகபோவதி;ல்லை. அப்போது ஸ்ரீலங்கா பேரினவாதிகள் தட்டுடன் பிச்சை எடுக்க போக போவது மேற்குல நாடுகளிடம்தான். அவர்களின் சொந்த பொருளாதார நிலமையை மனதில் வைத்து அவர்கள் வழங்க கூடிய அறிவுரை போரை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யுங்கள் என்பதுதான். இங்கே நான் கொஞ்சம் மேலே உள்ள கட்டுரையாளருடன் முரண்படுகிறேன். நாம் மேற்குல நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்வதை தொடர்ந்தே தீரவேண்டும் காரணம் எமக்கு உதவி செய்யாவிட்டாலும் ஸ்ரீலங்காவில் நடக்கும் இனபடுகொலையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கட்டாய தேவை எமக்கு இருக்கின்றது...... இந்த தற்போதைய மனபதிவுகளே எதிர்கால முடிவுகளை நிர்ணயிக்கும். தவிர இந்தியாவின் தற்போதைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் வரபோதி;ல்லை காரணம் பொறுப்பான நீண்ட தொலைநோக்குடன் கூடிய அரசியல் என்பது இந்தியாவில் இருந்து மலையேறி பலகாலம் ஆச்சு. எத்தனையோ சீரளிவை சந்தித்தாலும் பாகிஸ்தானில் யார் யார் ஆட்சி ஏறினாலும் இந்தியாவிற்கு எதிரனா மறைமுக போக்கை அவர்கள் கைவிட்டதி;ல்லை. ஆனால் இந்தியாவில் யார் ஆட்சி ஏறுகிறார்கள் என்பதை பொறுத்து அது ஏறி இறங்கும். ஆடியாட்கள் கூட்டமான "றோ" அப்ப்பபோ ஏதாச்சும் கண்டுபிடிச்சு காதுக்குள் போய் சொன்னாலும் அவர்கள் தமது ஆட்சியை தக்கவைக்க அது உதுவுமா என்றுதான் யோசிப்பார்கள். ஈழ மக்களை படுகொலைசெய்த ராஜீவ்காந்திக்கு குண்டுவெடித்து தொடர்ந்து வந்த காலங்களில் இல்லாத புலிகளுடனான போர் எண்ணம் இப்போது இந்தியாவிற்கு வந்ததற்கான காரணமும் அதுவே. காங்கிரசின் தலமையில் தலையில் ஏதும் இல்லாத சோனியா இருப்பது "றோ" என்ற அடியாள் கூட்டத்திற்கு வாய்த்த வாய்ப்பாக போய்விட்டது. ஆகவே தமது பேட்டை ரவுடிதனத்தை காட்ட இது நல்ல நேரம் என்பதை புரிந்தே அவர்கள் இதை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தற்போதைய உல அரங்கில் இது வெகுவான பாதிப்பையே உண்டாக்கும் ஆட்டம் காண இருக்கும் உலபொருளாதார சூழலில் தமிழகம் மத்திய அரசிற்கு எதிரான போக்கையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல. ஆனால் இது பற்றி ஆரயும் நிலையில் "றோ"என்ற பேட்டைரவுடி கும்பல் தயாராகவுமில்லை. கொழும்பில் வைத்து பாகிஸ்தான் தூதுவருக்கு குண்டுவைத்து அந்தபழியை புலிகள் மீதி போட்டுவிடலாம் எனும் சிறுபிள்ளைகள் யோசிக்கும் அளவிற்கே இந்த ரவுடிகும்மல் யோசிக்கும். ஆனால் பாகிஸ்தான் உளவுதுறையின் முன்னாள் நபரின் பதிலடி மும்பாய்யை எப்படி உலுக்கியது என்பதும் பாகிஸ்தானுக்கு ஒருபோதும் தேவையில்லாத ஒரு பேமாளிஇஸ்லாம் இயக்கத்தை எவ்வாறு பயன்படுத்தி அவர்களையும் சிறைபிடித்து வைத்து தனது புத்திசாலிதனத்தை அவர்கள் நிருபித்திருப்பது உலகே அறிந்தது. இந்த பேட்டைரவுடி கூட்டம் ஏப்போதோ சிறைபிடித்த ஒருவனை தாம் உடனடியாகவே கைதுசெய்ததாக மார்தட்டி பின்பு முகத்தில் தாமாகவே கரியை பூசிகொண்டு நிற்கின்றது. எதிர்வரும் காலங்களில் சிறிய கெரில்லா யுத்தத்திற்கே முகம் கொடுக்க முடியாத பொருளாதார நிலமைக்குள் ஸ்ரீலங்கா அகப்பட்டு கொள்ளபோகிறது என்பதே உண்மை. இது புலிகளுக்கு தெரியாததுமல்ல ஆகவே ஸ்ரீலங்காவை எப்படி ஆட்டம் காண வைப்பதென்பதை அவர்களே முடிவு கட்டுவார்கள். அப்போது இந்த பேட்டைரவுடி கூட்டம் வீணான இந்த போருக்கு செலவு செய்த இந்திய இலங்கை பணம் பல பில்லியன் டாலர்களாக இருக்கும்? இதனால் இவர்களுக்கு கிடைத்திருக்க கூடிய வெற்றி என்று எதை சொல்லப்போகிறார்கள்? மக்களை ஈவிரக்கமின்றி கொன்றதையா? புலிகளுக்கு எதிரான அறிக்கைகளை எழுதி டக்ளஸ் சங்கரி போன்ற பேமாளிகளிடம் கொடுத்து வாசித்ததையா? அல்லது தற்காலிகமாக கிளிநொச்சியில் சிங்ககொடி பறக்கிறதே அதையா?

இந்த காசையெல்லாம் எரித்து சாம்பலாக தூவினால் இந்த கொடிய போரில் வீணாக இறந்து போகும் சிங்கள இராணுவத்தை என்றாலும் சிங்கள மக்களால் பாதுகாக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுசு புதுசா போராட்ட்டம் அறிவிக்கிறாங்கள்.

இந்தியாவிற்கு எதிராக கத்துவது சரியல்ல. மன்மோகன் சிங் தான் இந்திய அரசின் தற்போதை நடவடிக்கைகளுக்கு பொறுப்பு. எனவே அவரையே குறிவைக்க வேண்டும்.

சோனியாவுக்கு எதிராக கத்தும்போது மீடியாக்கள் இவரின் மனுசனை பற்றிய பழைய கதைகளை இழுத்து திசை திருப்பலாம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் - அவரையும் காங்கிரசையுமே குறி வைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த தமிழ் நாட்டு அடி மட்ட மக்கள் தான் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளனர்.ஆனால் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல்,பதவி,தங்கள் சுய லாபத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.

திரு கருணாநிதி அவர்கள் டெலொவுக்கு ஆதரவு அளித்த படியால் தான் திரு எம் ஜி ஆர் அவர்கள் புலிகளுக்கு ஆதரவு அளித்தார்.திரு அத்வானியின் பா ஜ க தற்போது பதவியில் இல்லாத காரணத்தால் தாங்கள் பதவிக்கு வந்தால் தமிழர்களுக்கு உதவுவோம் என்ற தோற்றபாட்டை கொண்டுள்ளனர்.ஆனால் வாஜ்பாய் பதவியில் இருக்கும் போது என்ன செய்தார்?

தற்போது தமிழ் மக்களுக்காக போராடும் வை கோ அவர்கள் ஏன் இன்னும் புலியை வெறுக்கும் ஜெயலலிதாவோடு நிற்கிறார்.குறைந்த பட்சம் செல்வியை எதிர்த்து கூட அவரால் கதைக்க முடியவில்லை.திரு விஜயகாந் அரசியலுக்கு வரும் முன் தான் தமிழிழம் கிடைக்காமல் தன் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன்,கேக் வெட்ட மாட்டேன் என்றார் அரசியலுக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை அது தான் கேட்டால் தொண்டர்கள் என்பார்.வைத்தியர் ராம்தாஸ்சும் அப்படித் தான் கண்டனக் கடிதம் எழிதியதை விட வேறு என்ன சாதித்தார்? திரு திருமாளவளவனும் உண்ணா விரதம் என ஆரம்பித்து இடையில் விட்டார்.என்னைப் பொறுத்த‌ வ‌ரை இவர்களுக்கு பத‌வி முக்கியம் அத‌ற்கு பிற‌கு தான் மக்கள்.

ஒரு சாதரண முத்துகுமார் சாதித்ததை ஏன் இவர்களால் சாதிக்க முடியாமல் போனது? நாங்கள் எங்கள் பிரச்சாரங்களை அடி மட்ட சாதரண மக்களை நோக்கி வைக்க வேண்டும்.அத்தோடு பத்திரிகையாளர்,வானொலி,தொலைக்

காட்சி நிருபர்களை எம் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.அவர்கள் எம் பக்கம் இருந்தால் ஒரளவுக்கு நம்மால் சாதிக்க முடியும்.

Link to comment
Share on other sites

ரதியோட கருத்தை மறுக்க முடியல. உதாரணமா 1994 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு டாக்டர் ராமதாஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழகமே ஸ்தம்பித்தது. அவரோட போராட்டம் முழுக்க முழுக்க நியயமானதுதான். ஆனால் இப்போது அதே மாதிரி ஈழத் தமிழருக்காக அனைவரும் சேர்ந்து தமிழ் நாடே செயலற்றுப் போகும் விதமாக செய்ய முடியும்னுதான் நினைக்கத் தோணுது. இப்போ எல்லாத்தையும் விட முக்கிய பிரச்சனை இதுதான். சிறை நிரம்பி வழியனும் மானில அரசு திணறனும் அப்பத்தான் மத்திய அரசு அசைந்து பார்க்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில கேரள நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துப் படி, தி.மு.க ஆதரவை எடுத்து விட்டாலும் மத்திய அரசு கவிழாது என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை விலக்கிய போது எப்படி எதுவும் ஆகவில்லையோ அப்படியே இருக்கும் என்றார்கள். ஆனால் இழப்பு தி.மு.க வின் வாரிசுகளுக்குச் சேர்த்து வைக்கும் திட்டத்திற்குத் தான். மேலும், இந்தியா எப்படியானாலும் தனி ஈழம் அமைவதை அனுமதிக்காது என்று பல ஆய்வாளர்களும் சொல்வதை உறுதி செய்கிறார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன், ஜெயபாலன் போன்றோர் சொல்வது போல இந்தியாவை நாம் தலையில் தூக்கி வைத்து கெஞ்சி எங்கள் நேரத்தை வீணாக்குகிறோம். தமிழக உறவுகள் கோபிக்கக் கூடாது, நிஜம் இது தான்,திட்ட வேண்டிய அவசியம் இல்லை. உலக ஒழுங்கில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கேற்ப நாங்கள் மாற வேணும். இப்ப இந்தியா எங்கள் அழிவுக்கு சிறி லங்காவுக்குச் சமனான பங்களிப்புச் செய்யும் ஒரு நாடு அவ்வளவே. நாம் ஐரோப்பிய அமெரிக்க சார்பு நிலை நோக்கி நகர வேணும் என நினைக்கிறேன். காலமெடுத்தாலும் இதை மட்டுமே நாம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் என்ன நினைக்கிறது தெரியுமா? நாம் இந்தியாவை நேச நாடு நேச நாடு என்று தோத்திரம் பாடுவதால்

அது மட்டுமல்ல முஸ்லீம்கள் எனக் கூறிக்கொள்ளும் இஸ்லாமியத் தமிழர் நம்மவர்களே. அவர்கள் ஒன்றும் அரேபியாவிலிருந்தோ ஆப்கானிஸ்தானிலிருந்தோ வரவில்லை.

ஆனால் தமிழ் நாட்டில் அது நடக்கவில்லை . 1930 களில் நடந்த தமிழ்த் தேசியப் போராட்டங்களில் இஸ்லாமியத் தமிழர்களும் பங்கெடுத்தனர். இன்றும் தமிழீழத்தை முழு மூச்சாக ஆதரிக்கும் இஸ்லாமியத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கு உள்ளனர்.

இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு ஆதிக்கத்திற்கு எதிரான ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தமிழ் நாடு வேறு. (நாம் இங்கு எதிர்ப்பது வல்லாதிக்க வெறி கொண்ட இந்திய நடுவண் அரசைதான்) அவர்கள் நமது சகோதரர்கள் எமது உயிர்கள். எங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது போல் அவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் நாமும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்

நாங்கள் இந்தியாவுக்கு தோத்திரம் பாடுவது போல்,இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரேபியருக்கு சாலாம் பாடுகிறார்கள்,ஏன் சில தமிழ் கிறிஸ்தவர்கள் குட ஜெருசலத்திற்க்காக மன்றாடுகின்ரனர்.

முஸ்லிம்களை பொறுத்தவரை தேசிய அடையாளத்திலும் பார்க்க மத அடையாளத்தையே மிகவும் உன்னதமாக நினைப்பவர்கள்

இலங்கையில் முஸ்லிம்கள் ஆயுத போரட்டம் தொடங்கியிருந்தால் அதற்க்கு பாகிஸ்தான் முழுஅளவிலான ஆதரவை வழங்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='kurukaalapoovan' date='Feb 2 2009, 04:41 AM' post='487001']

9-11 பிறகு இஸ்லாமிய உலகு புஸ் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யாது முழு அமெரிக்காவிற்கும் எதிராக பிரச்சாரம் செய்திருந்தால் புஸ் செய்தது எல்லாம் சரி என்ற நிலைப்பாடு தான் இன்றுவரை நிலைத்திருக்கும்.

எமக்கு எதிராக இயங்கும் காங்கிரசையும் பார்பணியத்தையும் மாத்திரம் தெளிவாக இனங்கண்டு விமர்சிப்பது ஆரோக்கியமானது. பொதுப்பட இந்தியா தான் இந்தியாவே தான் என்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிரியாக நாமே வரிந்து கொள்கிறோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி போன்றோர் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தாலும் அவர்களும் பிராமணர்களே.அவர்கள் எந்த வித நிபந்தனையும் அற்று ஈழக் கோரிக்கைக்கு ஆதவு அளிப்பார்களா

அத்வாணி பிராமணர் என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்துப் பிராமணர்களுக்கு இருக்கும் "திராவிடம்" மீதான் காழ்ப்புணர்ச்சியோ அல்லது திராவிட மறுமலர்ச்சியையும் அதனூடான தமிழ்த் தேசியத்தை எப்பாடு பட்டாவது எதிர்க்க வேண்டும் என்கிற வெறியோ வட இந்திய பிராமணர்களுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.அதேபோல மத்திய அரசில் உயர் நிலைகொள்கை வகுப்பாளர்களாக, அதிகாரிகளாக இருக்கும் கேரளத்துப் பிராமணருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர் மீதான இயல்பாகவே இருக்கும் வெறுப்புணர்வை அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதும் சேர்த்துக் காண்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.