• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
vanni

இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்காதே...

Recommended Posts

இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை.

இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவதற்கல்ல!) மேலும், ஈழமக்களுக்கு எதிராக செயல்ப்படும் பத்திரிகைகள் (இலங்கை, இந்திய) விற்பதை நிறுத்துதல்.

இன்னும் இறுக்கமாக இருக்கவேண்டும்மென்றால், இலங்கையில் உள்ள உறவுகட்கு (அடக்குமுறைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கட்கு) பணம் அனுப்புவதைக்கூட தற்செயலாக நிறுத்திக்கொள்ளலாம்.

முன்னர் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எம் புலம்பெயர் மக்களால் யானைச்சோடாவும், லெமொன் பfப் விசுக்கோத்தும் தின்னாமல் இருக்கமுடியவில்லை, ஏனென்றால் இவைகள் இன்னமும் தமிழ்க்கடைகளில் விற்க்கப்படுகின்றன.

தயவுசெய்து விற்பனையாளரிடம் இப்பொருள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வாங்குங்கள். (இவ்வாறான நடவெடிக்கைகள் கட்டாயமாக வேலை செய்யும் என்பதற்கு தமிழ் சினீமா புறக்கணிப்பு ஒரு எடுத்துக்காட்டு)

சிலவேளை, நாங்கள் சிங்கள சாமான்களை இங்கு வரிப்படுத்தினால் மக்கள் வாங்காமல் விடுவார்களோ என்னவோ!

தொடங்குவம்...

1. யானை மார்க் சோடா (அனைத்து வகையானதும், flavour ற்கு என்னப்பா தமிழ்?)

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கனும் வன்னி... உந்த புறக்கணிப்பு எதுகும் சாத்தியப்படாது

ஏனெனில் 'தேசியத்தி;ன் தூண்கள்" தான் அதன் ஏகோபித்த இறக்குமதியாளர்கள்.! அகையால் நமது வேண்டுகோள்களுக்கு இடமில்லை. பல முறை இதைப்பற்றி கதைத்தவன் என்ற வகையில் சொல்கின்றேன். மக்கள் வேண்டாம் என்றாலும் அதை திணிப்பவர்கள் இந்த வணிப நிறுவனத்தினரும் அதை இறக்குமதி செய்வோருமே!

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கனும் வன்னி... உந்த புறக்கணிப்பு எதுகும் சாத்தியப்படாது

ஏனெனில் 'தேசியத்தி;ன் தூண்கள்" தான் அதன் ஏகோபித்த இறக்குமதியாளர்கள்.! அகையால் நமது வேண்டுகோள்களுக்கு இடமில்லை. பல முறை இதைப்பற்றி கதைத்தவன் என்ற வகையில் சொல்கின்றேன். மக்கள் வேண்டாம் என்றாலும் அதை திணிப்பவர்கள் இந்த வணிப நிறுவனத்தினரும் அதை இறக்குமதி செய்வோருமே!

அடிபட்டவன் சொன்னால்தான் பலருக்கு புரியும்.

இதெல்லாம் உங்களுக்கு புரிகிறது.

காரணம் அதற்காக உங்கள் முயற்சியை இணையத்தில்

பல காலத்துக்கு முன் கண்டேன்.

தேசியம் வேறு

வியாபாரம் வேறு

இரண்டையும் செய்வது ஒரே குழுமம்தான் என்பதே வேதனையான உண்மை.

Share this post


Link to post
Share on other sites

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

அப்படிப் போடு (ங்கோ) அரிவாள! திணிக்கீனமாம், இவை வேற வழியில்லாமல் தின்னுகினமாம். அது சரி, என்ன ப.நோ.கூ.சங்கத்தில இன்னும் குடும்ப அட்டையிலயோ எங்கட ஆக்கள் லயன் பியரும் ஒரேஞ் பார்லியும் வாங்கிக் குடிக்கினம்?

Share this post


Link to post
Share on other sites

அப்படிப் போடு (ங்கோ) அரிவாள! திணிக்கீனமாம், இவை வேற வழியில்லாமல் தின்னுகினமாம். அது சரி, என்ன ப.நோ.கூ.சங்கத்தில இன்னும் குடும்ப அட்டையிலயோ எங்கட ஆக்கள் லயன் பியரும் ஒரேஞ் பார்லியும் வாங்கிக் குடிக்கினம்?

எக்கடை சனங்கள் எது சொன்னாலும் கேளாதுகள். கடைக்காரன் சாமான் விற்கப்படவில்லை என்றால் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டான். அப்ப இந்த மிருகங்கள் புண்ணாக்கு மாதிரி எல்லாத்தையும் வேண்டி அடைஞ்சால் அவன் என்ன செய்வான், தொடர்ந்து விலைப்படும் பொருளை கொண்டுவரத்தான் செய்வான்.

சுயசிந்தனை இல்லாததுகள் தான் யோசிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

அங்கு கொல்லப்பட்ட மக்களின் முகங்களை நினைத்தால் வாங்க மனம்வருமா?

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் புறக்கணிப்பதால் உண்மையில் பாதிக்கப்படப் போவது அங்குள்ள தமிழ் ஏற்றுமதி வர்த்தகர்கள்.

அடுத்தாக வன்னிமீது சிறீலங்காவின் பொருளாதாரா தடையை நியாயப்படுத்துவதாக இருக்கும்.

இறுதியாக புறக்கணிப்பால் சிறீலங்கா பொருளாதாரம் பாதிப்படைந்து வேலைவாய்ப்பில்லாது போவர்களிற்கு எஞ்சியிருக்கும் தெரிவு இராணுவத்தில் சேருவது. பொன்சேக்கா 3 லட்சமாக அதிகரிக்க இருப்பதை 4 இலகுவாக லட்சமாக்கிப் போடும்.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் புறக்கணிப்பதால் உண்மையில் பாதிக்கப்படப் போவது அங்குள்ள தமிழ் ஏற்றுமதி வர்த்தகர்கள்.

அடுத்தாக வன்னிமீது சிறீலங்காவின் பொருளாதாரா தடையை நியாயப்படுத்துவதாக இருக்கும்.

இறுதியாக புறக்கணிப்பால் சிறீலங்கா பொருளாதாரம் பாதிப்படைந்து வேலைவாய்ப்பில்லாது போவர்களிற்கு எஞ்சியிருக்கும் தெரிவு இராணுவத்தில் சேருவது. பொன்சேக்கா 3 லட்சமாக அதிகரிக்க இருப்பதை 4 இலகுவாக லட்சமாக்கிப் போடும்.

புண்ணாக்கு சிந்தனை

Share this post


Link to post
Share on other sites

உதாரணத்துக்கு, இந்த குளோபல் வோமிங் (Global worming) காரணமாக மேலை நாட்டு மக்கள் உள்ளூரில் உற்பத்தியான பொருட்களை கொள்வனவு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற தகவல் உறையில் போடப்படுகிறது. அது மாதிரி ஒரு சின்ன அட்டையில், இந்த சின்னவெங்காயம் தமிழகத்தில் இருந்து வந்தது, இந்த கருவேப்பிலை கென்யாவில் இருந்து வந்தது என்று போட்டால் மக்கள் முடிவெடுக்கலாம்...ஆகவே இதை முன்னெடுக்க வேண்டியவர்கள் கடைக்காறர்கள்.

இலாப நட்டத்தைப்பற்றி தற்போது சிந்தித்தால், எமது உறவுகள் தான் துன்பப்படுவார்கள்.

இங்குவாங்கும் ஒவ்வொரு இலங்கப்பொருளும் அங்கு ஒரு குண்டு எம்மக்கள்மீது என்றவகையில் நாம் பரப்புரை செய்யவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

சும்மா ஒரு கதைக்கு கேட்கின்றேன்இ உங்களின் எத்தினை பேர்இ இலங்கை குடிபானங்களையோஇ சிற்றூன்டிகளையோ புறக்கணித்திருக்கின்றீர்கள

Edited by Nitharsan

Share this post


Link to post
Share on other sites

தமிழ் இறக்குமதியாளர்கள் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் சிங்கள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வினம்.

சும்மா கடைக்காரரும் இறக்குமதி செய்பவர்களும் திணிக்கிறார்கள் என்று சொல்லாமல் நீங்கள் திண்ணுவதை நிறுத்துங்கள்.

இப்ப மட்டும் 100 வீத தமிழர்கள் ஏற்மதி செய்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கனும் நீங்கள் உலகத்தை அறிய இன்னும் கனக்க இருக்கு. கனடாவில சிங்கள .இறக்குமதி நிறுவனங்கள் தமிழர்களை வேலைக்கமர்த்தி இறக்கு மதி செய்கின்றன. என்று ஒரு இறக்குமதியாளர் அழுது கொண்டு சொன்னார். இதுவும் நடக்க தான் செய்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

நிதர்சன் கனடாவை பற்றி எனக்கு தெரியாது. இங்கு இலண்டனில் முன்னர் 2 சிங்களவர்கள் தான் இருந்தார்கள். பின்னர் இங்கு ஒரு சிலர் கடை கடையாக சென்று இலங்கை பொருட்களை தடை செய்ய கேட்டினம். விளைவு புதிதாக 3 சிங்களவர் முளைத்தது தான் மிச்சம்.

எங்கட கடைக் காரரும் சிங்களவன் மலிவா தாறான் என்டு வாங்கி எங்கட தமிழ் இறக்குமதியாளர்களுடன் சண்டை பிடிச்சினம்.

Share this post


Link to post
Share on other sites
சும்மா ஒரு கதைக்கு கேட்கின்றேன்இ உங்களின் எத்தினை பேர்இ இலங்கை குடிபானங்களையோஇ சிற்றூன்டிகளையோ புறக்கணித்திருக்கின்றீர்கள

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் உள்ள அனைத்து (99.99%) தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் நடாத்தப் படும் கடைகளிலும் இவை மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. இது முதலாளித்துவ அமைப்பு சார்ந்த உலகம். இங்கு எது மலிவானதாகவும் நுகர்வோரால் விரும்பப் படும் விதமாகவும் இருக்குதோ அவைதான் அதிகம் வாங்கப் படும். இன்னொரு காரணம், அவை எமக்கு மிகஅதிகமாக பழக்கப் பட்ட பொருட்களாகவும் புதிய தேசத்தின் உணவு முறைக்கு ஏற்றவாறு முற்றிலுமாய் மாற முடியாமல் இருப்பதாலும் இவற்றினை வாங்குபவர்கள் அதிகம். புலம் பெயர் நாட்டில் அனேகமான இளம் தலைமுறை இவற்றை வாங்காமல் அத் தேசத்திற்குரிய பொருட்களை வாங்குவதையும் அவற்றிற்கேற்றவாறு தம்மை தயார்படுத்தி உள்ளதையும் காணலாம்

தனிப்பட்ட முறையில் கனடா வந்த பின் நான் வாங்கும் இலங்கை பொருட்கள், வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கையிலை, தூதுவளை இலை மற்றும் அனேகமான கீரை வகைகள். இவற்றில் சில இந்தியாவில் இருந்தும் வருவதுண்டு. கனடா தேசத்து இலைவகை உணவுகளை இப்ப தான் முயல தொடங்கியுள்ளேன்.

------

புலம் பெயர் தமிழர்களில் எத்தனை பேர் இலங்கையில் உள்ள வங்கிகளில் NRFC account வைத்திருக்கின்றனர் என்று பாருங்கள். அதே போல் கொழும்பில் வீடு வாங்கி அதற்கு வரி செலுத்துகின்றார்கள் என்று பாருங்கள். இவற்றின் மூலம் வரும் அன்னிய செலாவணி மற்றும் வருமானம் கூட இலங்கை அரசிற்குத்தான் போய் சேருகின்றது. அடி மட்ட விவசாயிகளுக்கோ அல்லது சிறு வணிகர்களுக்கோ அல்ல

---

எம் நீண்ண்ண்ண்ட.... துரொகிகள் பட்டியலில் இலங்கை பொருட்களை வாங்குபவர்களையும் சேர்த்தால் என்ன? அத்துடன் இந்தியா தான் இலங்கை அரசிற்கு முழு ஆதரவும் தருகின்றது எனவே நாம் இந்திய பொருட்களை வாங்குபவர்களையும் சேர்த்தால் எமது துரோக பட்டியல் நீளும்... செய்வமா?

Share this post


Link to post
Share on other sites

இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை.

இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவதற்கல்ல!) மேலும், ஈழமக்களுக்கு எதிராக செயல்ப்படும் பத்திரிகைகள் (இலங்கை, இந்திய) விற்பதை நிறுத்துதல்.

இன்னும் இறுக்கமாக இருக்கவேண்டும்மென்றால், இலங்கையில் உள்ள உறவுகட்கு (அடக்குமுறைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கட்கு) பணம் அனுப்புவதைக்கூட தற்செயலாக நிறுத்திக்கொள்ளலாம்.

முன்னர் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எம் புலம்பெயர் மக்களால் யானைச்சோடாவும், லெமொன் பfப் விசுக்கோத்தும் தின்னாமல் இருக்கமுடியவில்லை, ஏனென்றால் இவைகள் இன்னமும் தமிழ்க்கடைகளில் விற்க்கப்படுகின்றன.

தயவுசெய்து விற்பனையாளரிடம் இப்பொருள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வாங்குங்கள். (இவ்வாறான நடவெடிக்கைகள் கட்டாயமாக வேலை செய்யும் என்பதற்கு தமிழ் சினீமா புறக்கணிப்பு ஒரு எடுத்துக்காட்டு)

சிலவேளை, நாங்கள் சிங்கள சாமான்களை இங்கு வரிப்படுத்தினால் மக்கள் வாங்காமல் விடுவார்களோ என்னவோ!

தொடங்குவம்...

1. யானை மார்க் சோடா (அனைத்து வகையானதும், flavour ற்கு என்னப்பா தமிழ்?)

தமிழர்கள் அடிமையாக்கப்பட்ட கரிநாளில் என்ன செய்யப் போகின்றோம் ?

---------------------------------------------------------------------------------------------------------------------------

மனித வாழ்வியக்கத்தின் பதிவே வரலாறாகின்றது. அந்த வரலாற்றில் வரும் இன்னல்கள், நெருக்கடிகள், அழிவுகளை எதிர்கொண்டவாறு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் மனித இனமே உலகில் வாழும் உரிமையை மட்டுமன்றித் தகமையையும் பெற்றுக்கொள்கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகள் வியட்நாம் முதல் கொசொவோ வரை பல உள்ளன.

1948 ம் ஆண்டு பிரித்தானியக் குடியேற்றவாதமானது வெளியேறும் போது இலங்கைத் தீவினது ஆட்சி உரிமையானது சிங்களவரிடம் கையளிக்கப்படதன் விளைவே தமிழினத்தின் இன்றைய அவலத்துக்கான காரணியென்பது உலகறிந்த உண்மை. இதிலே அன்று தொலைநோக்கற்ற தமிழ்த் தலைவர்களது அணுகுமுறையும் ஒரு காரணியாகும். இந்த வாதப் பிரதிவாதங்களின் நகர்வுத் தளத்திலே தமிழினத்தினது அரசியல் உரிமைகளை மென்முறை தழுவிய போராட்டங்கள் மூலம் பெற்று விடலாம் என்று முயன்று முடிவிலே அழிவுகளையும் அவமதிப்புகளையும் ஏமாற்றங்களையுமே தமிழினத்தால் தரிசிக்க முடிந்ததேயன்றி வேறேதுமில்லை. பின்வந்த காலப்பகுதியிலே இளையோரிடையே ஏற்பட்ட எழுச்சியானது ஆயுதப் போராட்ட வழியொன்றே தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கூடியது என்ற அசைக்க முடியாத கருத்தியல் தாக்கத்தின் விளைவாக பல்வேறு இளையோரியக்கங்கள் தோற்றம் பெற்று உலாவந்ததோடு, காலாவதியுற்ற தெளிவற்ற கொள்கைகள் கோட்பாடுகள், திட்டமிடப்படாத மனிதவலுச் சேர்க்கை, கட்டுப்படுத்த முடியாத தலைமைகள், பதவிப் போட்டிகள், காட்டிக் கொடுப்புகள், விலைபோதல், கழுத்தறுப்பு, என்று முடிவற்றுத் தொடரும் சூறாவளிக்குள் சுழன்றவாறு தமிழீழ விடுதலைப் போராட்டமானது உரியதோர் பரிணாமத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலே உலக அரங்கிலே நிறுவப்படுள்ளமையை இன்றைய காலகட்டத்திலே நாம் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழ விடுதலை என்பது, தமிழினத்தினது வாழ்வாதாரத்திற்கான தாயகத்தை நிறுவித் தமிழினம் கௌரவமாக இந்த உலகிலே ஏனைய இனங்களைப்போல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்பதில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் இடம்கொடாது அர்ப்பணிப்போடு போராடிவரும்; கூர்முனையான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவலுவை மழுங்கடித்து தமிழரின் சமபலத்தைச் சிதைப்பதனூடாகப் புலிகள் தோற்றுவிட்டார்கள், எனவே இனித் தமிழர்கள் யாவரும் சிங்களத்துக்குள் ஐக்கியமாகிக் கரைந்து போகவேண்டியவர்களே என்ற ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைத் திணிப்பதன் மூலம் தமிழர் தாயகம் என்ற கருத்தியலை நீர்த்துப் போகச் செய்வதூடாக தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான குரலை அடக்கிவிடவே சிறீலங்கா அரசானது யுத்தத்தை தமிழினம் மீது கட்டவிழ்த்துவிட்டுப் பெரும் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டமானது, தமிழர்களின் பலத்தின் விளைவாகவே உலக அரங்கிலே பிரவேசித்ததென்பதை வரலாற்றையும், எமது வாழ்வோடு இணைந்துவிட்ட சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் அப்பழுக்கின்றிப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்வர். புரியாததுபோல் நடிக்கும் எம்மவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் புரிகின்ற காலமொன்று வரும். அது வேறு விடயம்.

சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் வெறுமனே உலக மன்றிலே உயிரற்றுச் சடலமாகக் கிடக்கிறது. மனிதஉரிமை, சிறுவர் பாதுகாப்பு, சனநாயக உரிமை என்று கூப்பாடு போடும் இவ்வுலகு, தமிழர் தாயத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அரச பயங்கரவாதத்தை, மிகப் பெரும் மனித அவலத்தை, வேடிக்கை பார்த்தவாறு கையாலாகதவர்களாய் நிற்கும் உலகை என்னவென்று சொல்வது. மனிதர்களைச் சமமாக நடத்த வேண்டும். இனம், மொழி, நிறம், மதம், பால் வேறுபாடுகளுக்கப்பால், மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. இவற்றை வெறுமனே எழுத்துகளில் இலங்கைத் தீவில் இருந்தால் போதுமென்று அனைத்துலகு எண்ணுகின்றதோ என்ற எண்ணமே உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தோற்றம் கண்டுள்ளது.

இதன் விளைவாக உலகத் தமிழினமானது, இந்த அனைத்துலக சமூகமும் தமிழினம் அழிந்துபோக வேண்டுமென எண்ணுகின்றதா(?) அல்லது தமிழினம் அடிமைகளாக வாழ்ந்து மடியட்டும் என வேடிக்கை பார்க்கிறதா (?) என்பது புரியாமல் உலகத் தமிழினம் தினம்தோறும் தவிதவித்துச் சாகிறது. இன்றைய இந்தத் நிலையைத் தமிழினத்துக்கு விட்டுச் சென்ற மிகப்பெரும் சனநாயகச் சட்டம்பியாரான பிரித்தானியா கூடத் தமிழின அழிப்புக்கான உதவி ஒத்தாசை வழங்குவது வேதனைக்குரியது. சதாம் செய்தது இனப்படுகொலை. சதாமுக்கு உதவும் நாடுகளும் பயங்கரவாத நாடுகள் என்றனர். அப்படியாயின் இனப்படுகொலை புரியும் சிறீலங்காவுக்கு உதவும் நாடுகள் பற்றித் தமிழர்கள் எப்படி நோக்குவது. எனவே எமக்கான அடிமைச் சாசனத்தை உருவாக்கிய பிரித்தானிய அரசுக்கு மிகப்பெரும் கடப்பாடொன்றுள்ளது. அது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தலே. அங்கீகரிப்பதோடு நில்லாது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையையும் நீக்க வேண்டும். பிரித்தானியாவில் ஏற்படும் மாற்றமானது உலக அரங்கிலும் தமிழீழ மக்கள் தொடர்பான போக்கிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகின் காத்திரமான மையச் சக்தியாகவும் திகழும் நாடு என்ற வகையில் பிரித்தானியாவை வென்றெடுக்கும் செயற்பாடுகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களின் தொகையை அடிப்படையாகவும் அரசியல் ரீதியாக நாடாளுமன்றம் வரை தமிழர்களின் பிரசன்னம் இருப்பதால் சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளமையைக் களவமைவாகக் கொள்ளலாம்

சிறீலங்கா அரசு 61 வது சுதந்திரநாளைக் கொண்டாடும் அதேவேளை, தமிழினமோ தாம் அடிமை கொள்ளப்பட்ட “ கரிநாள் „ ஆகவே பெப்ரவரி நான்காம் நாளை இதுவரை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

தமிழினமானது இந்த பெப். நான்காம் நாளில் இருந்து எமது தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகச் சில உறுதியான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்.

1) பெப். நான்காம் நாளில் நடைபெறும் தமிழினத்தின் கரிநாளில் சுயதேவைகளை விடுத்து, எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து அன்றைய நாளில் எமது ஒட்டுமொத்த எழுச்சியை அறவழிப் போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தும் எமக்கான கடமையை செய்தல்.

2) அன்றைய இந்நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத சூழலில் பங்குபற்றாதோர் வெளியே செல்லும்போது கறுப்பு நிற உடைகளை அணிந்துகொள்ளுதல். அதற்கான துண்டுப் பிரசுரங்களைப் பெற்று தெரிந்த பிறநாட்டவருக்கு (அது நாங்கள் பொருள் வாங்கும் இடமாகவும் இருக்கலாம்) வழங்கி எமது நிலையை எடுத்துக் கூறல்.

3) நிதியாதாரமென்பது அனைத்து இருப்புக்கும் அடிநாதமாக விளங்குவதால், இந்நாளில் இருந்து தாயகத்தின் விடுதலைக்காக எம்மால் முடித்த அனைத்து வழிகளிலும் பங்களிப்புச் செய்ய முன்வருதல். (குறிப்பாக, இது வரை செய்யாதிருப்போர்)

4) மன்றங்கள், சங்கங்கள், சமயநிறுவனங்கள் மற்றும் இன்னபிற தமிழர் அமைப்புகள் புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல். புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல்.

5) ஒவ்வொரு நகரத்திலும்; இருப்போர் ஒன்றினைந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டக் குழுக்களாக மாறித் தாம் வாழும் நகரம் முழுமைக்குமாகத் தமிழினத்தின் இன்றைய

நிலையைத் தெளிவுபடுத்துதல்.

6) இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணிப்பதுடன், பொருண்மிய பங்களிப்பை சிறீலங்காவுக்குச் செய்யாது விடுதல்.

7) தமிழால் வாழும் ஊடகங்கள், குறிப்பாகக் காணொளிச் சேவைகளை நடாத்துவோர், மானாட மயிலாட முதல் சின்னத்திரைத் தொடர்களை விடுத்து, தமிழினத்தின் அவலமும்

புலம்பெயர் வாழ் தமிழர்களின் நிலையையும் அவர்களது தாயகச் செயற்பாடுகளையும் வெளிக்கொணர்வதூடகத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப்போரை திரட்சியாக்கும்

நிகழ்வுகளை நடாத்த முன்வருதல். இதனூடாகத் தமிழர்களைத் தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வகை செய்தல். எம்மை நிராகரிப்போரின் அனைத்தையும்

உணவுப்பொருட்கள் உட்பட அனைத்தையும் நிராகரிக்க இது போன்ற நிறுவனங்களேவழிகாட்ட வேண்டியதும் அவர்களது கடமையாகும். எமது நுகர்வுச் சக்திகாரணமாகக்

கணிசமான வருவாயை இலங்கை இந்திய அரசுகள் மற்றும் தமிழ்த் தேசியத்தைமறுதலித்து அழிக்க முனையும் தமிழகக் கட்சிகளும் பெற்று வருகின்றன

8) தமிழீழ தனியரசை அமைக்க நடைபெறும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு நிகராகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் தோறும் “ நகரங்கள் தோறும் எழுவோம் எம் தாயகத்தைக் காப்போம் „ என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்தல். வீடுகளிலே எமது தாயக வரைபடத்தை வெளியே செல்லும் போதும், வரும்போதும் பார்க்கக் கூடியவாறு வைப்பதோடு, தாயகத்தை நாம் விரைவில் அடைவோம் என்பதைச் சிந்தனையாகக் கொள்ளல். 9) கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அனைத்துத் தமிழர்களும், தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்று உறுதியெடுக்கும் நாளாக இந்த நாளைக் கொள்ள வேண்டியது தன்மாமுள்ள தமிழர்களதும் அனைவரதும் கடமையெனக் கொள்ள வேண்டும்.

10) வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் நிற்கின்றது தமிழினம். இந்த நிலையிலே நீயா ? நானா? என்பதை விட்டொழித்து விட்டு, தமிழ்த் தேசியத்துள் ஐக்கியமாகித் தமிழினம் தலைநிமிர எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மாவீரன் முத்துக்குமார் தன்னைத் தீயாக்கித் தமிழகத்தைப் புடமிட்டுப் பெரும் ஈகத்தைச் செய்துள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் ?

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

தமிழக மக்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், அவர்களின் பொருட்களை இறக்குமதி செய்யலாம். பொதுவாக இந்தியப் பொருட்கள் என்றால், அவை வட இந்தியாவில் இருந்து தான் இங்கு காணப்படுகின்றது. அது பொங்கல் ஆகட்டும், வடைக்கான மாவகட்டும். அதை மாற்றித் தமிழக மக்களுக்கு வாய்ப்பினைக் கொடுக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு இலங்கை பொருட்களுக்கு தடை தான்...

எம்மை அழிப்பவனுக்கு எதற்கு நாம் பணத்தை கொடுக்கணும்...

Share this post


Link to post
Share on other sites

மக்களாகிய நாம் நினைத்தால் சிங்கள பொருட்களை புறக்கணிக்களாம். நாம் வாங்காவிட்டால் கடைக்காரர்கள் விற்கமாட்டார்கள்.எனது வீட்டில் சிங்களவனது பொருள் வாங்கி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிறது. எல்லோரும் ஒத்து புறக்கணித்தால் நிச்சயம் நாம் வெல்லலாம். தமிழ் உறவுகளே தயவு செய்து சிங்கள்வனது பொருட்களை வாங்குவதை உடன் நிறுத்தவும்.

Share this post


Link to post
Share on other sites

நான் முதற்கூறியதை இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன், பொருட்களை வாங்கும் முன், தயவு செய்து கடைக்காறரிடம் ஒரு சிறிய கேள்வியை கேளுங்கள், "அண்ண இந்தச்சாமான் எந்த நாட்டில் இருந்து வந்தது?"

தொடக்கத்தில் நீங்கள் வெட்க்கப்படலாம் கடைக்காறன் உள்ளுக்கு என்ன நினைப்பான் என்று. (வந்தா வாங்கிக்கொண்டு போறத்துக்கு இவருக்கு ஏன் கேள்வி கேக்குது, எண்டு) ஆனால், காசு கொடுப்பது நீங்கள் என்பதை மறக்கவேண்டாம்.

அனைவரும் இவ்வாறு கேள்வி கேட்டு புறக்கணித்தால், கடைக்காறனும் கட்டாயம் யோசிப்பான்.

இந்த புறக்கணிப்பை எப்படியாவது தொடக்கவேண்டும் என்பதுதான் அனைவரினதும் ஆதங்கம், ஆகவே, மற்றாக்கள் என்ன செய்வார்கள் என்பதை விட்டு நாம் அதற்குரிய அணுகுமுறைகளை கையாளவேண்டும்.

PS: இங்கு ஏற்றுமதி/இறக்குமதி செய்பவர்கள் யாரும் ஒரு லிஸ்ட் (list) போட்டா, கடைக்காறர் பொய்சொல்லினமா என்று கண்டுபிடிக்கலாம்!

Share this post


Link to post
Share on other sites

வன்னி நீங்கள் சொல்வதை எங்களைப் போன்றவர்கள் மட்டுந்தான் கடைப்பிடிப்பார்கள். ஏன் உதாரணத்திற்கு ஒன்றைக் கூறுகிறேனே....

ஒரு தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊடகத்தில் ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரம் பொதிகளை நாட்டுக்கு நாடு அனுப்பிவைக்கும் நிறுவனத்திற்கானது. அதில் ஒருவர் "கனடாவில் இலங்கைச் சாமான் மலிவாமே வாங்கி அனுப்பி வையுங்கோ" என்பார். என்னைக் கேட்டால் அந்த விளம்பரத்தில் இலங்கைச் சாமான் மலிவென்று ஒரு கூற்றைச் சொல்லி அதனை வாங்கிப் பொதி செய்து அனுப்பும்படி சொல்வதைவிட, அந்த விளம்பரத்தை அமைத்தவர்களுக்கு வேறு யுக்திகளைப் பயன்படுத்தத் தெரியவில்லையா அல்லது அந்த விளம்பரகாரர் இப்படித்தான் விளம்பரம் செய்யுங்கள் என்று நிபந்தனையுடன் அதற்கு ஆதரவு வழங்குகிறாரா?

மக்களுக்கு ஒரு தகவலைக் காவும் ஊடகங்களின் அடிப்படையே இப்படியாக இருக்கும்போது எப்படி மக்கள் ஆதரவு குரல் தருவார்கள்?

இதனைப்பற்றி ஏதேனும் அதிகமாகக் கதைத்தால் ஓ... நாங்கள் இந்த விளம்பரத்தை மாற்றினால் மட்டும் மக்கள் சிறீலங்காப் பொருட்களை புறக்கணித்து விடுவார்களா? என்று கேட்பார்கள். எம்மால் பதிலுரைக்க முடியாது. ஆகவே முடிந்தவரை ஒவ்வொருவரும் தாங்களாக உணர்ந்தால் மட்டுமே இப்புறக்கணிப்பு சாத்தியமாகும்.

Edited by valvaizagara

Share this post


Link to post
Share on other sites

லண்டன்,பாரிசிலை பள்ளிக்கூடம் போற ஒருசில பொடியளுக்கு நெக்டோ,ஒரேஞ்பார்லியை தவிர மற்றதொண்டும் தொண்டைக்காலை இறங்காதாம் :lol:

Share this post


Link to post
Share on other sites

லண்டன்,பாரிசிலை பள்ளிக்கூடம் போற ஒருசில பொடியளுக்கு நெக்டோ,ஒரேஞ்பார்லியை தவிர மற்றதொண்டும் தொண்டைக்காலை இறங்காதாம் :lol:

:lol:ஏன் நீங்கள் இப்ப கூட கலந்தடிக்க லெமன் சோடா தானாம் பாவிக்கிறீங்க. பிறகு எப்படி பெடியளைக் குறை கூறுவது. :lol::D

Share this post


Link to post
Share on other sites

அய்யோ, மண்டையன் குழு முஸ்தப்பாவின் ............ மாறாதுகள்!! சாக்கடை!!!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/
  • இலங்கையில் இன்னமும் சூரிய கலங்கள் மூலமாக, அல்லது காற்றடிகள்மூலமாக பெருமளவில் கொளவனவு செய்யக்கூடிய அளவில் தனியார் திட்ட்ங்கள் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை। இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை । இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம்  டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன। இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை।  
  • நான் 12 வயது மட்டும் இந்த வெளிச்சத்தில் மண் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன்.
  • மக்கள் புலிகளினால்  பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்। அதை  அந்த  மக்கள்தான் கூற வேண்டும்।  இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம்। தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது। எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்। 
  • "வெள்ளை வான்" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.com/வெள்ளை-வான்-ஊடக-சந்திப்ப-2/