Jump to content

தமிழர் தகவல் மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்சி இது பேச்சிலேயே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்னால் ஆன உதவியை நான் செய்யக்காத்திருக்கிறேன்

(இணையம் ஆரம்பிப்பதாக இருந்தால்.......)

நிச்சயம் இப்படிப்பட்டதொரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு முதலில் குறுக்கிடுவது பொருளாதாரத்தேவைதான். உங்களுடைய பங்குக்கு உதவிசெய்யத்தயார். என்னுடைய பங்குக்கு நானும் தயார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் இருவர் உதவிபுரிந்தாலே போதும், இணையத்தை பல மொழிகளுடன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு server'உடன் உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

தடைகள் வரினும் உடைத்தெறிந்து தொடங்கவும், உடனடியாக செய்யவேண்டுயது. தாமதிக்காது உடனடியாக்த்திட்டமிட்டு செய்யவும்... உதவிகள் தேவையாயின் மனம் திறந்து கேட்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி தொடங்குவதென்றால் அதற்குரிய அனுமதியை எடுக்க வேண்டும். அதற்கு ஆகக் குறைந்தது 15 - 20 வேலை நாட்களாவது தேவை.

பிரித்தானியாவில் http://www.ofcom.org.uk/tv/ifi/tvlicensing/

அடுத்து யாராவது இவர்களுடன் தொடர்பு கொண்டு செய்மதிக்கான மாதாந்தக் கட்டணம் பற்றி கேளுங்கள்.

CONTACT EUTELSAT LTD

Marble Arch Tower

55 Bryanston Street

London W1H 7AJ

UK

Telephone: +44 207 868 2250

Fax: +44 207 868 87 82

Email: admin@eutelsat.co.uk

Link to comment
Share on other sites

மாதம் 30,000 யூரோ Satellite uplink மட்டும்

உங்கள் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து Glucester Road ல் இருக்கும் Uplink Station னுக்கு அனுப்ப குறைந்தது 3MB lease line தேவை.

அதற்கு மாதம் 800 பவுண்ஸ் முடியும். Easynet தான் மலிவு. அவர்களிடம் LLU network இருக்கு. அதோடு Europe Triangle வைத்திருக்கிறார்கள்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நீங்கள் Studio க்கள் வைத்திருக்க விரும்பினால் Easynet தான் சிறந்தது.

Link to comment
Share on other sites

சொல்ல மறந்திட்டன் TV License எடுக்கிறது சின்ன பிரச்சனை.

லண்டனில் எடுப்பது என்றால் அதுக்கும் வருசத்துக்கு ஒரு செலவு இருக்கும்.

அதை விட Belize மாதிரியான நாட்டில் எடுத்தால் நல்லது.

companyயை அங்கு ரெஜிஸ்டர் பண்ண வேணும்.

லைசென்ஸ் தேவையில்லை.

Eutelsat ல் போன் கதைச்சுக் கொண்டு பொம்பிளைகள் நிக்கிற சனல் எல்லாம் அங்குதான் ரெஜிஸ்டர் பண்ணுறவங்கள்.

தமிழ் Adult Channel ஒண்டுக்கு நான் லைசென்ஸ் எடுத்து வைச்சிருக்கிறன்.

என்ன மாதிரி வசதி?

சனியன் பிடிப்பானே எண்டு யாரோ திட்டுற மாதிரி கிடக்கு . . . ம் . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இவ்விடயம் பற்றி GTV தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலாநிதி சங்கர் அவர்கள் கதைத்திருந்தார்.

Link to comment
Share on other sites

மீண்டும் கருத்துக்களையும் தகவல்களையும் தந்த எல்லோருக்கும் நன்றிகள்..

மேலும் இந்த முயற்சி தொடர்பான விடையங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன..

மேலும் இந்த முயற்சி சம்பந்தமான தொடர்புகள் அலோசனைகளில் ஈடுபட்டுள்ளேன் என்பதை தெரியப்படுத்துகிறேன்..

உங்கள் ஆவலை மிகவிரைவில் செயல்படுத்தும் நம்பிக்கை இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்த மீரா, சானியன் அனைவருக்கும் நன்றி. நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ தெரியாது, ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டிலிருந்து முடிந்தளவு உதவி (அனைத்து விதமான) தேவை. நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உள்ள இளையசமுதாயத்தினரிடமிருந்து உதவி பெறக்கூடிய வகையிலான ஒரு நெட்வர்க்கை (network) உருவாக்குங்கள். KUGGOO, உங்களின் முயற்சிக்கு நன்றிகள்.

பி.கு: இங்கே ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் 'சுத்தித்திரியும்' குறுக்காரின் கருத்தையும் எதிர்பார்க்கின்றோம். :-)

Link to comment
Share on other sites

இரண்டு திட்டங்களாக செயல்படுத்தலாம் என நினைக்கிறேன்

1. குறுகிய திட்டம்

2. நெடுங்காலத்திட்டம்.

1. குறுகிய திட்டத்தில் கிடைக்கும் வளங்களுடன் வெகு விரைவாக சிக்கனமாக ஆரம்பித்தல்.

இத்திட்டப்படி ஏற்கனவே இருக்கும் செய்தி நிருவனங்களை ஊக்கிவித்து ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் பார்க்ககூடியதாக குறைந்த நேரத்திற்கு ஒளிபரப்பு. அதாவது உடன் பலன்.. இதற்கும் உலகத்தமிழர்களின் ஒத்துழைப்பு தேவை..இத்துடன் ஒரு இணையமும் இயங்க வைக்கவேண்டும்.. யாழும் உதவலாம்..

உலகசெய்திகள் தரமாக உலகத்திற்கு கொடுத்து அதனுடன் சேர்த்து எம்செய்திகளை சிறிது சிறிதாக வழங்கி ஆவலை ஊட்டலாம்..

2. இரண்டாவது நெடுங்காலத்திட்டத்தின் படி நிரந்தரமாக எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக மைத்தல்.

இதன் படி செய்திதுறையில் எமது மக்களை(செய்தி துறையில் பயின்ற பயிலவைக்கப்பட வேண்டிய இளம், எல்லா வயதினரும் தொழில் ரீதியாக கற்றவர்கள்,மேலும் கற்பிக்கப்பட தெரிவுகளுடன் நடக்கும்.

இது 24மணி நேர ஆங்கிலத்தில் சர்வதேச தரத்திற்கு அமையும்.. இந்த சேவை பி பி cஇ அளவில் ஒரு உலக சேவையாக மையும்.. உலகசெய்திகள், தமிழ் மக்கள் செய்திகள், தொழினுட்ப, மருத்துவ போன்றன, சிறிய விளம்பரஙளும்

அமையும்.. இவ்விளம்பரங்கள் ச்றிய பொருளாதரப்பிரச்சனைகளுக்கு உதவலாம்.

என்னை பொருத்தவரையில் பெரும் எடுப்பில் அகலக்கால் வைத்து பொருளாதார வசதியன்றி நாளடைவில் மூடுவதை விட சிரிதாக தொடஙி எங்கள் நோகத்தை, உடன் தேவைகளை நிறைவேற்றி.. பின் சிறிது சிறிதாக பலபடுத்தல் செய்து நிரந்தரமாக்குதல் நல்லது.. பல தடைகளை உடைத்து செயளவில் செயும் போது சாமளிக்கவேண்டும்..

தொடக்கத்தில் காலத்தின் தேவை கருதி எம்மக்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும்

எம்க்குமுன் இருக்கும் பாரிய பிரச்சனையை கருத்க்டில் கொண்டு உடன் உலகத்திர்கு செய்தி கொண்டு செல்லப்படவேண்டும்.. இதற்கு பல சவால்களை தாண்டவேண்டும்..

எமது மக்கள் விடிவு கிடைக்கும் மட்டும் எமது தனிப்பிரச்சனைகள், பொழுது போக்குகள், மற்றைய எல்லப்பிரச்சனைகளையும் ஒதுக்கி மக்களின் ஒத்துழைப்புடன் எமக்கு முன் இருக்கும் பாரிய இன அழிவிலிருந்து காக்கும் ஒரு தேவை தான் இந்த தகவல் செய்தி சேவை என்பதை எப்போதும் மனதில்வைக்கவேண்டும்.

இது தமிழ்மக்களின் உண்மை நிலையை, வரலாறுகளை உலக மக்களுக்கு இலாப நோக்கமில்லாமல் இயங்கும்..

முதல் தேவை இதன் தேவையை உணர்ந்த எல்லொரின் ஒன்றினைப்பு, புத்தியீவிகள், எமது முழுவரலாறு, ஆங்கிலபுலமை, தொழில் நுட்ப அறிவு செய்தி துறை அனுபவ, தொழில் ரீதியில் கற்றவர்கள் தொழில் புரிந்தவர்கள் போன்றவர்களின் ஒன்றிணைவு.. அடுத்து செயல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு திட்டங்களாக செயல்படுத்தலாம் என நினைக்கிறேன்

1. குறுகிய திட்டம் 2. நெடுங்காலத்திட்டம்.

1. குறுகிய திட்டத்தில் கிடைக்கும் வளங்களுடன் வெகு விரைவாக சிக்கனமாக ஆரம்பித்தல்.

இத்திட்டப்படி ஏற்கனவே இருக்கும் செய்தி நிருவனங்களை ஊக்கிவித்து ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் பார்க்ககூடியதாக குறைந்த நேரத்திற்கு ஒளிபரப்பு. அதாவது உடன் பலன்.. இதற்கும் உலகத்தமிழர்களின் ஒத்துழைப்பு தேவை..இத்துடன் ஒரு இணையமும் இயங்க வைக்கவேண்டும்.. யாழும் உதவலாம்..

உலகசெய்திகள் தரமாக உலகத்திற்கு கொடுத்து அதனுடன் சேர்த்து எம்செய்திகளை சிறிது சிறிதாக வழங்கி ஆவலை ஊட்டலாம்..

(...)

இது உடனடியாகச் செயற்படுத்தவேண்டிய திட்டம். GTV'உடன் தொடர்புகொள்ளக்கூடியவர்கள் யாராவது இங்கே உள்ளனரா?

Link to comment
Share on other sites

இது உடனடியாகச் செயற்படுத்தவேண்டிய திட்டம். GTV'உடன் தொடர்புகொள்ளக்கூடியவர்கள் யாராவது இங்கே உள்ளனரா?

சினேகி நான் ஏற்கனவே ஜிரிவி உடன் தொடர்பிலுள்ளேன்..

அதே போன்ற நோக்கம் அவர்களுக்கும் இருக்கு.. அத்துடன் மேலும் பலருக்கு உண்டு. எல்லோரையும் ஒன்றிணைத்து செயல் திட்டம் போடவேண்டும்..

Link to comment
Share on other sites

Al Jazeera பற்றி கதைக்கிறனீங்கள் இதையும் ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ: http://en.wikipedia.org/wiki/Al_Jazeera

The original Al Jazeera channel was started in 1996 with a US$150 million grant from the Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஊடகங்களில் முக்கியமாக உலகச்செய்திகள் தவறாமல்; இடம் பெற வேண்டும்(பி பி சி போல) அப்ப தான் எல்லோரும் பார்ப்பார்கள்.அத்துடன் எங்கள் செய்திகளையும் சொல்ல வேண்டும். தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திநேரம் முழுவதும் எங்கள் செய்திகளையே சொல்வார்கள்.ஏதாவது மிகமிக முக்கிய உலகச் செய்தியை மட்டும் மேம்போக்காக சொல்வார்கள். தமிழர்களுக்கு உலக அறிவு குறைவு.நாங்கள் உலக விடயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டு உலகம் எங்களைக் கவனிக்குது இல்லை என்று சொல்லுறதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

Link to comment
Share on other sites

மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி.

மேலும் எனது முக்கிய கருத்து எமக்கு ஆங்கில சர்வதேச செய்தி தாபனம் காலத்தின் பிரதான தேவை.. இதனை பலரும் வரவேற்கிறார்கள்.

இதனை எவராவது தாங்களாக செய்யவந்தால் வரவேற்கிறேன்..

அல்லது நாங்கள் பின் ஊக்கியாக நின்று செயல்படவைப்போம், ஆலோசனை ஒத்துழைப்பு வழங்குவோம்..

நடை முறையில் வரும் சிக்கல்களில் பொருளாதாரப்பிரச்சனை இன்னும் பல பிரச்சனைகளை வென்று எடுக்க நேரிடும்..

தமிழரின் காலத்தின் தேவை கருதி உலகத்தமிழ்மக்களின் உதவியுடன் தொடங்கி முன்னெடுத்தோம் என்றால் அது பெரும் சாதனை..

முரளி தந்த தகவலின் படி அல் அசிரா 150 மில்லியன் டொலர் நிதியுடன் தொடங்கியுள்ளது.. இது பெரும் அகலக்கால் வைத்தல் போன்றது..

எமது விரலுக்கேற்ற சிக்கனமான செய்தி தாபனத்தை உருவாக்க உதவுவோம்..

சானியன் கூறிய மாதிரி தனிப்பட்ட ஆபச, 24 மணி விளம்பர தொலைக்கட்சிகளை மாதிரி சிக்கனமான முறையில் ஏன் ஒளிபரப்பு செய்ய முடியாது..? முயற்சிப்போம், துணிந்தால் முடியாது எதுமில்லை?..

சாத்தியமானதை தட்டிக்கழிக்கவும் கூடாது.. முடியாது என்னும் நிலையில் மாற்றுவழி என்ன? எப்படி எங்கள் செய்திகள் உலகிற்கு செல்வது? கனடா, அமெரிக்க, அவுஸ்ரேலிய புலம் பெயர் மக்களின் அபிபிராயமும் தேவை ஏற்கனவே எம்மவரின் ஆங்கிலத்தில் எமது ஒளீபரப்பு உண்டா உங்கள் நாடுகளில்? இருந்தால் உலகு எங்கும் ஒளிபரப்பிற்கு முடியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனியன் அண்ணாவுடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல ஆக்கபூர்வமான தகவல்கள் ஆலோசனைகள். நன்றி அண்ணா..

ஆகக் குறைந்தது மாதாந்தம் 30 ஆயிரம் பவுண்கள் தேவை. 3 வருடத்திற்குரிய மூலதனத்துடன் ஆரம்பித்தால் தொடர்ந்து வெற்றி நடை போடலாம்.

யாரும் முன் வருவார்களா..?

One year Cost £ 30,000 x 12 = £ 360,000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனியன் அண்ணாவுடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல ஆக்கபூர்வமான தகவல்கள் ஆலோசனைகள். நன்றி அண்ணா..

ஆகக் குறைந்தது மாதாந்தம் 30 ஆயிரம் பவுண்கள் தேவை. 3 வருடத்திற்குரிய மூலதனத்துடன் ஆரம்பித்தால் தொடர்ந்து வெற்றி நடை போடலாம். யாரும் முன் வருவார்களா..?

One year Cost £ 30,000 x 12 = £ 360,000

தனியாக ஆரம்பிப்பதற்குத்தான் இந்தவிலை. ஆனால் நாங்கள் பேசுவது ஏற்கனவே இருக்கும் ஒரு தொலைக்காட்சியுடன் ஒருபகுதிநேரமாக (பொருளாதார உதவியுடன்) ஆரம்பித்தால் செலவீனம் குறைவு. குக்கூ கூறியதுபோல் பெரிதாக அகலக்கால் வைக்கத்தேவையில்லை...

Link to comment
Share on other sites

மீண்டும் நன்றி,, மீரா, சினேகி, மற்றவர்களுக்கும். உங்கள் ஆலோசனைகளுக்கும் ஆர்வத்திற்கும்.. சரியான எல்லோர்ரும் சேர்ந்த ஒரு பலமான கூட்டமைப்பு ஏற்படுத்தினால், எல்லோரும் உறுதியான கொள்கையுடன் தேவையை உணர்ந்தால் மிகுதி சிறிய பிரச்சனையாகிவிடும்..

எனவே பொது நலமாக தமிழ்மக்களின் இக்கட்டான நிலையில் அதனை உலகிற்கு கொண்டு செல்லவேண்டும் என்னும் தெளிவான சிந்தனையைக்கொண்டுள்ளர்வர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 அல்லது 40 பேர் அளவில் இணைந்து செயற்படலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...) தொடர்பிலுள்ளவர்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்.. மீண்டும் சந்திப்போம்..

நானும் உங்கள்+GTV'ன் பதிலுக்காh காத்திருக்கிறேன். அத்துடன் இணையம் சம்பந்தமாக உதவி புரிவதற்கு யாழ்கள உறவு ஒருவர் தொடர்பில் உள்ளார். திட்டம் உருப்படியானதும் தொடர்புகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைக்கு இருக்கிற தொலைக்காட்சியகுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு நாங்கள் வீடியோக்களை தொகுத்து அதாவது வௌ;வேறு மொழிகளில் தொகுத்து வழங்கி நாம் அதனையும் யருபேயில் இனைத்து எம்முடைய பரப்புரைகளை நிகழ்த்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைக்கு இருக்கிற தொலைக்காட்சியகுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு நாங்கள் வீடியோக்களை தொகுத்து அதாவது வௌ;வேறு மொழிகளில் தொகுத்து வழங்கி நாம் அதனையும் யருபேயில் இனைத்து எம்முடைய பரப்புரைகளை நிகழ்த்தலாம்

முதலிலே தளத்திலே நிற்கின்ற காணொளிகளை அணுகுதல் பொருத்தமானது.ஏனென்றால் நாம் ஒரு பொது நோக்கம் கருதி ஒரு உடன்பாட்டை இப்போதாவது எட்டாவிடின், இனி எப்போதும் எட்டமுடியாது.இந்த நாடகக் குப்பைகள் போடும் நேரத்தில் ஆங்கில ஒளிபரப்பைத் தொடங்குவது பொருத்தமானது. அதனை வெளிநாட்டவர் பார்க்கும் விதமாகப் பொருத்தமான முறையிலே விளம்பரங்களையும் செய்ய வேண்டியிருக்கும்.எனவே இது ஒரு அவசியமான அவசரமான பணி. இதனைச் செயலுருவாக்க நாம் முதலில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக தற்போதைய தளங்களுடன் தொடர்பிலுள்ளவர்கள் ஆலோசனைகளை மேற்கொள்வதூடாக சரியான திசைக்கு நகரலாம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே, மிகவும் சிறந்த திட்டம், அல்ஜசீரா போன்று வளர வேண்டுமானால் பிரித்தானியாவில் BTF மூலம் தொடங்கலாமே. இப்போது உள்ள, ஊடகங்களை விடுத்து, ஒரு தனி, சுயாதீன அமைப்பாக வளர்ந்தால் தான் அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். இதுவே அல்ஜசீராவின் வளர்ச்சியின் ரகசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.