Jump to content

தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...!


Recommended Posts

தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...!

முத்துக்குரமன் மூட்டிய தீ

எங்கும் மூசியெரிகிறது.

தமிழன் செத்துக் கிடப்பதை

உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது.

பலம் கொண்ட மட்டும்

பகைவன் பலியெடுக்கும்

கொலையிருந்து மீளுதற்காய்

புலமெங்கும் தமிழன்

போர் வீச்சாய் எழுகிறான்.

ஈழம் பெறும் நாளை

கையிலெண்ணிக் கடுங்குளிரின்

விறைப்பிலும் வீதிகளில் இறங்கி

நீதி கேட்கும் நிலையிலுள்ளான்.

பலம் வெல்லும் என்ற நிசம்

புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன்

நெடுந்தவம் புரிகின்றான் - இக்

கடுந்தவத்தின் பரிசெமக்கு

காலம் தருமென்ற நினைப்போடு.

தினம் வரும் செய்திகளால் - உயிர்

மனம்வாடித் துவளுகின்ற

துயர் உயிரைத் தின்கிறது - எனினும்

தொடரான ஈர்ப்புக்கள்

குறயாமல்......

மனம் தாளாச்சுமை தாங்காத்

தமிழரின் மனங்களில் மூண்ட தீ

மரணங்களை தமிழகத்தில் மலேசியாவில்

மாறி மாறித் தருகிறது.

துயர் இன்னும் மனசேறி

இத் தொடர் மரணப் போராட்டம்

பற்றியே அழுகிறது.

சாவதே தமிழன் விதியாக

எந்தச் சாமியெழுதி வைத்தானோ

சாபமோ இல்லை - எம்

சந்ததியின் கோபமோ ?

எதுவெனப் புரியாமல்

இதயம் துயர் முட்டி

வலியில் துடிக்கிறது.

'போதும் தீக்குளிப்பு'

பெறற்கரிய உயிரழிப்புப் போதுமினி.

போராடுவோம் புலத்திருந்து

நிலம் நோக்கிய வலுவாக - எம்

வலுவுணர்த்தும் போராட்டம்

வலுக்கட்டும்.

போதும் தீக்குளிப்பு.

தற்கொடைகள் வீண்

தற்கொலைகளாக வேண்டாமே...!

தமிழ் ஈழத் துயர் காக்க எரிந்து கருகக்

காத்திருக்கும் எங்களின் உறவுகளே...!

எரிதல் எமக்கு முடிவு அல்ல.

வாழ்தலுக்காய் போராடுவோம்

வாழும் வழியடைத்துச்

சாவில் நிற்கும் எம்முறவுகட்காய்

நீங்கள் வாழும் மூலைகளிலிருந்தெல்லாம்

போராடலாம் வாருங்கள்

தோழரே தோழியரே...!

போராடலாம் வாருங்கள்.

போதும் தீக்குளிப்பு.

09.02.09

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'போதும் தீக்குளிப்பு'

பெறற்கரிய உயிரழிப்புப் போதுமினி.

போராடுவோம் புலத்திருந்து

நிலம் நோக்கிய வலுவாக - எம்

வலுவுணர்த்தும் போராட்டம்

வலுக்கட்டும்.

போதும் தீக்குளிப்பு.

தற்கொடைகள் வீண்

தற்கொலைகளாக வேண்டாமே...!

தமிழ் ஈழத் துயர் காக்க எரிந்து கருகக்

காத்திருக்கும் எங்களின் உறவுகளே...!

எரிதல் எமக்கு முடிவு அல்ல.

என்னுடைய வேண்டுகோளும் இதுவே ....... சாந்தி .

Link to comment
Share on other sites

தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...!

கவிதை நல்லாயிருக்கு தயவு செய்து வீண் என்ற சொல்லை எடுத்து விடுகிறீர்களா.ஒன்றுமே வீண் என்று சொல்ல முடியாது பாருங்கோ. விளங்கி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு தயவு செய்து வீண் என்ற சொல்லை எடுத்து விடுகிறீர்களா.ஒன்றுமே வீண் என்று சொல்ல முடியாது பாருங்கோ. விளங்கி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

கருத்துக்கு நன்றிகள் தேசம்.

வீண் என எழுதியதன் பொருள் வீணாகிப்போய்விட்டதே என்ற பொருளல்ல. இத்தீக்குளிப்புக்கள் இன்னும் சிலநாளில் அல்லது சிலமாதங்களில் மறக்கப்பட்டுவிடும். அல்லது இன்னொரு கட்சி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வந்தால் இவையெல்லாம் தற்கொலைகளாகத்தான் பார்க்கப்படுமே தவிர தற்கொடையாக அல்ல.

தீயில் எரிந்து எங்களுக்காய் சாகத் துணிந்துள்ள இளையோர் மற்றும் இனவுணர்வள்ளோர் வாழ்ந்து பல கொடைகளை எமது தாயகத்தக்குச் செய்யலாம். ஆக தற்கொடைகள் வீணாகக் கூடாது என்ற பொருளிலேயே எழுதினேன்.

நன்றி.

என்னுடைய வேண்டுகோளும் இதுவே ....... சாந்தி .

உண்மைதான் சிறி.

Link to comment
Share on other sites

நன்றிகள் சாந்தி

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்

புரிதலுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.