• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ArumugaNavalar

பெரிய புராணம்

Recommended Posts

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின்

sathashivaarumuganavalar.jpg

திருத்தொண்டர் புராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

தில்லைவாழந்தணர் புராணம்

ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்

சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்

பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப்

போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி

யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்

சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று

பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி

போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே

னீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம்

பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழு

மாற்றினார் பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வார்.

நல்லவா னவர்போற்றுந் தில்லை மன்று

ணாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொற்

றொல்லைவான் பணியெடுத்தற் குரியார் வீடுந்

துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத்

தில்லைவா ழந்தணரென் றெடுத்து நாதன்

செப்புமரு ளுடையார்முத் தீயார்பத்திக்

கெல்லைகாண் பரியாரொப் புலகிற் றாமே

யேய்ந்துளா ரெமையாள வாய்ந்து ளாரே.

தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும், நடுவிலுள்ள தில்லைவனமும் சமமாகும்.

சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும் பொருட்டுத் திருமூலத்தனமாகிய சிவலிங்க வடிவமாய் எழுந்தருளியிருப்பார். அந்தத் திலமூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடிவாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபையின் கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவபிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுவர்.

Share this post


Link to post
Share on other sites

cb.jpg

திருமூலத்தானலிங்கத்துக்கும

Share this post


Link to post
Share on other sites

பக்த நந்தனாரையும் அருட்பிரகாச வள்ளலாரையும் தில்லை வாழ் அந்தணர்களே கொலை செய்தார்களென்று ஒரு கதை அடிபடுகிறது. சமீபத்தில்கூட தில்லையில் தேவாரம் பாட முயற்சித்த ஒரு பெரியவரின் கை முறியுமளவுக்குத் தாக்கினார்களாமென்றும் செய்தியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இதே தில்லையில் இருக்கும் களங்கமல்லாதவர்கள் தான் அதே திருத்தலத்தினை களங்கப்படுத்தியதை அறிந்து மனவேதனையும், கவலையும் அடைந்தேன், இன்று மதங்கள் இந்து மதத்தை அழிப்பதிலேயே முனைப்புக்காட்டி வரும் வேளையில் தொடருமாயின் அழிக்கப்படும், எம்மவர்களே அழிப்பார்கள் என்பதுதான் உண்மை.... காத்திருந்து காத்திருந்து பயனில்லை... பொங்கி எழவேண்டும் அப்போதாவது முடிகின்றதா என்று பார்ப்போம்....

Share this post


Link to post
Share on other sites

பெயர்தான் பெரிசா இருக்கு புராணம் என்னமோ சின்னிஜெயந் நடித்த படம் மாதிரி சின்னதாய் இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

பக்த நந்தனாரையும் அருட்பிரகாச வள்ளலாரையும் தில்லை வாழ் அந்தணர்களே கொலை செய்தார்களென்று ஒரு கதை அடிபடுகிறது. சமீபத்தில்கூட தில்லையில் தேவாரம் பாட முயற்சித்த ஒரு பெரியவரின் கை முறியுமளவுக்குத் தாக்கினார்களாமென்றும் செய்தியுள்ளது.

நண்பரே! நந்தனார் கதையை இங்கே பின்னர் பார்ப்போம்.

வள்ளலார் என்று கூறித்திறிந்த ராமலிங்கர் செத்தவர்களை எழுப்புவேன் என்று கூறினார். சிலர் பிணத்தை எடுத்துக்கொண்டு அவர் வீட்டில் போட அதை உயிர்ப்பிக்க முடியாமல் தற்கொலை செய்து மாண்டார் என்று ஒரு செய்தி அடிபடுகிறது.

தில்லையில் தேவாரம் பாட சென்றாராம் ஆறுமுகச்சாமி என்னும் வயதானவர். இவருக்கு திருவாசகம், தேவாரம் எதுவும் முழுதுமாகத் தெரியாதாம். இவர் தி.க. கட்சியைச் சேர்ந்தவராம். இவருக்கும் சைவ சமயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

வள்ளலாரின் அருட்பாக்களை வாசித்திருக்கிறேன். வள்ளலாருடன் போட்டியிட்டு அவருடன் வழக்காடிய ஆறுமுக நாவலரின் எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன்.

யார் அருளாளர் என்பது வாசிக்கும் போதே புரிகின்றது.

இறைவனைத் தரிசிப்பது வேறு இறைவனைப் பற்றிக் கதையளப்பது வேறு என்பதை இவ்விருவரினதும் சொற்கள் புரிய வைக்கின்றன.

யார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது இங்கு முக்கியமல்ல. தமிழனுக்குத் தேவாரம்பாடத் தில்லையில் உரிமையில்லை என்பதே முக்கியம்.

Share this post


Link to post
Share on other sites

யார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது இங்கு முக்கியமல்ல. தமிழனுக்குத் தேவாரம்பாடத் தில்லையில் உரிமையில்லை என்பதே முக்கியம்.

சரியாகச் சொன்னீர்கள் கரு .

Share this post


Link to post
Share on other sites

்தில்லையில் அடியார்கள் யாவரும் பஞ்ச புராணம் படிக்கிறார்கள். ஆறுமுகச்சாமி பொன்னம்லத்தின் உள்ளே சென்று படிக்கிறேன் பேர்வழி என்று தகராறு செய்கிறார். அது தான் வித்தியாசம். தி.க.வினரின் சதி செயல் இது.

Share this post


Link to post
Share on other sites

தில்லைக்குள்ளை , முன் தலையில குடும்பி வைத்த ரவுடிகள் சுகமா ......

Share this post


Link to post
Share on other sites

கடவுள் தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார் - சைவ வினாவிடை: ஆறுமுக நாவலர்.

சொரணை கெட்ட தமிழனோ திருச்சிற்றம்பலமென்று சொல்லியே தேவாரத்தை ஆரம்பிக்கிறான். அவனுக்குத் திருச்சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடவே உரிமையில்லை.

முகம்மது நபி சல் அவர்கள் ஆரம்பத்தில் ஜெருசலேத்திலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை நோக்கியே அனைவரும் தொழவேண்டுமென்று முஸ்லீம்களுக்கு அறிவுறுத்தினார். யூதர்கள் அதை தங்கள் சொலமன் கட்டிய ஆலயமென்று உரிமைகொண்டாடி எதிர்த்ததால் பின்னர் நபி பெருமானார் ஆபிரஹாம் கட்டிய மக்காவை நோக்கித் தொழுமாறு முஸ்லீம்களைப் பணித்தார்.

அவ்வாறு, தமிழருக்கு உரிமையில்லாத திருச்சிற்றம்பலமென்று சொல்லாமல் உரிமையுள்ள வேறு ஏதாவது தலத்தின் பெயர் சொல்லி வழிபடுங்கள் என்று வழிகாட்ட சைவர்களுக்கு ஒரு சமயத் தலைவரில்லை.

சரியான வழிநடத்தல் இல்லாததாலேயே இந்த இழிவு நிலை. சிதம்பரம் நமக்கு அவசியமில்லையென்று புறக்கணித்தால் தீட்சிதர்களின் கொட்டம் வருவாயில்லாது அடங்கிப் போய்விடும்.

சிதம்பரத்தில் வியாபாரமே நடக்கிறது. நான் வாழ்வில் ஒருதடவையாவது சிதம்பரத்திற்குச் சென்று வரவேண்டுமென்று ஆசைப்பட்டு அங்கு மனைவியுடன் சென்றபோது ஒரு தீட்சிதன் பணத்தை வாங்கிக் கொண்டு சிற்றம்பலம் வரை சென்று தரிசிக்க உதவினான். அட்வாண்ஸாக பணம்வாங்கி அர்ச்சனைபோட்டு திருநீறு அனுப்புவதாக வாக்குத்தந்து அதற்கும் பணம்பெற்றான். ஆனால் இன்றுவரை எதையும் அனுப்பவில்லை.

அங்குள்ளவர்கள் நம்பத் தகுந்தவர்களல்ல. இந்தியாவிற்குக் கோயில்களுக்குப் போனால் வெறுப்புத்தான் மிஞ்சும். ஏதோ இளவயதில் ஏற்பட்ட நம்பிக்கைகளால் அங்கு போகவேண்டியேற்பட்டது. ஆனால் சிதம்பரம் போன்ற கோயில்களுக்குச் செல்லும்போது அங்குள்ள நிலையை நோக்க வெறுப்பே மிஞ்சி நிற்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

கடவுள் தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார் - சைவ வினாவிடை: ஆறுமுக நாவலர்.

சொரணை கெட்ட தமிழனோ திருச்சிற்றம்பலமென்று சொல்லியே தேவாரத்தை ஆரம்பிக்கிறான். அவனுக்குத் திருச்சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடவே உரிமையில்லை.

முகம்மது நபி சல் அவர்கள் ஆரம்பத்தில் ஜெருசலேத்திலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை நோக்கியே அனைவரும் தொழவேண்டுமென்று முஸ்லீம்களுக்கு அறிவுறுத்தினார். யூதர்கள் அதை தங்கள் சொலமன் கட்டிய ஆலயமென்று உரிமைகொண்டாடி எதிர்த்ததால் பின்னர் நபி பெருமானார் ஆபிரஹாம் கட்டிய மக்காவை நோக்கித் தொழுமாறு முஸ்லீம்களைப் பணித்தார்.

அவ்வாறு, தமிழருக்கு உரிமையில்லாத திருச்சிற்றம்பலமென்று சொல்லாமல் உரிமையுள்ள வேறு ஏதாவது தலத்தின் பெயர் சொல்லி வழிபடுங்கள் என்று வழிகாட்ட சைவர்களுக்கு ஒரு சமயத் தலைவரில்லை.

சரியான வழிநடத்தல் இல்லாததாலேயே இந்த இழிவு நிலை. சிதம்பரம் நமக்கு அவசியமில்லையென்று புறக்கணித்தால் தீட்சிதர்களின் கொட்டம் வருவாயில்லாது அடங்கிப் போய்விடும்.

சிதம்பரத்தில் வியாபாரமே நடக்கிறது. நான் வாழ்வில் ஒருதடவையாவது சிதம்பரத்திற்குச் சென்று வரவேண்டுமென்று ஆசைப்பட்டு அங்கு மனைவியுடன் சென்றபோது ஒரு தீட்சிதன் பணத்தை வாங்கிக் கொண்டு சிற்றம்பலம் வரை சென்று தரிசிக்க உதவினான். அட்வாண்ஸாக பணம்வாங்கி அர்ச்சனைபோட்டு திருநீறு அனுப்புவதாக வாக்குத்தந்து அதற்கும் பணம்பெற்றான். ஆனால் இன்றுவரை எதையும் அனுப்பவில்லை.

அங்குள்ளவர்கள் நம்பத் தகுந்தவர்களல்ல. இந்தியாவிற்குக் கோயில்களுக்குப் போனால் வெறுப்புத்தான் மிஞ்சும். ஏதோ இளவயதில் ஏற்பட்ட நம்பிக்கைகளால் அங்கு போகவேண்டியேற்பட்டது. ஆனால் சிதம்பரம் போன்ற கோயில்களுக்குச் செல்லும்போது அங்குள்ள நிலையை நோக்க வெறுப்பே மிஞ்சி நிற்கின்றது.

ஏன்னா? நீங்க இந்துமதம் பற்றியா பேசுறீங்க...

கொஞ்சம் ஜாக்கிரதையா பேசுங்கண்ணா இல்லையெண்டா உங்களுக்கு ஞானஸ்தானம் கொடுத்து உங்களை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்து விடுவார்கள் சில கில்லாடிகள். இது தான் இவர்களுடைய அடுத்த தந்திரம். கிறிஸ்தவா மதத்தை சேர்ந்தவர் தமது இந்து மதத்தை இழிப்பதாக புரளி கிளப்பிவிடுவார்கள். பின்பு வருவோர் ஏது என்னா என்றெல்லாம் வாசிக்கவே நேரம் இருக்காது சும்மா அர்சனைதான். எனது முன்னையோரில் எனக்கு இருக்கும் ஒரே கோபம் இந்த கேவலம் கெட்ட மதத்தை வரிந்து கட்டிகொண்டு கடைபிடித்ததுதான்

Share this post


Link to post
Share on other sites

nathilla_i.jpg

nathilla.gif

Thillai Vazh Anthanar - தில்லைவாழ் அந்தணர் பற்றிய சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு

Click this to download

http://www.megaupload.com/?d=QOUARDQ6

http://www.shaivam.org/nathilla.html - ஆங்கில மொழிபெயர்ப்பு

Share this post


Link to post
Share on other sites

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

திருநீலகண்டநாயனார் புராணம்

தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி

தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று

சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க

ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை

மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி

விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே, பொய்சொல்லல் சிறிது மின்றித் தருமநெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்திலே நிற்பவரும், சிவபத்தி அடியார்பத்திகளிலே சிறந்தவருமாகிய தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற்றுச் சீவனஞ் செய்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வந்தார். அவர் "ஆதிகாலத்திலே பரமசிவன் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும்பொருட்டு உண்ட பொழுது, அவருடைய கண்டமானது. அவர் தம்மை அடைந்தவர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்கியருளுவார் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ளும்படி ஓரறிகுறியாய் விளங்கும் பொருட்டு, அதனை உள்ளே புகவொட்டாமல் தடுத்து தானே தரித்துக்கொண்டது" என்று நினைந்து, அக்கடவுளுடைய கண்டத்தைத் திருநீலகண்டம் என்று எப்பொழுதும் சிறப்பித்துச் சொல்லுவார். அதனால் அவருக்குத் திருநீலகண்டநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் அவ்வூரிலே ஒருவேசியிடத்துச் சென்று வீட்டுக்குத் திரும்ப; கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே தோன்றிய கோபத்தை அடக்கிக்கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய மற்றப்பணிகளெல்லாஞ் செய்தும், புணர்ச்சிக்குமாத்திரம் இசையாதவரானார். நாயகர் தம்முடைய மனைவியார் கொண்ட புலவியைத் தீர்க்கும்பொருட்டு அவர் சமீபத்திலே போய், வேண்டிய இரப்புரைகளைச் சொல்லி, அவரைத் தீண்டுபடி சென்றார். அப்பொழுது மனைவியார் "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயகர், பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்றாவண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, இவர் 'எம்மை' என்று பன்மையாகச் சொன்னதனால் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களையும் நான் மனசினால் நினைத்தலுஞ்செய்யேன்" என்று உறுதிகொண்டார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப்பருவத்தையுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.

இப்படியிருக்கும் காலத்திலே, காருண்ணிய ஸ்வரூபியாகிய பரமசிவன் அவ்வடியாருடைய மகிமையை உலகத்தவர்கள் ஐயந்திரிபற அறிந்து அவருடைய தொண்டை அனுசரித்து உய்யும்பொருட்டு, ஒரு சிவயோகிவடிவங் கொண்டு, அவ்வடியார் வீட்டுக்குச் சென்றார். அவ்வடியார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டுபோய், ஆசனத்தில் இருத்தி, அவருக்கு விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது" என்று வினாவ; சிவயோகியார் "இந்த திருவோட்டை வைத்திருந்து, நாம் கேட்கும்போது தா. இந்த் ஓடு தனக்கு வேறொப்பில்லாதது; தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வது; பொன்னிலும் இரத்தினத்திலும் பார்க்கக் காப்பாற்றப்படத்தக்கது. இப்படிப்பட்ட மேன்மையுள்ளதாகிய இந்த ஓட்டை நீ வாங்கி வைத்திரு" என்று அருளிச் செய்தார். அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

Share this post


Link to post
Share on other sites

நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, "சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்" என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் "நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா" என்றார். அடியவர் அதைக் கொண்டுவந்து கொடுக்கும்பொருட்டு உள்ளே போய்ப் பார்த்துக் காணாமையாலே திகைத்து, அங்கு நின்றவர்களிடத்திலே கேட்டும் பிறவிடங்களிலே தேடியும் காணாதவராகி, சிவயோகியாருக்கு உத்தரம் சொல்வதற்கு ஒன்றுமின்றி அங்கே நின்றார். சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, "நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்ந்து நிற்கின்றாய்" என்று கேட்க; அடியவர் வந்து சிவயோகியாரை வணங்கி, "சுவாமி! தேவரீர் தந்த் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைப் பார்க்கினும் புதிதாகிய வேறொரு திருவோடு தருவேன். அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவயோகியார் அவரைக் கோபித்துப் பார்த்து "நீ யாது சொன்னாய்! நான் வைத்த மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாயாயினும் நான் வாங்கேன்; நான் முன்னே உன்னிடத்தில் தந்த ஓட்டையே கொண்டுவா" என்று திருவாய்மலர்ந்தருள, அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டைத் தேடியுங் காணேன். வேறே நல்ல ஓடு தருகின்றேன் என்று சொல்ல; அதற்கு உடன்படாமல் என்னோட்டையே கொண்டுவா என்று சொல்லுகிறீர். இந்தச்சொல் என்னறிவுமுழுதையும் ஒழித்துவிட்டது" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல், பல பாவங்கள் செய்கின்றாய். சகலரும் அறியும்படி உன்னைத் தப்பவொட்டாமல் மறித்து என்னோட்டை வாங்கிக் கொண்டேயன்றி நான் போகேன்" என்று சொல்ல; அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை எப்படித் தெரிவிப்பேன்? சொல்லும்" என்றார். சிவயோகியார் "உன் புத்திரனைக் கையிலே பிடித்துக்கொண்டு குளத்திலே முழுகி, நான் கவரவில்லை என்று சத்தியம்பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "அப்படிச் செய்தற்கு எனக்குப் புத்திரன் இல்லையே! யாது செய்வேன் சொல்லும்" என்றார். சிவயோகியார் உன்மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "நானும் என்மனைவியும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது. நான் மாத்திரம் குளத்திலே முழுகிச் சத்தியம்பண்ணித் தருகிறேன். வாரும்" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான்முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் உன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியஞ்செய்து தராமலும், மனம் வலித்திருக்கின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையிலே இவ்விஷயத்தைக் குறித்துப் பேசப் போகின்றேன்" என்று சொல்லி, அந்தச் சபைக்குப்போக; திருநீலகண்டநாயனாரும் அவருக்குப் பின்னே போனார், சிவயோகியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, "இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தருகின்றானில்லை. அதனை இழந்ததனாயின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தருகின்றானுமில்லை" என்றார். உடனே பிராமணர்கள் அடியவரை நோக்கி, "திருநீலகண்டரே! நடந்த சமாசாரத்தை நீர் சொல்லும்" என்று கேட்க; அவர், "சுவாமிகாள்! இவர் தந்த திருவோடு நான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது. நான் தேடிப் பார்த்துங் காணேன். இதுவே நடந்த சமாசாரம்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து கொடுத்தலே நீதி" என்றார்கள். அடியவர் அதைக் கேட்டு, தாம் அம்மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக்குறித்துப

Share this post


Link to post
Share on other sites

ஆறுமுக நாவலர் கொஞ்சம் தேவாரங்களை தந்துதவுங்கள் [பதினோராம் ஆண்டு புத்தகத்தில் உள்ள இலங்கை பாடத்திட்டம்]

Share this post


Link to post
Share on other sites

ஆறுமுக நாவலர் கொஞ்சம் தேவாரங்களை தந்துதவுங்கள் [பதினோராம் ஆண்டு புத்தகத்தில் உள்ள இலங்கை பாடத்திட்டம்]

முனிவருக்கே தேவாரமா ஏன் எல்லாம் மறந்துபோச்சுதோ

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும், அடியேனும் ஒரு சிவ தொண்டந்தான்...ஆனால் வன்னி நிலை சீர்பெறும் வரை எதிலும் மனம் நாடாது, ஓளவை கூறிய பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல் படுகொலையிலிருந்து மக்களை விடுதலைக்கும் பசியில் இருக்கின்றோம்.....தென்னாடுடைய சிவனே என்னாட்டவருக்கும் இறைவா போற்றி....என்று சமத்துவமாக அழைத்தும் யாருக்கும் எம்மக்கள் இன்னல் தீர்க்கும் எண்ணமில்லாத நிலையில், எம்பெருமானே உன்னை கையாற தொழுகின்றோம் அழுகின்றோம் என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று புலம்புகின்றோம்....அவருக்கு இன்னமும் நாம் கதறுவதும் தமிழர்கள் ஓலமும் கேட்கவில்லையா?

பெரியபுராணத்தைவிட எனக்கு மக்கள் என் தமிழ் உறவுகளின் நிலையே முக்கியம்.

Share this post


Link to post
Share on other sites

nakuyava_i.jpg

nakuyava.gif

ThiruNeelakanda Naayanar - திருநீலகண்ட நாயனார் பற்றி சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு.

Click this to download

http://www.megaupload.com/?d=MIEVBTSL

http://www.shaivam.org/nakuyava.html - ஆங்கிலத்தில் இச் சரித்திரம் பார்க்க இதைக் கிளிக் செய்யவும்

Share this post


Link to post
Share on other sites

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

இயற்பகைநாயனார் புராணம்

எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட

வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்

கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்

காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த

பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்

பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

சோழமண்டலத்திலே, காவேரிநதி சமுத்திரத்தோடு கலத்தலால் காவேரிசங்கமம் எனப்பெயர்கொண்ட விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்திலே, வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிறந்தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகையாரென்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராக்ஷம் தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங்காலத்தில்; ஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்பகையார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்றை மறாது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு, ஒரு பிராமணவடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே பிரகாசிக்க, தூர்த்த வேடமுந் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். இயற்பகை நாயனார் அன்பினோடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக்கொண்டு போய் விதிப்படி அருச்சித்து, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினாற் போலும்" என்றார். அது கேட்ட ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மாறாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர்தருதற்கு இசைவீராயில், அந்தப்பொருள் இன்னது என்று சொல்லுவேன்" என்றார். அதற்கு இயற்பகைநாயனார் "எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப்பொருள் நமது கடவுளாகிய பரமசிவனுடைய அடியார்களுக்கு உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்க வேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியருளும்" என்று சொல்ல; ஐயர் " உம்முடைய மனைவியை விரும்பிவந்தேன்" என்றார், அப்பொழுது இயற்பகைநாயனார் முன்னிலும் பார்க்க மிக மகிழ்ந்து வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்" என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, "நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன்" என்றார். உடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, "பிராணநாயகரே! நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ? இல்லை" என்று சொல்லி, அவரை வணங்க; அவர் தமது மனைவியாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியா கைபற்றி, வணங்கினார். மனைவியார் போய், அவ்வையாருடைய பாதங்களிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்றார். அதுகண்ட இயற்பகைநாயனார் மனமகிழ்ந்து அவ்வையாரை வணங்கி "இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணியாது" என்று வினாவ, ஐயர் "இந்தப்பெண்ணை நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற்றுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்குவரைக்கும் அவர்களால் எனக்கு ஓரிடையூறும் உண்டாகாதிருக்கும்படி, நீர் துணையாக வரவேண்டும்" என்றார். இயற்பகைநாயனார் அதைக் கேட்டு, "இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக்குற்றேவலைச் செய்யாமல், இவர் சொல்லும் வரைக்கும் தாழ்ந்து நின்றது குற்றம்" என்று நினைத்துக் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும், ஏந்திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து தாம் பின்னே போனார்.

Share this post


Link to post
Share on other sites

அப்பொழுது இயற்பகைநாயனாருடைய சுற்றத்தவர்களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் "இயற்பகை பைத்தியத்தினாலே தன் மனைவியைக் கொடுத்தானாயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா" என்று, தங்கள் மரபுக்கு வரும் பெரும்பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம் போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இருபக்கத்திலும் நெருங்கி, ஆராவாரித்து, "ஓ துட்டனே! எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் "சுவாமி! நீர் பயப்படவேண்டாம். இயற்பகைநாயனார் அவர்களை வெல்லுவார்" என்றார். இயற்பகை நாயனார் அதைக் கேட்டு, "அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்று போடுகின்றேன், தேவரீர் அஞ்சவேண்டாம்" என்று சொல்லி, அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, "நீங்கள் என்வாளுக்கு இரையாவீர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள்" என்று கூற; அவர்கள் "ஏடா இயற்பகை! நீ என்னகாரியஞ்செய்தாய்! ஊரவர்கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்கள் நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றாயினும் வெட்கப்படவில்லை, மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது, நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணைப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்" என்றார்கள். உடனே இயற்பகைநாயனார் அதிக கோபங்கொண்டு, உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின்றிப் போகவிடுவேன்" என்று சொல்லி எதிர்க்க; அவர்கள் அந்நாயனாரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டுசெல்கின்ற ஐயருக்கு முற்பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனார் கோபங்கொண்டு, வாளினாலே, இடசாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களுடைய தோள்களையும் கால்களையும் தலைகளையும் துணித்து, விழுத்தி, பின் ஒவ்வொருவராய் வந்து எதிர்த்தவர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினார். பின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த நாயனார் ஐயரை நோக்கி, "சுவாமி! தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்" என்று சொல்லி, அவரோடு போனார். திருச்சாய்க்காடு என்னுஞ்சிவஸ்தலத்துக்கு சமீபத்திலே போன பொழுது, ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "இனி நீர்திரும்பிப் போகலாம்" என்று சொல்ல; நாயனார் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு திரும்பினார். அப்பொழுது ஐயர் "இயற்பகையே! இங்கே வா" என்று சொல்லி ஓலமிட்டார். நாயனார் அந்த ஓசையைக்கேட்டு, "அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு, செய்பவர்கள் உண்டாயில், கொன்று போடுவேன்" என்று சொல்லிக்கொண்டுவர; ஐயர் மறைந்தருளினார். வந்த நாயனார். அவ்வையரைக்காணாமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண்டார்.

21b79g.jpg

ஆராமையினாலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம்பண்ணினார். சுவாமி அவரை நோக்கி "நம்மேலும் நம்முடைய அடியார்கண் மேலும் நிஷ்களங்கமாகிய அன்பு வைத்த இயற்பகையே! நீ உன் மனைவியோடும் நம்முடனே வா" என்று திருவாய் மலர்ந்து, அந்தர்த்தானமாயினார். இயற்பகைநாயனாரும் மனைவியாரும் சிவலோகத்தை அடைத்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்தத்திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்தை அடைந்து இன்பமனுபவித்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites

naiyarpa_i.jpg

naiyarpa.gif

Eyarpakai Naayanar - இயற்பகை நாயனார் பற்றி சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு.

Click this to download

http://www.megaupload.com/?d=WFT8MNCL

திருச்சிற்றம்பலம்

http://www.shaivam.org/naiyarpa.html - ஆங்கிலத்தில் இப்புராணத்தைப் படிக்க கிளிக் செய்யவும்

Share this post


Link to post
Share on other sites

ஆறுமுகம்!

உண்ணாணை *** புத்தகத்தையும் அறிவுரையையும் படிச்சால் மனிசன் வேலைவெட்டிக்கு போகேலாது.

ஒரு கோதாரியும் செய்யேலாது.

எப்ப பாத்தாலும் தியானம் சிந்தனை அறிவுரை அதோடை சாப்பிடேக்கை கூட எந்த திசையிலை இருந்து சாப்பிடோணும் எண்டு புத்திமதி வேறை??????????????????

எல்லாம் சரி ஆறுமுகம்! எங்கடை நாட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

Share this post


Link to post
Share on other sites

naiyarpa_i.jpg

நாட்டிலை வாழ்வெட்டு நடக்குதென்று , நாவலர் படம் போட்டெல்லோ காட்டியிருக்கிறார் .

குமாரசாமியண்ணோய் ..... நீங்க பார்க்கலியா ?

Share this post


Link to post
Share on other sites

naiyarpa_i.jpg

ஒரு ஆள் 3 பேரோட வாள்சண்டை போடுவது அவரின் வீரத்தை காட்டுகிறது...

மற்றவர் அந்தப் பெண்ணுக்கு அல்வாவா குடுக்கிறார்? இருந்தாலும் அந்தப் பெண் உசாரா வேண்டம் என்று தான் கைகாடுறது போல இருக்கு...

Share this post


Link to post
Share on other sites