Jump to content

"நான் கடவுள்" - ஒரு பார்வை (தொடர்ச்சி)


Recommended Posts

நான் கடவுள் படத்தை பெரும்பாலான விமர்சகர்கள் ஆகா ஓகோ என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் திரைப்படத்தின் முடிவு பற்றி யாரும் கோபப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

"வலியால் துடிக்கும் கன்றுக் குட்டியை கொல்வதில் தப்பில்லை" என்று சொன்னதாகக் கருதப்படும் காந்தி வாழ்ந்த மண்ணில் இருப்பதால் அவர்கள் படத்தின் முடிவை இயல்பாக எடுக்கின்றார்களோ தெரியவில்லை. யார் கண்டது? பாலாவும் இதை மனதில் வைத்துக் கொண்டு முடிவை அமைத்திருக்கக் கூடும்.

உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தை பொட்டில் அறைந்தது போன்று இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் ஒரு பெரும் பணியை பாலா செய்திருக்கின்றார். நகைச்சுவை, கோபம், அன்பு, சிரிப்பு, அழுகை என்று அனைத்தையும் கொண்ட மனிதர்கள் அவர்கள் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் அழுத்தமாகச் சொல்கின்றார்.

படத்தில் ஒரு காட்சி. பிச்சைக்காரர்களின் ஒரு குழுவிற்கு பொறுப்பாக இருக்கும் முருகன் போதையில் வருவான். எல்லோருடனும் அன்பாக நடப்பான். தம்மால் அவர்களிற்க நிகழும் கொடுமையை நினைத்து அழுவான். சாராயமும் பணமும் கொடுப்பான். போதையில் தூங்கியபடி இருக்கும் முருகனுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி மற்றைய பிச்சைக்காரர்கள் நகைச்சுவையாகப் பேசிக் கொள்வார்கள். கால் ஊனமுற்ற ஒரு பிச்சைக்காரப் பெண் திருமணத்திற்கு மஞ்சள் கயிற்றோடு தயாராகவும் இருப்பாள்.

அடுத்த நாள் காலை அந்தப் பெண் வழமையாக பிச்சையெடுக்கும் இடத்தில் மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்தபடி மலர்ந்த முகத்தோடு அமர்ந்திருக்கும் காட்சி வரும். ஆயிரம் அர்த்தங்களை சொல்கின்ற காட்சி அது.

வாழ்வதற்கான அத்தனை தகுதிகளும் கொண்ட மனிதர்கள் இவர்கள் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் அழுத்தமாக சொன்ன பாலா, கடைசியில் இவர்கள் வாழ "இயலாத" மனிதர்கள் என்பது போன்று முடித்திருப்பது மிகப் பெரிய முரண்பாடாகப் போய் வி;ட்டது. அதுவும் முதலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு கொடியவனால் சித்திரவதை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட ஒரு குருட்டுப் பெண் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு இயலாதவள் என்று "வரம்" அளிக்கப்பட்டவளாக செய்யப்பட்ட முடிவு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

"இந்த சமூகத்தில் இவர்களால் மற்றவர்கள் போல் வாழ இயலாது, அப்படி வாழ்வதற்கு இந்த சமூகம் அனுமதிக்காது" என்பது இன்றைய யதார்த்தமாக இருக்கக் கூடும். ஆனால் யதார்த்தங்கள் என்பவை எப்பொழுதும் நியாயங்களாக இருப்பது இல்லை. தகுதியானவர்களை இயலுமானவர்களாகவும் ஆக்குகின்ற தீர்வைத் தேடுவதே ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு.

--------------------------------------

தெரிந்தோ தெரியாமலோ படத்தின் முடிவு ஒரு சமூக அவலத்திற்கு தீர்வு ஒன்றை சொல்வது போன்று அமைந்து விட்டதாலும், அந்தத் தீர்வு எனக்கு அருவருப்பை உண்டாக்கி விட்டதாலும், அதைப் பற்றி எழுதுகின்றேனே தவிர, ஒரு கலை வடிவம் என்று மட்டும் பார்க்கின்ற பொழுது நான் கடவுள் ஒரு நல்ல படைப்பு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இயக்கம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்தும் அற்புதமாகவே இருக்கின்றன. முதன் முறையாக சினிமாவில் தோன்றி நடித்த உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் நடிப்பைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பாலா என்னும் இயக்குனருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அற்புதமான நடிகன் நான் கடவுளில் நடித்த அனைவரின் மூலமும் வெளிப்பட்டான் என்றே சொல்ல வேண்டும்.

முருகன் பாத்திரத்தில் வருகின்ற கிருஸ்ணமூர்த்தி இதுவரை சிறு சிறு நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர். ஒரு படத்தில் வடிவேலுவிடம் பின்லேடனின் முகவரியைக் கேட்கும் பைத்தியமாக வருவார். அவரா இவர் என்று வியக்க வைக்கும் நடிப்பைத் தந்துள்ளார். தாண்டவனாக படத்தின் பிரதான வில்லன் பாத்திரம் ஏற்றிருப்பவர் பெயர் ராஜேந்திரன். இவர் சண்டைக் காட்சிகளில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து அடி வாங்குபவர். பிதாமகனில் சிறைச்சாலைக்குள் நடக்கும் சண்டையில் சித்தனால் நீண்ட தூரத்திற்கு துரத்திச் செல்லப்பட்டு கடைசியில் கம்பி இடுக்குகளுக்குள் தலையை தள்ளி தாக்கப்படுவார். இப்படி ஓரிரு காட்சிகளில் வந்த ராஜேந்திரன் நான் கடவுளில் செய்த நடிப்பு அனைவரையும் மிரட்டி விட்டது. இவைகள் சிறு உதாரணங்களே

இப்படி எல்லோரும் நடிப்பில் கலக்கியதனால், ஆர்யாவினதும் பூயாவினதும் நடிப்பு பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. பாலாவால் செதுக்கப்படுகின்ற பொழுது இது சாதாரணமானது என்ற எண்ணமே ஏற்படுகின்றது.

அதே வேளை பிதாமகனில் இருந்த திரைக்கதை நேர்த்தி நான் கடவுளில் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். இரண்டு வௌ;வேறு தளங்களை தன்னுடைய திரைக்கதை உத்தியால் சரியான முறையில் இணைப்பதில் பால வல்லவர். சித்தனும் (விக்ரம்) சக்தியும் (சூர்யா) வௌ;வேறு தளங்களை சேர்ந்தவர்கள். வௌ;வேறு திசைகளில் செல்பவர்கள். பிதாமகனில் இந்த இரண்டு பேரும் ஒரு கோட்டில் வந்து இணைவது வெகு இயல்பாக இருக்கும்.

நான் கடவுளில் காசிச் சாமியார் உலகத்தை சோந்த ருத்ரனையும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் உலகத்தை சேர்ந்த அம்சவல்லியையும் ஒரே கோட்டில் இணைப்பதற்கு பாலா திணிறியிருப்பது படத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. சில காட்சிகள் தேவையின்றி நீண்டு கொண்டே போவதும் ஒரு நெருடலாக இருக்கின்றது. கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து வருகின்ற ஒரு காட்சி வேண்டும் என்பதற்காகவே, அம்சவல்லி ருத்ரனுக்கு புத்தி சொல்வது போன்ற ஒரு காட்சியும் திணிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும் ஏற்கனவே சொன்னது போன்று பாலா ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கின்ற விதம் அபாரம். இது ஒட்டுமொத்த படத்தை உருவாக்கியதில் உள்ள குறைகளை இல்லாமல் செய்து விடுகின்றது.

--------------------------------------

படத்தின் கடவுள் உண்மையில் இளையராஜாதான். அவருடைய இசை அனைத்தையும் கடந்து உள்ளது (கடந்து உள்ளது கடவுள்). படத்தில் இரண்டு பாடல்கள்தான் உள்ளன. அவையும் ஆரம்பத்திலேயே முடிந்து விடுகின்றன. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்று கருதுபவன் நான். பாடல்களில் இருந்து விடுபடும் வரை தமிழ் சினிமா உருப்பாடாது என்றும் நினைப்பவன். ஆனால் நான் கடவுள் படத்தின் பாடல்களை இறுவட்டில் கேட்டுவிட்டு அவைகள் படத்தில் இல்லையென்றதும் ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த முறை பாலா படத்தை எடுத்து முடிந்ததன் பிற்பாடு, தேவையான பாடல்களைக் கேட்டுப் பெறுவது நல்லது. பிதாமகனிலும் ஒரு பாடல் இடம்பெறாமல் போயிருந்தது.

கடைசி இரண்டு மணித்தியாலங்களும் பாடல்கள் இல்லையென்றாலும், இளையராஜாவின் பின்னணி இசை ஒரு பிரளயம் போன்று படம் முழுவதும் நிற்கின்றது. தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு செல்லவேண்டும் என்றால், அது இளையராஜாவின் இசையைத் தவிர்த்துக் கொண்டு செல்ல முடியாது.

சுப்ரமணியபுரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களைப் பார்த்த பொழுது சற்றுக் கோபம் ஏற்பட்டது. இளையராஜா ஏதோ 80களுக்கு மட்டும் உரியவர் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போன்ற காட்சிகள் வந்தன. "அடப் பாவிகளா! இனி வரும் 2010களும் இளையராஜாவினுடையதுதான்" என்று நான் கடவுள் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறது.

அர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் பிரமிக்க வைக்கின்றது. தமிழ் சினிமாவில் இருட்டை நீலமாகத்தான் காட்டுவார்கள். இவர் கருப்பாகவே காட்டியிருக்கின்றார். காசியையும், பிச்சைக்காரர்கள் தங்குகின்ற இடத்தையும், ருத்ரன் தங்கியுள்ள குகையையும் கமெரா உள்வாங்குகின்ற விதத்தை தனியாக ஒரு முறை ரசிக்கலாம்.

--------------------------------------

ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு படம் குறித்த விமர்சனங்களை நான் படிப்பது இல்லை. விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையை வரிக்கு வரி எழுதியிருப்பார்கள். படத்தின் முடிவையும் எழுதியிருப்பார்கள். அதன் பிறகு படத்தைப் பார்க்கின்ற ஆர்வம் போய் விடும். இப்படி விமர்சனம் எழுதுபவர்கள் மீது எனக்குக் கடும் கோபம் வரும்.

ஆனால் நான் கடவுள் பற்றி எழுதுகின்ற பொழுது அதன் முடிவு பற்றி நான் எழுத வேண்டியதாகி விட்டது. நேரடியாக எழுதவில்லை என்றாலும், இதைப் படிப்பவர்களுக்கு முடிவு ஓரளவு புரிந்திருக்கும். இது பற்றிய வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் படத்தின் முடிவே இந்த விமர்னத்தின் முக்கிய புள்ளி. என்பதனால் அதைத் தவிர்க்க முடியவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளாகவே உடல் ஊனமுற்ற மக்களுக்கு எதிராக இந்த உலகம் பெரும் கொடுமைகளை செய்திருக்கின்றது. கிட்லர் போன்ற கொடுங்கோலர்கள் இந்தக் கொடுமையை நெறிப்படுத்தப்பட்ட முறையில் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கும் எத்தனையோ நாடுகளில் உடல் ஊனமுற்ற மக்கள் சொல்லணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை.

உடல் ஊனமுற்றவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுவதற்குப் பதிலாக, "இப்படித் துன்பப்படுவதை விட இவர்கள் இறந்து போகலாம்" என்றுதான் இந்தக் கையாலாகாத சமூகம் பேசிக் கொள்கிறது. உடல் ஊனமுற்ற இந்த மக்களின் அவலத்தை பதிவு செய்த பாலாவும் இந்தக் கையாலாகாத சமூகம் போன்று சிந்தித்து விட்டார் என்பதே எனது கோபமும் வருத்தமும்.

- வி.சபேசன் (11.02.09)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி படம் பாத்துட்டியளோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நக்கலா?

என்ன இது? ஒரு சாதாரண பொதுமகனுக்கு கேள்வி கேட்க உரிமையில்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி படம் பாத்துட்டியளோ? :)

(சபேசன் @ Feb 11 2009, 10:25 PM)

என்ன நக்கலா?

என்ன இது? ஒரு சாதாரண பொதுமகனுக்கு கேள்வி கேட்க உரிமையில்லையா?

இதை வாசித்து சிரித்து, முரளியைக் கேட்டமாதிரி, பக்கத்திலிருந்து வேலை செய்பவன் என்னைக்கேட்கிறான் "Are you OK?" என்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.