• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
குமாரசாமி

சீக்கியனும் நானும்.....

Recommended Posts

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

Share this post


Link to post
Share on other sites

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

குமாரசாமி சிதை என்குறவள் புனிதம் ஆனவள்... சீதை தொட்டால் ராமன் தன்னை உயிரோட விட மாட்டான் என்று இரவணனுக்கு தெரிந்து இருக்கும்.. சும்ம தான் விரம் ஆனவன் என்று காட்ட அவளை துக்கி சென்று இருப்பான்...

உண்மையில் இரவணனின் மகள் சீதை என்றுதான் சிலர் எமக்கு சொன்னார்கள்.. இதில் உண்மை விபரம் எது என்று தெரிய வில்லை...

Share this post


Link to post
Share on other sites

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

Share this post


Link to post
Share on other sites
:rolleyes::Dஇராவணன் தான் ஒரு சிவபத்தன், அதாவது அவன் முற்று முழுதாக சிவகோட்பாட்டைக் கடைப்பிடிப்பவன், அதனால் அவன் தமிழன் என்பதோடு மட்டுமில்லாது ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டோடு வாழ்ந்தவன். உண்மையில் இராவணன் கடத்தியது சீதையை காரணம் இராமன் வடநாட்டிலிருந்து கொண்டு எமது பழம்பெரும் மதமான இந்து மதத்தை உடைக்க நினைத்ததை தடுக்கத்தான்.... கிகிகி அப்படீன்னா இராமனோட அவதாரமா மகிந்த??? அப்ப இண்டைக்கு நேற்று உந்த ஆரிய திராவிட யுத்தம் ஆரம்பிக்கேல்ல... 3500, 4000 ஆண்டுக்கு முன்னால ஆரம்பிச்சிருக்கோ.... அப்ப அண்ணன் தான் இராவணனோ.... சரி சரி ஆகட்டும் ஆகட்டும்... இனியாவது இராமாயணத்தை மாற்றி உண்மையை எழுதி இராவாணாயணம் எண்டு ஒண்டை விடுவம்.... உணமை அழிக்கப்பட்டுள்ளதே.. அத்தோட உந்த ஆரியரான இராமன் வழித்தோன்றலுக்கும் சிங்கள இன வழித்தோன்றலுக்கும் நிறைய தொடர்பிருக்கு கண்டீங்களே???? :lol: :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

--------தந்தைபெரியார்-நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_28.html

Share this post


Link to post
Share on other sites

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :)

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :)

Share this post


Link to post
Share on other sites

பதில் கருத்து சொன்ன சுஜிக்கு நன்றி.

உங்கடை கருத்தையும் சீக்கியனுக்கு பதிலாய் சொல்லிப்பாக்கிறன் :)

Share this post


Link to post
Share on other sites

நூனாவிலானின் இனைப்பு அப்படியே பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது.நூனாவிலானிடமிருந்து இதை நான் எதிர் பார்க்கவில்லை இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இராவணன் முற் பிறப்பில் சாபம் காரணமாகத் தான் சீதையை தொடவில்லை.

இராவணன் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களை தொட முடியாது தொட்டால் சுக்கு நூறாகி விடுவான்.இராவணன் கடைசி வரை சீதையை தொடவில்லை.சீதை பதிவிரதை அதனால் தான் தீக் குளித்த பின் மீண்டும் உயிர்த்து வருகிறார்.

Share this post


Link to post
Share on other sites

ரதி என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. ஒரு இணையத்தில் போடப்பட்டதை தான் இணைத்தேன். உங்களால் விவாதிக்க முடியுமெனில் வரவேற்கிறேன். அதற்காக பெண்களை அவமதிக்கிறேன் என்ற அனுமானத்துக்கு வரவேண்டாம்.

மற்றது கற்பனை கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்றி.

Share this post


Link to post
Share on other sites

சீதையை தொடாரா ? இல்லயா என்பது ராவணனுக்கும் சீதைக்கும் தான் தெரியும்

Share this post


Link to post
Share on other sites

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

Share this post


Link to post
Share on other sites

இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :)

Share this post


Link to post
Share on other sites

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

கற்பனை கதைகள் பொதுவாகவே எதிர்கால நோக்கில் வருடபடுபவை. தற்போது வேற்று கிரக மனிதர்களுடன் போர் புரிவது போன்ற கதைகள்தான் வியாபாரத்தில் முன்நிலையில் நிற்கின்றன. பல காலங்கள் கடந்து.... ஒரு வேளை பூமியில் வாழும் மனிதர்கள் செவ்வாய்க்கு சென்று பின்னொருகாலத்தில் செவ்வாய் மனிதர்களுக்கும் புவிமனிதருக்கும் சண்டைநடப்பின்.....

சிலபோர் இல்லை பலபேர் சொல்லுவார்கள் இது புதிதல்ல முன்னைய காலங்களிலேயே இது நடந்திருக்கின்றது என்றும் அதற்கு ஆதாரமாக தற்போதைய கற்பனைகளை கட்விழ்த்து விடுவார்கள். ஆனால் அறிவுடன் அதை நோக்கினால் மட்டுமே உண்மையை புரிய முடியும். தவறின் சீதைக்கும் ராமனுக்கும் கோவில்கட்டி பசியுடன் இருக்கும் கன்றை கட்டிவைத்து மாட்டில் பாலைகறந்து பசியுடன் இருக்கும் குழந்தைக்கும் கொடுக்காது கல்லிலே ஊற்ற வேண்டியதுதான். கேட்டால் கடவுள் என்று கதைவிடவேண்டியதுதானே.

சீதையை இராவணன் தொட்டானோ இல்லையோ ஆனால் இராவணன் விமானத்தில் சீதையை கொண்டுசென்றான் என்பதை இராமாயணம் வலியுறுத்துகின்றது. அந்த விமானம் எந்த ராக இயந்திரத்தை கொண்டுடது என்றால் உண்மையில் இராமாயணம் எழுதியவனுக்கு அதைபற்றி கற்பனை செய்யவே அறிவு இருந்திருக்காது. ஆனாலும் தற்கால ராமர்கள் சும்மா விடுவினமோ? கடலால்தான் கொண்டுசென்றான் ஆனால் விமானம்பறப்பதுபோல் வேகமாக சென்றான் என்றுதான் இராமாயணம் சொல்கிறது என்று கதைவிடலாம். இது நேரத்தை வீணடிக்கும் வீண் விவாதம்.

Share this post


Link to post
Share on other sites

ரதி,

வான்மீகி ராமாயணம் வேறு, கம்பராமாயணம் வேறு. ராமாயணத்தை கம்பர் தமிழ்படுத்திய போது, பல சம்பவங்களை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றபடி மாற்றி விட்டார்.

குமாரசாமி,

உங்களுக்கும் இதுதான் பதில்: சீக்கியனிடம் சொல்லுங்கோ! வான்மீகியில் ராமாயணத்தில் ராவணன் சீதையை தொட்டு விட்டான். சீதையும் அதை விரும்பி விட்டாள். தமிழ் ராமாயணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

"உம்பி புல்லினால் செய்த சாலையில் இருந்தாள்" என்று அனுமன் ராமனிடம் சொல்கிறான். அதாவது இலக்குமணன் செய்த அந்த பர்ணசாலையை இராவணன் அப்படியே பெயர்த்து எடுத்து வருகின்றான். சீதையை தொடவில்லை.

வான்மீகி இராமாயணத்தின்படி

1.தசரதனின் மனைவிகள் பார்ப்பனர்களுடன் கூடி இராமன், பரதன், லக்குவன், சத்துருக்கனை பெறுகின்றனர். அசுவமேத யாகத்தில் குதிரையின் ....... பிடித்தபடி இருக்கின்றனர்.

2.இராமன் சீதையை வில்லை உடைக்கும் போதே பார்க்கின்றான். முதலிலேயே அண்ணலும் அவளும் நோக்கவில்லை. கண்ணும் கண்ணும் கவ்வவில்லை.

3. ராமன் மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொண்டான் என்பது போன்றும் சொல்லப்படுகிறது

4. ராமன் மது, மாமிசம் உண்டான்

5. வாலி இறந்த பிறகு வாலியின் மனைவி சுக்ரீவனோடு கூடி கும்மாளம் அடிக்கின்றாள்

இப்படி வான்மீகி இராமாயணத்தில் இருந்த பலவற்றை கம்பர் மாற்றி தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற முறையில் எழுதினார். இராவணனுக்கும் சீதைக்கும் நடந்த கசமுசா பற்றி வான்மீகி ராமாயணத்தில் இருந்தவைகளையும் கம்பர் மாற்றி விட்டார்.

வான்மீகி ராமாயணம் உண்மையென்றால் சீதை ராவணன் மீது ஆசைப்பட்டு ஓடி வந்திருக்க வேண்டும். பின்பு ராமன் ராவணனைக் கொன்று சீதையைக் கூட்டிக் கொண்டு போய், ஓடிப் போன குற்றத்திற்காக காட்டிற்குள் துரத்தி விடுகின்றான். அவ்வளவுதான்.

Edited by சபேசன்

Share this post


Link to post
Share on other sites

பொறுங்கோ சீதையிட்ட கேட்டுச்சொல்லுறன் ஆனா நேக்கும் சின்னதா ஒரு டவுட்டுத்தான் :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :icon_idea:

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :huh:

Share this post


Link to post
Share on other sites

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :icon_idea:

சந்தோசம் குமாரசாமி அண்ணை . :huh:

( விடிய , விடிய ராமாயணம் ....... ) :lol:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :lol:

சீக்கிய ஆக்கள் யாழ்ப்பாணத்திலை செய்தது எல்லாம் கூடாத வேலையெண்டும் சொன்னவன்.

இதைவிட பங்களாதேஷ்சிலை படுமோசமாய் தங்கடை ஆக்கள் அட்டூழியம் செய்தவங்களாம்.

அதோடை தங்கடை ஆக்கள் எல்லாம் காங்கிரசுக்கோ இல்லை ஜனதா கட்சிக்கோ சப்போட் பண்ணுறேல்லையாம் :huh:

அப்பப்ப sing is king எண்டு சவுண்டு வேறை விடுறான் :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :icon_idea:

எனக்கு , தலையை மூடி கட்டிய சிங்குகளையும் ......... ,

இத்தாலி ....ஒடுகாலிகளையும் கண்டால் பிடிக்காது .

Share this post


Link to post
Share on other sites

சபேசன் வான்மூகி இராமயணத்திற்கும் கம்ப இராமயணத்திற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை கம்பர் தமிழுக்காக சில கற்பனைகளை புகுத்தினாரே தவிர இராமயணத்தில் பெரிதாக மாற்றம் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :icon_idea:

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :D

இப்ப நான் என்னவில்லங்கமாய் கேட்டுப்போட்டனெண்டு முனி கண்டிக்குது. :)

Share this post


Link to post
Share on other sites
இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :icon_idea:
அண்ணை :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஊரடங்கைப் பேணுவது பொருத்தமான நடவடிக்கையாக இருந்தாலும் மக்களுக்கு அவசியமான அன்றாட தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அது சாத்தியமில்லை என்பதையும், இலங்கையில் அதற்கான கட்டமைப்பு இல்லை என்பதையும் அறியாத அளவுக்கு மூடர்களாக வைத்திய சங்கத்தினர் இருக்க முடியாது. எனவே பிரதேசவாரியாக ஆவது ஊரடங்கை அவ்வப்போது தளர்த்த வேண்டியது அவசியமாகிறது. யாழ் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் தமது பிரதேசத்துக்கு உட்பட்ட வங்கிகளுக்கும் மருந்தகங்களுக்கும்  நடந்து / உந்துருளியில் தனித்தனியாகச் செல்ல மக்கள் காலை 9 மணி முதல் 11 மணிவரை மக்கள் உள்ளூர் நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவை வெளியில் சொல்லப்படுவதில்லை.
    • ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ராங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார். மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர்களைப் பற்றிக் கொண்டது. விண்கலங்களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசாக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடும் போதும் ஒரு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. இது போன்ற சிக்கலான சமயங்களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடியாது. காரணம் இந்த உரையாடல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம். எனவே பேசுபவை அனைத்தும் அவதானமாகப் பேசப்பட வேண்டும். அத்துடன் இது போன்ற சிக்கலான சமயங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் அல்ட்ரின், ஹூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஹூஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது? (‘where was the S4B?)" என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்கமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது. அதற்கு "6000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறது" என்னும் பதில் ஹூஸ்டனிடமிருந்து கிடைத்தது. 'S4B' என்பது இவர்கள் பயணம் செய்த ராக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். 'அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான், தாங்கள் ஜன்னலினூடாகக் காண்கிறோமோ?' என்ற சந்தேகம் அல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காணவில்லை என்ற விடயம் கட்டுப்பாட்டு நிலையத்தின் பதிலால் மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது. காலின்ஸ், தொலைநோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால், உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் மூவரும் தூங்கச் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தில், அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். அல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தை பல பேட்டிகளில் தெளிவாக அல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும், தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார்.          சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் அல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 'ஏலியன்கள் நிச்சயம் இருக்கின்றன' என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. அல்ட்ரினைப் போல வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் எப்போதும் பேசியதில்லை. ஆனால், தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங்கும் கண்டார் என்பதை அல்ட்ரின் உறுதிப்படுத்தினார். 'ஆம்ஸ்ட்ராங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண்டதாகவும், அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்' தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த 'மௌரிஸ் ஷட்டலின்' (Maurice Chatelain) என்பவர் 1979ம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.  இத்துடன்  விடயம் முடிந்து விடவில்லை. 'அப்போலோ 14' விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான 'எட்கார் மிட்செல்' (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் 'சந்திர நடை' (Moon Walk) நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துக்கூறியிருக்கின்றார் ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சக்கட்டமாக 'அப்போலோ 17' சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன், ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள். முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன், "அங்கே பார்! அந்த ஒளி என்ன?" என்று அடுத்தவரிடம் அலறுவது படக்காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே 'அப்போலோ 17' இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம்தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது. ஏன் மனிதன் மீண்டும் நிலவுக்கு செல்லவில்லை மிரளவைக்கும் உண்மைகள்
    • அட நான் நினைச்சன் இப்படி ஒருவரும் சமைக்கிறதில்லை என்று.அது தான் அடித்து புரட்டி படங்களையும் போட்டு நேரத்தை வீணாக்கிப் போட்டன் போல. முந்தி ஒருகாலம் சமையல் முடிந்த பின் தாழித்து எல்லா கறிக்கும் போடுறது.97 இல் நெஞ்சுக்குள் வலை வைத்த பின் எண்ணெய் சாப்பாடுகளை கண்ணிலும் காட்ட மாட்டார்கள். ஓம் ஓம் ஒரேயடியாய் தூங்க வைத்தாலும் வைக்கும்.
    • யாழ்.மாவட்டத்தில் ஒருவரின் செயலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை (யாழ் தீபகற்பம்) யாழ் மாவட்டத்தில் தனி ஒருவரின் செயலால் முழு தீபகற்பமுமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமுமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது. கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேசமும் அட்டலுகம பிரதேசத்தையும் தனிமைப்படுத்தியிருக்கின்றோம். தொடர்புபட்டவர்களில் 17 பேர் கண்காணிப்பு நிலையத்திலும் 240 பேரை வீடுகளிலும் தனிமைப்படுத்தி உள்ளோம். இவ்வாறு முழு நாட்டையும் தனிமைப்படுத்தினோம். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வகையில்தான் நாம் குறித்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்துகின்றோம். அதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை. அதேபோல் கடந்த தினத்தில் இத்தொற்றுக்குள்ளாகி இறந்தவர் நடமாடிய நாத்தாண்டிப் பகுதியில் இரு கிராமங்களிலுள்ள 08 வீடுகளிலுள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலை சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/140271?ref=home-imp-parsely