குமாரசாமி

சீக்கியனும் நானும்.....

Recommended Posts

இசை பாடி ஈழத்தை ஆண்டவனாம் இராவணனை வசை பாடிச்சென்று விட்டான் வம்பனவன் கம்பனடி!

இராமயணத்தை தமிழர்கள் நம்ப மாட்டார்கள் ஆனால் கம்ப ராமாயணத்தை கம்பன் சொன்ன அழகில் எல்லோரும் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பதே உண்மை. உண்மை பொய்யை விட்டுப் பார்த்தால் கம்பரசம் இனிக்கும் தமிழ்ரசம

வாரணம் பொருத மார்பும்

வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கேற்ப

நயம்பட உரைத்த நாவும்

தாரணி மௌலி பத்தும்

சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போட்டு

வெறுங்கையோடு

இலங்கை புக்கான்!

எல்லாம் இழந்த நிலையிலும் இராவணின் கம்பீரத்தை கம்பன் சொன்ன விதம் இது.

Share this post


Link to post
Share on other sites
On 2/18/2009 at 11:13 PM, குமாரசாமி said:

இப்ப நான் என்னவில்லங்கமாய் கேட்டுப்போட்டனெண்டு முனி கண்டிக்குது. :)

உங்க சந்தேகம் தீர கைலாசத்துக்கு வரவும்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (நா.தனுஜா)   தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/79577
  • இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.    https://www.virakesari.lk/article/79583
  • இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி? இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார். இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.அதேபோல இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் 919இல் இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 542ஆக குறைந்துள்ளது. எனினும் எச்சரிக்கையாக இருக்கப்போவதாகவும், கட்டுப்பாடுகளை படிப்படியாகவே குறைக்க உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதால், தீவிர சிகிச்சை பிரிவின் மீது இருக்கும் அழுத்தமும் குறைகிறது. இதுவரை அங்கு குறைந்தது 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இயல்பு-நிலைக்கு-திரும்பு/
  • கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன? Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொல்கிறார்கள்; சமூக ஊடக தளங்களில் பயமுறுத்தும் புள்ளி விவரங்கள், நடைமுறை ஆலோசனை அல்லது நகைப்புக்குரிய பல விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் ஏற்கெனவே செய்தி அளித்துள்ளபடி, தொடர்ச்சியான இந்த செய்தித் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், அது மன ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். ஆனால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, அதிக வஞ்சகத்தன்மை கொண்டது, நமக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.  நோய் மற்றும் அச்சம் குறித்த தகவல்கள் காரணமாக நாம் மரபுகளை அதிகம் நம்பத் தொடங்கி இருக்கிறோம், இயற்கைக்கு மாறுபாடான நிலை குறைந்து வருகிறது. நமது நன்னெறிப்படியான தீர்ப்புகள் கடினமாக மாறியுள்ளன. நமது சமூக மனப்போக்குகள் அதிகம் பழமைவாதமாக இருக்கின்றன. குடியேற்றம் அல்லது பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விஷயங்களைப் பேசும்போது இது மாதிரி நடக்கிறது. தினமும் இந்த நோயைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது, நமது அரசியல் சார்பு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். Getty Images அந்நிய நாட்டவர் மீதான வெறுப்பு அல்லது இனவெறி நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருப்பது, இதன் முதலாவது அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் உண்மையாக இருக்குமானால், அவை இன்னும் ஆழமான சமூக மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் பெரும்பாலான மனித உளவியலைப் போல, இந்த நோய்க்கான எதிர்வினைகள் வரலாற்றுக்கு முந்தைய சூழ்நிலையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில், தொற்றும் தன்மையுள்ள நோய்கள் நாம் உயிர்வாழ்வதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தன.  புதிதாக ஊடுருவல் செய்து உள்ளே நுழையும் நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து, தாக்கி அழிக்கும் அற்புதமான வல்லமை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உண்டு. துரதிருஷ்டவசமாக, அந்த செயல்பாடு நடைபெறும்போது நாம் தூக்கமாக, சோம்பலாக உணர்வோம் - அதாவது நோயுற்ற நமது முன்னோர்களால் வேட்டையாடுதல், ஒன்று கூடுதல் அல்லது குழந்தைகள் வளர்ப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட முடியாமல் இருந்தார்கள். பல மில்லியன் ஆண்டுகளாக நமது பரிணாம வளர்ச்சியை தொற்றும் தன்மையுள்ள நோய்கள் வடிவமைத்து வருகின்றன. உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  தொற்றும் தன்மையுள்ள நோய் குறித்த அச்சம் நம்மை மரபு வழி செயல்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, இயற்கைக்கு முரண்பட்டவற்றை அதிகம் ஏற்றுக் கொள்ளாதவர்களாக ஆக்கியுள்ளது. நமது நெறிசார்ந்த கணிப்புகள் கடுமையானதாகவும், பாலியல் செயல்பாடுகள் அதிகம் பழமைவாதத் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளன. நோயுற்றிருப்பது என்பதும் கூட உடல் ரீதியில் அதிக செலவை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, காய்ச்சலின்போது நோய் எதிர்ப்பாற்றல் செம்மையாக செயல்பட உடல் வெப்பம் அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் இது உடலின் சக்தி பயன்பாட்டில் 13 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது.  Getty Images போதிய உணவு கிடைக்காத நிலையில், அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ``நோயுற்ற நிலையில், இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு மண்டலம் உண்மையான செயல்பாட்டை எட்டுவது என்பது உண்மையில் செலவுபிடிக்கக் கூடியது'' என்று வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அது ஒரு வகையான மருத்துவக் காப்பீட்டைப் போன்றது. அந்த வசதி இருப்பது நல்லது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது துன்புறுத்துவது போல தோன்றும்.'' முதலில் நோய்த் தொற்று ஆபத்து வாய்ப்பை குறைக்கக் கூடிய எதுவாக இருந்தாலும், உயிர்வாழ்வதற்கான தெளிவான ஒரு சாதகமான சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஆழ்மன உளவியல் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளோம். அதை ஸ்ச்சல்லெர் ``நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமை'' என்று குறிப்பிடுகிறார். பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளுடன் தொடர்பில் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது முதல்நிலை தற்காப்பு விஷயமாகக் கருதப்படுகிறது. நடத்தைப் போக்கு நோய் எதிர்ப்பு முறைமையில் மிகவும் வெளிப்படையான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வெறுப்பான எதிர்வினை செயல்பாடு. கெட்ட அல்லது சுத்தமற்றதாக நாம் கருதும் உணவை நாம் புறக்கணிக்கும்போது, ஆழ்மன செயல்பாட்டின் மூலம், நோய் ஏற்படுத்தும் கிருமிகளை நாம் புறந்தள்ள முயற்சிக்கிறோம் என்று அர்த்தம்.  கெட்டுப் போனதில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வே நமக்கு வாந்தியை ஏற்படுத்தி, கிருமி பாதிப்பு தொற்றி, வேரூன்றுவதற்கு முன்னதாக வெளியில் தள்ளிவிடுகிறது என வெறுப்பை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. நமக்கு பின்னாளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து வாய்ப்பு உள்ள சூழ்நிலைகளை நினைவில் கொள்வது போன்றவை நடைபெறும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெரிய கூட்டங்களாக சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்ற சமூக உயிரினங்களாக மனிதர்கள் இருப்பதால், நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமையும் மக்களுடனான பங்கேற்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நோய்த் தொற்று பரவுதலை குறைந்தபட்சமாக பார்த்துக் கொள்ளும் வகையிலும், ஆழ்மன அறிவுறுத்தலின்படியே சமூக இடைவெளி போன்ற விஷயத்தை கடைபிடிக்கும் வகையிலும் அது அமைந்துள்ளது. இந்த எதிர்வினைகள் கடுமையானதாக இருக்கலாம். நமது முன்னோர்களுக்கு ஒவ்வொரு நோய்க்குமான குறிப்பிட்ட காரணங்கள் அல்லது அந்த நோய் பரவும் வழிமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ``நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது `நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது' என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது'' என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெனெ ஆரோயி கூறியுள்ளார்.  அதாவது எதிர்வினைகள் தவறுதலாக, பார்க்கப்பட்டு, பொருத்தமற்ற தகவல்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அது இப்போதைய அச்சுறுத்தலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத விஷயங்கள் போன்றவற்றில் நமது நெறிசார்ந்த முடிவு எடுத்தல் மற்றும் அரசியல் கருத்துகளை தீர்மானிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. Getty Images அனுசரித்துக் கொள் அல்லது விலகிச் செல் கலாசார நடைமுறைகளுக்கு நமது பொதுவான நடத்தை போக்குகள் எப்படி இருக்கின்றன - அதை மதிக்காத மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் பார்ப்போம். ஒரு நோய் குறித்த அச்சம் வரும்போது நமது மரபுகளுக்கு அனுசரித்து நடந்து கொள்ளும், மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை பல்வேறு சோதனைகள் காட்டியுள்ளன. ஸ்ச்சல்லெர் முதலில் பங்கேற்பாளர்களை நோய்த் தொற்று அச்சுறுத்தல் நிலைக்கு பழக்கப்படுத்தினார்.  இதற்கு முன்பு எப்போது நோயுற்றிருந்தீர்கள் என்று விவரிக்கச் சொல்லி, பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அவர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்தார். அதில் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக தரமதிப்பீட்டு முறையில் ஒரு மாற்றத்தை முன் மொழிந்தார். அந்த முன்மொழிவை அவர்கள் ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. ``ஏற்கிறேன்'' மற்றும் ``மறுக்கிறேன்'' என்று குறிக்கப்பட்ட குடுவைகளில் ஒன்றில் அவர்கள் ஒரு நாணயத்தைப் போட வேண்டும். நோயின் அச்சுறுத்தலுக்கு அதிகமாக ஆளாகியுள்ள நிலையில் எல்லோருமே மந்தைகள் போல செயல்பட்டனர்.  Getty Images அதிக நாணயங்கள் இருந்த குடுவையிலேயே மற்றவர்களும் போட்டனர். தங்களுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதைக் காட்டிலும், பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவின் பக்கம் சாய்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்டபோது, நோயுறுதல் பற்றிய கவலையில் இருப்பவர்களும் ``பழங்கால'' அல்லது ``பாரம்பரிய'' நபர்களைத்தான் குறிப்பிட்டார்கள். ``படைப்பாற்றல் மிகுந்த'' அல்லது ``கலைஞானம் மிகுந்த' என்பனவற்றில் குறைவான பற்றுதலே கொண்டிருந்தனர். ஒரு தொற்றும் தன்மையான நோய் ஆபத்து இருக்கும்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை சிந்தனைக்கான தாராள சிந்தனைக்கான அறிகுறிகளும்கூட குறைத்தே மதிப்பிடப்படுகின்றன.  வெளிப்படையான கேள்விகள் பட்டியல்களில், ``சமூக நடைமுறைகளை மீறுவது துன்பகரமான, எண்ணிப் பார்த்திராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்பது போன்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறேன் என்ற பதிலை அளித்தார்கள். இப்போது நாம் எதிர்கொள்ளும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் கவரேஜ்களில் இருந்து மாறுபட்டதாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் Outbreak என்ற திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு ஆய்வுக்குரியவர்களின் மனநிலையை ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு உகந்தவாறு பக்குவப்படுத்தினர்.  இன்றைய காலக்கட்டத்தின் செய்திகளைப் போன்றவையாக அந்த காட்சி அமைப்புகள் இருந்தன; நோய்த் தொற்று குறித்து உணர்வைத் தூண்டும் வகையிலான படங்கள், இயற்கைக்கு முரணாக செயல்படுதல் அல்லது எதிர்த்து செயல்படுதல் என்பதைக் காட்டிலும், அனுசரணையாக செல்லுதல் மற்றும் பணிந்து செல்வது ஆகியவற்றுக்கு அவர்கள் அதிக மதிப்பு அளிப்பது அதில் தெரிய வந்தது. அறம்சார் விழிப்புநிலை நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமை நமது சிந்தனைகளில் இதுபோன்ற மாற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? நம்மால் உணவு தயாரிக்க முடியக் கூடிய வாய்ப்பு, சமூக தொடர்புகளை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை, மனிதக் கழிவுகளை அகற்றும் முறைகள் போன்ற உள்ளார்ந்த சமூக விதிமுறைகள், நோய்த் தொற்று ஆபத்தைக் குறைக்க உதவும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார்.  ``மனிதகுல வரலாறு முழுக்க, நோய்களை விலக்கி வைக்கும் வகையிலான இதுபோன்ற நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் நிறையவே இருந்துள்ளன'' என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அந்தஅந்த நடைமுறைகளை அனுசரித்து நடந்து கொண்டவர்கள் பொது சுகாதாரத்திற்கு சேவையாளர்களாகவும், விதிகளை மீறியவர்கள் தங்களை ஆபத்து வாய்ப்புக்கு உள்ளாக்கிக் கொள்வதுடன், மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.'' அதனால், தொற்றும் தன்மையுள்ள நோய் பரவும் சூழ்நிலையில் மரபுசார் விஷயங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பது நல்லது என்றாகிறது. தீவிர நோய்த் தாக்குதல் பரவும்போது நாம் ஏன் தார்மிக ரீதியில் விழிப்படைகிறோம் என்பதற்கான காரணத்தை விளக்குவதாகவும் அது இருக்கிறது. தொற்றும் தன்மையுள்ள ஒரு நோயைப் பார்த்து நாம் அஞ்சும்போது, விசுவாசத்தை மீறுவது தொடர்பாக (ஒரு நிறுவனத்தைப் பற்றி ஓர் அலுவலர் தவறாகப் பேசுவது போன்ற) முடிவு எடுப்பதில் நாம் கடுமையாக இருக்கிறோம் அல்லது அதிகாரவர்க்கத்தில் உள்ள (ஒரு நீதிபதி போன்றவர்) ஒருவர் மதிக்கத் தவறியதை நாம் பார்க்கும்போது அப்படி கடுமையாக இருக்கிறோம்.    நோயின் பரவல் தன்மைக்கும் அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மரபுகளை மீறுவதால், நோய்த் தடுப்புக்கான விதிகளையும் அவர் மீறக் கூடும் என்ற அறிகுறியை அவர் உருவாக்கிவிடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. நோயுறுதல் என்பது குறித்து லேசாக நினைவூட்டினாலும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்படுகிறது. கிருமி நாசினிக்கு அருகில் நில்லுங்கள் என்று கேட்டுக் கொண்டாலும்கூட, பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு அதிக மதிப்பைக் காட்டும் வகையிலேயே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதே ஆய்வில், கைகளைக் கழுவுங்கள் என்று நினைவூட்டல் செய்தபோது, மரபுவழியல்லாத பாலியல் நடத்தை போக்குகள் குறித்து அதிகமாக கருத்து தெரிவித்தது தெரிய வந்தது. குழந்தைப் பருவத்தில் பிடித்தமானதாக இருந்த கரடி பொம்மையை வைத்துக் கொண்டு சுயஇன்பம் காணும் பெண்களை மன்னிக்க முடியாது என்பது போல அல்லது தங்களுடைய பாட்டிமார்களில் ஒருவரின் படுக்கையில் ஒரு தம்பதியினர் உறவு கொள்வதை மன்னிக்க முடியாத விஷயம் போல கருதுகிறார்கள். வெளியாட்கள் குறித்த அச்சம் நமது சமூக குழுவுக்குள்ளேயே நம்மை கடினமாக முடிவு எடுப்பவராக்கியதுடன், இந்த நோயின் அச்சுறுத்தல் நம்பிக்கையில்லாத புதியவர்களையும் நமக்கு அறிமுகம் செய்யும். நீங்கள் காதலருடன் வெளியில் செல்வதாக இருந்தால் அது ஒரு கெட்ட செய்தி. நமக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், புதியவர்கள் பற்றி எங்களுக்கு மோசமான எண்ணங்கள்தான் ஏற்படுகின்றன என்று,ஆன்லைன் குறிப்புகள் மற்றும் நேரடி சந்திப்புகள் பற்றி ஆய்வு செய்த கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகத்தின் நட்சுமி சவடா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஈர்ப்பு குறைவாக இருப்பவர்கள் கடினமானவர்கள் என்று தவறாக கணிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேகமாக வீட்டில் இருப்பவரின் தோற்றத்தில் இருக்கும் அந்த உருவம், நோயுற்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கலாம். Getty Images நமது அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் அதிகரித்தால், வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த மக்களுக்கு நாம் அளிக்கும் பதில்களையும் மாற்றி அமைக்கும். ஒத்திசைவு இல்லாத நிலையின் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார்.  கடந்த காலத்தில், நமது குழுவுக்கு வெளியில் இருக்கும் மக்கள், அவர்களை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குத் தேவையான குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களாக இருக்கலாம். எனவே அவை காரணம் இல்லாமலோ அல்லது வேண்டுமென்றோ நோய் பரப்புவதாக இருக்கலாம் என்று நாம் அச்சப்பட்டோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், அது பாரபட்சம் காட்டுவதாக, இன ஒதுக்கல் செய்வதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கிவிடும். உதாரணமாக, நோய் குறித்த அச்சம் குடிபெயர்வு குறித்து மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஆரோயி கண்டறிந்துள்ளார். நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறையின் `` நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது '' என்ற தத்துவத்தின் அங்கமாக இது உள்ளது என்று அந்தப் பெண்மணி குறிப்பிடுகிறார். ``அது தவறான கருத்து விளக்கம்.'' பரிணாம வளர்ச்சி அடைந்த மனம் நவீன காலத்தைய பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக இனத்தவர் வாழும் சூழ்நிலையை சந்திக்கும் போது அது நிகழும். நமது பரிணாம வரலாற்றில் இது அடிக்கடி நிகழும் நிகழ்வு அல்ல'' என்று அவர் கூறுகிறார். கோவிட்-19-ஐ வெற்றி கொள்வது நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது; எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவில் தாக்கம் இருக்காது. ``நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக தாங்கள் கருதும் விஷயங்களில் சிலர் பலமான கடினமான முடிவுகளை எடுக்கலாம்'' என்று ஆரோயி கூறுகிறார். ஏற்கெனவே சமூக நடைமுறைகளை அதிகம் மதித்து நடப்பவர்கள் மற்றும் சாதாரணமானவர்களைவிட வெளியாட்கள் வருகையை அதிகம் நம்பாதவர்கள், நோய் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பவர்கள் வருகையை நம்பாதவர்கள், தங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் கடினமாக்கிக் கொள்வார்கள். கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு நம்மில் மன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான தகவல் எதுவும் இதுவரையில் நம்மிடம் இல்லை. ஆனால் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் எழுத்துபூர்வமான கருத்துகளின்படி பார்த்தால், அப்படி நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. சமூக போக்குகளில் பெருமளவு மாற்றம் ஏற்படுவதைக் காட்டிலும், மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் கணிசமான மாற்றம் இருக்கலாம் என்று டோரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யோயெல் இன்பார் கூறுகிறார்.   2014 இபோலா நோய்த் தொற்று காலத்தில் சமூக மாற்றத்துக்கான சில ஆதாரங்களை தாம் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார். அது சர்வதேச செய்தியை உருவாக்குவதாக இருந்தது: 200,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், ஆண் ஒருபாலுறவினர் பற்றிய வெளிப்படையான கருத்துகள் கொஞ்சம் குறைந்திருந்தது. ``நோய் அச்சுறுத்தல்கள் பற்றி மக்கள் நிறைய படிக்கும் சூழ்நிலையில், அது இயல்பான ஒரு பரிசோதனை. அது மனப்போக்குகளை சிறிது மாற்றி இருப்பது போல தோன்றுகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இவற்றில் ஏதாவது ஒரு விஷயம் வெவ்வேறு வேட்பாளர்கள் அல்லது சில கொள்கைகள் பற்றி அவர்களின் கருத்துகளில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இயல்பான கேள்வியாக இருக்கிறது. அது முக்கியமானதாக இருக்குமா என்பது சந்தேகமே என்றாலும், அந்த அம்சங்களுக்கு சிறிதளவே முக்கியத்துவம் இருக்கும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அதிக ஆழமான தாக்கங்கள் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சூழ்நிலையை சமாளிக்க அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறார்கள் அல்லது ஒத்துழைக்கவில்லை என்பதில் நேரடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று அவர் கூறுகிறார். தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் இந்த உளவியல் மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனாலும், கொரோனா வைரஸ் குறித்து நமது தனிப்பட்ட எதிர்வினைகளில் எந்த அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்ப்பது நல்லது. அனுசரனையான கருத்தை தெரிவிக்கிறோமா, மற்றவரின் நடத்தை குறித்து நாம் கருத்து உருவாக்குகிறோமா அல்லது பல்வேறு நோய்த் தடுப்புக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா என கவனிக்கலாம்.  நியாயமான வாதங்களின் அடிப்படையில் தான் நமது எண்ணங்கள் இருக்கின்றனவா என்று நமக்கு நாமே கேள்வி கேட்கலாம். அல்லது கிருமி கோட்பாடு உருவாதலுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் உருவாகி புதைந்திருந்த எண்ணங்களால் உருவாக்கப்பட்டதா என கேட்டுக் கொள்ளலாம். டேவிட் ராப்சன் The Intelligence Trap-ன் ஆசிரியர். நமது மிகவும் பொதுவான பகுத்தறிவுப் பிழைகளின் உளவியல் காரணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமது முடிவெடுத்தல் திறனை மேம்படுத்துதல் குறித்து அந்தப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவருடைய ட்விட்டர் தொடர்புக்கு @d_a_robson   https://www.bbc.com/tamil/science-52220081
  • திட்டம்போட்டுத் திருடுறகூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதைச் சட்டம்போட்டுத் தடுக்கிறகூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது.   பொதுவாக இந்தியாவில் சட்டங்கள், சலுகைகள் அனைத்தும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளிடமும், கையூட்டுகளிலும் அடங்கிவிடுகிறது. இது மரபுவழியாகிவிட்டது.