Jump to content

சாத்தான் படை (IPKF)


Recommended Posts

* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]*

* flash:

http://ebook.yarl.com/ipkf/

* pdf zipped:

Part 1

http://www.mediafire.com/?emj0zigyjyu

Part 2

http://www.mediafire.com/?i5tzkzyjfny

Part 3

http://www.mediafire.com/?tz1mvzdgggz

* pdf:

Part 1

http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf

Part 2

http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf

Part 3

http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf

அன்பான உறவுகளே,

தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம்.

ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது.

இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

--நன்றி: யாழ் இணையம்--

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சி மிகவும் மதிப்பிற்குரியது. இவ் இலத்திரனியல் பதிவு வரலாற்று நிகழ்வின் உன்னத படைப்பு. சகல்

இராஜதந்திரிகளுக்கு அனுப்புவது நல்லது.

மீண்டும் நன்றியுடன்

என்.வை. பென்மன்

Link to comment
Share on other sites

மிகச்சிறந்த காலத்தின் தேவையைப்பூர்த்தி செய்துள்ளது... இதன் மூலம் இந்தியாவின் மறுமுகத்தை உலகத்திற்கு காட்டும் ஒரு சாட்சி.

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நானும் அந்த நிகழ்ச்சியை இடைஇடை பார்ப்பதுண்டு. கொரோனாவின் பின் அவ்வளவாக சோபிப்பதில்லை.
  • ஒட்டு போட்டு தட்டி நிரவப்பட்டது வட்டுக்கோட்டை- காரைநகர் றோட்டு.   'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா..!' யாழ்ப்பாணம்- காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெற் வீதியாக புனரமைக்க மைத்திரி அரசில் நிதி ஒதுக்கப்பட்டு கார்ப்பெற் வீதியாக புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.   ஆனால் நாவாந்துறை முதல் வட்டுக்கோட்டை வரை கார்ப்பெற் வீதி போடப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை முதல் பொன்னாலை சந்தி வரையான பகுதி மிக மோசமாக சந்திரமண்டலத்தில் உள்ளது போன்ற நாய்கூட நடந்து போக முடியாத நிலையில் இந்த வீதி கடந்த இரண்டு வருடமாக இருந்து வந்துள்ளது.       அரசியல்வாதிகள் கைகளில் தான் இந்த வீதி புனரமைப்பு தங்கி உள்ளது என அறிவுறுத்தியும் வரப்பட்டது.   காரைநகரில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள இருவர் தனித்தனியாக கொழும்பு அரசியலுக்கு எடுத்துரைத்ததன் பயனாக 50 இலட்சம் ரூபா நிதியுதவியில் இன்று வட்டுக்கோட்டை - பொன்னாலை பகுதி வீதி ஒட்டுப்போட்டு தைக்கப்பட்டுள்ளது.   இந்த ஒட்டு ஒரு மாரியை கூட தாங்க மாட்டாது என்பது ஒருபுறம் இருக்க கார்ப்பெற் றோட்டுக்கு திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ஒட்டுப்போட்டு தைக்க வேண்டிய நிலமை ஏன் ஏற்பட்டது என்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கும் திட்டத்திற்கும் என்ன நடந்தது..? என்பதையும் இனி எப்போது இந்த பகுதிக்கான கார்ப்பெற் வீதி தொடரும் என்பதையும் கேட்டு சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.   இரண்டு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே இந்த 50 இலட்சத்தில் ஒட்டுப்போடும் திட்டத்திற்கு திதி ஒதுக்கப்பட்டது. இன்னும் மக்களும் இணைந்து கொண்டு கார்ப்பெற் வீதிக்கு என்ன நடந்தது என்பதை கேட்டால் நிச்சயமாக அரசு கண்டு கொள்ளும்.   இரண்டு வெவ்வேறு கட்சிகளைக்கொண்டவர்களும் தம்மால் தான் இந்த 50 இலட்சம் ஒட்டுப்போட வழங்கப்பட்டதாக கூறினாலும் எந்த கட்சி எப்ப இந்தப்பகுதி திட்டமிடப்பட்டது போன்று கார்ப்பெற் வீதியாக போடப்படும் என்று கேட்டு சொல்கிறார்களோ அன்று அவர்களிற்கு தான் அதிக செல்வாக்கு என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். FB
  • பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்க யோசனை – பெருந்தோட்ட அமைச்சர் பெரும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். https://athavannews.com/2022/1313368
  • ஆனால்.... @goshan_che, @கிருபன்ஜீ , @nedukkalapoovan, @Nathamuni, @புலவர், @MEERA,    @Ahasthiyan @பெருமாள்@ரதி, @வாதவூரான், @கறுப்பி, @நந்தன், போன்ற...   24 கரட் தங்கங்களும் உண்டு. 😁 🥰  
  • சைவ பெருந்தகைகளுக்கு ஓர் நற்செய்தி  💥கந்தன்  சைவ ஆட்டுக்கால் சூப்💥 அருந்துவீர் இன்புறுவீர்💃🏼🕺🏼  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.