Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

பல இணைப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் மிகச் சில பிந்திய இணைப்புகள்:

1.இங்கும் பதியுங்கள்

இது கனடிய / ரொரண்டோ பத்திரிகை. ஏன் தமிழ் மக்கள் இங்கு கவனயீர்ப்பு செய்ய வேண்டும் எனவும், கனடா ஏன் இதில் தலையிட வேண்டும் எனவும் பலர் பதில் கேள்வி கேட்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் கனடா அவர்களை தடை செய்தது என்றும் அதனால் தான் இலங்கை பயங்கரவாத அரசு பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்ததினையும் கைவிட்டு போரிற்கு சென்றது என்றும் நாம் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும். கனடாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்ததின் கறை உள்ளது என்பதை தெளிவு படுத்துவோம்

1. Where are the images of horror from Sri Lanka?

அழுத்துக

விபரமாக......

-----------------------------------------------------------------------------------------------------------------

எமக்கான ஆதரவு செய்திகளை, பேட்டிகளை, வீடியோக்களை சர்வதேச ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் இணையங்களில் பிரசுரிக்கும் போதும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகளை செய்திகளாக போடும் போதும், அதனால் வரக்கூடிய சர்வதேச ஆதரவினை முற்றாக திசை திருப்ப சிங்களவர்கள் ஒன்றிணைந்து அவற்றினை எதிர்பதும், தம் இனவாத கருத்துகளை வைத்து எம்மை பயங்கரவாதிகளாக சித்திகரிக்க வைப்பதும் முழு மூச்சுடன் நடக்கின்றது. எம்மை அழிப்பவர்கள் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்திக் கொண்டு தம் இனவழிப்பை நியாயப் படுத்துகின்றனர். எனவே அவர்களின் இந்த நடவடிக்கையினை காத்திரமான விதத்தில் முறியடிக்கவும் அதன் ஊடாக எம் மண்ணில் இடம்பெறும் அழிவுகளை உலகத்தின் பார்வைக்கு சரியாக வைக்கவும், அதன் மூலம் எம் போராட்டத்திற்கான ஆதரவு தளத்தினை விரிவாக்கவும் எடுக்கப் படும் முயற்சிகளில் நாமும் இறங்குவோம்

உங்களில் எவருக்கேனும் இது பற்றிய உணர்வும் அதனை சாதாரண ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் நாடு சார்ந்த மொழியிலோ (உ+ம்: ஜேர்மன், பிரெஞ்சு, டச்சு மொழிகள்) அவற்றை தெரிவிக்கும் திறனும் இருந்தால் தயவு செய்து முன்வாருங்கள். ஆரம்பத்தில் ஒரு குழுவாக இயங்கி இவற்றினை எதிர்கொள்வோம்.

பின்வரும் விடயங்களை நாம் செய்யலாம்

1. எம்மைப் பற்றி வரும் இணைய ஊடகங்களில் வரும் பதிவுகளுக்கு ஏற்ற மாதிரி உடனுக்குடன் பதில் எழுதுவது: உதாரணமாக ஏதேனும் ஊடகம் ஒன்று இனவழிப்பு பற்றி செய்தி போட்டால், உடனே சிங்களவர்கள் ஒன்றிணைந்து பின்னூட்டங்களில் அதற்கு எதிராக எழுதுவர். நாம் அவ்வாறு செய்தி போட்ட தளத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, இனவழிப்பினை நிரூபிக்கும் சான்றுகளை / செய்திகளை முன் வைத்தல்

2. எம் தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும்போது அவற்றை எமக்கு அறியத் தரல்

3. பின்னூட்டல்கள் வைக்க முடியாத செய்தி தளங்களில், அவர்களின் பொதுத் தொடர்பு முகவரிகள் மூலம் தொடர்பு கொண்டு எம் கருத்தை / எதிர்ப்பை /ஆதரவை தெரிவித்தல் (உ+ம்: bbc, cnn போன்றவற்றில் பின்னூட்டல்கள் இட முடியாது, ஆனால் அவர்களின் செய்திப் பிரிவை தொடர்பு கொள்ள முடியும்)

4. youtube போன்றவற்றில் எம் இனவழிப்பு ஒளிப்படங்களை (videos) முன் வைத்தல் மற்றும் அவற்றிற்கான பின்னூட்டல்களை moderate பண்ணி போடும் விதமாக seeting செய்தல்

இந்த பயனுள்ள முயற்சியில் இணைய விரும்பும் அனைவரும் உங்களின் சம்மததினை இந்த திரியிலோ அல்லது தனிமடலிலோ அறியத் தரவும்

எம்மில் அனேகம் பேரிற்கு களம் சென்று ஆயுதம் தூக்கி போராட முடியாது, ஆனால் நிச்ச்யம் இந்த வகையில் எம் பங்களிப்பினை செய்ய முடியும்... எனவே தயவு செய்து முன்வாருங்கள். ஆங்கில அறிவில் புலமை இதற்கு தேவையில்லை.

இதுவரை இந்த முயற்சியில் இணைய விரும்பி சம்மதம் தெரிவித்தவர்கள்

1. டங்குவார்

2. நுணாவிலான்

3. யாழ்நிலவன்

4. ATOZ

5. சேகுவேரா

6. நிலாமதி

7. ஈசன்

8. தமிழ் தங்கை

9. ஜஸ்டின் (justin)

10. சுஜீந்தன்

11. முல்லை மைந்தன்

12. குக்கூ

Link to post
Share on other sites
 • Replies 338
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இடும் சில தலைப்புக்களைப் பாருங்கள்

"கருத்தை கருத்தால் வெல்வோம்"

"உண்மைத்தாற்பரியம் எடுத்துரைப்போம்"

"சூரணிகை இடுவோம்"

"ஏடல் போரை ஏட்டினால் வெல்வோம்"

"உண்மையின் கொளுச்சொல்லுரைப்போம்"

தவறிருப்பின் சுட்டிக்காட்டவும், தமிழ் எனக்கு அவ்வளவு தெரியாது ஏதோ ஓரளவு தெரிந்த சொற்களை வைத்து தலையங்கமிட்டுள்ளேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று எம்மவருக்கு உடனடியாக தேவையானது ஊடகப்போர்தான்.

நல்ல முயற்சி.

Link to post
Share on other sites

கீழே இணைப்புகளில் உள்ளவற்றிற்கு எமது பதில்களையும் எழுதுவோம்,

1.

2. லசந்தவின் மனைவியின் பேட்டி (சோனாலி விக்கிரமதுங்க)..

3. ஏற்கனவே பலரது கருத்துக்களுடன் இன்றும் active ஆக இருப்பது

Boston Globe

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழே இணைப்புகளில் உள்ளவற்றிற்கு எமது பதில்களையும் எழுதுவோம்,

1.

2. லசந்தவின் மனைவியின் பேட்டி (சோனாலி விக்கிரமதுங்க)..

3. ஏற்கனவே பலரது கருத்துக்களுடன் இன்றும் active ஆக இருப்பது

Boston Globe

இரண்டு பதில் எழுதப்பட்டுள்ளது நன்றி

Link to post
Share on other sites

கனடா பத்திரிகையில் வந்த ஒரு மோசமான கட்டுரை... தயவு செய்து இதற்கு பதி எழுதுங்கள். ****

Click here

Link to post
Share on other sites

கனடா பத்திரிகையில் வந்த ஒரு மோசமான கட்டுரை... தயவு செய்து இதற்கு பதி எழுதுங்கள். ***

Click here

கருத்து எழுதுவதை மூடிவிட்டார்கள்..!

Link to post
Share on other sites

அல் ஜசீராவில் புதிய காணொளி வந்துள்ளது..! வெளிநாட்டவர்தான் பெரும்பாலும் இதுவரை கருத்துக்களை வைத்துள்ளார்கள்..!

Link to post
Share on other sites

இது சிங்களவனின் பத்திரிகை மீதான அடக்குமுறை பற்றிச் சொல்கிறது..!

Link to post
Share on other sites

அல் ஜசீராவில் புதிய காணொளி வந்துள்ளது..! வெளிநாட்டவர்தான் பெரும்பாலும் இதுவரை கருத்துக்களை வைத்துள்ளார்கள்..!

நன்றி டங்குவார். நானும் நிழலி எனும் இதே பெயரில் கருத்தெழுதி உள்ளேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனால எத்ர்மார்த்து இருந்தனான் ...யு டியுபில(you tube) இப்படி ஒரு பிரச்சாரம் தொடங்க வேணும் எண்டு...ஒரு இருபது பேர் சேர்த்து sinhala வாலுகளின் வீடியோக்களுக்கு பதில் வீடியோ பதவு செய்வது( video response)...ஒரே மாதிர்யான் மக்கள் அவல வீடியோக்களை வேறு வேறு தலைப்புகளின் பதிவீர்ரம் செய்வது...BUT add different tags ( என்ன வீடியோவும் பத்வேர்ரம் செயும்ப்தோ.. make sure comments should be approved by the owner. DONT let bad comments. ) கொஞ்சம் ஆங்கில அறிவு நிற்ப உள்ள ஆக்கள் இருந்தா நல்லது...அப்படி எண்டாத்தான் வடிவா அடி குடுக்கலாம்...அதோட இணையத்தில கூட நேரம் நிக்கிற ஆக்கள் ( என்னை மாதிரி) இருந்தாலும் நல்லது... எம் எஸ் என் இல்லடி யாகூ என்னடா நேரடியா நாகள் கதச்சு கதைச்சி செய்யலாம்...வடிவா திட்டமிட்டு வேலை செய்யலாம்..... please respond me quickly. it's better if we communicate personally....through instant messengers...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்கு பற்ற ஆசைபடுகின்றேன்.

Link to post
Share on other sites

கனால எத்ர்மார்த்து இருந்தனான் ...யு டியுபில(you tube) இப்படி ஒரு பிரச்சாரம் தொடங்க வேணும் எண்டு...ஒரு இருபது பேர் சேர்த்து sinhala வாலுகளின் வீடியோக்களுக்கு பதில் வீடியோ பதவு செய்வது( video response)...ஒரே மாதிர்யான் மக்கள் அவல வீடியோக்களை வேறு வேறு தலைப்புகளின் பதிவீர்ரம் செய்வது...BUT add different tags ( என்ன வீடியோவும் பத்வேர்ரம் செயும்ப்தோ.. make sure comments should be approved by the owner. DONT let bad comments. ) கொஞ்சம் ஆங்கில அறிவு நிற்ப உள்ள ஆக்கள் இருந்தா நல்லது...அப்படி எண்டாத்தான் வடிவா அடி குடுக்கலாம்...அதோட இணையத்தில கூட நேரம் நிக்கிற ஆக்கள் ( என்னை மாதிரி) இருந்தாலும் நல்லது... எம் எஸ் என் இல்லடி யாகூ என்னடா நேரடியா நாகள் கதச்சு கதைச்சி செய்யலாம்...வடிவா திட்டமிட்டு வேலை செய்யலாம்..... please respond me quickly. it's better if we communicate personally....through instant messengers...

விளங்கவில்லை சரியாக...

இது உங்களின் கருத்தா அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது இப்படி ஒரு முயற்சியை எடுக்கின்றனரா?

நானும் பங்கு பற்ற ஆசைபடுகின்றேன்.

பங்குபற்றுங்கள் ஈசன்.... எல்லோரின் உதவியும் தேவைப் படுகின்றது. ஏற்கனவே இங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளுக்கு சென்று பதில் எழுதுங்கள். Al Jazeera வின் வீடியோக்கு இப்பதான் சிங்களவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளனர். இலங்கை கொலைவெறி அரசினையும் ஐ.நா கொழும்பு தூதரின் பக்கச் சார்பையும் எடுத்துரைக்க முடியும் அங்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் யு டியுப் க்கு கமெண்ட் எழுதுகின்றேன். யு டியுப் காணொளிகள் தரகுறைவாக இருந்தால் அதை நாம் Flag செய்யலாம். ஈழமன் என்ற ஒரு தமிழர் நல்ல காணொளிகளை தந்து வந்தார் ..அவரை சிங்களவர்கள் எதோ புகார் சொல்லி அவரை யு டியுப் இலிருந்து நீக்கிவிட்டார்கள் .. நாமும் தவறான காநோளிகளுக்கு புகார் செய்யவண்டும்

செய்திகளில் நாம் ஒரு கமெண்ட் எழுதினால் சிங்களவர்கள் பத்து எழுதுகிறார்கள். அதனால் நாம் எழுதும் இணைய பக்கத்தை புக்மார்க் செய்துகொண்டு அடிக்கடி பார்த்து கமெண்ட் எழுத வேண்டும்

யாஹூ செய்திகளுக்கும் கமெண்ட் எழுத முடியும். அதற்க்கு செய்திக்கு கீழே உள்ள Buzz ஐ பயன்படுத்த வேண்டும். அங்கும் சிங்களர்கள் அதிகம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்கவில்லை சரியாக...

இது உங்களின் கருத்தா அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது இப்படி ஒரு முயற்சியை எடுக்கின்றனரா?

பல காலமாக எதிர் பார்த்து இருந்தேன். இப்படி ஒரு முயற்ச்சியை யாரவது தொடங்குவார்களா என்று..எனக்கு ஒரு இருபது பேர்களை தாருங்கள். நாங்கள் எல்லோருமாக சேர்ந்து ஒரு குழுவாக செயற்படலாம். சிங்களவர் களின் காணொளிக்கு பதில் காணொளி செய்வது, ஒரே மாதிரியான மக்கள் அவலக் காணொளிகளை வெவ்வேறு தலைப்புக்களில் பதிவேற்றம் செய்வது. குழுவில் உள்ள ஆட்கள் ஆங்கில அறிவு கொஞ்சம் கூட உள்ள ஆட்கள் என்றால நன்றாக இருக்கும் ( எனக்கும் கொஞ்சம் குறைவுதான் இருந்தாலும் சமாளிப்பேன்). கைகளில் அம்பிடும் சிங்களவரின் காணொளிக்கு எல்லாம் சரியான பதில் அளிப்பது. அவர்களின் காணொளிகளை உதவாது என்று கோடி காட்டுவது போன்ற பலவேளைகளில் ஈடுபடவேண்டும்.. இதையெல்லாம் நான் தனியாக செய்துகொண்டு இருக்கிறேன். எனது வேலைக்கு அவர்கள் பத்து பேர் சேர்ந்து பதிலடி கொடுக்கிறார்கள். இணையத்தியால என்னமாதிரி அதிக நேரம் செலவு செய்பவர்கள் இருந்தால் நல்லது. யாகு அல்லது எம்.எஸ்.என் தொடர்பாடலை பாவிப்பவர்கள் என்றால் இன்னும் நல்லது. முதலில் இனால் ஒழுங்கான தமிழில் எழுத முடியவில்லை... சில காணொளிகளை பார்த்தபின் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விரைவாக எழுதியதால் வந்த வினை..எப்படி இட்ச்கால் என்ன அரிசி ஆகினா சரி தானே..

என்னை பிரத்தியேகமாக தொடர்பு கொள்ளுங்கள்..

Link to post
Share on other sites

என்னையும் உங்கள் இருபதின்மர் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்புங்கள்

பொதுவாக வன்னியில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் நெற்றைவிட வேறு ஆங்கில ஊடகங்களில் வருவது குறைவு. சர்வதேச ஊடகங்களிலும் எமது செய்திகளை விட சிங்கள அரசின் பொய்யான செய்திகளே வருகின்றன. எமக்கு சார்பாக வரும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது சிங்களவர்கள் உடனுக்கு உடன் கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழர்களில் குறைவான எண்ணிக்கையானவர்களே அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எமக்கு எதிரான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது எங்களில் பெரும்பாலோர் அதற்கு கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் சிங்களவர்கள் அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எம்மவர்களின் அவலங்களை உலக ஊடகங்களுக்கு அனுப்பவேண்டியது அனைவரின் கடமையாகும்.

சில ஊடகங்களின் மின்னஞ்சல்கள்

Caff.News@abc.net.au, cardwells@aap.com.au, newsdesk@smh.com.au, news.sydney@aap.com.au, fisherw@aap.com.au, amnestyis@amnesty.org, alertnet@reuters.com, info@ap.org, imrv@humanrights.de, executive-editor@nytimes.com, sg@un.org, secrt@ohchr.org, Press-Info@ohchr.org, hrwpress@hrw.org, cos@sbs.com.au, rcaffaudience@your.abc.net.au, RCaff.Research@abc.net.au, gordon.westcott@sbs.com.au, ADMIN.ACMS@abc.net.au, radio.news@abc.net.au, nsw@theaustralian.com.au, world@theaustralian.com.au, producers@skynews.com.au, boss@crikey.com.au, offtherecord@crikey.com.au, tvnews <tvnews@news.abc.net.au>, news <news@seven.com.au>, news@dailytelegraph.com.au, newsroom@2gb.com, news@2ue.com.au, newsradio.media@your.abc.net.au, tcnnewsroom@nine.com.au, news@networkten.com.au

மேலே நான் இணைத்தவை பெரும்பாலானவை அவுஸ்திரெலியா ஊடகங்கள், அமைப்புக்கள்

சில சர்வதேச ஊடகங்களுக்கு எமது கண்டனங்களை அவ்வூடகங்களின் இணையத்தளத்திற்கு சென்றும் அனுப்பலாம்

bbc -

http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993909.stm

abc - http://www.abc.net.au/contact/contactabc.htm

cnn - http://edition.cnn.com/feedback/tips/newstips.html

&

http://edition.cnn.com/feedback/forms/form11b.html?1

CNN க்கு இரண்டு முறை 'submit form' என்பதை அழுத்தி அனுப்ப வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய Youtube user name STOPKILLINGTAMILS ..யார் யார் பங்குகொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் என்னை you tube messages மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். அத்தோடு உங்கள் யாழ் உறுப்பினர் பெயரையும் இணைத்தால் எனக்கு இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம்

Link to post
Share on other sites

இந்த video வுக்கு எம்மாலான பின்னூட்டல்களை இணைக்கலாம். இது moderate பண்ணப் பட்டு பிரசுரிக்கப் படும் விதமாக set பண்ணப்பட்டுள்ளது

http://www.youtube.com/watch?v=2LH23Wh_ZIE

Link to post
Share on other sites

அன்பு உள்ளங்களே கீழூள்ள காணொளிக்கு உங்கள் பின்னூட்டங்களை வழங்குங்கள்.

http://www.youtube.com/user/tigernov6

(respond all clips of this guy)

Link to post
Share on other sites

அன்பு உள்ளங்களே கீழூள்ள காணொளிக்கு உங்கள் பின்னூட்டங்களை வழங்குங்கள்.

1. பதில் எழுதிவிடேன்

2. இந்த வீடியோவை போட்டவன் 'சக்கிலி' எனும் குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவு படுத்தும் விதமாக பிரயோகித்து இருப்பதால், நாம் இந்த கணக்கின் மீது (account) நடவடிக்கை எடுக்கும் படி முறையிடலாம்

Link to post
Share on other sites

1. பதில் எழுதிவிடேன்

2. இந்த வீடியோவை போட்டவன் 'சக்கிலி' எனும் குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவு படுத்தும் விதமாக பிரயோகித்து இருப்பதால், நாம் இந்த கணக்கின் மீது (account) நடவடிக்கை எடுக்கும் படி முறையிடலாம்

நன்றி நிழலி. அவரை flag பண்ணியுமுள்ளேன்.

கீழுள்ளவரின் காணொளி தொகுப்புக்கே விடைகொடுக்க வேண்டியுள்ளது.

http://www.youtube.com/user/tigernov6

Link to post
Share on other sites

நன்றி நிழலி. அவரை flag பண்ணியுமுள்ளேன்.

கீழுள்ளவரின் காணொளி தொகுப்புக்கே விடைகொடுக்க வேண்டியுள்ளது.

http://www.youtube.com/user/tigernov6

ஒவ்வொன்றிற்கும் பதில் எழுதுவோம்...

Link to post
Share on other sites

ஆங்கில அறிவு பெற்ற , மற்றும் பிற மொழி அறிவு பெற்ற கள உறவுகள் நிறையவே உள்ளார்கள். அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும் நிழலி. எனது மட்டுப்படுத்தப்பட நேரத்தில் தனி மடல் மூலம் கேட்கவுள்ளேன். விடிய எழும்பி இறந்த மக்களையிட்டு கவலை (இருந்தாலும்) கொள்ளாமல் ஊடக போரில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பதில் அளவிலா நம்பிக்கையில் உள்ளேன். நெடுக்ஸ்,சாணக்கியன்,குறூக்ஸ்

, கறுப்பி, வல்வைசகாரா, நிலாமதி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்பெயர்கள் சில உதாரணங்களே.

என்ன இருந்தாலும் நான் மனதில் நினைத்ததை செயலில் கொண்டு வந்த நிழலிக்கு நன்றிகள் பல. யூ.ரியுப்பில் இணைந்த காலம் முதல் தனிப்பட்ட ரிதியில் கருத்துக்கள் பல காலமாக வழங்கி எனக்கு தூசண வார்த்தைகளால் என்னை சிறுமை படுத்த நினைத்தார்கள். தெரியவில்லை அவர்களுக்கு எனக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் சகோதர சகோதரிகள் உள்ளார்கள் என்று.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.
  • கோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா.   ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்?
  • உங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை பொறுத்துதான் இவற்றுக்கான பதில்கள் அமையும். ஒரு உதராணத்திற்கு ஈழப்போராட்ட தொடக்க காலத்தில் இருந்து முடியும் வரை வடகிழக்கில் இருந்த பள்ளிகள் ஆசிரியர்கள் என்னும் பலதரப்பட்ட அரச உத்தியோகத்வர்கள் இலங்கை அரச பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு வழ்ந்தார்கள். மாணவர்கள் பலர் போராடி மடிந்தார்கள். போராட்டம் முடிந்த பின் அரசின் பொன்சன் பணத்தில் தொடர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் போரடி மடிந்தவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் ஒரே பெறுமதியாக இருக்காது.  சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான்.   
  • ஹார்ட் அட்டாக் போல உணரச்செய்யும் ஆங்சைட்டி அட்டாக்... யாருக்கு, எப்போது, ஏன் ஏற்படுகிறது? மா.அருந்ததி Anxiety ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. கோபம், பயம், வெறுப்பு, பதற்றம் போன்ற உணர்வுகள் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடியவையே. சில நேரங்களில் இவை ஓவர் லோடு ஆகும்போது நமக்கு ஒருவித படபடப்பும் மயக்கமும் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சுவலியும் ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறிகளை இதய நோய்க்கான எச்சரிக்கையாக நினைத்து இதய பரிசோதனைக்காக நாடிச் செல்வோர் பலர்.   Anxiety attack ஆனால், இந்த அறிகுறிகளுக்கும், இதய நோய்களுக்கும் தொடர்பில்லை. இவை மனஅழுத்தத்தின் உச்சநிலையான `ஆங்சைட்டி அட்டாக்'காக இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். சமீபத்தில் வெளியான `சூரரைப் போற்று' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் அதீத கோபத்துக்கோ, பயத்துக்கோ உள்ளாகும்போது தன்னிலை இழப்பதைக் காட்டியிருப்பார்கள். தன்னிலை மறந்த இந்தப் பதற்றம்தான் `ஆங்சைட்டி அட்டாக்'.     ஆங்சைட்டி அட்டாக் யாருக்கு, எப்போது, எதனால் ஏற்படுகிறது... என்ற கேள்விகளோடு உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியை அணுகினோம்.   ஆங்சைட்டி அட்டாக் என்றால் என்ன? ``ஒருவர் அதிகமாக அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ தன்னிலை இழந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டே மயங்கி விழுவதையும், பேச்சு மூச்சின்றி கிடப்பதையும் கவனித்திருக்கலாம். இதற்கு உளவியலில் `ஆங்சைட்டி அட்டாக் (Anxiety attack)' அல்லது `பானிக் அட்டாக் (Panic attack)' என்று பெயர். ஏன் ஏற்படுகிறது? ஒருவருக்கு ஆங்சைட்டி அட்டாக் மூன்று வகைகளில் ஏற்படுகிறது.   முதல் வகை: இது அனைவருக்கும் சில பொதுவான காரணங்களால் திடீரென வரக்கூடிய பயமும் பதற்றமும் ஆகும். ஒருவரின் அருகில் திடீரென ஒரு பாம்பினை தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், பல புற காரணங்களால் இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்படலாம். இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இரண்டாம் வகை: இது ஆழ்மனதிலிருந்து வரக்கூடிய ஒருவித தவிப்பால் ஏற்படுவது. அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு காரணமாகக் கூறலாம். இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போதும் ஒருவரின் மனநிலை சீரற்றதாகி ஆங்சைட்டி அட்டாக் ஏற்படும். இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட ஒருவரின் மனநிலையே முழுக்க முழுக்க காரணம். முதல் வகையில் சொன்ன பாம்புபோன்ற புறக் காரணிகளால் இது ஏற்படுவதில்லை.   Anxiety attack Also Read ``இந்த 3 காரணங்களைத்தான் `பேய் பிடித்துவிட்டது' என்கிறார்கள்!" - விளக்கும் மனநல மருத்துவர் மூன்றாம் வகை: இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் உளவியல் மற்றும் நரம்பியலுடன் தொடர்புடையது. ஒருவர் கோபத்தால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். `வாழ்க்கையில் தான் அனைத்தையும் இழக்கப்போகிறோம்' என்று தோன்றும் எண்ணத்தால் ஏற்படும் பதற்றத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். யாருக்கு ஏற்படும்? எப்போதும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவோர்க்கு ஆங்சைட்டி அட்டாக் எளிதில் ஏற்படலாம். ஏற்கெனவே உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும்போது இதனால் பாதிக்கப்படலாம். ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம்.   என்ன செய்ய வேண்டும்? ஆங்சைட்டி அட்டாக்கால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு இதய பிரச்னை உள்ளதென நினைத்து இதய மருத்துவரை நாடிச் சென்று, பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இது ஏற்கெனவே நமக்கிருக்கும் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். `ஆங்சைட்டி அட்டாக்' ஏற்படும் அனைவருக்கும் இதய பிரச்னை இருக்காது. உங்களுக்கு ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். மனநல மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ அணுகி உங்கள் பிரச்னையைக் கூறி தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.   Mental Health pixabay ஆங்சைட்டி அட்டாக் வராமல் தடுக்க மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் அதிகமாக உணர்ச்சிவசப் பட வேண்டாம். பிரச்னைகளையோ, மனதுக்குள் பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களையோ பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். மனம் பதற்றமடையும்போது கண்ணை மூடி சிறிது நேரம் எதையும் யோசிக்காமல் அமர்ந்திருங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். யாருடனாவது மனம் விட்டுப் பேசுங்கள். உடல்நலம்போல் மனநலமும் பாதுகாப்பட வேண்டியது" என்கிறார் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி.   https://www.vikatan.com/health/healthy/psychologist-explains-about-anxiety-attack-and-its-reasons
  • திடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்! செ.சல்மான் பாரிஸ்ஈ.ஜெ.நந்தகுமார் நுரை பொங்கிய வைகை ரசாயனக் கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வைகை நதி. மதுரையில் பெய்த மழையின் விளைவால் நகருக்குள் ஓடும் வைகை ஆற்றிலும் செல்லூர் கண்மாயிலும் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.   வைகை ஆறு ஏற்கனவே மதுரைக்குள் ஓடும் வைகை ஆற்றுப் பாதையிலும், அதை சார்ந்த கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், வீடுகள், தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலந்து வருகின்றன.     இதற்கிடையே நகர வளர்ச்சிக்காக கரையோரங்கள் குறுக்கப்பட்டு இருபக்கமும் இரட்டை வழி சாலை போடப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை வைகை செல்லும் பாதை அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் புகார் எழுப்பி வருகிறார்கள். வைகையை பாதுகாக்க உயர்நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.   வைகை ஆறு இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெய்த மழையின் விளைவால் நேற்று வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நீர் செல்லூர் கண்மாயில் சேரும் இடத்திலும், மீனாட்சிபுரம் பாலத்திலும் 10 அடி உயரத்துக்கு வெண்ணிற நுரை எழும்பியதால் அப்பகுதி முழுவதும் சின்ன பனிமலை போல் காட்சி அளித்தது. இதைப் பார்க்க மக்கள் கூட ஆரம்பித்தார்கள்.   பின்பு தீயணைப்புத் துறையினர் வந்து நுரையை கலைக்கும் வகையில் நீரை பீய்ச்சி அடித்தார்கள். வைகை ஆற்றையும் கண்மாய்களையும் ஒட்டியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் வைகையாற்றில் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து வைகையின் நீரோட்டத்தை தடுத்ததால் தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.   பார்வையிட்ட செல்லூர் ராஜூ அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதிக்கு வந்து ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். வைகை ஆற்றில் அபாயத்தை உண்டாக்கும் ரசாயன கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.   https://www.vikatan.com/social-affairs/environment/toxic-foam-forms-in-vaigai-river-due-to-industrial-pollution
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.