Jump to content

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு

இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.

இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.

’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.

திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.

அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே.

பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.

ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.

தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.

சினிமா படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனின் உறவுகளை எதிரிகள் கொலை செய்வார்கள். கதாநாயகன் அதை கண்டு பிடித்து பழி வாங்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஒரு கற்பனை கதாபாத்திரம் செய்தால் பாராட்டும் நாம் அதை நிஜத்தில் செயல்படுத்துபவர்கள் தீவிரவாதிகளா?

இந்திரா காந்தியின் கனவு, எம்.ஜி.ஆரின் கனவு, தமிழ் ஈழம். அங்கே தமிழ் தாய்மார்களின் கருவை கலைக்கிறார்கள். உலகத்திற்கு உண்மைகளை கொண்டு செல்ல நான் பேசுகிறேன்.

நீங்கள் உணர்வை வாக்கு பதிவில் காட்டுங்கள். 40 தொகுதியில் வெற்றியை கொடுத்தோம். இனி 40 தொகுதியிலும் வீழ்த்துவோம். எந்த நாட்டிலும் சொந்த மக்களே அகதிகளாக இருந்ததில்லை. இலங்கையில் மட்டும் தான் இந்த அவலம்.

அங்கு தஞ்சம் புகுந்தவர்களை சிங்கள ராணுவம் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பி சிறைக்குள் அடைத்து பட்டினி போடுகிறது.

ஒரு இனம் செத்து மடிகிறது. எல்லாரும் அழுகிறார்கள். நான் கதறி அழுகிறேன். இதில் பிழை இல்லை. போரை நிறுத்தச் சொல்வது மனித உரிமை. போப் ஆண்டவர் போரை நிறுத்தச் சொல்கிறார்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று பேசுபவர்கள், ராஜீவ்காந்தியின் பின் மண்டையை தாக்கிய சிங்கள ராணுவ வீரனை என்றாவது கண்டித்து பேசியது உண்டா?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள், மாணவர்கள், மக்கள், திருநங்கைகள் என்று அனைத்துதரப்பினரும் போராட்டம் நடத்தி விட்டார்கள். இந்த மக்களை மதித்து ராணுவ உதவிகளை நிறுத்துங்கள். நமது ராணுவ வீரர்களை திருப்பி அழையுங்கள்.

மூன்று நாளில் பிரபாகரன் ஒட்டு மொத்த இலங்கையையே கைப்பற்றி விடுவார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வேறு, விடுதலை புலிகள் வேறு அல்ல.

எல்லா நாட்டிலும் விடுதலையை அங்கீகரிக்கிறது ஐ.நா. சபை. -ஆனால் ஈழத்தமிழ் நாட்டை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? பிரபாகரன் சாவதற்கு முன் தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம்.

இந்த எழுச்சி மோதல் களம் வரை இருக்கட்டும். வாக்கு கேட்க வருகிறவர்களிடம் உங்கள் உணர்ச்சியை காட்டுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உதவுங்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

தகவல் ...........நக்கீரன் நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார். கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார். டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது. https://athavannews.com/2022/1303121
  • இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை  வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது. இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இந்த பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1303112
  • வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ பாலியல் வல்லுறவு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1303082
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.