Jump to content

காதல் வானம் - தொடர்கதை


theeya

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வானம் - தொடர்கதை

01

சக்தியை நோக்க சரவணபவனார்

திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிங்கினியாட…

பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது.

“திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்

எங்களுக்கு ஆரப்பா துணை”

செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள்.

தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் கேட்பார்கள்.

இடையிடையே மணியம் விதானையார் மைக்கைப் பிடித்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். பூசாரி ஆறுமுகம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

மஞ்சள் சால்வை கட்டிய சில தொண்டர்கள் அங்குமிங்கும் அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

செண்பகமோ எப்ப திரை விலகும் எப்ப முருகனருள் கிடைக்கும் என விழிகள் அகலத் திறந்து முருகன் சந்னிதியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த ஊரின் ஒரேயொரு சைவக் கோயில் அந்த சிறிய முருகன் கோயில்தான். குளக்கட்டுப் பிள்ளையாரும் முருகனும் தான் அவளுடைய நீதிமன்றங்கள்.

இருபது வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலை இருந்து முருகன் வேல் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த போது முன்னின்று உழைத்தவர்களில் இவளுடைய

கணவன் அம்பிகைபாலனுக்கும் பெரும் பங்குண்டு.

முருகன் கோயில் அமைந்துள்ள இரண்டேக்கர் காணியில் அரை ஏக்கருக்கு சொந்தக்காரனும் இவன்தான்.

தன்னுடைய விடா முயற்சியாலும் உடல் வலிமையாலும் நிலத்தைப் புரட்டி எடுத்து தொழில் செய்யும் விவசாயிகளில் அம்பிகைபாகனும் ஒருவன். முறுக்கேறிய உடல் திரண்டு பருத்த கைகள்

மண்ணிறத்திலான கேசம் என ஐம்பது வயதாகி விட்டது என்ற அடையாளமே இன்றி அவனது தோற்றம் அமைந்திருந்தது.

வேலியோரம் இருந்த புல் பூண்டுகளை செதுக்கி கோயில் சூழலை துப்புரவாக வைத்திருப்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்த அவனுடன் சில இளவட்டங்களும் கூடித் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இடையிடையே தன் கணவனின் பார்வைப் பரிமாற்றத்தை ருசித்த வண்ணம் கந்தன் அருளுக்காக ஏங்கிக் கிடந்தாள் செண்பகம். ஆனால், சில நிமிஷங்களில்…

“அக்காள் உன்னைக் கண்டு பிடிக்கவே முடியல்லை… அந்தப் பக்கம் சமையல் வேலை நடக்குது மரக்கறி வெட்ட ஆளில்லையக்கா வாறியே…”

அவளுக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. இருந்தாலும்,

“முருகன் சன்னிதி தானே… நாங்கள் என்ன உவையளுக்கே பணிவிடை செய்யிறம் முருகனுக்குதானே”

என்ற முடிவுடன் எதுவும் பேசாமல்,

“உம்”

என்றபடி எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

அப்போது வேலியோரம் அம்பிகைபாலன் யாரோ கொடுத்த தண்ணீரை ஒரு மூச்சு பிடித்துக்கொண்டிருந்தான்.

சமையல் வேலையில் எல்லோரும் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். செண்பகம் தன்பாட்டில் மரக்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவளருகில் வந்து அமர்ந்தாள் செல்லம்மா கிழவி.

வரிஷத்திலை ஒருமுறை வாற பெரிய விழாக்களில் இதுவும் ஒன்று என்பதனால் ஊரிலுள்ள எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதுதான் வழமை.

“என்ன பெத்தா எப்பிடியணை இருக்கிறியள்” செண்பகம்தான் முதலில் பேச்சு கொடுத்தாள்.

“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில இருக்கிறம் மோனே” என்றவாறு இன்னும் அருகில் வந்தாள் கிழவி.

ஊரிலை உள்ள பழைய கால மனிசர்களில் கிழவியும் ஒருத்தி. 'பெத்தா' என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும் தெரியும்.

மனிசி பதினொன்று பெத்ததாலயோ என்னவோ பெத்தா என்ற பெயர் நிலைச்சு விட்டது.

காசி பெரிய வேட்டைக்காரன் “காசிக்குஞ்சியின் மனிசி” என்றால் ஊரிலை ஒரு தனி மரியாதை.

“என்ன மோனே உன்ரை பொட்டை எப்பிடி இருக்கிறாள் மோனே… வெளியிலை வாறதையே காணல்ல” என்றாள் கிழவி.

“அவள் பெத்தா தானுண்டு தன்ரை வேலையுண்டு என்று வீட்டுக்கையும் தோட்டத்துக்கையுமாய் அடங்கிக் கிடக்கிறாள்… இப்பதானேணை கம்பஸ் முடிச்சு வந்தவள்

வேலையும் கிடைக்கலை அதுதான்…”

“அது சரி மோனே உதுகள் உங்கடை இனசனம் இருக்க… பெட்டைக்கு மாப்பிளை எடுக்கேலாமல் போட்டுதே உங்களாலை…அதுவும் மூத்தவள் இருக்க

இளையவளுக்கு அதுக்குள்ளை என்னமோனே அவசரம் வந்து வெளியிலை பிடிச்சு அனுப்பினிங்கள்… ஏதோ நடக்கட்டும்… நெருப்பில்லாமல் புகையுமே…”

என்றாள் மிகவும் தாழ்ந்த குரலில்.

“உதெல்லாம் ஆரணை உனக்கு சொன்னது?” என்றாள் சற்று இறுகிய குரலில்.

“உதுக்கே மோனே ஊரிலை ஆக்களில்லை… உன்ரை கொண்ணன் பொஞ்சாதிதான் சொன்னவள்…”

பெரிய சக்கரைப் பூசணிக்காயை உருட்டிச் சீவியபடி கிழவி சொல்லிக்கொண்டிருந்தாள்.

செண்பகம் குரலில் ஒரு நிராசையுடன்,

“வேற ஒண்டும் சொல்லலையோ?” என்றாள்.

“இல்ல மோனே ஏன்?”

ஓன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு,

“நான்…நான்…போக வேணுமணை பூசை தொடங்கப் போகுது போல கிடக்கு…”

ஏன்றபடி மெதுவாக எழுந்தாள்.

அவளுக்குள் பெரும் மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் அதனை மறக்க அவள் மனம் ஒப்பவில்லை.

நடந்த அந்த சம்பவம் தானே இத்தனைக்கும் காரணம். அது நடந்திராவிட்டால் இண்டைக்கு… ............

அவளுடைய மனக்குரங்கு அந்த நிகழ்வை நோக்கி நகரத் தொடங்கியது…

காற்று வீசும்…

Link to comment
Share on other sites

என்ன பெத்தா எப்பிடியணை இருக்கிறியள்” செண்பகம்தான் முதலில் பேச்சு கொடுத்தாள்.

“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில இருக்கிறம் மோனே” என்றவாறு இன்னும் அருகில் வந்தாள் கிழவி.

ஊரிலை உள்ள பழைய கால மனிசர்களில் கிழவியும் ஒருத்தி. 'பெத்தா' என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும் தெரியும்.

மனிசி பதினொன்று பெத்ததாலயோ என்னவோ பெத்தா என்ற பெயர் நிலைச்சு விட்டது.

வணக்கம் தியா

தொடர் கதை ஆரம்பம் நன்றாக உள்ளது

கிராமிய நடை கதைக்கு பலமாக அமைந்துள்ளது

அடுத்த பகுதி எப்போ வரும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிகே

தொடர்ந்து வரும் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வயற்காற்று' என்ற தலைப்பு கதைக்கு பொருத்தப்பாடானதாக தெரியவில்லை. அதனால்

'காதல் வானம்' எனத் தலைப்பை மாற்றியுள்ளேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02

காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன.

அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள்.

“பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ…

அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…”

“விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…”

“ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே”

“இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…”

“அதுசரி அவையின்ரை பிரச்சினையை அவையளே தீர்க்கலாம்தானே அதுக்கேன் உன்னை கூப்பிட்டவை…

நீயென்ன சமாதான நீதவானே…”

“நீயென்ன ஒண்டும் தெரியாமல் பேய்க்கதை கதைக்கிறாய்… பரணரூபன் வீட்டிலை

ஒண்டென்றால் அது என்ரை வீட்டை நடந்தமாரித்தான்…அவனார் என்ரை நண்பனெல்லே…

அதைவிடு அவன்ரை தங்கச்சிக்காக எண்டாலும்…அவளும் என்னோடை நல்லமாரித்தானே…”

“நல்லமாரி எண்டால்…”

“நல்லமாரி எண்டால் நல்லமாரித்தான்…” சீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க,

“உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…”

“ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவும் உன்னை பாக்க வேணும் எண்டு சொன்னவா

முடிஞ்சா ஒருக்கா அந்தப்பக்கம் வாவன்…” என்றான் ஏளனமாக

“பாத்தியே அத்தான் கதையோடை கதையாய் நடந்த து}ரங்கூடத் தெரியேல்ல..”

கோடைகாலமென்பதால் குளத்தில் அவ்வளவாக தண்ணீர் இல்லையென்றாலும் சிறுபோக

விதைப்புக்கு ஏற்றாப்போல அரைக்குளம் தண்ணீருக்கு மேல் நிறைந்து கரையில் வந்து முட்டி மோதி

தாளம் போட்டுக்கொண்டிருந்தது. மருதமரங்கள் குளக்கட்டின் ஓரத்தில் எல்லைக் காவலர்களாக

ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன… அவற்றின் வேர்கள் குளக்கட்டை பேர்த்து உட்புகுந்து

பாதுகாப்பு வலையமைத்து குளத்தை காவல் செய்தன. வழுவழுப்பான மருதமரத்தின் ஒரு பக்க வேரிலே

ஆசுவாசமாக இருந்த சுரபி குளத்தை பார்த்து அதன் அழகில் புலனை செலுத்தத் தொடங்கினாள்.

“குளத்தை பாத்தியே அத்தான் எவ்வளவு வடிவாயிருக்கெண்டு…”

தாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு பஞ்சணை போல புதுக்கோலம் பூண்டு கண்ணுக்கு

களிப்பூட்டிக்கொண்டிருந்தது குளம். இடையிடையே அல்லிகள் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டன.

பாவம் அல்லிகள் கொட்டாவி விட்டே காலத்தைக் கடத்துகின்றன போலும்.

சூரியகாந்தி சூரியனின் திசையெல்லாம் திரும்பி நாள் முழுக்க தவமிருந்து காதல் செய்ய அல்லிகளோ கள்ளத்தனமாக

சூரியனுடன் உறவாடவல்லவா முனைகின்றன.

“ஆ…தாமரைப்பூ… எவ்வளவு வடிவாயிருக்குது” வாயைப் பிளந்தாள் சுரபி

அவன் என்ன நினைத்தானோ சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு உடனே குளத்தில் இறங்கி

கைநிறைய தாமரைப் பூக்களைப் பிடுங்கி வந்து அவளிடம் கொடுத்தான். அவள் மெய்மறந்து

தாமரைப் பூவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.

கொத்துக் கொத்தாக தாமரைப்பூவை கையில் வைத்து குழந்கைபோல சுரபி விளையாடுவதை பார்த்து மனம் லயித்திருந்தான்.

நீல நிற வானத்தையே உள்வாங்கி போர்வையாக போர்த்திக் கொண்டு மலேரியா காய்ச்சல் வந்து

கிடப்பவர் போல் அலைக்கரங்கள் உதறலெடுக்க நடுங்கிக் கொண்டிருந்தது குளத்து நீர்.

நீண்ட காலமாக குளத்துக்குள் தவமிருக்கும் கருமைநிறமான பட்ட மரங்கள் கொக்குகளின்…

நாரைகளின்…மீன்கொத்திப் பறவைகளின் இருப்பிடங்களாக… தொலைவில் கரையோரமெல்லாம்

விளாத்தி மரங்கள் வேலியமைத்து மழை காலத்தில் குளத்துக்கு தண்ணீர் வரும் வேகத்தை

கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன.

திடீரென மீன் கொத்தும் பறவைகள் குளத்தில் விழுவதும் எழும்புவதுமான ஆரவாரித்துக்கொண்டிருக்க

நீர்க்காக்கைகள் தங்களின் கரிய உடலை ஊறப்போட்டு நீரில் மூழ்குவதும் மேலே வருவதுமாக

வித்தை காட்டிக்கொண்டிருந்தன. பெரிய சிறகுகளை உடைய ஆலாப்பறவைகள் தங்களின்

நீண்ட பனங்கிழங்கு போன்ற அலகுகளினால் மீன்களைக் கொத்தி பந்தாடிக்கொண்டிருந்தன.

“சுரபி இந்த இடத்தில தான் போன கிழமை நான் ஒரு பெரிய கரடியை கண்டனான்”

“என்ன கரடியோ…ஐயோ…”

“ஓம் … முகமெல்லாம் சடை மூடியபடி கரடிப்புள்ள வந்து கொண்டிருந்தார்.

நானும் என்ன நடக்குதெண்டு பாத்துக்கொண்டிருந்தன்…அந்த மரத்தடில வந்ததும் நிமிந்து எழும்பி

ரண்டு கால்ல நிண்டுதுபார்… எனக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கிட்டுது…”

“பிறகு…” என்றாள் சுரபி ஒருவித நடுக்கத்துடன்…

“பிறகென்ன பிறகு என்னைக் கண்டதும் கரடிக்கு பயம் வந்திட்டுது… அது ஒரே ஓட்டமாய் ஓடிட்டுது…”

“ஓமத்தான் அது ஏதோ புது மிருகமெண்டு நினைச்சு பயந்து ஓடியிருக்குமோ தெரியாது” என்றாள் கிண்டலாக,

மாலைச் சூரியன் மருதமரத்தடியில் ஒழித்துக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது.

இருவரும் நேரம் போனதுகூடத் தெரியாமல் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

“அத்தான் நேரம் போகுது நான் வீட்டை போகப் போறன்”

என்றாள் சுரபி.

அதை ஆமோதிப்பது போல தலையசைத்த சீலன், தூரத்தில் கையை காட்டி,

“அங்கை பாரன் ஒரு மான்கிளையை” என்றான்.

“ஆ… என்ன வடியாயிருக்கு படத்திலை வாறது போல…ஆ..ஆ” அதன் அழகில் லயித்தாள் சுரபி.

“நீ பின்னேரத்தில இந்தப் பக்கம் வந்தாலெல்லோ…இதெல்லாம் நெடுக நடக்கிறதுதான்,

உனக்குத்தான் புதிசு…சும்மா வாயைப் பிளக்காதை…வலையன்கட்டு பாலம்போல கிடக்கு”

“சும்மா போ அத்தான் உனக்கு எல்லாத்துக்கும் ஒரு நக்கல்தான்… நவ்வி எண்டால் மான் எண்டு

ஒருபொருள் இருக்கெண்டு உனக்கு தெரியுமேயத்தான்…ராமாயணத்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள் தியா!!! :D:D

Link to comment
Share on other sites

இந்தக் கதை நல்லாய் இருக்கல்லோ நான் கஸ்டப்பட்டு என்னுடைய இசைத் தொகுப்புக்கு போன வருடம் காதல் வானம் என்று தலைப்பு வைக்க, இப்ப என்னடா எண்டால் தியா அக்கா என்னுடைய தலைப்பை திருடிப் போட்டியல். உட்காந்து யோசிப்பியலோ நின்று யோசிப்பியலோ தெரியாது. ஆனால் கதை நல்லாய் இருக்கு தொடருங்கோ.:D என்னுடைய இறுவட்டுக்கும் புதுசாய் விளம்பரம் கிடைச்சமாதிரி இருக்கும். வாழ்த்துக்கள் தியா.

Link to comment
Share on other sites

தியா தொடருங்கள் வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்கள் கதை

தியா எனக்கு ஒரு ஜோசனை தப்பா இருந்தால் மன்னிக்கவும்... நீங்கள் புதுசா நியு ரொப்பிக் எடுத்து காதல் வானம் இரண்டால் பாகம் என்று போடலாம் இல்லை.. அப்படி போட முடியாதா.. ஏன் என்றால் நான் கிழ இருந்தை கவனிக்க வில்லை.. மற்றவர்களும் பாக்கமால் விட்டு இட்டால்..அருமையான கதை எல்லாரும் பாக்க வேணும் அதுதான் சொன்னன்.. நான் தப்பா ஏதும் சொன்னால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி	  Posted Today, 08:50 AM

	  தியா உங்கள் அடுத்த பகுதி எப்போது வரும்.. கதையின் தொடக்கம் நல்லா இருக்கு
சுஜி அடுத்த தொடர் வந்திட்டுது பாருங்கள் பார்த்து உங்கள் கருதினைத் தாருங்கள்
சுஜி	  Posted Today, 11:08 PM

	  தியா தொடருங்கள் வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்கள் கதை


தியா எனக்கு ஒரு ஜோசனை தப்பா இருந்தால் மன்னிக்கவும்... நீங்கள் புதுசா நியு ரொப்பிக் எடுத்து காதல் வானம் இரண்டால் பாகம் என்று போடலாம் இல்லை.. அப்படி போட முடியாதா.. ஏன் என்றால் நான் கிழ இருந்தை கவனிக்க வில்லை.. மற்றவர்களும் பாக்கமால் விட்டு இட்டால்..அருமையான கதை எல்லாரும் பாக்க வேணும் அதுதான் சொன்னன்.. நான் தப்பா ஏதும் சொன்னால் மன்னிக்கவும்

அட அதுக்கிடையிலை பதிலும் எழுதிட்டிங்களா?

நீங்கள் சொல்வதில் ஒருவித நியாயப்பாடு தெரிந்தாலும் கதை துண்டு துண்டாக சிதைய வாய்ப்புள்ளதையும்

அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

எனவே தொடர்ந்து பாருங்கள் தொடர் பற்றி நிறைய விமர்சனங்களை எழுதுங்கள்.

விமர்சனங்கள் என்னை ஊக்குவிக்கும் என்பதை நன்கறிவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள் தியா!!! :D:D

உங்கள் வாழ்த்துக்குத் தலை வணங்குகிறேன்

நன்றி சுவி தொடர்ந்து இத் தொடரைப் பார்த்து திறனாய்வுகளை முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

[

அதுவும் சரிதான் தியா நீங்கள் இதில்லயே போடுங்கள்.. நான் பாக்குறேன்.. ஊர் விஷயங்கள் எல்லாம் உங்கள் கதையில் கொண்டு வந்து இருக்குறிர்கள் நல்லா இருக்கு.. தெரியாத சில விஷயங்களை உங்கள் கதையில் படித்தேன் நன்றி உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamizhvaanam	  Posted Today, 09:48 PM

	  இந்தக் கதை நல்லாய் இருக்கல்லோ நான் கஸ்டப்பட்டு என்னுடைய இசைத் தொகுப்புக்கு போன வருடம் காதல் வானம் என்று தலைப்பு வைக்க, இப்ப என்னடா எண்டால் தியா அக்கா என்னுடைய தலைப்பை திருடிப் போட்டியல். உட்காந்து யோசிப்பியலோ நின்று யோசிப்பியலோ தெரியாது. ஆனால் கதை நல்லாய் இருக்கு தொடருங்கோ.smile.gif என்னுடைய இறுவட்டுக்கும் புதுசாய் விளம்பரம் கிடைச்சமாதிரி இருக்கும். வாழ்த்துக்கள் தியா.

இந்தக் கதை நல்லாய் இருக்கல்லோ நான் கஸ்டப்பட்டு என்னுடைய இசைத் தொகுப்புக்கு போன வருடம் காதல் வானம் என்று தலைப்பு வைக்

உங்கள் இசைத்தொகுப்பு பற்றி நான் அறியவில்லை. இப்போது அறிந்து கொண்டேன் சந்தோசம்.

தியா அக்கா

நான் அக்கா இல்லை. அண்ணா அல்லது தம்பி எனது Profile பாருங்கள்.

என்னுடைய தலைப்பை திருடிப் போட்டியல்

நான் உங்கள் தலைப்பை திருடவில்லை. உண்மையில் இப்பவரை எனக்கு உங்கள் இசைத்தொகுப்பு பற்றி தெரியாது.

இப்போது தெரிந்து விட்டது வாழ்த்துகள்.

ஒரே தலைப்பில் பல கதைகள் இன்று பல படங்கள் கூட வெளிவருகின்றனவே.

புகழுக்காக பெரிய நடிகர்களின் படப் பெயரை புதியவர்கள் வைப்பது போல நானும் உங்கள் தலைப்பை கையாண்டதாக நினையுங்களேன்

இதெல்லாம் வாழ்க்கையிலை சகஜம்தானே

உட்காந்து யோசிப்பியலோ நின்று யோசிப்பியலோ தெரியாது. ஆனால் கதை நல்லாய் இருக்கு தொடருங்கோ

நன்றி

உங்கள் விருப்பத்தை நிறைவு செய்வது போல கதை தொடரும் தொடர்ந்து பார்த்து கருத்துரையுங்கள்

என்னுடைய இறுவட்டுக்கும் புதுசாய் விளம்பரம் கிடைச்சமாதிரி இருக்கும்

அடக் கடவுளே எப்பிடியெல்லாம் விளம்பரங்கள் நடக்கிறது உலகத்திலை

வாழ்த்துக்கள் தியா

நன்றி தமிழ்வானம் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உப்ப தான் வாசித்தேன் அருமையான கதை தொடருங்கள் தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rathy	  Posted Today, 02:07 AM

	  நான் உப்ப தான் வாசித்தேன் அருமையான கதை தொடருங்கள் தியா.
நல்லது றதி இனிப் பாருங்கோ தொடர்ந்து வரும். பார்த்துக் கருத்துச் சொல்லுங்கோ.
சுஜி	  Posted Today, 12:01 AM


அதுவும் சரிதான் தியா நீங்கள் இதில்லயே போடுங்கள்.. நான் பாக்குறேன்.. ஊர் விஷயங்கள் எல்லாம் உங்கள் கதையில் கொண்டு வந்து இருக்குறிர்கள் நல்லா இருக்கு.. தெரியாத சில விஷயங்களை உங்கள் கதையில் படித்தேன் நன்றி உங்களுக்கு

நன்றி

அப்பிடி என்னதான் புதிசாய் சொல்லிவிட்டேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் தியா

தொடர்கதை நன்றாக போகிறது

கிராமவாசனை மனதை ரசிக்க வைக்கிறது

வாழ்த்துக்கள்

“நல்லமாரி எண்டால் நல்லமாரித்தான்…” சீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க,

“உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…”

“ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவும் உன்னை பாக்க வேணும் எண்டு சொன்னவா

முடிஞ்சா ஒருக்கா அந்தப்பக்கம் வாவன்…” என்றான் ஏளனமாக

“பாத்தியே அத்தான் கதையோடை கதையாய் நடந்த து}ரங்கூடத் தெரியேல்ல..”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nige Posted Today, 12:16 AM

வணக்கம் தியா

தொடர்கதை நன்றாக போகிறது

கிராமவாசனை மனதை ரசிக்க வைக்கிறது

வாழ்த்துக்கள்

நன்றி

தொடர்ந்து பார்த்து கருத்தை சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

மண்வாசனையுடன் கதை நகர்வதால் நன்றாக இருக்குது. தொடர்ந்து எழுதுங்கோ. கிராமிய மணங்கமழ் நடை மிகமிக நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முல்லைசதா உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03

பட்டென்று வெடித்துப் பூக்கும் பருத்தியாய் இமை திறந்த சுரபி கைகளை

மேலே தூக்கி சோம்பல் நீக்கி நெட்டி முறித்தாள்.

“ஒரு பொம்பிளைப் பிள்ளை நித்திரையால எழும்புற நேரத்தை பாரன்…அந்தப் புள்ளையும்

இருக்குது அதைப் பாத்தெண்டாலும் வேளைக்கு எழும்பலாம் தானே…பாவம் அந்தப்பிள்ளை

விடியக்காலமையும் குருவிக் காவலுக்கு போட்டுது.”

செண்பகம் வாய்கு வந்தபடி பேசிக்கொண்டு தன் கருமங்களில் கண்ணுங்

கருத்துமாயிருந்தாள்.

“அம்மா இத்தினை நாளும் நான் விடிய நாலு மணிக்கெல்லாம் எழும்புறனான்தானே

இப்பதானே இப்பிடி கனநேரம் நித்திரை கொள்ள கிடைச்சிருக்குது…கேட்டால் வேளைக்கு

எழும்பி செய்து தருவன்தானே அதுக்கேனணை இப்பிடி கத்துறாய்…”

“அதில்லை மோனே கொப்பா வயலுக்கு வரப்பு வெட்ட போனவர்…சுமதியும் குருவிக்

காவலுக்கு குளத்தடி வயலுக்கு போட்டாள். சாப்பாடு கொண்டுபோக வேணும்…சிறுபோக

விதைப்பெண்டால் சும்மாயே…”

“நான் இண்டைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகட்டே அம்மா…”

“என்ன மோனே லு}சுத்தனமாய் கதைக்கிறாய் கொப்பான்ரை குணம் தெரியும் தானே

வயல் பக்கம் உன்னை விடக்கூடாதெண்டு பொத்திப் பொத்தி அந்தாள் வளக்குது நீ என்னண்டால்…”

“இப்ப படிப்பு இல்லைத்தானேயம்மா ஒருநாளைக்கு…”

“முதல்லை நீ எழும்பி முகத்தை கழுவி குளி பாப்பம். உன்ரை வேலையை மட்டும்

நீ ஒழுங்காய் செய்தால் அதுவே கோடி புண்ணியம்…”

வெங்காயம் வெட்டிப் போட்டு பால் விட்டு கரைத்த பழங்கஞ்சிப் பானையை எடுத்து

பையில் வைத்தபடி…சுமதிக்கு போட்டு வைத்திருந்த புட்டுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு,

“நான் போட்டு வாறன் மோனே…”

என்றபடி செண்பகம் நடக்கத் தொடங்கினாள்.

“அம்மா நான் இண்டைக்கு காசிக்குஞ்சியோட பாலைப்பழம் வெட்ட காட்டுக்கு போறன்…

அப்பாட்டை நேற்றைக்கே சொல்லிட்டன் அவர் போகச்சொல்லி சொன்னவர்

எதுக்கும் ஒருக்கால் இப்பவும் சொல்லி விடுங்கோ…”

செண்பகம் தொலைவில் சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தவள்

தானும் காட்டுக்கு போக வெளிக்கிட்டாள். இதுவரை நாளில் அவள் பலமுறை

பாலைப்பழம், வீரைப்பழம், உலுவிந்தம்பழம், கரம்பைபழம் பிடுங்க காட்டுக்கு

போயிருக்கிறாள். அப்ப எல்லாம் தகப்பன் பக்கத்துணைக்கு போவது வழக்கம்.

முதன்முறையாக தந்தையின் துணையின்றி காட்டுக்கு போகப்போகிறாள்.

“காசியண்ணையோடை எண்டால் பயமில்லை போட்டுவா…”

என்று தந்தை கூறியதுமுதல்

அவளுக்கு எப்ப விடியும் எப்ப காட்டுக்கு போகலாம் என்றிருந்தது. இப்போது

அதற்காக காத்திருக்கிறாள்…

காசி பெரிய வேட்டைக்காரன் “குஞ்சி” என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும்

அவரைத் தெரியும். “காசிக்குஞ்சி” என்றுதான் சின்ன வட்டனுகள் முதல் பெரிசுகள்

வரை அவரை அழைப்பது வழக்கம். ஏந்தப் பெரிய மிருகம் என்றாலும் காசியை கண்டால்

ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிடுமளவிற்கு பெருத்த உடம்பு பலம் கொண்ட

மனிசன் அவர். கறுத்து பருத்த உடம்பு சுருண்டு திரண்ட கேசம் என காசியின் தோற்றமே

முதலில் பார்த்தவர்களுக்கு வயிற்றில் புளிகரைக்கும். ஆனால் அந்த உருவத்தினுள்

இத்தனை தயவு தாட்சணியமா என்பதை அவருடன் பழகிப் பார்த்தவர்கள்தான்

புரிந்து கொள்ள முடியும்.

நீண்ட நேரமாக காத்திருந்த சுரபிக்கு இருப்புக்கொள்ளவில்லை எழுந்து அங்குமிங்குமாக நடந்தாள்.

காட்டுக்குப் போவதற்கான அடுக்குகளை எடுத்துக்கொண்டு வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வேலிக் கடப்பை கடக்க… அவள் சற்றும் எதிர்பாராத விதமாக…

காற்று வீசும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.