Jump to content

முல்லைத் தீவை நோக்கி அமெரிக்கப்படைகள்


Recommended Posts

தமிழச்சி தயாவுக்கு எதிராக இப்ப சிலர் வரப்போகிறார்கள்.

இங்கை விண்ணாணம் பாக்க சிலர் அடிக்கடி வந்து போறவை போகிற போக்கிலை புலிகளை பலப்படுத்த வேணும் எண்டு அறிக்கை விடுகிறது அவர்களின் பொழுது போக்கு....

மக்கள் இப்ப மட்டும் இல்லை இதுக்கும் முன்னமும் பங்களிக்குது பலப்படுதுகிறார்கள் இப்பவும் செய்கிறார்கள் இனியும் செய்வார்கள்... ஆனால் உந்த விண்ணான கூட்டம் நினைக்கிறது தாங்கள் யாழுக்கை விட்ட அறிக்கையாலைதான் மக்கள் பங்களிப்பு செய்கிறவை எண்டு... அவைக்கு வேணும் எண்டால் நான் சொல்லுறது கோபத்தை வரவளைக்கலாம்...

உண்மை எண்டது எப்படி இருக்கிறது எண்டால்... நோர்வேயும் இந்தியாவும் புலிகள் பலமிளந்து போட்டார்கள் ஆகவே ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைய வேண்டும் எண்டு கேட்டார்கள்... அதுக்கு புலிகள் என்ன செய்தார்கள் எண்றால் முன்னொரு காலத்தில் புலிகளின் ஆயுத களைவு பற்றி கேட்ட கேள்விக்கு சொல்லும் பதிலை ஒளிப்படமாக வெளியிட்டார்கள்...

அதை பாருங்கோ...

இது வந்து மக்கள் போராட்டம்... யாரும் தங்களை பலப்படுத்தி கொள்ள வற்புறுத்தி நிதியை மக்களிட்ட இருந்து புடுங்க இல்லை... ஆனாலும் தேவைகள் என்ன என்பதை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதில் தயா அவர்களே,

மெளனம் என்பது பலவீனம் அல்ல......தலைவர் அதை நிச்சயம் நிரூபித்துக்காட்டுவார்.

Link to comment
Share on other sites

உது என்ன மாதிரி எண்டால் இந்தியாவிட்ட "நீ ஆயுதம் தராட்டில் பாகிஸ்தானிட்டயோ சீனாட்டியோ வேண்டிப்போடுவன்" எண்டு வெருட்டு நாடகம் "கடசியில எல்லாம் இந்தியாதான்" மாதிரித்தான் தெரியுது. ஆனா ஆர் உதவி செய்ய வெளிக்கிட்டுப் போட்டு உபத்திரவம் தாறதெண்டு நில்லாமல் வன்னிக்குப் போய் நடக்கிற ஆமியோட அக்கிரமங்கள வெளியில உண்மையாச் சொன்னா கோடி புண்ணியம்.

உவயள் அத்தன சனங்களயும் முல்லத்தீவில இருந்து கப்பலில ஏத்தவேணுமெண்டு சொல்லுகிகினம். வன்னிச்சனங்களோட விருப்பு வெறுப்புக்கள அறிஞ்சவையா? வன்னி அந்த சனங்களோட சொந்த பூமி. சிங்களவனோட ஆமியோ ஆக்கிரமிப்பாளானா ஏலியனா பாக்கப்படுகிற இனவெறியர்கள். அவங்கள நம்பி சனங்கள் போகுமா? ஒருக்கா ஏத்திப்பறிச்சா அதுகளோட பாதுகாப்புக்கு ஆர் உத்தரவாதம்? நாளைக்கு அதுகள் காணாமல் போனா யார் பதில் சொல்லுவது?

Link to comment
Share on other sites

தேசத்தின் குரல் பாலா அண்ணா அன்று சொன்னது என்றும் பொருந்தக்கூடியது. இணைப்பிற்கு நன்றி!

இந்தியப் படை தமிழீழத்தில் ஆக்கிரமிப்பைத் தெடங்கியபோது தலைவர் சொன்னது "இலங்கைப் படைகள் பயன்படுத்துவது 5.56, 7.62 ரவைகள். இந்தியப்படைகள் பயன் படுத்துவதும் 5.56,7.62 ரவைகள் தான். ஆனாலும் என்ன எண்ணிக்கையில் அவை சில மடங்குகள் அதிகமாயிருக்கும்...." என்று. இத எமது மன உறுதியை அதிகரிக்கச்செய்யும் வரிகள்.

அமெரிக்கன் வந்தாலும் இதே ரவைகள்தான் ஆனால் பல மடங்கு அதிகமாயிருக்கும்.

ஆயினும் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் பரப்புரைகளினூடாக நாம் பலவற்றைச் சாதிக்கமுடியும். முயல்வோம்... வெல்வோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மீட்பு படை யை எங்கள் தாயக மீட்புக்குப் பயன்படுத்தலாம். வன்னி வாழ் மக்கள் நாங்கள் எங்கள் சொந்த மண்ணை விட்டு வரமாட்டோம் என்று ஒன்றாகக் குரல் கொடுத்தால் இவர்களால் என்னசெய்ய முடியும். கட்டாயப்படுத்தி கப்பலில் ஏற்றுவாகளா? அல்லது இலங்கை அரசு போல் குண்டுகள் பொழிந்து மக்களை கொன்று கொலை வெறித் தாண்டவம் ஆடுவார்களா?

இந்த இரண்டுக்கும் மேற்குலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா நாடுகளில் மக்கள் கொடுத்த அடியை அந்த நாடுகளின் ஆட்சி மாற்றங்கள் காட்டுகின்றன. எனவே இவற்றைச் செய்ய மாட்டார்கள். கால வைத்து விட்டு சும்மா திரும்ப முடியுமா? ஏதாவது செய்ய வேணும் அல்லவா? என்ன செய்வார்கள்.. நமது மக்களுக்கு ஆதரவாக செயல்பட முனைவார்கள்.

எனவே என்னைப் பொறுத்த மட்டில் சர்வதேசக்தின் இந்த நகர்வை எங்களுக்குச் சாதமாக்கலாம். இக்கட்டுகளில் கூட வெற்றியை எட்டிப்பறிப்பதில் ராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வல்லுனர்களான புலிகள் அதுக்கான முன்னெடுப்பை மேற்கொண்டு இருப்பார்கள் என்றே தோறுகிறது. நாமும் நம் பங்குக்கு ஏதாவது உருப்படியாகச் செய்வோம்.

வன்னியை அடங்காப் பற்று என்று மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த நகர்வின் மூலம் எங்கள் விடுதலைப் போர் வன்னிமக்கள் தோள்களில்...

Link to comment
Share on other sites

யாரை யார் மீட்பது? ஏற்கெனவே ஒரு அமைதிப்படையைக் கண்டோம். அது செய்யாத அட்டூளியங்களா? இப்போது மீட்புப்படை, முதலை வாயில் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட உவையளிண்ட கதையை பாரன்.............. :unsure: நீ என்ன பெரிய ##### என்று யாரும் கேட்கக்கூடாது ) முல்லைத்தீவு சனத்தை மீட்கிறதுக்கு நான் முழு ஆதரவு தாறன் ஆனால் ஓன்று அவயலை எல்லாம் உங்கட கப்பலில ஏத்திட்டு கப்பல் நேர அமிரிக்காக்கு போகணும் அங்க அவையள் நிம்மதியா நியுயோர்க்கில வாழுறதுக்கு வீடு படிப்பு சாப்பாடு மருத்துவவசதி எல்லாம் செய்யணும் முடியுமா? (கேட்குது எனக்கு கேட்குது நீங்க சொல்லுறது கேட்குது " நீங்கள் கேட்டதுகள் எங்களுக்கே தொடர்ந்து கிடைக்குமா என்று தெரியல இதில நீங்கள் வேற நான் வரல உந்த விளையாட்டுக்கு ")

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மண் எமது சொந்த மண் அங்கே மக்கள் அமைதியாய் வாழுறதுக்குரிய ஏது நிலைகளை உருவாக்குறத விட்டிட்டு காலம் காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு போகச் சொல்லுறது என்ன நியாயம்.உங்களுக்கு தைரியம் இருந்தால் இராணுவத்தை அவையட பழைய இடங்களக்கு போகச் சொல்லுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

எந்த ஒரு நாட்டுப் படையும் வன்னியில களம் இறங்கப் போற‌தில்லை.

அமெரிக்காவினுடைய பசுபிக் படைப்பிரிவு மக்களை நகர்த்துவதற்கு உதவி கோரப்பட்டால் எப்படி கடற் கலன்கள், மருத்துவ வசதிகள் செய்வதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருப்பதற்கு ஆயத்தங்களைச் செய்கின்றது என்ற ரீதியில் தான் கருத்து வந்துள்ளது. ஏனென்றால் 250,000 ம‌க்க‌ளை ந‌க‌ர்த்துவ‌து ஒரு பெரிய‌ முய‌ற்சி.

இது கிட்டத்தட்ட சுனாமி கால உதவிக்குச் சமன்.

ஆன‌ல் இந்திய‌விற்கு விய‌ர்த்துக் கொட்டுவ‌தற்கு ஞாய‌ம் இருக்கின்ற‌து.

Link to comment
Share on other sites

காலம் காலமாக வன்னி மக்கள் வாழ்ந்த மண். அவர்கள் ஏன் வேறு இடங்களுக்கு போக வேண்டும்? மக்கள் மேல் நடாத்தும் தாக்குதல்களை நிறுத்துவதை விட்டு விட்டு கப்பலை கொண்டு வந்து என்ன செய்யப்போகிறார்கள் அமெரிக்கர்? தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறிந்து தான் செயற்படுகிகிறார்களா என ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.