• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார். இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும். இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார். சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார். இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார். இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.
    • அவர்கள் ஊறுகாய், கறிவேப்பிலை இல்லை, மிகவும் பெறுமதி மிக்க தேயிலை கொழுந்துகள். அதுதான் அவர்களை லம்ப்பா ஒரு தொகை பேசி கோட்டவுக்கு விற்று விட்டோம் 😂
    • எனக்குத் தெரிந்த மட்டில், 1. ஹை கொமிசனுக்கும், எம்பசிக்குமான வித்தியாசம் அமெரிக்க, பிரித்தானிய வேறு பாட்டால் வந்தது அல்ல. பழைய காலத்தில் ஒரு ராஜ்ஜியத்தில் இருந்து இன்னொரு ராஜ்ஜியத்தில் போய் தூதுவராக இருப்பவரை அம்பாசடர் என்றார்கள். இப்போதும் லண்டனில் இருக்கும் பிரெஞ்சு தூதரகம் எம்பசிதான். தூதுவர் French ambassador to the UK. அமெரிக்கா நாடாவதற்கு முன்பே அம்பாசடர், எம்பசி எனும் சொற்கள் பழக்கத்தில் வந்து விட்டன. 2. பிரித்தானிய சாம்ராஜ்யதுக்கு கீழ் வந்த நாடுகளில் மன்னரின் பிரதிநிதிகள்  3 வகை பட்டனர். கவர்னர்-ஜெனரல் (இந்தியாவில் வைஸ்ரோய்). இவர்கள் பிரித்தானிய நேரடி ஆளுகை/டொமினியன் தேசங்களை ஆண்டனர் ( பிரிடிஸ் இந்தியா). கவர்னர் - ராஜாக்களின் கீழ் வந்த சமஸ்தானக்களில் பிரித்தானியாவின் பிரதிநிதி. ஹைகொமிசனர் - பிரித்தானிய முடியின் நேரடி ஆளுகைக்குள் வராத ஆனால் பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த தேசங்களில் பிரித்தானிய முடியின் பிரதிநிதி. 3. பொதுநலவாயம் அமைந்த போது, பெரும்பாலான நாடுகள் குடியரசாக இல்லாமல் - நாட்டின் தலைவியாக ராணியை கொண்டிருந்தன (கனடா, அவுஸ், நீயூசிலாந்து இப்போதும்). எனவே இந்த நாடுகளிடையேயான தூதர்கள், ஒரே ராணியின் தூதர்களே. அவர்களை அம்பாசடர் என அழைக்க முடியாதல்லவா? எனவே ஹைகொமிசனர் என்றார்கள். 4. காலப்போக்கில் இந்தியா, இலங்கை என பலநாடுகள் குடியரசாகிய போதும், பொதுநலவாயத்தில் தொடர்வதால் - ஹைகொமிசனர் எனும் பதம் தொடர்கிறது. 5. முன்னைய குடியேற்ற நாடுகள் ஆனால் பொதுநலவாயத்தில் இல்லாத நாடுகளும் (அமெரிக்கா, அயர்லாந்து), ஒரு போதும் பிரிடிஸ் சாம்ராஜ்யத்யில் வராத நாடுகளும் ( பிரான்ஸ், சுவீடன், தாய்லாந்து, ஜப்பான்) தொடர்ந்தும் அம்பாசடர்/எம்பசி என அழைக்கப்படுகிறன. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.  யாழில் இருப்பதை ஒத்த ஒரு துணைத் தூதரகம் கண்டியிலும் உண்டு.  Downgrading/upgrading status of embassies - நாடுகள் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் - ஆனால் இது இந்தியாவால் இலங்கையில் செய்யப்படுகிறதா? என்பது கேள்விக் குறியே.
    • இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை  பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள்  தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள். இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால்  என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை.  இந்த வியாக்கினத்தின் படி  சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள்.