Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குறுக்கு வழிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-1

iexplore, iexplore www.yarl.com, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2,

cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a,

இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்து விளைவை பார்க்கவும். பல புறோகிறாம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ அல்லது முற்றுத்தரிப்போ இடப்படக்கூடாது

Also Please see page 2

Link to post
Share on other sites
 • Replies 358
 • Created
 • Last Reply

realplay என்று போட்டேன். கண்டுபிடிக்கேலல்லை என்ற வருகுது தேவகுரு அண்ணா நீங்கள் தான் சொல்லோணும் நான் என்ன செய்ய?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-2

இளங்கோ அவர்களே!

நான் வின் 2000 யே எனது கணணியில் பாவிக்கின்றேன். றன் பெட்டியில் realplay எனத்தட்டச்சு செய்தால் realplayer இயங்க ஆரம்பிக்கின்றது. எனது கணணியில் realplayer ஐ இன்ஸ்டால் செய்துள்ளேன்

மேலும் சில விடயங்களை தருகின்றேன். மைக்கிறோசொவ்ற்றின் அநேகமான புறோகிறாம்களுக்கு இது பொருந்தும். வேட்டில் ஏதாவது டொக்கியுமென்டில் வேலை செய்யும்போது ஆல்ட்+0188 என கீ பண்ணினால் 1/4 வரும்

ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்

ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.

இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை தேவை ஏற்படின் உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்

0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,

ஆல்ட் உடன் கீ பாட்டில் உள்ள இலக்க கீக்களை மாத்திரம் பயன்ப்டுத்த்வேண்டும். அதிசயமாக உள்ளதா? பயன்பெறுங்கள். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா வந்தார் தேவகுரு

உண்மையிலேயே அதிசயம்தான்

உங்கள் முயற்சிக்கும் அதை எம்முடன் பகிரிந்தமைக்கும் நன்றிகள்

Link to post
Share on other sites

ஓ அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்

நான் நினைத்தேன் realpayer ஐ install பண்ணாமலே குறுக்குவழியில் realplayer ஐ இயங்க வைக்கலாம் என்று.

நான் நல்லாய் ஏமாந்துவிட்டேன் :)

alt தகவல் நன்று

நன்றி

தாத்தாவும் யாழும் இங்கு alt தான்

என்ன ஒரு 50, 55 இருக்குமா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தாவும் யாழும் இங்கு alt தான்

என்ன ஒரு 50, 55 இருக்குமா?

install பண்ணாமலே run பண்ணக்கூடிய வயது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா

அடிக்கடி ரன் செய்யாது . . . .

தாத்தாவும் யாழும் இங்கு alt தான்  

என்ன ஒரு 50, 55 இருக்குமா?

install பண்ணாமலே run பண்ணக்கூடிய வயது
Link to post
Share on other sites

iexplore, iexplore www.yarl.com, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd,  

gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr,  

இவை அப்படியாக இயங்குவதன் வழிமுறையை அல்லது எப்படி இயங்குகிறது என்று விளக்கினால் என்னைப் போன்றவர்கள் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.முடிந்தால் தாருங்கள்.உதவியாக இருக்கும்

charmap எனும் சிறிய புரோகிராம் உங்கள் கணணியில் இருக்குமானால் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் உரிய பல அறியப்படாத எழுத்துக்களைக் காணலாம் என்று சொல்கிறார்கள்.அதாவது

ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்  

ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.  

இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை தேவை ஏற்படின் உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்  

0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,  

இவை என்ன வடிவத்தில் இருக்கும் என்பதை பார்த்துவிட்டு பின்னர் கொப்பி பேஸ்ற் அல்லது அந்த இலக்கத்தினைப் பார்த்துவிட்டு தேவகுரு அவர்கள் சொன்னது போன்று ஆல்ட் பொத்தானுடன் இணைத்தும் பெறலாம் என்று ஒரு நண்பர் சொன்னார்.

முயற்சித்துப்பாருங்கள்.

RUN எனும் இடத்தில் charmap என்று ரைப் செய்து,

அல்லது START > PROGRAMS > ACCESSORIES > SYSTEM TOOLS > CHAR MAP ஐ தெரிவு செய்தும் பார்க்கலாம். [windows xp]

அடிக்கடி தேவையென்றால் CHAR MAP ஐ கொப்பி செய்து உங்கள் desktop ல் இணைத்துக்கொண்டால் ஒரே க்ளிக்கில் புரோகிராம் வேலை செய்யும்.

முயற்சித்துப் பாருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களிற்கு நன்றி வீரா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-3

ஒரு பந்தியை வெட்டி,அல்லது கொப்பி பண்ணி பேஸ்ற் பண்ணும் போது அது கிளிப்போட்டுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அது அங்கு அகற்றப்படும்வ்ரை அல்லது இன்னொரு செய்தி கொண்டுவரப்படும்வரை பதியப்பட்டு கிடக்கும்.ஆனால் அது தற்காலிகமானது.

கிளிப்போட்டில் உள்ளதை எந்த டொக்கியுமென்டிலும் பேஸ்ற் பண்ணலாம்.

கிளிப்போட் என்பது ஒன்று, கிளிப்புக் என்பது இன்னொன்று.ஆனால் கிளிப்புக்கை திறந்தால் அங்கே கிளிப்போட்டையும் அதில் பதியப்பட்டுள்ள செய்தியையும் காணலாம்.எனவே கிளிப்போட்டில் உள்ளவற்றை கிளிப்புக்கின் ஒவ்வொரு பக்கங்களிலும் நிரந்தரமாக பதிந்து பாதுகாக்கலாம். அப்பக்கங்களுக்கும் ஒவ்வொரு பெயரும் கொடுக்கலாம். தேவையெனில் இவைகளை கோப்புக்களாகவும் வின். எக்ஸ்புளோரருக்கும் கொண்டுசெல்லலாம். கோப்புக்களின் எக்ஸ்டென்ஸன் .clp என்பதாகும். மற்ற கொம்பியூட்டர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். மேலதிக விபரம் வேண்டின் ஸ்ராட், றன் ஐ கிளிக் பண்ணி clipbrd என ரைப்பண்ணி உதவி ஐ பார்க்கவும்

start-->Run-->type "clipbrd"--> Help (for more details)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-4

உங்கள் கம்பியூட்டர் மெதுவாக வேலைசெய்கிறதா? கவலை வேண்டாம். Overclocking செய்யலாம்.

ஒவர் க்ளொக்கிங் என்பது For eg:- செலிறோன் 366 Mhz ஐ 450 Mhz ல் செயல்படவைப்பது அல்லது பென்டியம் 11 266 Mhz ஐ 350 Mhz ல் செயல்படவைப்பது.

க்ளொக் ஸ்பீட் into க்ளொக் மல்ரிபிலையர் = சிபியு ஸ்பீட்

இந்த இரண்டில் ஒன்றை அதிகரிப்பதின் மூலம் சிபியுவின் வேகத்தை அதிகரிக்கலாம்'

விபரம் வேண்டுவோர் கீழ் காணும் லிங்கிற்கு செல்லவும்

http://www.ciol.com/content/search/showart...?arid=19442&way

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கரக்ட்டர்மப் எனும் சிறிய புரோகிராம் உங்கள் கணணியில் இருக்குமானால் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் உரிய பல அறியப்படாத எழுத்துக்களைக் காணலாம் என்று சொல்கிறார்கள்

சில எழுத்துருக்களில் எழுதுவதற்கு உரிமை கொடுக்கப்பட்டாமல் இருக்கும் அப்படியான எழுத்துருக்களில் டைப் செய்தால் ஆங்கிலத்தில் தான் எழுத்து வரும். இதுபோன்ற எழுத்துருக்களைப்ப பயன்படுத்த இந்த கரக்ட்டர்மப்பை பயன்படுத்தலாம். ஆனால் அதிக சிரமப்பட வேண்டி இருக்கும். ஒவ்வொரு எழுத்தையும் தேட வேண்டும். அதிகப்படியாக தலையங்கங்;களை வேண்டுமென்றால் டைப்பசெய்யலாம். ஆனால் இம்மாதிரி எழுத்துருக்கள் சாதாரண எழுத்துருபொன்று இல்லாது அலங்காரத்துடன் காணப்படும். உதாரணமாக திருமணஅழைப்பதல்களில் பயன்படுத்துவது போன்றதொரு எழுத்துரு.

கரக்ட்டர்மப் சிலவேளைகளில் இன்ஸடால் செய்யபடாமல் இருக்க வாய்ப்பு உண்டு.நீங்களே இதை இணைத்துக்கொள்ளலாம்.

இதுவழக்கமாக

programme accessories>systemtool>charactermap

காணப்படும் இல்லை என்றால் நீங்களே இதை இணைத்துககொள்ளலாம்.

settings>controlpanel>addremoveprogramme>systemtools>charactermap

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-5

இதோ மீண்டும் ஒறு குறுக்கு வழி!

ஒரே அடியில் நூற்றுக்கணக்கான கோப்புக்களை திறக்கவேண்டுமெனில் போங்கள்,

ஸ்ராட்--> எக்ஸ்புளோரர் -->+C: (தேர்வு)

சீ டிரைவின் இடப்புறம் கூட்டல் அடையாளம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இப்போ நியூமெறிக் கீபாட்டில் உள்ள ஸ்ரார் கீயை தட்டவும். ஸ்குறோல் பார் ஓடி நடுங்கி பின் நிலைக்கு வரும். பயப்படவேண்டாம். சீ டிறைவின் கீழ் உள்ள அத்தனை கோப்புக்களும் உப கோப்புக்களும் திறந்து கிடப்பதை காணலாம்.

இதேபோல் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஏதாவது ஒரு கோப்பை தெரிவுசெய்து நியூமெறிக் கீபாட்டில் உள்ள ஸ்ரார் கீயை தட்டினால் அதன் கீழ் உள்ள உப கோப்புக்களும் அதன் கீழ் உள்ள உப உப கோப்புக்களும் ஒரே முறையில் விரியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் தேவகுரு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-6

கம்பியூட்டர் திரையில் காணும் காட்சிகளை கோப்பாக்கவோ அல்ல்து பிரிண்ட் செய்யவோ விரும்புகிறீர்களா?

வேண்டிய காட்சியை திரைக்கு கொண்டுவாருங்கள். பிரிண்ட் ஸ்கிறீன் என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போ காட்சி கிளிப்போட்டில் பதிவாகிவிடும். இத்தொகுப்பை விட்டு வெளியேறி எம். எஸ். பெயிண்டை திறக்கவும்.File-->New-->Paste பண்ணவும் படம் பெரிதாக உள்ளது. பரவாயில்லையா என கேட்கும். ஆம் என கூறவும். வேண்டிய மாற்றங்களை செய்யவும். செலக் டூலை பயன்படுத்தி வேண்டிய அளவை வெட்டி புதிய ஒரு பக்கத்தில் ஒட்டி வேண்டுமானால் விளக்க குறிப்பை சேர்த்து அல்லது வேறு சிறிய படங்களையும் சேர்த்து, கோப்பாக சேவ் பண்ணலாம் அல்லது பிறிண்ட் எடுக்கலாம்.

Thanks

Please see the second page also

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன வயதில் நிறைய தடவைகள் குறுக்காலை போனதுகள் என திட்டு வேண்டியதுண்டு

இப்ப இப்படி போறதாலை எவ்வளவு நன்மைகள்.

நன்றி தேவகுரு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-7

உங்கள் உலாவியின் லிங் பாரில் நீங்கள் அதிகம் பாவிக்கும் வெப்தள முகவரியை பட்டன்போல் போட்டுவைத்து பாவிக்க விரும்புகிறீர்களா?

இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில், அட்றஸ் பாரில், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தளமுகவரியின் ஐகொன் ஐ நேரடியாக இழுத்து லிங் பாரில் போடவும். விரும்பியபோது டிலீற் ஐ கொடுத்து அழித்தும்கொள்ளலாம்

இதேபோல் வெப்தளத்தில், Favorites கோப்பில், டெஸ்க்ரொப்பில் உள்ள லிங் ஐயும் இழுத்துபோடலாம். மிகவும் வசதியாக இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன விடயம்தான் .ஆனால் இன்று இதைப் பார்த்துதான் முயற்சித்துப்பார்த்தேன்.

தகவலுக்கு நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-8

ஒரு கட்டுரையை அல்லது அதன் ஒரு பந்தியை அல்லது அதன் ஒரு சொல்லை அல்லது அதில் ஒரு எழுத்தை தேர்வு செய்ய பல வழிகள் உள்ளன. பலரும் பாவிப்பது மவுசால் அழுத்தி இழுப்பது அல்லது ஸ்ராட்->எடிட் ஆல் ஐ பாவிப்பது.

இவை தவிர மேலும் பல வழிகள் உள்ளன

அழுத்தவும்........................................................................... முடிவு

சிவ்ற்+இட அல்லது வல அம்புக்குறி......................... ஒவ்வொரு எழுத்தாக

சிவ்ற்+மேல் அல்லது கீழ் அம்புக்குறி.......................... ஒவ்வொரு வரியாக

சிவ்ற்+கொன்றோல்+இட அல்லது வல அம்புக்குறி........சொற்களாக

சிவ்ற்+கொன்றோல்+மேல் அல்லது கீழ் அம்புக்குறி.......பந்தி பந்தியாக

கொன்றோல்+அ....................................................

........கட்டுரை முழுமையாக

இவை தவிர நான் அதிகமாக பாவிக்கும் இன்னொரு இலேசான வழியும் உண்டு

வேண்டிய இடத்தில் ஒரு கிளிக் செய்துவிட்டு எங்காவது இன்னொரு இடத்தில் சிவ்ற் ஐ அழுத்திக்கொண்டு கிளிக் செய்தால் இடைப்பட்ட பகுதி முழுவதும் தேர்வாகும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-9

வின்டோஸ் 2000, 98, 95, மில், எக்ஸ்பி பாவிப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமான ஒரு கருத்துக்களத்தின் லிங் கீழே தரப்பட்டுள்ளது. இதில் வின்டோஸ் 2000 பற்றி மாத்திரம் 1500 கு மேற்பட்ட கம்பியூட்டர் சம்பந்தப்ட்ட பிரைச்சனைகள் பற்றி போஸ்ட் செய்துள்ளார்கள். அதற்கு உரிய தீர்வுகளும் தரப்பட்டுள்ளன.மிகவும் பிரயோசனமான தளம் இது. ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் போதுமானது, சகல பிரைச்சனைகளும் அலசப்பட்டுள்ளன, போய்ப்பாருங்கள். வின்டோஸ்98, 95, மில், எக்ஸ்பி ஆகியவற்றுக்கு வெவ்வேறு பக்கங்கள் உள்ளன

http://annoyances.org/exec/forum/win2000

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்டோஸ்2000 ஆரம்பிக்கும்முன்

கொடுத்த இரகசியசொல்லை தொலைத்துவிட்டார் இப்பொழுது உள்ளே போகமுடியாமல் உள்ளது

எப்படி உள்ளே செல்லலாம்

கணனி லப்ரொப் தொசிபா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எச்சரிக்கை: தயவு செய்து இதனை உங்கள் தனிப்பட்ட கணணிக்கு மட்டும் பாவிக்கவும். எவ்வகையான தவறான பயன்பாட்டுக்கும் நான் பொறுப்பாளியல்ல :P

நீங்கள் windows 2000 system உள்ள கணணி

FAT file system எனில்

1. windows 95 அல்லது windows 98 startup disk ஐப்போட்டு உங்கள் கணணியை start செய்யவும்.

2. இனி C: driveற்கு மாற்றிக் கொள்ளுங்கள்

3. இனி c:winntsystem32config directory மாற்றிக் கொள்ளுங்கள்

(cd winnt enter அடிக்கவும்

cd system32 அடிக்கவும்

cd config அடிக்கவும்)

இங்கு SAM என்ற பெயருள்ள File இனை அழித்துவிடுங்கள். (தேவைப்பட்டால் இதன் பிரதி ஒன்று எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்). இந்த File இனை அழித்த பின்னர் கணணியை restart செய்தால் password இல்லாது கணணியில் போகமுடியும்.

NTFS file system எனில்

இந்தக் கணணியில் உள்ள hardisk இனை இன்னொரு கணணியில் slave ஆக இணைத்து மேலே குறிப்பிட்ட file இனை அழியுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாமி அவர்களே

நான் தவறாக கூறிவிட்டேன்

பியோஸ் பகுதிக்கு செல்வதற்கான

இரகசியசொல் தெரியாமல் உள்ளது எப்படி பியோஸ் பகுதிக்கு சென்று அங்கு சில

மாற்றங்களை செய்யமுடியும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-10

ganesh அவர்களுக்கு!

மேலே உள்ள உங்கள் கேள்விக்கு உரிய விடையை www.annoyances.org ன் கருத்துக்களத்திலிருந்து அப்படியே கேள்வி பதிலாகவே பிரதி எடுத்து தந்துள்ளேன்.

Question: - My BIOS is password protected from when a friend of a friend upgraded my PC from 98se to ME. I have been told to remove the battery from the BIOS or CMOS to fix, any suggestions

Answer: - You were told right. Remove the battery from the motherboard for about 15 min. then put it back in. There may also be a jumper on the motherboard you can set that will do it but the time you spend finding that out would be better spent just removing the battery. If you or your friend knows the BIOS password, there should be a setting in BIOS to clear it. The battery will be a big watch-style battery. About the size of a nickel or quarter. Be very careful not to break anything taking it out, sometimes they are tricky.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-11

நாளாந்தம் இ-மெயில் அனுப்புகின்றவரா நீங்கள்?

அழைத்தவுடன் உங்கள் இ-மெயிலரை கண்முன் காண ஆசையா? சரி.

கிளிக் ஸ்ராட் -> றன் -> mailto: என ரைப்பண்ணி O.K பண்ணுங்கள். ஜாஹுவா? இல்லை ஹாற் மெயிலா? எதுவானாலும் சரி உடன் திரையில் வந்து நிற்கும்.

அடுத்த நாள் றன் பெட்டியில் mailto: தானாகவே காட்சியளிப்பதை காண்பீர்கள். காணாவிடின் வல பக்க முக்கோணத்தை கிளிக் செய்து தேர்வு செய்து O.K பண்ணவும்.

நேரடியாக மெயிலரை அழைக்கும் முறை இது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மறக்கமுடியாத சில பெனால்ட்டி உதைகள் .....!   😂
  • எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே
  • கக்கூஸ் கழுவுவதில்  கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் ஒரே நேர் கோட்டில்தான் இருக்கின்றார்கள்.(பெரியபிரித்தானியா,கனடா மேட்டுக்குடிகளை தவிர்த்து) இப்போது அதே நேர்கோட்டில் உங்களைப்போன்ற சீமான்களும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.👌🏽 நான் என்றுமே தொழிலை தொழிலாக பார்க்கின்றவன்.தொழிலை கேவலமாக பார்ப்பவன் அல்ல.  இருந்தாலும் சிங்களத்தின் நடவடிக்கையில் சந்தேகம் வைத்திருப்பதில் தவறில்லைத்தானே ஐயாமாரே.....⁉️ கெக்...கெக்...கெக்....கெக்  சிரிக்கிறனாம். நான் ஒரு முறை இங்கே தொழில் கோப்பை கழுவுதல் என எழுதியதற்கு ஒரு கள உறவு நக்கல் அடித்தார் பாருங்கோ சொல்லி வேலையில்லை. அவர் இன்று யாழ்கள நன்னடத்தை ஆலோசகராக இருப்பது வேறை லெவல்.😜
  • அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக.. யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொதுத்துறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து பட்டப்பின்படிப்பை நிறைவுசெய்துள்ளார். (Master of Laws (LLM), Public International Law from the University of London.)  தவிரவும் பிரித்தானியாவின் அரச துறையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். 2017 to present – Cabinet Office, Director, Grenfell Tower Independent Public Inquiry 2015 to 2017 – Department of Business, Energy and Industrial Strategy, Director of Strategy and Change, The Insolvency Service 2011 to 2015 – Ministry of Justice, Deputy Director of Strategy and Change, HM Courts and Tribunal Service 2010 to 2011 – Ministry of Justice, Deputy Head of Offender Management Strategy 2010 – Ministry of Justice, Secretary to the Omand Review 2007 to 2010 – Ministry of Justice, Private Secretary to the Minister of State for Justice 2004 to 2007 –  Department for Constitutional Affairs, Policy Advisor 2000 to 2001 – 9 King’s Bench Walk and 1 Inner Temple Lane, Barrister, Pupillage 1999 to 2000 –  University of London, Master of Laws (LLM), Public International Law 1999 –  Called to the Bar of England and Wales 2021 ஜனவரிமாதத்தில் பிரித்தானியாவின் உயர்பதவிகளில் ஒன்றான ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ள  டிலானி டானியல் செல்வரட்ணம் அவர்களுக்கு உரிய அதிகாரம் என்பது ஒப்பீட்டளவில் ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது. His Excellency, the Governor, is the representative of Her Majesty the Queen and the Constitutional Head of State in Anguilla. The constitution gives the Governor certain responsibilities which include oversight for external affairs, defence, internal security and international financial services or any directly related aspect of finance. They are also the presiding officer of Executive Council. http://athavannews.com/wp-content/uploads/2020/12/Anguilla1-428x224.jpg அங்குவெலாவும்  (Anguilla) அதன் பின்னணியும் ஒரு பார்வை… அங்குவெலா  (Anguilla)  என்பது கரீபியனில் (Caribbean) அமைந்துள்ள  பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும். (British overseas territory) புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)  மற்றும் வேர்ஜின் தீவுகளுக்கு கிழக்கே செயிண்ட் மார்ட்டினுக்கு (Saint Martin) நேரடியாக வடக்கே அமைந்துள்ள லெஸ்ஸர் அண்டிலிஸில் உள்ள லீவர்ட் தீவுகளில், வடகிழக்கில்  அமைந்துள்ள மிகவும் முக்கியமான தீவாகும். அங்குவெலா  (Anguilla)    என்பது கரீபியன் கடலில் ஒரு தட்டையான, தாழ்வான பவள மற்றும் சுண்ணாம்புக் தீவாகும்.  அண்ணளவாக  16 மைல் (26 கிலோமீட்டர்)  நீளத்தையும்   3.5 மைல்  (6 கிமீ) அகலத்தையும்  கொண்டது. நிலப்பரப்பு பொதுவாக தாழ்வானதாக உள்ளது, மிக உயர்ந்த நிலப்பரப்பு தி பள்ளத்தாக்குக்கு அருகில் அமைந்துள்ளது.  240 அடி (73 மீ) உயரத்தில் அங்குவிலாவின் மிக உயர்ந்த சிகரமான குரோகஸ் ஹில், நகரின் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும் நிரந்தர மக்கள் தொகை இல்லாத  பல சிறிய தீவுகளையும் தீவுக் கூட்டங்களையும் திடல்களையும் கொண்ட பகுதியாக விளங்குகிறது.  பிரதேசத்தின் தலைநகரம் தி பள்ளத்தாக்கு. (The Valley ) பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 35 சதுர மைல்கள் (91 கிமீ ), கடந்த ஜூலை 2020 மதிப்பீட்டின்படி  மக்கள் தொகையினர்  சுமார் 18,090  பேராக உள்ளனர். அங்குவெலா  (Anguilla) அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பவளப்பாறைகள் மற்றும் கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. அங்குவிலாவின் பிரதான தீவைத் தவிர, இந்த பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் மற்றும் திடல்கள்  உள்ளன, பெரும்பாலானவை  சிறிய மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளாகும். அங்குவெலாவின்  (Anguilla) மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் (90.08%மானவர்கள்)  கறுப்பினத்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அடிமைகளின் சந்ததியினர்.  சிறுபான்மையினரில் வெள்ளையர்கள் 3.74%மானவர்களாகவும்,  4.65%மானவர்கள் கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கயாகவும் உள்ளனர்  (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள்)  எனத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொகையில் 72% அங்கியுலியன், 28% அங்கியுலியன் அல்லாதவர்கள் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு). அங்கியுலியன் அல்லாத மக்களில், பலர் அமெரிக்கா, பிரித்தானியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், டொமினிகன் குடியரசு, ஜமைக்கா மற்றும் நைஜீரியாவின் குடிமக்கள். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஏராளமான சீன, இந்திய மற்றும் மெக்ஸிகன் தொழிலாளர்களின் பிரவேசம் அதிகரித்தது.  தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்யும்  அளவுக்கு உள்ளூர் மக்களுடைய தொகை  பெரிதாக இல்லாததால் முக்கிய சுற்றுலா வளர்ச்சிகளை மேம்படுத்த  தொழிலாளர்களாக கொண்டு கொண்டுசெல்லப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கிறித்துவம் அங்குவிலாவின் பிரதான மதமாகும், மிக சமீபத்தில், தீவில் ஒரு முஸ்லீம் கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்று அங்குவெலாவில்  (Anguilla) உள்ள பெரும்பாலான மக்கள் பிரிட்டிஷ் செல்வாக்குமிக்க பல்வேறு தரமான ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள்.] ஸ்பானிஷ், சீன வகைகள் மற்றும் பிற புலம்பெயர்ந்த சமூகங்களின் மொழிகள் உட்பட பிற மொழிகளும் தீவில் பேசப்படுகின்றன. இருப்பினும், ஸ்டாண்டர்ட் ஆங்கிலத்தைத் தவிர மிகவும் பொதுவான மொழி தீவின் சொந்த ஆங்கில-லெக்சிஃபையர் கிரியோல் மொழி (ஆன்டிலியன் கிரியோல் இது பிரெஞ்சு தீவுகளான மார்டினிக் மற்றும் குவாதலூப் போன்றவற்றில் பேசப்படுகிறது. http://athavannews.com/wp-content/uploads/2020/12/Anguilla3-428x240.jpg ஆறு அரச ஆரம்ப பாடசாலைகள், ஒரு அரச உயர்நிலைப் பாடசாலை மற்றும் இரண்டு தனியார் பாடசாலைகள்  உள்ளன. அங்கீலா பொது நூலகத்தின் எடிசன் எல். ஹியூஸ் கல்வி மற்றும் நூலக வளாகம் என்ற ஒற்றை நூலகம் உள்ளது. செயிண்ட் ஜேம்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஒரு கிளை 2011 இல் அங்குவிலாவில் நிறுவப்பட்டது.  இது இல்லினாய்ஸின் பார்க் ரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார், இலாப நோக்கற்ற மருத்துவக் கல்லூரியாகும். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின்  திறந்த வளாகம் ஒன்றும் தீவில் உள்ளது. அங்குவெலாவின் (Anguilla)  மெல்லிய வறண்ட மண் விவசாயத்திற்கு பெரும்பாலும் பொருத்தமற்றது, தீவில் சில நில அடிப்படையிலான இயற்கை வளங்கள் உள்ளன. சுற்றுலா, கடல் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை, வங்கி, காப்பீடு மற்றும் மீன்பிடித்தல் ஆகியன பிரதான தொழில்களாக அமைந்துள்ளன. அங்குவெலாவின் (Anguilla)  நாணயம் கிழக்கு கரீபியன் டொலராகும், இருப்பினும் அமெரிக்க டொலரும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பரிமாற்ற வீதம் அமெரிக்க டொலருக்கு US $ 1 = EC $ 2.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.] 2008 உலகளாவிய நெருக்கடிக்கு முன்னர், அங்குவிலாவின் பொருளாதாரம் வலுவாக வளர்ந்து வந்தது, குறிப்பாக சுற்றுலாத்துறை பல தேசிய நிறுவனங்களுடனான கூட்டாண்மைகளில் புதிய புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. 2014 டிசம்பரில் உலக பயண விருதுகளை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டபோது அங்குவெலாவின் சுற்றுலாத் துறை ஒரு பாரிய பாச்சலைக் கண்டது.. “பயணத் துறையின் ஒஸ்கார் விருதுகள்” (“the Oscars of the travel industry”),  என்று அழைக்கப்படும் இந்த விருது வழங்கும் விழா குசின் ஆர்ட் ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் (CuisinArt Resort and Spa) நடைபெற்றது. இந்த விழாவில் அங்குவெலா (Anguilla உலகின் முன்னணி உல்லாச சொகுசு தீவாக தேர்ந்தெடுக்கப்பட்டது அங்குவெலாவின் நிதி அமைப்பில் ஏழு வங்கிகள், இரண்டு நாணயமாற்று சேவைகள், 40 க்கும் மேற்பட்ட முகாமைத்துவ நிறுவனங்கள், 50 க்கும் மேற்பட்ட காப்பீட்டாளர்கள், 12 தரகு நிறுவனங்கள், 250 க்கும் மேற்பட்ட இடைத்தரகர் அமைப்புகள், 50 க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி கொடுக்கல் வாங்கள் நிறுவனங்கள் எட்டு நம்பிக்கை நிதியங்கள்  உள்ளன.  முதலீட்டு வருமானங்கள், சொத்து, லாபம், விற்பனை அல்லது நிறவன வரி எதுவும் இல்லாத அங்குவெலா பிரபல்யத்திற்கான  வரியின் புகலிடமாக மாறியுள்ளது. அங்குவெலா (Anguilla)   தென் அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த பழங்குடி அமெரிண்டியன் (Indigenous Amerindian) மக்கள் அங்குவிலாவில் முதன்முதலாக  குடியேறப்பட்டனர். அங்குவிலாவில் காணப்பட்ட ஆரம்பகால பூர்வீக அமெரிக்க கலைப்பொருட்கள் சுமார் BC 1300க்கு  முற்பட்ட  குடியேற்றங்களின் எச்சங்களாகவும், AD 600 முதல் தீவின் பூர்வீக  பெயராக  மல்லியோஹானா (Malliouhana) விளங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தின் போது 1493 இல் இந்தத்  தீவைப் பார்த்ததாக சில வரலாற்று  ஆதாரங்கள் கூறுகின்றன. எனினும்  முதல் ஐரோப்பிய ஆய்வாளரான  பிரான்சின்  ஹுஜினோட் பிரபுவும்  வணிகரான ரெனே க ou லெய்ன் டி லாடோனியர் (French Huguenot nobleman and merchant René Goulaine de Laudonnière ) 1564 இல் கண்டறிந்நதாக வேறு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டச்சு மேற்கிந்திய  நிறுவனம் (Dutch West India Company) 1631 இல் தீவில் ஒரு கோட்டையை நிறுவியது. இருப்பினும், 1633 இல் ஸ்பானியர்களால் அதன் கோட்டை அழிக்கப்பட்ட பின்னர் அந்த  நிறுவனம் அங்கிருந்து  பின்வாங்கிச் சென்றுள்ளது. இதேவேளை 1650 ஆம் ஆண்டு செயிண்ட் கிட்ஸில் (Saint Kitts) இருந்து அங்குலா முதன்முதலில் ஆங்கில குடியேறிகளால்  காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டதாக  பாரம்பரியமான சான்றுகள் கூறுகின்றன. இந்த ஆங்கில குடியேற்றவாசிகள் புகையிலை பயிர்ச் செய்கையிலும்,   குறைந்த அளவிலான பருத்தி உற்பத்தியிலும்  கவனம் செலுத்தினர். 1666 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தற்காலிகமாக தீவைக் கைப்பற்றியது. ஆனால் அடுத்த ஆண்டு ப்ரீடா ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் (Treaty of Breda) கீழ் மீண்டும்  ஆங்கிலக் கட்டுப்பாட்டு பகுதியாக பிரகடனப்பட்டது. 1667 செப்டம்பர்  மாதம் அங்குலாற்கு பயணம் செய்த  செய்த மேஜர்  ஜோன் ஸ்காட் (Major John Scott), தீவை விட்டு வெளியேறியபோது அது “நல்ல நிலையில்” இருந்ததாக எழுதியுள்ளார். மேலும் 1668  ஜூலை மாதத்தில், “போரின் போது 200 அல்லது 300 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்” என்று குறிப்பிட்டார். பிரெஞ்சுக்காரர்கள் 1688, 1745 மற்றும் 1798 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தாக்கினர், இதனால் பெரும் அழிவு ஏற்பட்டது, ஆனால் தீவைக் கைப்பற்ற முடியவில்லை. ஆரம்பகால ஐரோப்பிய குடியேறிகள்  ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக தம்முடன்  அழைத்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1600 களின் நடுப்பகுதியில் செயின்ட் கிட்ஸில் வசிக்கும் செனகலைச் சேர்ந்த அடிமைகள் போல்,  17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் இப்பகுதியில் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்துகின்றனர். 1672 காலப்பகுதியில், லீவிட் தீவுகளுக்கு சேவை செய்வதற்கான ஒரு அடிமை பகுதி நெவிஸ் தீவில் இருந்ததாக கூறப்படுகிறது.  இவை மத்திய ஆபிரிக்காவிலிருந்து மற்றும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அங்குவிலாவின் பிரதான பயிராக புகையிலை மாற்றத் தொடங்கியிருந்தநிலையில்,  சர்க்கரைத் தோட்டங்களில் வேலை செய்ய அடிமைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். காலப்போக்கில் ஆப்பிரிக்க அடிமைகளும் அவர்களுடைய சந்ததியினரும் வெள்ளையர்களை விட அதிகமாக இருந்தனர் 1807 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க அடிமை வர்த்தகம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் நிறுத்தப்பட்டது, மேலும் 1834 இல் முற்றிலுமாக அடிமைத்தனம் தடைசெய்யப்பட்டது. பல உற்பத்தியாளர்கள்  பின்னர் தீவை விற்றுவிட்டனர் அல்லது வெளியேறிவிட்டனர். ஆரம்ப காலனித்துவ காலத்தில், அங்குவிலா ஆன்டிகுவா மூலம் ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்டது; 1825 ஆம் ஆண்டில், இது அருகிலுள்ள செயிண்ட் கிட்ஸின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. பல அங்கியுலியர்களின் விருப்பத்திற்கு எதிராக 1882 ஆம் ஆண்டில் அங்குவெலா செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸுடன் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பொருளாதார தேக்கநிலை மற்றும் 1890 களில் ஏற்பட்ட பல வறட்சிகளின் கடுமையான விளைவுகள் மற்றும் பின்னர் 1930 களின் பெரும் மந்தநிலை ஆகியவை பல அங்கியுலியர்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயரவும், குடியேறவும் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தின. 1952 ஆம் ஆண்டில் அங்குவிலாவுக்கு முழு வயதுவந்தோர் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது.  மேற்கிந்திய தீவுகள் கூட்டமைப்பின் (1958-62) ஒரு பகுதியாக ஒரு குறுகிய காலத்திற்குப் பின், அங்குவெலா தீவு 1967 ஆம் ஆண்டில் முழு உள் சுயாட்சியுடன் செயிண்ட் கிட்ஸ்-நெவிஸ்-அங்குவிலாவின் தொடர்புடைய மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. எவ்வாறாயினும், பல அங்கியுலியர்கள் இந்தக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, மேலும் அதற்குள் செயின்ட் கிட்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்தனர். 1967 மே 30ல், அங்குவெலியர்கள் தீவிலிருந்து செயின்ட் கிட்ஸ் காவற்துறையை படையை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் மற்றும் வாக்கெடுப்பைத் தொடர்ந்து செயின்ட் கிட்ஸிலிருந்து பிரிந்ததாக அறிவித்தனர். அட்லின் ஹாரிகன் மற்றும் ரொனால்ட் வெப்ஸ்டர் தலைமையிலான நிகழ்வுகள் அங்கியுலியன் புரட்சி என்று அறியப்பட்டன. அதன் குறிக்கோள் சுதந்திரம் அல்ல, மாறாக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸிடமிருந்து சுதந்திரம் மற்றும் ஒரு பிரிட்டிஷ் காலனியாக திரும்புவது என்பதாக அமைந்தது. பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைகளை உடைக்கத் தவறிய நிலையில், செயின்ட் கிட்ஸிலிருந்து பிரிந்து செல்வதற்கான அங்கியுலியன்ஸின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெற்றது, மேலும் அங்குவெலா குடியரசு ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது. ரொனால்ட் வெப்ஸ்டர் ஜனாதிபதியாக இருந்தார். பிரிட்டிஷ் தூதுவர்ர் வில்லியம் விட்லாக் மேற்கொண்ட முயற்சிகள் முரன்பாடுகளை நீக்கத்  தவறிவிட்டன.  பின்னர் மார்ச் 1969 இல் 300 பிரிட்டிஷ் துருப்புக்கள் அனுப்பப்பட்டன. பிரிட்டிஷ் அதிகாரம் மீட்டெடுக்கப்பட்டது.  1971 ஜூலையில்  அங்குவெலா பிரித்தானிய  சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியது. 1980 ஆம் ஆண்டில், அங்குவெலா செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸிலிருந்து முறையாகப் பிரிந்து ஒரு தனி பிரிட்டிஷ் முடிக்குரிய  காலனியாக (இப்போது ஒரு பிரித்தானியாவின் சர்வதேச பகுதியாக) மாற அனுமதிக்கப்பட்டது. அப்போதிருந்து, அங்குவெலா அரசியல் ரீதியாக நிலைபேற்றை அடைந்து, அதன் சுற்றுலா மற்றும் கடல் நிதித் துறைகளில் பாரிய வளர்ச்சியைநேக்கி முன்நகர்ந்தது. தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். https://athavannews.com/அங்குவெலாவின்-anguilla-ஆளுநராக/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.