Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குறுக்கு வழிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் – 137

மெஹாஹெட்ஸ்- கிகாஹெட்ஸ் என்பதெல்லாம் என்ன?

நீளத்தை அடி அங்குலத்தில் அளப்பது போன்று மின்னலையை அளக்க பயன்படும் ஓர் சர்வதேச முறைதான் Hertz என்பதாகும். மின்காந்தவியல் பற்றி ஆராய்ந்து பல விடயங்களை உலகிற்கு அறிமுகம் செய்த ஜெர்மனியின் விஞ்ஞானியாகிய Heinrich Rudolf Hertz என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதனால் அவரின் பெயர் இந்த அளவை முறைக்கு சூட்டப்பட்டது. Hertz என்பது ஒரு சுற்று (Cycle) அல்லது அசைவு (Frequency) என்பதாகும். சர்தேச முறமைக்ளுக்கு ஒருவரின் பெயர் சூட்டப்படும்போது முதல் எழுத்தை Capital ஆக ஆக்குவது வழக்கம். அதன்படி Hz என்பது hertz ன் சுருக்கம். ஆனால் சாதாரணமாக எழுதும்போது hertz என்றோ அல்லது megahertz என்றோ எழுதப்படும். பத்துலட்சம் ஹெட்ஸ் என்றால் MHz என்கிறோம். M என்பது பத்து இலட்சம் என்ற தொகையை குறிக்கும். Hertz என்ற பதம் பாவனைக்கு வருமுன் (Cycles per second) என்றே பாவிக்கப்பட்டது.

ஒரு கணனி பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. விநாடிக்கு எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் ( Clock Speed) எனப்படும். இந்த வேகம் மெஹாஹெட்ஸ் என்று அளக்கப்படுகிறது. டிஜிட்டல் சர்கியூட்களான கணனியின் பாகங்களை இயங்கச்செய்வது இந்த கடிகார துடிப்புத்தான். கடிகாரத்துடிப்பை ஏற்படுத்துவது பிராசசரினுள் அமைந்துள்ள கிறிஸ்டல் ஒசிலேட்டர் என்னும் பாகம்தான். இந்த துடிப்பில் இரண்டு பகுதியுண்டு. ஒன்று அதிகம் (1) மற்றது குறைவு (0). ஓரு அதிமான பகுதியும் ஒரு குறைவான பகுதியும் சேர்ந்ததுதான் ஒரு சுற்று (Cycle) எனப்படும். இதைத்தான் hertz என்கிறோம். ஒரு பிராசசர் 100 மெகாஹெட்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுற்றுக்களை ஒரு விநாடியில் முடிக்கிறது என்று அர்த்தம். ஒரு கோடி சுற்றுக்கு ஒரு விநாடி எனில் ஒரு சுற்றுக்கு எவ்வளவு நேரம். மிக மிக குறைந்த நேரம் ஆகும்.

முன்பு வந்த கணனிகள் 4.77 மெஹாஹெட்ஸ் வேகம் கொண்ட பிராச்சர்களை கொண்டிருந்தன். இன்று வரும் கணனிகள் 3.2 கிகாஹெட்ஸ் வேகம் கொண்டுள்ளன. ஒரு கிகாஹெட்ஸ் என்பது 1000 மெஹாஹெட்ஸ் ஆகும். ஒரு மெகாஹெட்ஸ் என்பது 1000 கில்லோஹெட்ஸ் (KHz) க்கு சமன். இந்த KHz Internet connection னின் வேகளவை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. (256 KHz).

Sound, light, radio frequency, and electromagnetic radiation இவைகளையும் ஹெட்ஸ் இல் அளக்கலாம். Video card இன் வேகத்தையும் MHz ல் தான் அளப்பார்கள். Games விளையாடுபவர்களும். போட்டோ எடிட்டிங் செய்பவர்களும் வேகம் கூடிய வீடியோ காட்டை கணனியில் நிறுவுவது பிராசசரின் வேலைப்பழுவை குறைப்பதாகும். பாவனையாளர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு கணணியின் பிராசசர் மிகவேகமாக செயற்படவேண்டியுள்ளதால் இன்றைய காலகட்டத்தில் கணனி வாங்குபவர்கள் குறைந்தபட்சம் பிராசசரரின் வேகம் 1.75GHz. நினைவகம் 1GH, மற்றும் வீடியோ காட் 256MHZ கொண்டதாக வாங்குதல் வேண்டும்.

Note:- Clock speed is a measure of how quickly a computer completes basic computations and operations. It is measured as a frequency in hertz, and most commonly refers to the speed of the computer's CPU, or Central Processing Unit. Also called clock rate, the speed at which a microprocessor executes instructions. Every computer contains an internal clock that regulates the rate at which instructions are executed and synchronizes all the various computer components. The CPU requires a fixed number of clock ticks (or clock cycles) to execute each instruction. The faster the clock, the more instructions the CPU can execute per second.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • Replies 358
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் – 138

WhatInStartup

உங்கள் கம்பியூட்டர் வழமைக்கு மாறாக மெதுவாக இயங்குமேயானால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வைரஸ் தொற்றியிருக்கலாம். மெமறி குறைவாக இருக்கலாம். அதிகளவிலான புறோகிறாம்களை நீங்கள் அல்லது உங்களுக்கு கணினியை விற்ற நிறுவனமே நிறுவியிருக்கலாம். Defragment அதிக நாட்கள் செய்யப்படாமல் இருக்கலாம். இவைகளை எல்லாம் நீங்கள் சீராக்கி விட்டபின்பும் கணனி மெதிவாக இயங்கினால் கணினி இயங்கும்போதே தானாகவே இயங்கத்தொடங்கும் அவசியமற்ற புறோகிறாம்களை நிறுத்துங்கள். அதற்கு உதவுவதற்கு இலவசமாக கிடைக்குக் புறோகிறாம்தான் WhatInStartup. இதை www.nirsoft.net என்ற தளத்திலிருந்து தரவிறகிக்கொள்ளலாம்.

உங்கள் கணினியில் நிறுவி இயக்கினால், அது தானாக இயங்கத்தொடங்கும் புறோகிறாமின் பட்டியல், அதன் தன்மை, ஃபைல் உருவாக்கப்பட்ட திகதி, புறோகிறாம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் போன்ற விபரங்களை தருகின்றது. எனவே இந்த விபரங்களின் துணையோடு வேண்டாதவற்றை நிறுத்தி வைக்கலாம். அல்லது அறவே நீக்கிவிடலாம். அழித்த ஃபைல் மீண்டும் உயிர்பெற்று வருகிறதெனில் நிரந்தரமாகவே நீக்கிவிடலாம். இப்புறோகிறாமை ஒரு USB டிறைவில் வைத்து இய்க்கலாம். இதைப்போல் Startup CPL என இன்னொரு புறோகிறாமும் இருகிறது.

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் – 139

Shortcuts in Photoshop to all versions

போட்டோசொப் இல் அதிகம் வேலை செய்பவர்கள், அதிகம் போட்டோ படங்களை சீராக்க பல மணித்தியாலங்கள் செலவு செய்பவர்கள் தேடுவது அல்லது அதிகம் பாவிப்பது keyboard shorts ஐ. முழுமையான shortcut பட்டியலை- நான்கு பக்கங்கள் நிறைந்த pdf கோப்பை தரவிறக்க நீங்கள் செல்லவேண்டிய லிங்க் கீழே உண்டு. தரவிறக்கி பிறிண்ட் எடுத்து போட்டோசொப்பில் வேலை செய்யும்போது அருகில் வைத்துக்கொள்ளுங்கள். வேலை சுலபமாக முடியும்.

http://morris-photographics.com/photoshop/shortcuts/index.html#pscs3

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் – 140

Download windows 7 Home Premium 32 bit

மேற்கூறிய தொற்று (வைரஸ்) அற்ற, முழுமையான, 100 வீதம் நம்பிக்கையான, தரமான விண்டோஸ் 7 ஹோம் பிறிமியம் இயங்குதளத்தை கீழ் காணும் தளத்திலிருந்து தரவிறக்கி, அதனுடன் கிடைக்கும் windows loader ஐ இயக்கி Activate பண்ணி கொள்ளலாம். Windows Vista 32 bit வைத்திருப்பவர்கள் windows 7 32 bit க்கு upgrade ம் செய்யலாம். Rar பைல் ஆக கிடைப்பதை unzip பண்ண வரும் ISO பைலை DVD யில் பதிந்து boot செய்து upgrade or clean install செய்து கொள்ளலாம். இதை இட்டு 531 விமர்சனம் பதியப்பட்டுள்ளது, அதில் 500 பேர் அளவில் excellent, no virus, 100% working என பதிந்துள்ளார்கள். Comment பகுதியில் எப்படி DVD யில் பதிந்து கொள்வது, எந்த update ஐ இன்ஸ்டால் செய்யக்கூடாது, windows loader எப்படி எப்போது இயக்கி activate பண்ணுவது என்ற முழு விபரமும் உள்ளது. Vista Home premium 64 bit வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

http://www.kickasstorrents.com/windows-7-home-premium-32bit-by-fig-t3296152.html

Windows Vista 32 bit இலிருந்து windows 7 32 bit க்கு upgrade செய்து கொள்ளவிரும்புபவர்கள் என்ன ஆயத்தங்கள் செய்யவேண்டுமென்பதை கீழ்க்காணும் லிங்கை கிளிக்பண்ணி மைக்றோசொவ்ற் தளத்திற்கு சென்று விபரம் அறிந்து கொள்ளவும்

http://windows.microsoft.com/en-US/windows7/help/upgrading-from-windows-vista-to-windows-7

Link to post
Share on other sites
 • 9 months later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் – 141

1. MiniTool Partition Wizard Bootable CD 7.0 _ Freeware

2. MiniTool Partition Wizard Home Edition 7.0_ Freeware

[புதியது, அழகான icon களை கொண்டதனால் இலேசாக புரிந்து கொள்ளத்தக்கது. இணைக்கப்பட்ட Tutorials களின் மூலம் பாவிப்பது எப்படி என இலேசாக அறிந்து கொள்ளக்கூடியது, Windows 2000/XP/Vista/windows 7 (32 bit & 64 bit) ஆகிய இயங்கு தளங்களில் பாவிக்ககூடியது

தறவிறக்கம் செய்து கொள்ள கீழ்காணும் சுட்டியை சொடுக்க்ட்வும்.

http://www.partition...ootable-cd.html

Main Features

· Support Windows 2000/XP/Vista/windows 7 (32 bit & 64 bit) operating system.

· Extend system partition to maximize computer performance.

· Manage the hard disk for substantial performance increase.

· Create, Delete and Format partitions with simple steps.

· Disk Copy to protect or transfer data.

· Support disk and partition size larger than 2 TB.

· Convert partition format from FAT to NTFS.

· Partition Copy: Copy the entire content of one hard disk to another.

· Copy Disk Wizard: Copy the entire hard disk to another without having to reinstall Windows.

· Disk Map - Visually demonstrate your disk/partition configuration; preview the changes before applying.

· Hide/unhide partition, set active partition, etc. - Change partition properties easily.

· Explore FAT/NTFS partition.

· Set partition as primary.

· Set partition as logical.

· Rebuild MBR.

· Disk Surface Test.

· Partition Surface Test.

· Change Partition Serial Number.

· Change Partition Type ID.

· Hot Extend Partition without reboot. NEW!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேவகுரு பல குறுக்கு வழிகளுக்கு,

கறுப்பி அவர் கப்பலில் வேலை

Link to post
Share on other sites
 • 5 months later...
 • கருத்துக்கள உறவுகள்

குறுக்குவழிகள் – 134

Easy Zoom- பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை பெருப்பிக்க அல்லது சிறுப்பிக்க

நீங்கள் ஒரு வலைப்பக்கத்தை, உலக வரைபடத்தை, கூகுல் உலகப்பாடத்தை, PDF கோப்பை, ஒரு போட்டோவை, Jpeg படத்தை அல்லது சிறிய எழுத்த்துக்கொண்ட ஏதாவது ஒரு பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போ து அதை பெருப்பிக்க அல்லது சிறுப்பிக்க வேண்டுமென்றால் மிகவும் இலேசான, வசதியான, உடன் வழி ஒன்று உண்டு.

CTRL ஐ அழுத்திக்கொண்டு மெளஸில் (MOUSE) இல் உள்ள சக்கரத்தை மேலும் கீழும் உருட்டுங்கள். அவ்வளவுதான். மெளஸில் (MOUSE) சக்கரம் கிடையாவிட்டால் இது முடியாது.

இதனை நீங்கள்

மேலும் இரண்டு வகையாக செய்யலாம்

1. Ctrl + (கூட்டல் அடையாளம் (+),கழித்தல் அடையாளம் (-))

2. நவீன உலாவிகளில் எல்லாம் தற்போது வலது கீழ் மூலையில் % குறியுடன் தரப்பட்டுள்ளது

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.