Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குறுக்கு வழிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-55

Disable Unwanted Startup Services

நீங்கள் தனி பாவனையாளர் , நெட்வேர்க் இல் உங்கள் கணணியை பிணைத்துக்கொள்ளாதவர் எனில், தேவைப்படாத கம்பியூட்டரின் வேகத்தை மெதுவாக்கும் கீழ்க்காணும் சேவைகளை நிறுத்திவிடலாம். இதனால் எந்த இடையூறும் நேராது. Click -->start--> (type) Services.msc or Msconfig -->ok--> Services--> Select and disable

Alerter

Clipbook

Computer Browser

Fast User Switching

Human Interface Access Devices

Indexing Service (Slows the hard drive down)

Messenger

Net Logon (unnecessary unless networked on a Domain)

Netmeeting Remote Desktop Sharing (disabled for extra security)

Remote Desktop Help Session Manager (disabled for extra security)

Remote Procedure Call Locator

Remote Registry (disabled for extra security)

Routing & Remote Access (disabled for extra security)

Server

SSDP Discovery Service ("Universal P'n'P", & leaves TCP Port 5000 wide open)

TCP/IP NetBIOS Helper

Telnet (disabled for extra security)

Universal Plug and Play Device Host

Upload Manager

Windows Time

Wireless Zero Configuration (for wireless networks)

Workstation

Link to post
Share on other sites
 • Replies 358
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்.. !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா எனக்கு உந்த ஸ்ராட்டப் பிரச்சனை இருந்தது அது எல்லாம் இப்ப கட் பண்ணியாச்சு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-56

Removing Desktop Icons

எந்தவொரு விண்டோஸ் இயங்குதளத்தையாவது நாம் எமது கணணியில் நிறுவும்போது அது இயல்பாகவே ஐந்து ஐகொன்களை கணணித்திரையில் கானண்பிக்கும்.அவையாவன : My Documents, My Computer, Recycle Bin, My Network Places, Internet Explorer. பின்னர் வேறு புறோகிறாம்களை நாம் நிறுவும்போது அவையும் அவற்றிக்குரிய ஐகொன்களை திரையில் போடும். சில போடாமலும்விடும்.

இயங்குதளம் நிறுவும்போது போடப்படும் இந்த ஐந்து ஐகொன்களையும் நாம் விரும்பினால் காண்பிக்காது தடுத்துவிட முடியும். இதோ வழி

Start---> Control Panel---> Double-click "Display" --->Desktop--->Customize Desktop

இப்போது எந்த ஐகொன் ஐ மறைக்கவிரும்புகிறீர்களோ அதற்கு பக்கத்திலுலள்ள Tick ஐ எடுத்துவிட்டு OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். மீண்டும் OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். இப்போது அந்த ஐகொன் திரையிலிருந்து மறைந்துவிடும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கணணி Broad Band Modemஇனூடாக இணைய தளத்திற்கு இணைக்கப்படுள்ளதா? அப்படியாயின் இணைத்த பின் கணணியை start up செய்து boot ஆகியவுடன் கணணியின் programs ஆரம்பிக்க அல்லது இணையதிற்கு இணைக்க நேரம்(60-90Sec) எடுக்கிறதா? கவலையை விடுங்கள், பின்வருமாறு செய்யுங்கள்.

Control panel>Network connections>Local Area connection>properties>Internet Protocol(TCP/IP) check on Use The Folllowing IP Adderess and type there 192.168.0.1

click Ok... You may see the big diffrence :D:)

NB:

இது Windows XPக்கு தான் பொருந்தும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன்னர் என் computerயை strat upசெய்தவுடன் boot பண்ணிய சில நிமிடங்களிலே freez ஆகிகொண்டிருந்தது. நிறுத்தி பின்னர் இயக்கிய போதும்கூட இதே நிலைமை தான். எனக்கு தெரிந்த வரை computerல் எந்த பிழையும் இல்லை.

பின்னர் பலவாறும் யோசித்த பின் மூளையில் :idea: பொறி தட்டியது. PCஐ கழற்றி பார்த்தபோது அங்கே processorஇல் ஏராளமான தூசி படிந்திருந்தது. அவற்றை கழற்றி துப்பரவாக்கியபின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-57

Hub, Switch, and Routers

Hub என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.

Switch என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.

Router என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.

தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.

http://computer.howstuffworks.com/router.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்...

யாருக்காவது.. operating system's history வரலாறு தெரிந்தால் எங்காவது எடுக்க முடியுமா என்று தெரிந்தால் தந்து உதவ முடியுமா... ஆங்கிலத்தில் இருந்தால் கு}ட பறவாய் இல்லை....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி அவர்கட்கு

ஒபறேரிங் சிஸ்டம்களின் வரலாற்றினை தெரிந்துகொள்ள நிறைய பக்கங்கள் உள்ளன. உங்களுக்கு பரிச்சயமான search engine இன் பெட்டியில் history of operating systems என்று அடித்து தேடுங்கள். நான் தேடிப்பார்த்தேன் ஐம்பதிற்கு மேற்பட்ட பக்கங்கள் கிடைத்தன. முக்கியமான நான்கை தருகின்றேன்

http://en.wikipedia.org/wiki/History_of_op...ystems#See_also

http://www.webster-dictionary.org/definiti...ating%20systems

http://www.computerhope.com/history/windows.htm

http://www.computinghistorymuseum.org/teac...tem_Moumina.pdf

http://www.cs.vu.nl/~ast/books/mos2/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா... அப்படி தான் நான் தேடினேன் சில இணையங்களில் வேறுபட்ட தகவல்கள் கிடைத்தன.. அதனால் தான் கண்டிப்பாக உங்களிடம் நல்ல தகவல் உள்ள தளத்தை பெற முடியும் என்று நினைத்தேன்.... உங்கள் தகவலுக்கு நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-58

Start-up disk என்பது என்ன?

நின்றுபோன கம்பியூட்டரை திருத்தி மீண்டும் இயங்க வைக்கத்தேவையான, கையடக்கமான சில பயன்பாட்டு சிறிய utilities ஐக்கொண்ட விசேஷமான bootable floppy disk என்று இந்த start-up disk ஐ கூறலாம்.

நின்றுவிட்ட கம்பியூட்டரினுள் இந்த start-up disk ஐ செலுத்திவிட்டு கம்பியூட்டரை இயக்கினால் சில விநாடிகளில் மூன்று விருப்பத்தெரிவு திரையில் தெரியும். முதலாவது CD-Rom ஆதரவுடன் கம்பியூட்டரை இயக்கலாமா? இரண்டாவது சிடி-றொம் ஆதரவு அற்று இயக்கலாமா? மூன்றாவது உதவியை வாசிக்கப்போகிறீர்களா? என கேட்கும்.

முதலாவதை தெரிந்துவிட்டு Windows Instalation சீடியை CD-Rom drive இனுள் செலுத்தி ஹாட் டிஸ்க் ஐ partition பண்ணவோ அல்லது ஏற்கனவே c: டிறைவினுள் உள்ள இயங்கு தளத்தை repair பண்ணவோ அல்லது Format பண்ணி அழித்து புதிதாக install செய்யவோ முடியும்.

இரண்டாவதை தெரிவு செய்தால் a:> prompt ல் போய் நிற்கும். இதில் நின்றுகொண்டு இந்த டிஸ்க்கில் உள்ள சிறிய் utilities ஐ பயன்படுத்தி Fdisk, Format, extract, Scandisk, chkdsk, Edit, delete, copy ஆகிய கட்டளைகளை பயன்படுத்தி பல திருத்த வேலைகளை இயங்கு தளத்தை சீர்செய்து வழமைபோல் கம்பியூட்டரை இயக்க வழிசெய்யலாம்.

மூன்றாவதை தெரிவுசெய்து இந்த டிஸ்க்கை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்ற முழு விபரத்தையும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

Windows 95 start-up disk சீடி றொம் ஐஆதரிக்காது, ஆனால் Windows 98 ம் அதன் பின் வந்த Windows 2000. Win XP க்களின் start-up டிஸ்க்குகள் சீடி றொம் ஐ ஆதரிக்கும்.

இயங்காது நின்ற கம்பியூட்டரின் இயக்கத்தை ஆரம்பித்து பின் பொறுப்பை சீடி றொம்மிடம் பாரம் கொடுப்பதுதான் start-up disk க்குகளின் முக்கிய வேலை. பல நேரங்களில் O/S களை இன்ஸ்டால் பண்ணுவதற்கு நாம் சீடி றொம் ஐ அணுகவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.Graphical User Interface புறோகிறாம்களை start-up டிஸ்க்கை பயன்படுத்ததி இயக்கமுடியாது என்பதும் குறிப்பிடதக்கது

சுருங்கக்கூறின் திருத்த வேலைக்காக செல்லும் ஒருவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் சிறிய கருவிகள் அடங்கிய ஒரு ஆயுதப்பெட்டிதான் இந்த start-up டிஸ்க்.

CD-Rom டிறைவினுள் எந்த சீடியும் இல்லாத வேளையில் இந்த start-up டிஸ்க்கை அதன் டிறைவினுள் நுழைத்து ஆராய்ந்து பார்க்கவும்.கெடுதல் ஏற்படாது. கட்டளைகளை கொடுத்து Enter கீயை தட்டாது பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யின் இருந்ததும் கெட்டுப்போகலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-59

USB port என்றால் என்ன?

டிஜிட்டல் கமெரா, ஸ்கானர், பிரிண்டர், மெளஸ், இவைகளில் பொதுவாக காணப்படுவது என்னவெனில் Port என அடித்துக்கூறலாம். Port என்றால் நினைவிற்கு வருவது serial, parallel, com port கள்தான். இவைகளில் pin கள் கொண்ட Male port, துவாரங்கள் கொண்ட Female port என இருவகையுண்டு. இவைகள் வட்டமாகவோ அல்லது D என்ற எழுத்து வடிவத்திலோ அதிகமாக காணப்படும். ஆனால் இந்த port களை எல்லாம் பாவனையிலிருந்து ஒதுக்கிக்கொண்டு முன்னுக்கு வந்துகொண்டிருப்பது Universal Serial Bus (USB) port ஆகும். தற்போதைய நவீன சாதனங்கள் பலவற்றிலும் காணப்படும் இந்த போட் வினோதவடிவங்கொண்டவை. நீள்சதுர பெட்டி போன்ற தோற்றம்கொண்டவை; அடிக்கடி கழற்றி பூட்டவேண்டிய சாதனங்களை இணைப்பதற்காக கம்பியூட்டரின் முன்புறமும் சிலவேளைகளில் காணப்படும். அப்படி காணப்படாதவிடத்து பின்புறமிருந்து extension cord மூலம் இன்னொரு USB port ஐ முன்பக்க மேசைக்கு கொண்டுவரலாம்.

இந்த USB port உடன் சாதனத்தை இணைக்கும் வயரின் இரு முனையிலும் இரண்டு கனெக்டர்கள் காணப்படும். அவை Type A, Type B எனப்படும். Type A கம்பியூட்டருடனும் Type B சாதனத்துடனும் இணையும்.

USB Port Type A Connector Type B Connector

தற்போது USB Flash Memory என அழைக்கப்படும் Key tag ல் கொழுவக்கூடிய, பேனா கத்தி போன்ற தோற்றம்கொண்ட, கையடக்கமான drive கள் பாவனைக்குவந்துள்ளன. இவைகள் 32 எம்பி, 128 எம்பி, 256 எம்பி, 512 எம்பி அளவிகளில் கிடைக்கின்றன. இதை USB port இனுள் சொருகிவிட்டால் Floppy Drive போல் வேலைசெய்யும். தகவலை பதிந்து விநாடியில் கழற்றி எடுத்துக்கொண்டு செல்லலாம். Floppy disk ல்1.44 எம்பி ஆனால் இதிலோ 512 எம்பி கொள்ளும்; Floppy disk இலும் பார்க்க காவிச்செல்ல வசதியானது.

இந்த் USB port , Plug and Play தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது; Serial and Parallel bus கள்போல் தகவல்களை கம்பியூட்டருக்கும் சாதனத்திற்குமிடையில் பரிமாற்றம்செய்கிறது; மென்பொருள் போல் திருத்திய பதிப்புகளைகொண்டது; பழையது பதிப்பு 1.1, 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்ட பதிப்பு 2.0. புதிய பதிப்பு பழையதிலும் பார்க்க 40 மடங்கு வேகமானது அத்தோடு பழைய பதிப்போடு ஒத்திசைவானது. (Backward compatible with Version 1.1)

அதிகம் மின்சாரம் தேவைப்படாத சாதனங்கள் தமக்கு தேவையான மின்சாரத்தை USB port இலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 127 சாதனங்களை இந்த USB port ஒவ்வொன்றிலும் Hot Swap முறையில் இணைக்கலாம். அதாவது கம்பியூட்டரை நிறுத்தி, இணைத்து, பின் reboot செய்யாது கம்பியூட்டர் வேலைசெய்துகொண்டிருக்கும்போ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-60

பல ஆயிரக்கணக்கான கம்பியூட்டர் பாவனையாளர்கள் தங்களது பிரச்சனைகளை போஸ்ட் செய்து வேறு பல ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அதற்கு விடையெழுதி தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்ட மிகவும் பிரபல்யமான forum தான் Annoyances.org இங்கே Win 98, Win 2000,.Win XP, Registry Tips, Getting Started, Software, Using Windows, Customizing, Annoyances, Networking, Reducing Clutter, Performance, Troubleshooting, Applications, Humor, என பல பகுதிகள் உண்டு. இது லாபநோக்கற்ற organisation என்பது கவனிக்கத்தக்கது. இத்தளத்தில் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. நுழையுங்கள்; ஆராயுங்கள்; பயனடையுங்கள்

http://www.annoyances.org/exec/forum/winxp

Link to post
Share on other sites

வெரி குட் .பாராட்டுக்கள். தொடரட்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள் - 61

System File Checker என்றால் என்ன?

எமது கம்பியூட்டர் இருந்தாற்போல அல்லது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போ

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-62

புறோகிறாமை இயக்க குறுக்குவழி

நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.

நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.

இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா...

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்குவழிகள்-63

Recovery Console

Windows 98, start-up புறோகிறாம் ஒரு floppy disk ல் அடக்கப்பட்டது. Windows 2000, start-up disks தயாரிக்க 4 floppy disk தேவைப்பட்டது. Windows XP ல் தயாரிக்க 6 மென்தட்டு தேவைப்பட்டது. இனிமேல் வெளிவரும் Windows வெளியீடுகளுக்கு start-up disk கள் மென்தட்டில் இருக்காது. CD யில் தான் இருக்கும். அதை Bootable CD என்பார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. CD யின் பரந்த பாவனையும், அதன்பின் அண்மையில் வந்துள்ள usb drive வும் (usb flash memory) floppy disk ன் பாவனையை தேவையற்றதாக்கி விட்டன.

Start-up disk க்கு பதிலாக கைதேர்ந்தவர்களால் பாவிக்ககூடிய இன்னொரு புறோகிறாம் Recovery Console ஆகும். இது Win 2000 யிலிருந்து பாவனைக்கு வந்துள்ளது. Last known good configuration, Start-up Options, அல்லது வேறெந்த வழிகளிலும் கம்பியூட்டரை இயக்கமுடியாது விடின் Recovery Console ஐ பாவித்து services களை நிற்பாட்டியோ, தகவல்களை எழுதியோ அழித்தோ, சேதமடைந்த கோப்புக்களை திருத்தியோ அல்லது பிரதி பண்ணியோ, உங்கள் இயங்குதளத்தை சீர்செய்து கம்பியூட்டரை இயக்கலாம். Set-up CD ஐ அதன் டிறைவில் இட்டு Recovery Console ஐ வரவழைத்து பாவிக்கலாம். அல்லது Recovery Console ஐ எமது ஹாட் டிறைவில் பதிந்து வைத்துக்கொண்டும் தேவைப்படும் போதும் இயக்கலாம். ஹாட் டிறைவில் இது இன்னொரு இயங்கு தளம்போல் பதியப்படுமாதலால் இதை இயக்கி இதில் நின்றுகொண்டு வழமையான O/S தை சீர் செய்யலாம். XP CD ஐ அதன் டிறைவில் இட்டு Run பெட்டியில் D:/i386/winnt32.exe /cmdcoms என் ரைப் செய்து OK ஐ கிளிக்பண்ண ஹாட்டிஸ்க்கில் பதியப்படும். Recovery Console ஐ பாவித்து Formating ம் செய்யலாம்.Boot Sector அல்லது Master boot record ஐ திருத்தலாம். இதன் பிரதான வேலை சேதமடைந்த System file ஐ Windows CD யிலிருந்து பிரதி பண்ணுவது அல்லது குழப்படி பண்ணும் ஒரு சேவையை திருத்தியமைப்பது. மேலதிக தகவல் வேண்டுவோர் www.Support.microsoft.com தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Operating system பதிந்துள்ள 160Gb Hard disk driveஐ எப்படி இரண்டாக partion பண்ணுவது?

trial softwareஐ install பண்ணி, delete பண்ணிய பின்னர் அதன் fileகளை registryஇல் இருந்து நீக்குவது எப்படி? அதாவது அதை மீண்டும் எப்படி உபயோகிக்கலாம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

திருட்டு windows xpக்கு sp 2ஐ install பண்ண முடியாது. sp1க்கு இனி update இல்லை. விரைவில் sp2க்கும் crack வரலாம் பொறுத்திருக்கவும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ்.பி 2 வை அகற்றிவிடுங்கள் ..நானும் அந்த அதை போட்டு பட்ட பாடு சொல்லேலாது.... பல பல பிரச்சனைகள்.... இப்ப புதிசா போட்ட இயங்குதளம் தானே அது இனும் அப்டேற்பண்ணலை அந்த கண்றாவி வந்திடும் என்று அதை இல்லாமல் தான் அப்டெற்பண்ணனும் யாரன் சொன்னால் தான் வழி.. எனக்கு வேறை தீர்வு தெரியாது இந்த முறையை தான் நான் செய்தேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

என்க்கும் பிரச்சனை தான்.. நான் sp2 வை அகற்றிவிட்டேன்.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒர் partition ஐ உண்டாக்கி அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும்சரி அதில் o/s மற்றும் application களை நிறுவிவிட்டால் பின்பு அதை இரண்டாக பிரிக்க Microsoft ல் வழியிருப்பதாக தெரியவில்லை. ஆனால் தனியார் software ஆகிய Partition Magic ஐ பாவித்து இதை செய்யலாம் என அறிந்துள்ளேன். இதை பாவிக்க எனக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இதை விலைக்கு வாங்கவேண்டும் அல்லது நண்பர்கள் யாராவது வைத்திருப்பார்கள்

ஒரு software ஐ நிறுவிய பின் எப்படி uninstall பண்ணுவது எஞ்சிய கோப்புக்களை எப்படி அழிப்பது என அறிய கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும்.

http://www.geekgirls.com/tip_weekly.htm

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணி யாற்றிய 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தல் நிலை யங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.   https://thinakkural.lk/article/95413
  • இது ரவா இட்லி இல்லை.. அரிசி இட்லி...கருத்து பகிர்வுக்கு நன்றி 
  • யாழ் மாவட்டத்தில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு – 2 ஆயிரம் வீடுகள் சேதம்    38 Views புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட மழைவீழ்ச்சி யாழ். குடாநாட்டில் தொடரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிப்படைந்துள்ளமையோடு 2 ஆயிரத்து 443 வீடுகளும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மாவட்டச் செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு நேற்றைய தினம் இந்தப் புள்ளிவிவரம் அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேநேரம் இவ்வாறு பாதித்த 54 ஆயிரத்து 163 பேரில் 1,072 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சேதமடைந்த 2 ஆயிரத்து 443 வீடுகளில் 55 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இதேநேரம் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலிற்கு செல்ல முடியாத நிலமையே காணப்படுவதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே உள்ளது   https://www.ilakku.org/யாழ்-மாவட்டத்தில்-மட்டும/
  • தோழர்கள் தமிழரசு , கவிபுயல் , வல்வை சகாறா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐 
  • முல்லைத்தீவில் ஒரு பாரம்பரிய விதை வைப்பகம்: முன்னாள் போராளியின் மற்றுமொரு முயற்சி   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலியில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன்  மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை நிர்வகித்து வருகின்றனர்.  காலத்தின் தேவை கருதிய நேசன் அவர்களின் புதிய முயற்சியாக பாரம்பரிய விதை வைப்பகத்தையும் தொடங்கியுள்ளார்.  இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு  வருகின்றன. இவ்வாறான நிலையில் எங்கள் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கே  சென்றுள்ளன. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நேசன் தம்பதியினர் விதைகள் காப்பகமொன்றையும் தாங்கள் பண்ணையில் ஆரம்பித்துள்ளனர்.  எமது பிரதேசங்களில் பல்வேறு வகையான மரக்கறி, மூலிகை இனங்களின் விதைகள் பாரம்பரியமாகவே இருந்து வருகின்றன. அவற்றை காலம்காலமாக எம் விவசாயிகள் பாதுகாத்து வந்துள்ளனர்.  இன்று பல பாரம்பரிய விதைகள் இல்லாமல் செல்லும் நிலைக்கு சென்றுள்ளன. இவற்றை பாதுகாத்து பரவச் செய்யும் நேசன் ஐயாவின் முயற்சியை வரவேற்போம்.  தான் ஆரம்பித்துள்ள பாரம்பரிய விதை வைப்பகம் தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றார் நேசன்,
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.