Jump to content

நான் நீ நமது வாழ்க்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடெங்கும்

ஈழத்தின்

ஏழைப் புத்திரர்கள்

உழைத்துழைத்து வரி கட்டி

வளம் பெருக்கி;

வாழ எண்ணி

திசை நகர்ந்து

சமுத்திரத்து மீன்களாக

சகதியிலே

மாட்டி மாட்டி

யாசித்துக் கிடக்கின்றார்.

*** *** ***

தன் தேசம்

அங்கே

தீப்பற்றி எரிகையிலே

மக்களங்கே

தெருத் தெருவாய்

அலைகையிலே

வாயில் நுழைய மறுக்கும்

ஓர் மேலை நாட்டில்

ஓர் வீட்டில்,

இன்றைய துயர்ச் செய்தியை

தொலைக்காடசி பார்த்தோ

அன்றி;

யாதொன்றில் கேட்டோ

மனம் சோர்ந்து

தூங்கிப் பின்

கண் விழிப்பான்.

*** *** ***

காலத்தின் சதியினாலே

அவனுமோர்

அகதிதான்.

நகர் நகராய்

நாடு நாடாய்

விட்டலையும்

ஈழத்து அகதியவன்.

இணைபிரிந்த

தனியாடு.

*** *** ***

ஊரில்

உறவுகள்

நிலை அறிவான்

தீ எரியும் தேசமாக

துயர் பெருகும்

உறவுகளின்

கதை அறிவான்.

நாளை

துயர் முட்டி

வந்த திசைச்சுவடு

தெரியாமல்

மடிந்தும் போகலாம்.

கடல் வந்து

அலை மோதி

மணல் மூடித்

திட்டாகி

சிறு நண்டுப்

படம் போல

சிலவேளை

அவர் வாழ்வு

மறைந்தும் போகலாம்.

*** *** ***

வாழ்க்கை

சீவியமாகி...

போராட்டமாய்

இன்னும் தொடர்கிறது

நாட்கள்...

ஆனால்?

பின்னொரு நாளில்

அகதித் தேசத்து

அடிமைகள் அனைவரும்

முடிவிலாப்

பெருவெளி கடந்து

நாடு மீள்கையில்...

அவலம் மட்டுமே

பேசித் துயருறும்

அந்தர நிலைக்குள்ளும்

தள்ளப் படலாம்.

*** *** ***

பிணங்களால் நிறைந்து

இரத்தத்தில்

குளித்து

இன்னும் நிறம் மாறி

வெண்மணல்

சிவக்கிறது.

வயிறொட்டும் பட்டினியும்

உடலுருக்கும்

நோயும் வந்து

உயிரறுக்கும்.

கந்தகப் புகையாலே

எழுதப்பட்ட

தினச் சாவுக் குறிப்புக்கள்

இல்லாமல்

என் ஊர்

என் நகரம்

என் நாடு

இனி

என்று மீளும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயா

மிக அருமை, யதார்த்தமான இலகு நடை கவிதை, அகதி மகன்(கள்) ளின் மன நிலையை தந்த வரிகள் அருமை, இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீயா

மிக அருமை, யதார்த்தமான இலகு நடை கவிதை, அகதி மகன்(கள்) ளின் மன நிலையை தந்த வரிகள் அருமை, இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

இளங்கவி

நன்றி இளங்கவி

உங்கள் கருத்துக்கு நன்றி

இன்றைய நிலையில் இதுதான் உண்மை போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

[தியா உங்கள் கவிதை மிகை அருமையானது... உங்கள் ஆக்கங்கள் எல்லாமே மிகை அருமையாக உள்ளது.. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் தியா.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[தியா உங்கள் கவிதை மிகை அருமையானது... உங்கள் ஆக்கங்கள் எல்லாமே மிகை அருமையாக உள்ளது.. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் தியா.. :unsure:

உண்மையாகவே கவிதை நல்லாயிருக்குதா.

என்னுடைய ஆக்கங்கள் எல்லாத்தையும் படித்து நல்லது என்று சொன்னதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

உண்மையாகவே கவிதை நல்லாயிருக்குதா.

என்னுடைய ஆக்கங்கள் எல்லாத்தையும் படித்து நல்லது என்று சொன்னதற்கு நன்றி.

என்ன தியா இப்படி சொல்லி விட்டிர்கள் உங்கள் ஆக்கங்கள் எல்லாம் அர்புதம்.. நல்ல அழகான வரிகள்.. உங்க கதை எல்லாம் படிக்க இனிமையா இருக்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி	  Posted Yesterday, 10:35 PM


என்ன தியா இப்படி சொல்லி விட்டிர்கள் உங்கள் ஆக்கங்கள் எல்லாம் அர்புதம்.. நல்ல அழகான வரிகள்.. உங்க கதை எல்லாம் படிக்க இனிமையா இருக்குது..
நன்றி சுஜி தொடர்ந்து படித்து கருத்து கூறுங்கள்.
வசி_சுதா	  Posted Yesterday, 11:08 PM

	  கவிதை அருமை!

நன்றி வசி - சுதா

Link to comment
Share on other sites

தியா, இயல்பான நடையில் ரசிக்கவைக்குது கவிதை... தொடரட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்தைக் காட்டும் அழகான கவிதை! தொடருங்கள் வாழ்த்துகள் தியா !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைசதா	  Posted Yesterday, 10:05 PM

	  கவிதை நல்லாயிருக்குது.
நன்றி முல்லை சதா
kavi_ruban	  Posted Today, 02:22 AM

	  தியா, இயல்பான நடையில் ரசிக்கவைக்குது கவிதை... தொடரட்டும்...
நன்றி kavi_ruban உங்கள் வாழ்த்துக்கு தலை சாய்க்கிறேன்.
suvy	  Posted Today, 05:39 PM


அவலத்தைக் காட்டும் அழகான கவிதை! தொடருங்கள் வாழ்த்துகள் தியா !!!

உண்மையை சொன்னேன் அவ்வளவுதான்

நன்றி உங்கள் பாராட்டுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.