Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

நான் நீ நமது வாழ்க்கை

Recommended Posts

மேலை நாடெங்கும்

ஈழத்தின்

ஏழைப் புத்திரர்கள்

உழைத்துழைத்து வரி கட்டி

வளம் பெருக்கி;

வாழ எண்ணி

திசை நகர்ந்து

சமுத்திரத்து மீன்களாக

சகதியிலே

மாட்டி மாட்டி

யாசித்துக் கிடக்கின்றார்.

*** *** ***

தன் தேசம்

அங்கே

தீப்பற்றி எரிகையிலே

மக்களங்கே

தெருத் தெருவாய்

அலைகையிலே

வாயில் நுழைய மறுக்கும்

ஓர் மேலை நாட்டில்

ஓர் வீட்டில்,

இன்றைய துயர்ச் செய்தியை

தொலைக்காடசி பார்த்தோ

அன்றி;

யாதொன்றில் கேட்டோ

மனம் சோர்ந்து

தூங்கிப் பின்

கண் விழிப்பான்.

*** *** ***

காலத்தின் சதியினாலே

அவனுமோர்

அகதிதான்.

நகர் நகராய்

நாடு நாடாய்

விட்டலையும்

ஈழத்து அகதியவன்.

இணைபிரிந்த

தனியாடு.

*** *** ***

ஊரில்

உறவுகள்

நிலை அறிவான்

தீ எரியும் தேசமாக

துயர் பெருகும்

உறவுகளின்

கதை அறிவான்.

நாளை

துயர் முட்டி

வந்த திசைச்சுவடு

தெரியாமல்

மடிந்தும் போகலாம்.

கடல் வந்து

அலை மோதி

மணல் மூடித்

திட்டாகி

சிறு நண்டுப்

படம் போல

சிலவேளை

அவர் வாழ்வு

மறைந்தும் போகலாம்.

*** *** ***

வாழ்க்கை

சீவியமாகி...

போராட்டமாய்

இன்னும் தொடர்கிறது

நாட்கள்...

ஆனால்?

பின்னொரு நாளில்

அகதித் தேசத்து

அடிமைகள் அனைவரும்

முடிவிலாப்

பெருவெளி கடந்து

நாடு மீள்கையில்...

அவலம் மட்டுமே

பேசித் துயருறும்

அந்தர நிலைக்குள்ளும்

தள்ளப் படலாம்.

*** *** ***

பிணங்களால் நிறைந்து

இரத்தத்தில்

குளித்து

இன்னும் நிறம் மாறி

வெண்மணல்

சிவக்கிறது.

வயிறொட்டும் பட்டினியும்

உடலுருக்கும்

நோயும் வந்து

உயிரறுக்கும்.

கந்தகப் புகையாலே

எழுதப்பட்ட

தினச் சாவுக் குறிப்புக்கள்

இல்லாமல்

என் ஊர்

என் நகரம்

என் நாடு

இனி

என்று மீளும்???

Share this post


Link to post
Share on other sites

தீயா

மிக அருமை, யதார்த்தமான இலகு நடை கவிதை, அகதி மகன்(கள்) ளின் மன நிலையை தந்த வரிகள் அருமை, இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

தீயா

மிக அருமை, யதார்த்தமான இலகு நடை கவிதை, அகதி மகன்(கள்) ளின் மன நிலையை தந்த வரிகள் அருமை, இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

இளங்கவி

நன்றி இளங்கவி

உங்கள் கருத்துக்கு நன்றி

இன்றைய நிலையில் இதுதான் உண்மை போல தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites

[தியா உங்கள் கவிதை மிகை அருமையானது... உங்கள் ஆக்கங்கள் எல்லாமே மிகை அருமையாக உள்ளது.. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் தியா.. :unsure:

Share this post


Link to post
Share on other sites

[தியா உங்கள் கவிதை மிகை அருமையானது... உங்கள் ஆக்கங்கள் எல்லாமே மிகை அருமையாக உள்ளது.. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும் தியா.. :unsure:

உண்மையாகவே கவிதை நல்லாயிருக்குதா.

என்னுடைய ஆக்கங்கள் எல்லாத்தையும் படித்து நல்லது என்று சொன்னதற்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

உண்மையாகவே கவிதை நல்லாயிருக்குதா.

என்னுடைய ஆக்கங்கள் எல்லாத்தையும் படித்து நல்லது என்று சொன்னதற்கு நன்றி.

என்ன தியா இப்படி சொல்லி விட்டிர்கள் உங்கள் ஆக்கங்கள் எல்லாம் அர்புதம்.. நல்ல அழகான வரிகள்.. உங்க கதை எல்லாம் படிக்க இனிமையா இருக்குது..

Share this post


Link to post
Share on other sites

சுஜி	 Posted Yesterday, 10:35 PM


என்ன தியா இப்படி சொல்லி விட்டிர்கள் உங்கள் ஆக்கங்கள் எல்லாம் அர்புதம்.. நல்ல அழகான வரிகள்.. உங்க கதை எல்லாம் படிக்க இனிமையா இருக்குது..
நன்றி சுஜி தொடர்ந்து படித்து கருத்து கூறுங்கள்.
வசி_சுதா	 Posted Yesterday, 11:08 PM

	 கவிதை அருமை!

நன்றி வசி - சுதா

Share this post


Link to post
Share on other sites

தியா, இயல்பான நடையில் ரசிக்கவைக்குது கவிதை... தொடரட்டும்...

Share this post


Link to post
Share on other sites

அவலத்தைக் காட்டும் அழகான கவிதை! தொடருங்கள் வாழ்த்துகள் தியா !!!

Share this post


Link to post
Share on other sites

முல்லைசதா	 Posted Yesterday, 10:05 PM

	 கவிதை நல்லாயிருக்குது.
நன்றி முல்லை சதா
kavi_ruban	 Posted Today, 02:22 AM

	 தியா, இயல்பான நடையில் ரசிக்கவைக்குது கவிதை... தொடரட்டும்...
நன்றி kavi_ruban உங்கள் வாழ்த்துக்கு தலை சாய்க்கிறேன்.
suvy	 Posted Today, 05:39 PM


அவலத்தைக் காட்டும் அழகான கவிதை! தொடருங்கள் வாழ்த்துகள் தியா !!!

உண்மையை சொன்னேன் அவ்வளவுதான்

நன்றி உங்கள் பாராட்டுக்கு.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • இது குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவித்துள்ளதாவது- அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர். அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிசடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்படலாம் என அறிக்கையொன்றில் மருத்துவர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இரண்டாம் சுற்று வைரஸ் பரவல் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இறுதிசடங்குகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இறுதிசடங்குகளை குடும்பஉறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் தொண்டமானின் உடலிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மக்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது,கலக்கமடைந்துள்ள ஆதரவாளாகள் பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்து அஞ்சலி செலுத்த முயல்கின்றனர் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.                       https://seithy.com/breifNews.php?newsID=246791&category=TamilNews&language=tamil
  • அனைத்து கிரிக்கெட் மேட்ச்களும் ‘பிக்சிங்தான்’- தரகர் சஞ்சீவ் சாவ்லா அதிர்ச்சித் தகவல்  2000-ம் ஆண்டு உலகை உலுக்கிய, ஹேன்சி குரோனியே சிக்கிய கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய தரகர் சஞ்சீவ் சாவ்லா, அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளும் பிக்சிங் செய்யப்பட்டதுதான் என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். டெல்லி போலீஸுக்கு இவர் அளித்த வாக்குமூல அறிக்கையில், “எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நியாயமாக நடப்பதில்லை, மக்கள் பார்த்த அனைத்து மேட்ச்களும் பிக்சிங் செய்யப்பட்டவைதான்” என்று கூறியுள்ளார். Powered by Ad.Plus      மேலும் கிரிக்கெட் போட்டிகள் திரைப்படங்கள் போல் வேறு ஒருவரால் இயக்கப்படுவடுதான் என்றும் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் ரொம்ப வருடங்களாக இந்த சூதாட்டத் தொழில் செய்து வருவதாகவும், ஆனால் தன்னால் பெயர்கள் எதையும் கூற முடியாது ஏனெனில் இது பெரிய சிண்டிகேட், லாபி, நிழலுலக தாதாக்கள் ஈடுபடும் தொழில், அவர்களைப் பற்றி தான் வாயைத் திறந்தால் கொல்லபடுவேன் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் சஞ்சய் சாவ்லா. விசாரணை காவலதிகாரி டிசிபி கிரைம் பிராஞ்ச் ஜி.ராம்கோபால் நாயக் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக இன்னொரு குண்டையும் போட்டுள்ளார் சஞ்சய் சாவ்லா. திஹார் ஜெயலில் இருக்கும் சாவ்லா மார்ச் 28ம் தேதி கரோனா காரணமாக ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். ஆனால் டெல்லி கோர்ட் அதை நிராகரித்து விட்டது. ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் சாவ்லாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/sports/557111-all-cricket-matches-which-people-see-are-fixed-claims-bookie-sanjeev-chawla-1.html  
  • நல்லதொரு முடிவு. ஒரு மிருகத்திடமிருந்து தூர விலகியிருப்பது நல்லது
  • இந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு   ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள். இந்த ஆண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 மாநாட்டின் தலைவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓரிரு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களை அழைக்க முடியும். கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் இந்த சூழலில் ஜி-7 நாடுகள் மாநாடு ஜூன் 10-12 வரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டை செப்டம்பரில் மாற்றி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக முடிவு செய்துள்ளார். ப்ளோரிடாவில் ஸ்ேபஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளிக்கு செல்லும் நிகழ்வை பார்த்துவிட்டு வாஷிங்டனுக்கு விமானத்தில் அதிபர் ட்ரம்ப் திரும்பினார். அப்போது அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில் “ ஜுன் இறுதியில் நடத்த தி்ட்டமிட்டிருந்த ஜி-7 நாடுகள் மாநாட்டை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கிறேன். இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளேன் ஜி-7 நாடுகள் மாநாடு என்பது, உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளி்ப்படுத்தும் மாநாடாக இல்லை என நான் நினைக்கிறேன். காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் இருக்கிறது” எனத் தெரிவித்தார் வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநர் அலிசா அலெக்சான்ட்ரா பாரா கூறுகையில் “ ஜி-7 நாடுகள் மாநாட்டில் பாரம்பரிய உறுப்புநாடுகள், நட்பு நாடுகளும் அழைக்கப்படும். சீனாவுடன் எதிர்காலத்தில் எவ்வாறு அணுகுவது குறித்து பேசப்படும்” எனத் தெரிவித்தார் இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்று குறையாத பட்சத்தில் , ஜி-7 மாநாட்டில் பங்ேகற்கமாட்டேன் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.hindutamil.in/news/world/557145-trump-postpones-g7-summit-wants-india-others-to-join-group-1.html
  • தாலி கட்டும் போது பலர் உதவிக்கு நிக்கிறாரகள்.அதுக்குப் பிறகு நினைக்கவே நெஞ்சு பக் என்டுது.