• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
யாழ்நிலவன்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி

Recommended Posts

அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!

கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா

புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா

வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே

குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை

சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை

களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை

வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை

பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை

சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை

பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை

சென்றிடும் போதும் சிரித்திடும் முகம்

பகை கொன்றிடும் போது கலங்குது மனம்

என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ

கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?

காற்றுக்கூட முகவரி மறந்தது

மழையும் கூட வீடுகள் தேடுது

மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது

நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது

துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது

துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே

கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது

மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்

தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள்

இரத்தம் ஆறாய் ஓடுது

இந்துமாகடல் கூட செந்நிறமாகுது

இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை

ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்

பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம்

கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு

புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………

http://www.nilavan.tk

Edited by யாழ்நிலவன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிறந்த மண் வீரம்யாழ் நிலவனை கவி எழுத வைக்குது ...புலிகொடிஎறும்,

மாண்ட வீரர் கனவு பலிக்கும் .......மகிழ்ச்சிக்கடலில் தமிழ் மண் சிலிர்க்கும் ..நம்பியிருப்போம் .

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா எப்பிடித்தான் ஒரு ஆக்கம் போட்டு 1நிமிசம் கூட ஆகாது முதலாவது பதில் உங்கட இருக்கும் எப்படித்தான் கண்டு பிடிக்கின்றீர்களோ?

Edited by யாழ்நிலவன்

Share this post


Link to post
Share on other sites

அப்ப இந்த பக்கம் தல .....காட்ட வேணாம் என்று ..........சொலுரீங்க்களோ ?

.9.01............க்கு பதிந்தீர்கள் நான் ..9.12.........க்கு தானே பதில் போடனான் பிடிக்கலை என்றால் சொல்லுங்கோ .

...நான் உங்க பக்கம் தலை காட்ட இல்லை .

Share this post


Link to post
Share on other sites

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள

காலத்தின் பதிவுகள்.

நிறைய பேருக்கு இன்னும் புரியலை

புரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........

Share this post


Link to post
Share on other sites

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

நன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார் "அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்." எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.

Share this post


Link to post
Share on other sites

நன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை!!!

Share this post


Link to post
Share on other sites

யாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...

Share this post


Link to post
Share on other sites

காலத்தின் பதிவுகள்.

நிறைய பேருக்கு இன்னும் புரியலை

புரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........

நன்றி பிரசாந்த் உங்கள் கருத்துக்கு,

நன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார் "அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்." எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.

எதை அடித்தாலும் தமிழை மறக்காமல் இருந்தாச்சாரி

நன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை!!!

கருத்துக்கு மிக்க நன்றி

நிலவன்

ஓம் நான் தான். சொல்லுங்கோ......... ஏதோ வில்லங்கமான சிரிப்புப் போல கிடக்குது

Share this post


Link to post
Share on other sites

யாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...

நன்றி சியா. ஏன் புலம்புவனைப் புலவன் பட்டம் கொடுத்து அப்பட்டத்தினை கேவலப்படுத்துகின்றீர்கள்???

Share this post


Link to post
Share on other sites

நிலவன் :(

Share this post


Link to post
Share on other sites

யாழ்நிலவன்

அற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

யாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

நிலம் வாங்கவேணும்


புலத்தில் நகை வாங்கவேணும்


கழுத்தில் அதைப்போடவேணும்


ஈழத்தில் கழுத்தறுபடுகுது

ம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்

நல்லாயிருக்குது கவிதை

Share this post


Link to post
Share on other sites

ம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்

நல்லாயிருக்குது கவிதை

நன்றி தீயா

யாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்

நன்றி கு.சா

ஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா

Share this post


Link to post
Share on other sites

யாழ்நிலவன்

அற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....

இளங்கவி

இது ஒன்றும் விளிப்பே அல்ல, இவைதான் என் மனதிற் தோன்றியவை, விளிப்பு என்பது விழிக்கும் விரைவில் அப்போது கூறுங்கள். இளங்கவி, நான் உண்மையிற் கவிஞனல்லன் ஏதோ நாலுவரி கிறுக்கத் தெரிந்த பரதேசி...

Share this post


Link to post
Share on other sites

நன்றி கு.சா

ஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா

பாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு :wub:

Share this post


Link to post
Share on other sites

பாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு

கிகிகி அதுதானே அண்ணை

Share this post


Link to post
Share on other sites

நிலவன் :lol:

வார்த்தை முட்டுது வசிக்கு :lol:

நிலவன் :lol:

<_<

நிலம் வாங்குவதில் இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் தமிழர் மும்முரமாகத்தானே இருக்கிறார்கள் நிலவன்.

புலத்தில் நகைவாங்க இப்பவும் கன கடைகள் புதிபுதிதாக திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசக்கணக்கில்.

கவிதைக்குப் பாராட்டுக்கள் நிலவன்.

Share this post


Link to post
Share on other sites

அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!

கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா

புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா

வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே

குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை

சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை

களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை

வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை

பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை

சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை

பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை

சென்றிடும் போதும் சிரித்திடும் முகம்

பகை கொன்றிடும் போது கலங்குது மனம்

என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ

கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?

காற்றுக்கூட முகவரி மறந்தது

மழையும் கூட வீடுகள் தேடுது

மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது

நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது

துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது

துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே

கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது

மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்

தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள்

இரத்தம் ஆறாய் ஓடுது

இந்துமாகடல் கூட செந்நிறமாகுது

இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை

ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்

பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம்

கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு

புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………

http://www.nilavan.tk

Share this post


Link to post
Share on other sites

யாரங்கே! கொடுங்கள் சாட்டையடி . எனக்கு இப்படிக் கவிதை எழுத தெரியாததற்கு.வாழ்த்துக்கள் யாழ்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...
  • லாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை!      
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  • தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலை, பொருளாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத, மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இத்தகைய காலகட்டங்களில் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், நிதிப் பற்றாக்குறை மாநில பொருளாதார நிலையில் (GDP) 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதைத் தளர்த்தி, மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை தவிர்த்த வேறு பிற வடிவங்களில் மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என்றும், ரிசேர்வ் வங்கியிடமிருந்து கடன்பெற்று மத்திய அரசு இந்த நிதியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சிப் பங்களிப்பு அடிப்படையில் இந்த சிறப்பு தொகுப்பு நிதியை பகிர்ந்து வழங்குவதோடு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் நலன் கருதி, துணிச்சலான, கடினமான, புதுமையான முடிவுகளை எடுக்கும் பிரதமர், இந்த சிறப்புக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழகத்தை-மீட்டெடுக்க-மத/
  • அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882 மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk https://www.ibctamil.com/srilanka/80/140035