Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 05:18 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டவர்களில் 45 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 25 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று மாத்தளன் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான மழை பெய்து வருவதால் எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அப்புறப்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் இம்மாதம் முதலாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என புதுமாத்தளன் மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தகவல் பெறபட்டது .........புதினம் .நன்றி

Link to comment
Share on other sites

தங்களின் இழப்பை ஈடு செய்ய அப்பாவி பொதுமக்களை பழிவாங்குகிறான் எதிரி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் இப்படி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.
  • ஒரு எளிய தமிழ் பிள்ளை இந்த மக்களின் அறியாமையை அல்லவா முதலில் போக்க வேண்டும். தமிழர்களின் அறியாமையை வந்தேறி திராவிடர்கள் போல், தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதுதான் தமிழ் தேசிய அரசியலா? குடியுரிமை கொடுத்தர்கள் என்பதை புரியும் மக்களுக்கு தஞ்சம் அல்லது அடைக்கலம் கொடுத்தத்கள் என்பதை புரிவது அவ்வளவு கடினமாக இராது. இதற்கு Phelan and Gillespie புத்தகம் எல்லாம் எடுத்து சட்ட விளக்கம் கொடுக்க தேவையில்லை. “அகதிகளாக ஏற்று கொண்டனர்” என்றால் எந்த பாமரனுக்கும் புரியும். பிகு தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப விபரமானவர்கள். அதனால்தான் சீமானின் புரட்டுகளை இனம் கண்டு ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு தகுந்த பயிற்சியை கொடுத்து அனுப்புகிறார்கள்.  சில கதியற்று நிக்கும் ஈழத்தமிழர்கள்தான் Stockholm syndrome ஆல் பாதிக்கபட்டவர்கள் போல சீமான் என்ன செய்தாலும், சொன்னாலும் - அதுக்கு வினோதமான முட்டுக்களை கொடுக்கிறார்கள்.  
  • நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார்🤣. மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை. இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே. அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு.  மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும்.  ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம்.  இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும்.  ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான். அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும்.  ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது. மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம்.  கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும்.  சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள். ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும். கெளரவம்,  விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும்.  சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம். சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது.  “எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”.  ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு. இதைதான் கருணாநிதியும் செய்தார்.  ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார். சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை🤣.
  • மாவீரர்களுக்கு வீரவணக்கம்
  • நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல: ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு! பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப் போ" என்பதும் விதி மீறல்! இதை பற்றி ஒரு நாற்சந்திக் காவியமே இருக்கிறது! எனவே காணொளி வடிவில் வரும் வரை இருக்காமல் போய் விதிகளை வாசியுங்கோ! தவித்த அகதிக்குக் கிடைத்த சிறு குச்சி "நான் மட்டும் தான் கொம்பானேன்" என்று பொய் சொல்வது மிகுந்த "பெருந்தன்மை" என நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?😎 முடிவாக நாம் சொல்வது, சீமானின் வழமையான புழுகு மூட்டைகளில் இது ஒன்று அவ்வளவே!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.