Jump to content

வெள்ளிக்கிழமை - திருட்டு கீரை - சமையல்


Recommended Posts

இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன்.

வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார்

அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல்லுங்க, கீரை வைக்கிறவர் தான் சொந்தமா வாங்கியெல்லோ வைக்கோணும்!

”அக்க்ர்ர்ர்” என மனசில இருந்தாலும் கீரை முளைத்து வரும் வரை காத்திருந்து இன்று பழிவாங்கிட்டேன்ல. அண்ணாவீட்ட போய் கீரை எடுத்து வந்து கீரைமசியல் செய்தாச்சு. அண்ணாக்கு வேலைக்கு தொலைபேசிய போட்டு “வேலை முடிஞ்சதும் இஞ்ச வந்து சாப்பிடுங்கோ..அண்ணியை நானே போய் கூட்டி வாறேன்” என்றும் சொல்லியாச்சு..அண்ணா வேலைவிட்டு வந்ததும் க்ளைமேக்ஸ் என்ன என்று தெரியும்..கிகிகிகி நாங்க யாரு!

சும்மா சொல்லக்கூடாது திருட்டு மாங்காய் போல, திருட்டு கீரையும் சுவைதாங்க..

KeeraiMasiyal22.jpg

தேவையானவை:

முளைக்கீரை 1 பிடி [திருடியது என்றால் நல்லது]

வெங்காயம் 4 மே.க

மிளகாய் 2

பெரும் சீரகம் 1/2 தே.க

தேசிக்காய் புளி 1 தே.க

பசும்பால்/தேங்காய்பால் 3 தே.க

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

1. கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி, நீர் வார போட்டு, அரிந்தெடுங்கள்.

2. மிளகாயை நான்காக பிளந்து கொள்ளுங்கள்.

3. ஒரு சட்டியில் கீரை,வெங்காயம்,மிளகாய், பெரும் சீரகத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து அவியுங்ககள்.

4. நன்றாக அவிந்த கீரையை நன்றாக கடைந்தெடுங்கள்.

5. கடைந்த கீரைக்கு பாலும், புளியும் சேர்த்து கலக்கினால் கீரை ஆயத்தமாகிவிடும்.

குறிப்பு:

* கீரை வாய்வு என்பதால், கொஞ்சமா உள்ளி சேர்த்துக்கலாம்.

http://thooyaskitchen.blogspot.com/

Link to comment
Share on other sites

முளைக்கீரை 1 பிடி [திருடியது என்றால் நல்லது]

நான் எங்க போய் களவெடுக்கிறது..?? :rolleyes::lol:

சரி முளைக்கீரை எப்படி இருக்கும் என்று படம் போட்டுவிடுங்கோ..

எங்கயாவது பாத்தால் களவெடுத்து கொண்டு வந்து கறிவைக்கிறன் :unsure:

Link to comment
Share on other sites

அது என்ன முளைக் கீரை? குறிப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன முளைக் கீரை? குறிப்புக்கு நன்றி.

முளைக்கீரை என்றால் பிஞ்சுக் கீரை... 5 -6 இலை தான் வந்திருக்கும். கடையும் போது நல்ல பசையாக வரும். தூயாவின் குறிப்பின் படி உள்ளி போட்டால் சுவையைக் கெடுத்து விடும். மிளகாய்த்தூள் எதுவும் போடாததனால் உள்ளி மணம் அதிகமாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KeeraiMasiyal22.jpg

எனக்கு கீரை நல்ல விருப்பம் .

கீரை பச்சை நிறம் அல்லவா ? நீங்கள் சமைத்த கீரைக்குள் சிவப்பாய் ஏதோ இருக்குது . அது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கீரை நல்ல விருப்பம் .

கீரை பச்சை நிறம் அல்லவா ? நீங்கள் சமைத்த கீரைக்குள் சிவப்பாய் ஏதோ இருக்குது . அது என்ன ?

மச்சான் இல்லை பச்சையாக இருக்கும் தண்டு இளம் சிவப்பாக இருக்கும் அப்பிடி ஒரு கீரை உண்டு.

நன்றி தூயா.ஏன் இவ்வளவு காலமும் சமையலறைப்பக்கம் வரல :icon_idea: ? நீங்கள் வரல என்று இங்க தோசை எல்லாம் கல்லில ஊத்தி விளையாடினம் என்னண்டு எண்ட மச்சானை ஒருக்கால் கேளுங்கோ ..................... :unsure:

எனக்கு உந்த கீரை எல்லாம் பிடிக்காது ஏதாவது பச்சையாக இருந்தாலே சாப்பிடுறது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரையை நன்றாக மசிப்பதும் சுவைதான், கொஞ்சம் நருவல் நொருவலாய் மசித்தாலும் நல்ல சுவையாய் இருக்கும்.

தோசையுடன் தொட்டுச் சாப்பிட வித்தியாசமான சுவையாய் இருக்கும்!!!

நன்றி தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கறி .........உடலுக்கு சிறந்தது ....பதிவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முளைக்கீரை

mulai2bkeerai.jpg

கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும்.

முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.

முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது.

நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.

முளைக் கீரையைத் தொரர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.

இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.

முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.

http://tamilchuvai.blogspot.com/2008/12/blog-post.html

Link to comment
Share on other sites

கீரை செயல் முறைக்கு நன்றி. தேவைப்படும் போது செய்து பார்க்கின்றேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தூயாவின் சமையல் குறிப்பை படித்தேன்.

உங்கள் எழுத்து நடை கொஞ்சம் மாறியிருக்கின்றது. ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மிக சரளமாக எழுதுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.