kaviya

இதைச் செய்வது கஸ்டமா?

Recommended Posts

இதைச் செய்வது கஸ்டமா?

கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல்

பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன்

உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம்

பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள்.

உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது.

பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள்.

உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்காது. சரியா?

(சிங்களப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில இதைப் போல வலியுறுத்துவதற்கு ஒரு இரண்டு நிமிடங்களைச் செலவளிக்க விடாமல் தடுப்பது எது???????)

Share this post


Link to post
Share on other sites

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

Share this post


Link to post
Share on other sites

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

நல்ல விடயம் நிழலி. அப்படியான கடைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அக்கடைக்கு வர்த்தக ரீதியாக உதவினால் (ஆதரித்தால்), அதைப் பார்த்து மேலும் பல கடைகள் இதைப் பின்பற்றும்.

நான் பொதுவாகவே தமிழ் கடைகளில் பொருள் வாங்குவது குறைவு (உங்கு வரும் போது அதிகமாக மீன் வகைகள் வாங்குவதுண்டு, அதையும் எனிவரும் காலங்களில் சால்மென் போன்ற மீன்களை கனேடிய கடைகளில் வாங்குவதாக நினைத்திருக்கிறேன்). மிளகாய்த்தூளுக்கு தான் வளியில்லை. நிரு பிரான்ட் தான் வேணும். :(

Edited by Sabesh

Share this post


Link to post
Share on other sites

முயற்ச்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்!

உங்களை போல தான் நானும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு வந்தேன். அந்த கடையின் உரிமையாளர் சொல்லுவதில் நியாயத்தன்மை இருக்கின்றது.! ஏன் என்றால் உந்த மொத்த விற்பனை முகவர்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் அவர்களை நாம் அணுகி ஆதரவு கேட்டுப்பார்க்கலாம். அதை தான் அந்த கடைக்காரர் சொன்னார்.

ஒரு சின்ன விடயம் சிறிலங்கா பொருட்களைப் புறக்கணி என்று கூறும் நாம் இந்த யுத்தத்தை தலைமையேற்று நடாத்தும் இந்திய பொருட்களை இறக்குமதி செய்வது எந்த விதத்தில் நியாயம்.

ம் புரிகிறது ஒழுங்காக சிறிலங்கா பொருட்களையே புறக்கணிக்க காணம் அதற்க்குள் இந்தியாவா என்று....நீங்கள் திட்டுவது

Share this post


Link to post
Share on other sites

நல்ல யோசனையாக உள்ளது .

நாம் வழமையாக பொருட்கள் வாங்கும் கடையில் இப்படி கேட்பதால் , நஷ்டம் ஏற்படப் போவதில்லை .

மாறாக கடைக்காரரை சிந்திக்க வைக்கும் .

Share this post


Link to post
Share on other sites

சமீபத்தில் நானும் தழிழ் பத்திரிகை வாங்கப்போனேன், இன்னும் லெமென் பவ் பிஸ்கற் விற்பனைக்கு வைச்சு இருக்கினம். அதைப்பாத்து மனம் நெந்துபோனேன். அதைவிட அதிச்சி சமீபத்தில் வெளியான தமிழ் பத்திரிக்கையில் ஒரு பக்கம்முழுதும் "பாரம்பரிய சிங்கள உணவு வகைகள்" விளம்பரம் என்று தமிழில் போடப்பட்டிருந்ததைப் பாத்து அதிர்ந்து போனேன்.

Edited by குட்டி

Share this post


Link to post
Share on other sites

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

Share this post


Link to post
Share on other sites

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

நண்பர்களே இலங்கையிலிருந்த வருவதைவிட தமிழகத்திலிருந்து வருவது எவ்வளவோ மேல். இதன் மூலம் முகாம்களில் இருக்கும் ஈழஅகதிகளுக்கு தொழில் வாய்பையும் ஏற்படுத்தலாம்

Share this post


Link to post
Share on other sites

கேட்டமே; கேட்டமே,,

வாங்கிறதுதான் பிழை விக்கிறது பிழை இல்லை எண்டு சொன்னாங்க...*நல்லது நடத்துங்கோ எண்டு சொன்னம்:(

Share this post


Link to post
Share on other sites

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

Share this post


Link to post
Share on other sites

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

இது ரொம்ப நல்லா இருக்கே.... உங்களுக்கும் சில தேசவிரோதிகளின் இணையங்களில் கதைப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கு?

இப்படியும் சிலர் பிழைத்தால் தான் பலருக்கு நிதி கொடுக்க முடியும். இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால்

பலர் வேலை இன்றி இருக்கிறார்கள் இவர்களும் கடைகளை மூடிவிட்டால் நீங்கள் வேலை கொடுக்க தயாரா?

Share this post


Link to post
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

Share this post


Link to post
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

காவியா அக்கா ஆரிடம் கேட்டால் அவையளிடம் வேலைக்கு போகலாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நாய் விற்ற காசு குரைக்கவா போகுது:? :(:lol::D

Share this post


Link to post
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

ஒரு கை தட்டி ஒரு போதும் சத்தம் வராது அதைத்தான் சொன்னேன்.

உண்மையில் எத்தனை பேர் நீங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடக்கிறார்கள். கதைக்கவேணும் (அல்லது யாழின் பக்கங்களை நிரப்பவேணும்) என்பதற்காக சொல்கிறார்கள்.

யதார்த்தபூர்வமாக சிந்திப்பதே நலம்

Share this post


Link to post
Share on other sites

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும். கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உதாரணமாகத் தான் பிற்சாக் கடைச் சம்பவத்தை நான் கூறினேன். நிழலி ஒரு உதாரணத்தைக் கூறினார். இந்த முறை வெளிவந்திருக்கும் வாந ளுசடையமெய சநிழசவநச பத்திரிகையைப் பாருங்கள். தமிழ் விளம்பரங்களில் எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று.

முயற்சித்தால் முடியும். காரணம் நாங்கள் அநியாயமான எதையுமு; கேட்கவில்லையே

Share this post


Link to post
Share on other sites

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும்.

முதல்ல ஒழுங்கா வாசித்து பாருங்க அப்புறம் விடயத்துக்கு வாங்க.......

நான் சொன்னது ஒரு கை தட்டி சத்தம் வராது என்று தான்.

கை தட்டினால் சத்தம் வரும் என்று பாடம் நடத்தாதையுங்கோ அது எல்லோருக்கும் தெரியும்.

Share this post


Link to post
Share on other sites

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

நான் இரண்டு தொழில்களையும் தனித்தனிய சொன்னேன்.

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்குள் வேண்டா விவாதம் வேண்டாம், முரண்டுபிடிக்கவும் வேண்டாம்.

நாமே உணர்ந்து பொருட்களை வாங்காமல் விடுவோம், வியாபாரிகளுக்கும் பக்குவமாக தெளிவு படுத்துவோம்.

அதையும் மீறி விற்கத்தான்வேனும் என்பவர்களையும், வாங்கத்தான் வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களையும் யாரால் என்ன செய்யமுடீயும்?

Share this post


Link to post
Share on other sites

ஆலமரம்.. தண்ணிச்சொம்பு.. திண்ணை..

ரவுடி ரங்கன், கோயில் பூசாரி முதல் ஆசாரி வரை எல்லோரும் ஆஜர். சிறிது நேரத்தில் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் வந்து திண்ணையில் அமர்கிறார். :D

பஞ்சாயத்து தலைவர்: என்னையா இன்னிக்கு பிராது? :(

பூசாரி: ஐயா.. இங்க திருதிருன்னு முழிச்சிண்டு நிக்கிறானே ரவுடி ரங்கன்...! பக்கத்து ஊரில சாராயம் வாங்கிண்டு வந்து நம்ம ஊரில வித்திண்டிருக்கன்...! அதைக் குடிச்சிட்டு நம்ம குடிகாரப் பசங்க போடுற ஆட்டம் தாங்க முடியல சாமி..! :(

ஆசாரி: அதுமட்டும் இல்லீங்கையா..! ஸ்கூல் போற பசங்களுக்கு வேற ஊத்திக் குடுக்கிறான்யா..! :(

தலைவர்: ஏண்டா ரங்கா..! உனக்கு முன்னமே எச்சரிக்கை குடுத்திருக்கம்ல..! ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஏண்டா சாராயம் வித்தே..! :lol:

ரங்கன்: அல்லாரும் குடிக்கிறாய்ங்க..! அதான் விக்கிறம்..! :D

தலைவர்: அடிங்.. அல்லாரும் குடிச்சா.. நீ வித்திடுவீயா? :D

ரங்கன்: குடிக்கிறதை உட சொல்லுங்க.. நான் விக்கிறத உட்டுடுறேன்..! :D

பூசாரி: ஏண்டா..ஊர்க்காரப் பசங்களே குடிய நிறுத்த முடியாம கஷ்டப்பட்டிண்டு இருக்கா..! அவா எப்பிடி நிறுத்துவா? :(

(தொடரும்) :D

Share this post


Link to post
Share on other sites

ரங்கன்: அதை அவா கிட்டதான் கேக்கணும்..!! :D

தலைவர்: டேய்.. என்ன கொழுப்பா..! நீ விக்கலன்னா ஊர்க்காரப் பசங்களுக்கு எங்க இருந்துடா சாராயம் வரும்? :D

ரங்கன்: இந்த ரங்கன் இல்லென்னா இன்னொரு பக்கிரி.. :lol:

தலைவர் (மெதுவாக): ஏன்யா பூசாரி... இவன் சொல்லுறதில கூட ஒரு பாய்ண்ட் இருக்கு போல தெரியுதே..! :(

பூசாரி: ஐயா.. அவன் சொல்லுறதும் கரெக்டுதான்..! ஆனா அதுக்காக இப்பிடியே இவனை விட்டுட முடியுமா? நம்ம என்ன, ஊரில ஒவ்வொருத்தனா புடிச்சு குடிக்காதடான்னு சொல்லவா முடியும்? வேணும்னா குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் பண்ணலாம்..! :(

தலைவர்: ம்ம்ம்.. அதுவும் சரிதான்.. ஏன்யா ஆசாரி.. நீ என்னையா சொல்றே..! :D

ஆசாரி: ஐயா.. விக்கிற இவனை விடுங்க.. குடிக்கிறவனையும் விட்டிடுங்க.. யாருகிட்ட இவன் சரக்கு வாங்கிறான்னு பாருங்க.. அவனைப் புடிங்க.. தீர்ந்தது மாட்டர்..! அப்புறம் ரங்கனாவது.. பக்கிரியாவது..! :D

தலைவர்: ஆஹா.. புடிச்சாண்டா பாயிண்டை..! :( ஏண்டா ரங்கா..! யாருகிட்டடா சாராயம் வாங்கி விக்கிற?

ரங்கன்: வேற யாரு.. எல்லாம் நம்ம பக்கத்தூரு முத்துகிட்ட தான்..! :(

(தொடரும்) :D

Share this post


Link to post
Share on other sites

தலைவர்: அப்போ.. அந்த முத்து காய்ச்சலைன்னா ஒனக்கு சரக்கு கெடைக்காது..! அப்பிடியா? :lol:

ரங்கன் (மனதுக்குள்): இதென்ன கேணத்தனமா ஒரு கேள்வி..! :(

ரங்கன்: ஆமா.. கெடைக்காது..! அவனை காய்ச்ச வேணாம்னு சொல்லுங்க..! நான் விக்கிறதை உட்டுடுறன்..! :D

பூசாரி: ஏண்டா.. அடுத்தவன்மேல பழியப் போட்டு தப்பிச்சுடலாமேன்னு பாக்கிறியா..! சாராயம் வித்து அடுத்தவன் குடியைக் கெடுத்தா பகவான் கோவிச்சிண்டுடுவர்..! தெரிஞ்சுக்கோ..! :(

ரங்கன்: ஐய்.. இது நல்லாருக்கே..! போன கோயில் திருவிழாவுக்கு சுளையா பத்தாயிரம் குடுத்தனே..! அப்போ உங்க பகவான் கோவிக்கலையா? :D

பூசாரி: :( நீ சாராயம் வித்து சம்பாதிச்ச காசுன்னு தெரிஞ்சிருந்தா வாங்கிண்டிருக்க மாட்டேண்டா அபிஷ்டு..! :D

தலைவர்: சரி.. எல்லாத்தையும் விட்டிடு..! ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கே..! அதை ஏண்டா மீறினே..! :D

ரங்கன்: எதுக்கு கட்டுப்பாடு போடுறீங்க..! குடிக்கிறவனை நிறுத்த சொல்லுங்க..! காய்ச்சிறவனை நிறுத்தச் சொல்லுங்க..! அல்லாமே சரியாயிடும்..! :(

அப்போது டவுனில் படித்தவர்கள் போன்ற கெட்டப்பில் ஒரு சிலர் அங்கே வருகிறார்கள்..!

(தொடரும்) :D

Share this post


Link to post
Share on other sites

தலைவர்: யாரு டவுன் பசங்களா? என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது? :unsure:

"நூறு நாட்களில் கணக்கு வழக்கு" என்கிற புத்தகத்தை வைத்திருக்கிற பெண் மெதுவாக வாயைத் திறக்கிறார்.

"நாங்களும் இந்த ரங்கன் மாதிரி பல பேரிட்ட பேசிப் பார்த்திட்டம். விக்கிறது தப்பில்லையாமா..! வாங்கிக் குடிக்கிறதுதான் தப்பாம்..! சொன்னாங்க..! :( "

கையில் "கூடல் முடிந்து கூடல்" என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டே இன்னுமொருவர் ஆரம்பிக்கிறார்.

" நேரா சாராயக்கடைக்கே போய் நான் டாஸ்மாக் பக்கம் போறேன்னு உதார் விடுங்க..! பசங்க ஆடிப் போயிருவாய்ங்க..! <_< "

அப்போது கூட்டத்தில் சலசலப்பு..

உள்ளே பதுங்கியபடி ஒருகுரல்... "ஆமா.. இங்க சும்மாவே யாருக்கும் சரியான தொழில் கிடையாது..! இதுக்குள்ள கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறாங்களாமா..! கள்ளச்சாராய தொழிலை விட்டிட்டு வந்தா இவிங்க வேற வேலை குடுப்பாய்ங்களாமா? பேச வந்திட்டாங்க..! :D "

இன்னொரு குரல்... "பார்த்துப் பேசு தம்பி..! தப்புப்பண்ணி காசு சம்பாதிக்கலாம்னா ஆயிரம் தொழில் இருக்கு..! அதெல்லாம் அப்ப செய்யலாமா? சும்மா பேசிக்கிட்டு..! <_< "

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :rolleyes:

தலைவர்: :wub:

(முற்றும்) :D

Share this post


Link to post
Share on other sites

-----

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :D

தலைவர்: :rolleyes:

ரங்கன் பயங்கர கில்லாடி போல இருக்கிறானே .......

சந்திலை பூந்து , சிந்து பாடுற மாதிரி கடைசியா பஞ்சாயத்து தலைவருக்கே மருந்தை கொடுத்திட்டானே .....

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு எடுத்துக்காட்டு, டங்குவார்

Edited by குட்டி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அருமையான‌ வ‌ரிக‌ள் நொச்சி ஜ‌யா / வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் / மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு / பொறுத்தார் பூமி ஆள்வார் , 
  • ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!         by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ட்ரம்ப்பின்-கோரிக்கை-நிற/
  • இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு!         by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/
  • அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி           by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அற்ப-விடயங்களுக்காக-அநாவ/
  • சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்!          by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் நான் பார்க்கவில்லை. நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது கிடைக்கப்பெறாது. எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்துள்ளன. இதுவே உண்மை நிலைமையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்க-3/