Jump to content

நான் எழுதிய பரிட்சை...


Recommended Posts

பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே..

ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்...

ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று..

எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது என்று பார்த்தன் முதலில் கேள்விக்கு உரியதை எழுதினன் இடையில பக்கத்தில் நடந்த சினிமா கதை எழுதி போட்டு முடியுற பக்கம் திரும்பவும் கேள்விக்கு உரிய பதிலை எழுதினான் வாத்தியார் பாக்க மாட்டார் என்று நினைத்து.. வாத்தியாரவை எல்லாமும் முழுதா படிக்க மட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.. நான் நினைத்தேன் அவரும் பாக்க மாட்டார்.. இப்படி எல்லாவற்றையும் திருத்தினால் நேரம் போகாதா.. அவருக்கு மனைவி பிள்ளைகள் இருந்தது அவர் சிக்கிரமாய் வீட்டுக்கு போவர் என்று நினைத்தேன்..

ஆனால் நான் நினைத்தது வேற நடந்தது வேற அவர் கண்டு புடித்தது மட்டும் இல்லாமல் என்னையே வகுப்பில் உள்ளவங்களுக்கு வாசித்து காட்டவும் சொல்லி விட்டார்..அவரும் எல்லாரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள்.. இது எல்லாம் வாழ்க்கையில் சகஜம் அவரே இது மாதிரி எவ்வளவு பண்ணி இருப்பார்.. அவர் என்னை கூப்பிட்டு சொன்னார் தான் படிக்கும் காலத்தில் தான் கூட இப்படி பண்ணி இருக்கன் என்று.. என்ன நீ ஒரு படி மேல போயுட்டாய் என்றார்.. ஆனால் எனக்கு சொல்லி அனுப்பினார் எனிமேல் இது மாதிரி பண்ணதை என்று..

என்ன எல்லாரும் பாக்குறியள் நீங்களும் இது மாதிரி ஏதாவது பண்ணி இருப்பிர்கள் இல்லை கொஞ்சம் எடுத்து விடுங்களன் பார்ப்பம்? :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டாவது தமிழ் வகுப்பில் எல்லோரும் 'நான் போற்றும் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி இருந்தார் தமிழ் ஆசிரியர். அவர் பெயர் மோசேஸ். மறுநாள் வகுப்பில் அவர் சொன்னார், இங்குள்ள 80 பெரும் காந்தியை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ஒருவனைத்தவிர. அவன் பிரபாகரனைப் பற்றி எழுதி இருக்கிறான் என்று என்னை கூப்பிட்டு சொன்னார், ஊரில் காந்தியை தவிர ஒரு தலைவரும் இல்லை இவர்களுக்கு. கவிஞர் என்றால் பாரதியை தவிர வேறு யாரும் இல்லை. ( நான் நொடுமாரனின் ஒரு புத்தகத்திலிருந்து பார்த்து எழுதிய கட்டுரை அது :( )

Link to comment
Share on other sites

எட்டாவது தமிழ் வகுப்பில் எல்லோரும் 'நான் போற்றும் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி இருந்தார் தமிழ் ஆசிரியர். அவர் பெயர் மோசேஸ். மறுநாள் வகுப்பில் அவர் சொன்னார், இங்குள்ள 80 பெரும் காந்தியை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ஒருவனைத்தவிர. அவன் பிரபாகரனைப் பற்றி எழுதி இருக்கிறான் என்று என்னை கூப்பிட்டு சொன்னார், ஊரில் காந்தியை தவிர ஒரு தலைவரும் இல்லை இவர்களுக்கு. கவிஞர் என்றால் பாரதியை தவிர வேறு யாரும் இல்லை. ( நான் நொடுமாரனின் ஒரு புத்தகத்திலிருந்து பார்த்து எழுதிய கட்டுரை அது :( )

ஆமாம் செந்தில் பள்ளி பருவத்தில் செயுற குறும்பு எல்லாம் சுவையானது.. நன்றி உங்களை பத்தி சொன்னதுக்கு.. எனக்கு சிரிப்புதான் வருகுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் என் பாடசாலை விடுமுறை க்காலங்களில் புதிதாக இடம் மாற்றம் பெற்று வந்த ஒரு குடும்பம் என் வீடிற்கு அருகில் வசித்தார்கள் அவர்களது இரண்டு சிறுமிகளுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுப்பது உண்டு . படிபித்த பாடத்தில் அடுத்தநாள் பத்து சொற்கள் சொல்வது எழுதுதல் (.dictation......) கொடுப்பது வழக்கம் . ஒரு நாள் சொல்வது எழுத்துதல் கொடுக்க அந்த சிறுமி முழுவதும் சரி எடுத்தார் . வழக்கமாக் இரண்டு அல்லாதது மூன்று தான் சரி எடுப்பார். மூன்றாம் நாள் நான் சென்ற போது என்னை வழக்கமாக் இருக்கும் இடத்தை விட்டு வேறு பக்கத்தில் இருக்க விரும்பினாள் அந்தசிறுமி

சொல்வது எழுதுதல் முடிந்தது . நான் சொல்ல சொல்ல என் தலைக்கு மேல் பார்த்து யோசிப்பாது போல பாவனை செய்து எழுதி முடித்தாள் .அந்த நேரம் பொலிஸ் அதிகாரியான தந்தை வேலை முடிந்து வீடு வந்தார் . மகள் எப்படி என்று கேட்டார்.நேற்றிலிருந்து நல்ல முன்னேற்றம் காலயில் எழும்பி படிகிறாவா என்றேன். இல்லை அவள் .........என்ன வேலை செய்கிறாள் தெரியுமா ? "போலீஸ்காரன் மகளே கள்ள வேலை செய்கிறாள் "என்றார் . பின்பு தான் சொனார் என் மகள் உங்க தலைக்கு மேல் அத்தனை சொல்லயும் எழுதி ஒட்டி வைத்திருக்கிறாள் . நீங்கள் சொல்ல சொல்ல பார்த்து எழுதுகிறாள். என்றார்.அது தானே பார்த்தேன் ........... என்றேன். நான். குடும்பம் முழுக்க சேர்ந்து சிரித்தோம் . அவ அழுது கொண்டு அறைக்குள் ஓடி விடார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடப்பக்கம் போகாததால் என்னால் ஒன்றும் எழுத முடியவி்லை. :D

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடப்பக்கம் போகாததால் என்னால் ஒன்றும் எழுத முடியவி்லை. :D

சஜிவன் ஏன் இந்த கவலை...

அக்கா நிலாமதி அக்கா உண்மையா நல்ல அறிவாளிதான் அந்த குழந்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் நல்ல பிள்ளை சுஜி.

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் நல்ல பிள்ளை சுஜி.

அப்ப நான் மட்டும் கெட்ட பிள்ளையா ரதி... நானும் நல்ல பிள்ளைதாங்கோ :)

Link to comment
Share on other sites

சுஜி, நானும் நிறைய தமிழில் வாத்திக்கு எழுதி கொடுத்திருக்கிறேன். ஆனால் வாத்தி நல்ல புள்ளிகள் தந்த மாதிரி ஞாபகம் இல்லை. அனேகமாக வாத்தியில் தான் பிரச்சனை இருக்கு என்று பேசிக்கொள்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில பாடம் சொல்லி கொடுப்பது உண்டு . படிபித்த பாடத்தில் அடுத்தநாள் பத்து சொற்கள் சொல்வது எழுதுதல் (.dictation......) கொடுப்பது வழக்கம் .

ஊரில ஆங்கில பாடம் சொல்லி கொடுக்கிற எல்லாரும் உந்த டிக்ரேசன் வைச்சு கொல்லுறது எதுக்காக? உந்த டிக்ரேசனாலயே ஆங்கில வகுப்புகளுக்கு முழுக்கு போட தொடங்கி..... :)

Link to comment
Share on other sites

சுஜி செந்தில் நிலா அக்கா உங்களது அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது.

எனது அனுபவம் ஒன்றையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நாள் எமது தமிழ் வகுப்பில் எமது தமிழ் ஆசிரியரால் வகுப்பிற்கு சமூகம் அளிக்க முடியவில்லை. எனவே மற்றைய ஆசிரியர் ஒருவரிடம் ஒரு குறிப்பை கொடுத்திருந்தார். " இன்று ஒரு அவசர வேலையின் நிமித்தம் நான் வெளியே செல்வதால் இன்று வகுப்பு எடுக்க முடியவில்லை. எனவே இன்றைய தமிழ் பாடத்தில் உங்கள் நண்பனுக்கு உங்கள் பாடசாலையில் நடை பெற்ற விஞ்ஞான கண்காட்சி பற்றிய உங்களது அனுபவங்கள் படிப்பினைகள் பற்றிய ஒரு கடிதம் எழுதி அந்த ஆசிரியரிடம் கொடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார். மாணவர்களெல்லாம் வேகமாக கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அன்று எனது மனநிலை மிகவும் சலிப்பாக இருந்ததால் அந்த கடிதம் எழுதுவதில் எனக்கு சுவாரசியம் இருக்கவில்லை. என்ன எழுதலாம் என சிறுது நேரம் யோசித்த எனக்கு மின்னல் கீற்றென ஒரு அருமையான idea பொறி தட்டியது. உடனேயே நானும் மிக வேகமாக எனது கண்காட்சி அனுபவங்கள் பற்றிய எனது கடிதத்தை பின்வருமாறு எழுதி மற்றைய ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.

" அன்பிற்கினிய நண்பா,

நலம். நலமறிய ஆவல். சென்றவாரம் எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சி எனக்கு விஞ்ஞானத்தின் ஆழமான பரிமாணங்கள் பற்றிய புதிய கண்ணோட்டத்தை தந்தது. அந்த அருமையான அனுபவங்களை உன்னுடன் இந்த மடலில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஆனால் ஒரு அவசர வேலையின் நிமித்தம் வெளியே செல்ல வேண்டி இருப்பதால் இக்கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது எனது அடுத்த கடிதத்தில் எனது அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உன் அருமை நண்பன்

சீமான்

எனது அப்பாவின் நண்பரான தமிழ் ஆசிரியர் அடுத்த நாள் எனது தந்தையிடம் போட்டு கொடுத்தது மட்டுமன்றி அக்கடிதத்தையும் கொடுத்து விட்டார். நான் நன்றாக அப்பாவிடம் வாங்கி கட்டினேன்.

Link to comment
Share on other sites

சுஜி, நானும் நிறைய தமிழில் வாத்திக்கு எழுதி கொடுத்திருக்கிறேன். ஆனால் வாத்தி நல்ல புள்ளிகள் தந்த மாதிரி ஞாபகம் இல்லை. அனேகமாக வாத்தியில் தான் பிரச்சனை இருக்கு என்று பேசிக்கொள்கிறார்கள். :rolleyes:

நாவிலன் உங்கள் கருத்து பார்த்து என்னால் சிரிக்காமல் இருக்க முடிய வில்லை? தமிழ் வாத்தி என்றாலே பிரச்சனைக்கு உரியவர்கள் போல அப்ப என்னோட வாத்திக்கு ஏதாவது பிரச்சனையோ.. ஒரு கதை எழுதி இருக்கன் பார்த்துட்டு வீட்டுக்கு போறதை விடுத்து அதை முழுசா படித்து எல்லாருக்கும் காண்பித்து ஐயோஒ

எனது அப்பாவின் நண்பரான தமிழ் ஆசிரியர் அடுத்த நாள் எனது தந்தையிடம் போட்டு கொடுத்தது மட்டுமன்றி அக்கடிதத்தையும் கொடுத்து விட்டார். நான் நன்றாக அப்பாவிடம் வாங்கி கட்டினேன்.

சீமான் நீங்கள் ஒரு தடைவைதான் திட்டு வாங்கிங்களா? நான் இது மாதிரி நிறைய தடவை திட்டு வாங்குவது :rolleyes:

? உந்த டிக்ரேசனாலயே ஆங்கில வகுப்புகளுக்கு முழுக்கு போட தொடங்கி..... :)

சபேஸன் நீங்களும் நிறய தடவை முழுக்கு போட்டு இருக்குறிர்கள் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருடைய அனுபவமும் இனிமையானது...

நான் பாடசாலையில் கற்பிற்கும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கூறினேன் உங்களுக்கு பிடித்த மிருகம் பற்றி வர்ணித்துக் கட்டுரை வரைந்து வாருங்கள் என்று,,, ஒரு மாணவி கொஞ்சம் அவசரம் பிடித்தவள் அவளும் மின்னல் வேகத்தில் எழுதி வந்தாள்...”பிடித்த மிருகம் மாடு... மாடு நான் வளர்ப்பேன் ...மாட்டை நான் தென்னை மரத்தில் கட்டுவேன்...தென்னை மிகவும் உயரமானது...தென்னையில் 20 ஓலைக்களுக்கு மேல் உண்டு.. நிறைய தேங்காய்களும் உண்டு...தென்னை ... தென்னை... தென்னை... என்று தென்னை பற்றியே இருந்தது.. எனக்கு சிரிப்பு தான் வந்தது... நான் கூப்பிட்டு விளக்கம் கொடுத்தேன் மாட்டை பற்றி எழுத வந்து தென்னை பற்றி எழுதி உள்ளீரே உம் அவசரத்தால் புள்ளிகளை இழந்து விட்டீர் என்று...அவள் புரிந்து கொண்டு சிரித்தாள்... நான் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன் எழுதும்படி...

சில மாணவர்கள் அவசரத்தால் இப்படி பல விடயங்களில் தவறு விடுவது உண்டு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.