Jump to content

வடலி வெளியீடும் தூயாவின் புதிய புத்தகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வருடத்தின் முதல் நாள். சோமிதரனோடு பேசிக் கொண்டிருந்த போது தமிழகத்தின் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடத் தயாராயிருந்த நண்பர் அகிலனது புத்தகமொன்று வெளிவரமுடியாத சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். காரணம் அப் புத்தகத்தின் பெயர்! மரணத்தின் வாசனை !

பெயரினை மாற்றுவது குறித்த தமிழக பதிப்பகம் ஆலோசித்ததாகவும் அதற்கு உடன்படவில்லையெனவும் அகிலன் சொன்னார். ஓ.. அப்படியா எனப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நாங்களே வெளியிட்டால் என்ன என்ற யோசனை உதித்த போது பதிப்பக ஐடியாக்கள் எதுவும் இல்லை. சோமிதரன் வேறு எட்டாம் திகதி கண்காட்சி - பத்தாம் திகதி புத்தகத்தைக் கொண்டு வரலாம் என மூன்றாம் திகதி சொன்ன போது புளுகம் வேறு பிடிபடவில்லை. சரி செய்வம் எனக் களம் இறங்கியபோது விநியோகம் விற்பனை என எதைக் குறித்தும் சிந்திக்கவில்லை. கண்காட்சியில் புத்தகங்களை அடுக்குவதும் விற்பதுவும் ஒன்றே நோக்கு.

பத்தாம் திகதி… பதினோராம் திகதி… பன்னிரண்டாம் திகதி என நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. சோமிதரன் புத்தகம் கண்காட்சிக்கு போயிட்டுதோ என்று கேட்கிற போதெல்லாம் ஓமோம் நாளைக்கு நாளைக்கு அவரும் சொல்ல திருநாளைப் புத்தகமாகி காலம் ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென்று சோமிதரன் தனது வேலையில் பிசியாகிப் போக கண்காட்சியும் முடிவுக்கு வந்தது. கடவுளே இனி வருகிற அத்தனை புத்தகத்தை வைத்தும் என்ன செய்வது.. யார் யாருக்கு இலவசமாகக் கொடுக்கலாம் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினோம். சோமிதரன் வெரி சொறி மச்சான்.. என மெயில் அனுப்பியிருந்ததை படித்து தலையைச் சொறிந்து கொண்டிருந்தோம்.

இருபத்தைந்தாம் திகதியாகியது. பத்தாம் திகதிக்குள்ளே முடிக்கலாம் எனச் சொல்லி வாங்கிய அச்சகத்தார் ஒருவாறு புத்தகத்தின் முதற் தொகுதியை விடுதலை செய்தனர். புத்தகம் வந்து விட்டது என அகிலன் சொன்னபோது அவருக்கும் மகிழ்வில்லை. அதை வைத்து என்ன செய்வது..?

பதிப்பகம் - விற்பனை - விநியோகம் என அனைத்துமே அந்நியப் பட்டு நின்றன. யாரூடாக யாரைப்பிடித்து..? என ஒன்றுமே புரியவில்லை. வேறு வழியில்லை அகிலன். வலைப்பதிவில் பிரபலமான சிலர் இருக்கிறார்கள் இல்லையா.. அவர்களில் சிலரைப் பிடித்து கையில் புத்தகத்தை கொடுங்கள். அவர்கள் படித்து விட்டு ஏதாவது எழுதுவார்கள். அதனூடாக வலையுலகிலாவது ஒரு அறிமுகத்தைப் பெறலாம் என்ற சிறுபிள்ளைத் தனமான ஐடியாவை நான் அகிலனிடம் சொன்னேன்.

ஏதோ ஒரு பதிவர் அல்லது மொட்டைமாடிச் சந்திப்பில் வைத்து அகிலன் சிலரிடம் புத்தகங்களைக் கையளித்தார். பிறகும் ஒருவாரம்.. இரு வாரம்.. யாராவது தொடக்கி வைத்தால் அதைப்பிடித்து மேலேறி விடலாம் என்ற நினைப்பு..

தினமும் பதிவுகளை மேயத் தொடங்கினோம். யாராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா..? இல்லவே இல்லை.

இதற்கிடையில் விழுந்து தடுமாறி விநியோக வழிகளை அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்கிய போதுதான் ஆனந்த விகடனின் பாரதி தம்பி மரணத்தின் வாசனை புத்தகத்தைப் படித்து விட்டு அது குறித்தும் அந்த எழுத்தாளர் குறித்துமான கட்டுரைக்காக அகிலனைத் தொடர்பு கொண்டார்.

இதற்கிடையில் தமிழகம் எங்கிலுமான விநியோகத்தை முடித்து நிற்க அடுத்த வாரம் ஆனந்த விகடனில் மரணத்தின் வாசனை குறித்த கட்டுரை வெளியானது. சந்தேகமேயில்லாமல் வெகுஜன ஊடகங்களின் பலம் தமிழகத்தில் பிரமிக்கத் தக்கதுதான்.

ஆனந்த விகடனில் வந்த அகிலனின் மரணத்தின் வாசனை நூல் தொடர்பான கட்டுரைக்கான பக்க இணைப்பு இதில் உள்ளது

இணைப்பு 1

இணைப்பு 2

ஐந்தாவது நாள் பொள்ளாச்சி எனும் நகரிலிருந்து தொலை பேசி வருகிறது. சார் புக் முடிந்து விட்டது. அனுப்ப முடியுமா… ? அன்று ஆரம்பித்து நேற்று சென்னையின் ஒரு புத்தக நிலையத்தில் புத்தகம் தீர்ந்தது வரை - பாராட்டுகள் - தொலைபேசி அழைப்புகள் - (அரசியல் தலைவர்களும்.. உண்டு : ) - ஈமெயில் விசாரிப்புக்கள்..

உண்மையைச் சொன்னால் திகைத்துப் போய்விட்டோம் நாம். இதொன்றும் பெரிய விடயமில்லைத்தான். இதனை விட பெரும் சாதனைகள் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நமக்கு - புத்தகங்களை போட்டுவிட்டு.. அடுத்தது என்ன என பேய் முழி முழித்துக் கொண்டிருந்த நமக்கு - இதுவொரு பெரும் சாதனை. புத்தகங்களை வீட்டில் அடுக்கிவிட்டு பெருமூச்செறியும் நம் நிலையில் இதுவொரு மாற்றம்.

அப்போது ஆரம்பிக்கிறது வடலியின் ஆரம்பம். மரணத்தின் வாசனை இரண்டாம் பதிப்போடு..

0 0 0

வடலி பனையின் இளைய பெயர். அகிலனின் தெரிவு.

logoவடலியை பதிவு செய்வதிலிருந்து டெல்லியில் ISBN எண்களை பெறுவது வரை பட படவென வேலைகள் தொடங்கின. தற்போது வன்னியில் தொடர்பற்றிருக்கும் கருணாகரன் முன்னர் அனுப்பியிருந்த அவரது கவிதைத் தொகுதியான பலி ஆடு அடுத்த இலக்கு என முடிவு செய்யப் பட்டது. கூடவே கானா பிரபா மற்றும் தூயா ஆகியோரின் நூல்களும் சேர்ந்து கொண்டன. ஓரிடத்திலன்றி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் நண்பர்களை இணையம் வழி இணைத்து பேசி அடுத்த வேலைகள் ஆரம்பமாகி விட்டன. இதோ வரும் ஏப்ரல் இறுதிக்குள் வடலியின் புதிய மூன்று நூல்கள் வெளியாகின்றன.

0 0 0

மரணத்தின் வாசனை முதலாவது வெளியீடு உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் வாசகர்களை நோக்கிக் கொண்டு செல்லப்படவில்லை என்பது உண்மைதான். பிரான்சில் மட்டுமே அது விற்பனைக்கு விடப் பட்டது. உண்மையில் புத்தகங்கள் கைவசம் இல்லை என்பதனையும் தாண்டி - ஈழத்தமிழர்களின் வாசகப் பரப்புக் குறித்து நியாயமான சந்தேகங்கள் தனிப்பட்ட ரீதியில் எனக்கு உண்டு. இருந்தாலும் - இயந்திரத்தனமான புலம்பெயர் வாழ்வில் புத்தக கடைகள் - என்பவற்றிற்கான கேள்வியின்மையின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. வடலி தன் விற்பனையை இணையத்திலும் தொடங்கியிருப்பதனால் - பார்க்கலாம், நம் இலக்கியத் தாகம் எத்தகையது என.. (பிரான்சில் பெருமளவு விற்பனை இருந்தது.. பிரான்ஸ் ஒரு அருமையான கலையார்வம் மிக்க ஒரு நாடுதான். :D

தமிழகத்தில் ஒரு சிலரோடு தேங்கிவிட்ட ஈழத்து எழுத்தாளர்கள் என்ற அடையாளம் உடைந்து பரவலாகவும் விரிவாகவும் தமிழக மட்டத்தில் ஈழத்தின் எழுத்தாளர்கள் அறியப்பட வேண்டியவர்கள் என்பது எனது தனிப்பட்ட அவா. இந்த இலக்கினை அடைய நமக்குத் தொடர்ச்சித் தன்மை தேவைப்படுகிறது. வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். உலகெங்கும் வாழும் பத்து லட்சம் ஈழத்தமிழர்களில் wah wah whats tamil.. என்பவர்களை விடுத்து ரமணிசந்திரன் சிவசங்கரி ரசிகர்களை விடுத்து.. காசு கொடுத்தோ..? இன்டர்நெட்டில இல்லையோ என்பவர்களை விடுத்து….. சுமார் 300 பேர் (ஆம் பத்து லட்சத்தில் 300 பேரேதான்) வடலியின் பின் நிற்பார்களேயானால்.. வடலி சிகரங்களைத் தொடும். - இல்லாவிட்டாலும் தொடும்... :rolleyes:

உங்கள் ஆதரவென்பது வேறொன்றுமில்லை. வடலியின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் வாங்கிப் படியுங்கள் என்பதே. அவ்வளவுமே.. வாங்குவதற்காக நீங்கள் செலவிடும் ஒவ்வொரு பணமும் ஒரு புதிய தமிழ் எழுத்தாளரை உலகுக்கு அறிமுகப் படுத்துகிறது.

0 0 0

வடலி தொடர்பான சகல விபரங்களுக்கும்

www.vadaly.com

வடலியின் புத்தகங்கள் சந்தேகமேயில்லாமல் உங்களுடையவையே.. உங்களுடையவை மட்டுமே..

0 0 0

ஆ.. சொல்ல மறந்த விசயம்.. யாழ் உறுப்பினர் தூயாவின் ஈழத்து சமையல் என்னும் ஒருபுத்தகம் வடலியில் ஏப்ரல் இறுதியளவில் வருகிறது. வழமையான தேவையான பொருட்கள் செய்முறை என்றல்லாது ஒரு நல்ல நனவிடை தோய்தலாகவும்.. கூடவே சமையல் விபரங்களோடும் வித்தியாசமாக வரும் அந் நூல்.. இப்படித்தான் இருக்கும்..

thooya.jpg

மேலும் கருணாகரனின் (தமிழீழ தேசிய தொலைக்காட்சி பணிப்பாளர் - தற்போது வன்னி) பலி ஆடு என்னும் கவிதை தொகுதியும் யாழில் அறிமுகமாக கானா பிரபாவின் பயண நூலொன்றும் வருகிறது

----

தமிழக ஆதரவு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. பார்க்கலாம். நமது ஆதரவை <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

வடலிக்குப் பாராட்டுக்கள்.

புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில், அதிலும் ரொறன்ரோ பெரும்பாகத்தில். அது மட்டுமன்றி பணங்கொடுத்து பிரசுரங்களை ஆர்வத்தோடு வாங்கிப் படிக்கும் கூட்டம் ரொறன்ரோவில் நிறையவே உண்டு. இருந்தும், துரதிஸ்ரவசமாக, தமிழ் படைப்புக்களை ரொறன்ரோவில் பெறுவதென்பது இன்னமும் ஒரு வெறுப்பேற்றும் அனுபவமாகவே உள்ளது. வடலி மட்டுமல்ல வெற்றி பெற விரும்பும் வேறெந்தப் பதிப்பகத்தாராயினும் சரி ரொறன்ரோ வாசகர் சந்தையை மனதிருத்திக் கொள்ளல் அவர்களின் வெற்றிக்கு உதவும் என்பது எனது கருத்து.

மேலும், ஒரு தமிழ் பிரசுரத்தின் விலையினை மேற்குலகில்த் தீர்மானித்தல் என்பதும் இன்றுவரை ஒரு எழுந்தமானமான செயற்பாடாக, அல்லது புத்தகத்தின் நிறையின் அடிப்படையில் அமைந்ததாகவே அமைந்து வருகின்றது. உதாரணத்திற்கு, சுந்தர ராமசாமியின் “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” என்ற புத்தகத்தின் இந்திய சந்தைக்கான விலை 290 ருபாய். கனடாவில் இதன் விலை 30 டொலர்கள். இன்றைய நாணய மாற்று வீத்தத்தின் அடிப்பைடயில் 30 டொலர்கள் என்பது 1233 ரூபாய். வியாபார நிலையத்தினை நடாத்துவதிலுள்ள செலவுகள் மற்றும் புத்தகத்தை இந்தியாவில் இருந்து கனடா கொண்டு வரல் முதலான செலவுகள் என்பன கருத்திலnடுக்கப்படவேண்டியது அவசியம் என்ற போதிலும், விலைத் தீர்மானம் தொடர்பில் எழுந்த மானமான செயற்பாடு ஆரோக்கியமானதாக அமையமுடியாதது.

நெல்சன் மண்டேலாவின் “Long Walk to Freedom” என்ற புத்தகத்தின் கனேடிய விலை 17 டொலர்கள் 99 சதம். நிறைப்பிரியர்களின் தகவலிற்காச் சொல்வதாயின், மண்டேலாவின் புத்தகம் 625 பக்கங்கள் கொண்டது. சுந்தர ராமசாமியின் மேற்படி புத்தகம் 649 பக்கங்கள் கொண்டது. (குறிப்பு: paperback மற்றும் hardcover ொடர்பிலான வித்தியாசங்கள் தமிழ் சந்தைக்குத் தேவையானவையா ? அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் வாசகர் மத்தியில் இவ்வித்தியாசம் சாத்தியமா? என்பன விவாதத்திற்குரியது)ஒரு வேளை இந்தியாவில் அச்சிட்டு கனடா கொண்டுவரும் செலவானது கனடாவில் அச்சிட்டு வெளியிடுவதைக் காட்டிலும் அதிகம் எனப் பதிப்பகத்தார் கருதின் கனேடிய அச்சகங்களில் பிரசுரிதல் பற்றியும் வடலி பரிசீலிப்பது பலன் தரும்.

இறுதியாக, வடலி பதிப்பகத்தின் வெளியீடு என்பதற்காக வடலி வெளியிடும் அனைத்துப் புத்தகங்களையும் வாசகர்கள் வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆரோக்கியமற்றது. ஒரு நூலின் தன்மை, அது தொடர்பிலான விமர்சனங்கள் முதலிய இன்னோரன்ன விடயங்கள் தான் ஒரு நூலை ஒருவர் வாங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைய முடியும். எனவே வடலி பதிப்பகத்தார், ஒரு முன்மாதிரியாக அமைந்து, தமது பிரசுரங்கள் பற்றிய பல்வேறு கட்டுப்பாடற்ற சுதந்திர விமர்சனங்களை புத்தகவெளியீடுகளோடு ஊக்கப்படுத்துவதும் ஆரோக்கியமாக அமையும்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தூயாவுக்கும் கானாபிரபாவுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்! புத்தகத்தை கட்டாயம் வாங்குவம் யோசிக்காதிங்கோ(Online )ஊடாக விற்பனைக்கு வந்தபிறகு நினைவூட்டினால்). சயந்தன் இவ்வளவு பேருக்கால புகுந்து விளையாடி இருக்கிறார் இவ்வளவு தொடர்புகளை ஆக்களுடன் வச்சு இருக்கிறார் எண்டு இதில எழுதப்பட்டதுகளை வாசிச்சபோது பிரமிப்பாக இருந்திச்சிது. வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொருவன்.. உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.. நீங்க சொல்றது உண்மைதான். எனக்கு புலம்பெயர் நாட்டில் அனுபவம் குறைவு. அதை விட சரியான விநியோக மார்க்கங்கள் இன்னும் பிடிபடவில்லை. ஐரோப்பாவில் அறிந்தவரை பிரான்சில் மட்டுமே தமிழ் புத்தகங்களுக்கென தனியான கடைகள் 3 இருக்கின்றன.

மற்றயது விலை தொடர்பானது. நாம் விலைகளைத் தீர்மானிக்கும் போது கனடாக் காரர் தானே.. அல்லது ஐரோப்பிய காரர்தானே அதனால கூட கேட்கலாம் என்று தீர்மானிப்பதில்லை. நமது இந்திய விலைகள் நமக்கான ஏதோ கொஞ்ச லாபத்தையும் கொண்டிருப்பதனால் அதனடிப்படையிலேயே பிறநாடுகளுக்கான விலைகளும் அடங்கியிருக்கின்றன. உதாரணமாக மரணத்தின் வாசனை நூல் 140 பக்கங்கள் உடையது. இந்திய விலை 100 .

ஒன்லைனில் கனடாவிற்கான தபாற்கெலவோடு இதன் விலை 8.90 கனேடிய டொலர்களாக தீர்தானித்திருக்கிறோம். கனடாவில் கடைகளில் இதனை விட குறைவாக இருக்கும்.

இறுதியாக, வடலி பதிப்பகத்தின் வெளியீடு என்பதற்காக வடலி வெளியிடும் அனைத்துப் புத்தகங்களையும் வாசகர்கள் வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆரோக்கியமற்றது. ஒரு நூலின் தன்மை, அது தொடர்பிலான விமர்சனங்கள் முதலிய இன்னோரன்ன விடயங்கள் தான் ஒரு நூலை ஒருவர் வாங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைய முடியும்.

இது முற்றிலும் உண்மை. புத்தகங்களை போட்டு விட்டு.. யாரும் வாங்குகிறார்களில்ல.. இவர்களுக்கு இலக்கியம் தெரியாது என சபித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அதனை கொண்டு செல்ல வேண்டும். அந்த அனுபவத்தை மேலே எழுதியிருக்கிறேன். தமிழகத்தில் ஆனந்த விகடனின் அறிமுகத்திற்கு பிறகு இரண்டாம் மாதத்தில் இரண்டாம் பதிப்பு குறித்து சிந்திக்குமளவிற்கு வேகம் இருந்தது.

விமர்சனங்கள் திறந்தவைதான். வடலியின் இணையத்தளம் வாசகர்கள் விமர்சகர்கள் என அனைவரின் கருத்துகளையும் அவர்களாகவே இடும் வகையிலேயே அமைக்கப் பட்டுள்ளது. பாராட்டலாம்.. (சந்தோசப்படுவம் :) திட்டலாம்.. போங்கோடோ உங்களுக்கு வேறை வேலை இல்லையோ என கேட்கலாம். நீங்கள் சனத்தை ஏமாத்துறீங்கள் என்டு சொல்லலாம். எந்த சிக்கலும் இல்லை.

புத்தகங்கள் படித்தவர்கள் இணையத்திற்கு ஒரு எட்டு வந்து தங்கட கருத்துகளை தாங்களே பதிவு செய்திட்டு போகலாம். வீடு புகுந்து அணைப்பதற்கும் அடிப்பதற்கும் கதவுகள் திறந்தே இருக்கின்றன. :o

அடிப்பவர்கள் எல்லோருமே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி அற்று நம்மைத் திருத்தவே அடிப்பார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம் :lol:

வடலியை கனடாவில் பிரசுரிப்பது தொடர்பாக..

கேள்விகள் அதிகரித்தால்.. அதைச் செய்வது சாத்தியம்தான்.

மற்றது.. மரணத்தின் வாசனை புத்தகத்தின் அட்டைப் படம் நமது இளைஞன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலத்திரனியல் உலகில்.. அச்சு உலகிற்கு இருக்கும் வரவேற்பும் மதிப்பும் கணக்கில் எடுக்கப்படனும். இல்ல படைப்பு வெளியானதை தவிர.. செலவு அதிகமாகிடும்.

வாழ்த்துக்கள் தூயா. உங்களின் சமையல் புத்தகத்தை வழமையான பாணியில் வெளியிடாமல் சற்று எதிர்கால சந்ததியும் வியந்து பார்க்க படிக்க என்று தாருங்கள். படைப்பதை நன்றே படைப்பது வளம்.

(உதாரணத்துக்கு வெறும் சமையல் குறிப்புக்களை மட்டும் போடாமல்.. ஒவ்வொரு உணவில் உள்ள உணவுக்கூறுகளின் பரிமட்டான அளவு (குறிப்பாக.. புரதம்.. காபோகைதிரேட்டு.. கொழுப்பு (நிரம்பியது நிரம்பாதது) உங்கள் உணவு கொண்டுள்ள கலோரி அளவு.. சோடியம் அளவு மற்றும் குறிப்பிட்ட உணவினால் பெறப்படும் மருத்துவ நன்மைகள்.. அளவுக்கு அதிகமான குறிப்பிட்ட உணவை உட்கொள்வதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்.. உணவை மூலப் பொருளை சேமித்து வைக்கும் மார்க்கங்கள் என்று எளிமையாக ஆனால் கவர்ச்சிக்கரமாக இட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.)

மற்றவர்களின் படைப்புக்கள் ஆக்கள் பற்றி எனக்குப் பெரிசாக தெரியாது என்பதால் அவைக்கு எதுவும் சொல்லேல்ல. ஆனாலும் வெளியீடுகள் சிறப்புற வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றி மாப்பு ..

நெடுக்ஸ், என் ஈழத்து அனுபவங்களை சேர்த்து எழுதியுள்ளேன்......வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

கலக்குங்கோ தூயா.. வாழ்த்துக்கள்.. :)

புத்தகம் வந்தவுடன் எனக்கும் ஒன்று வேணும்.. எங்க வாங்குவது என்ற விபரங்கள் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

விரிவான பதில்களிற்கு நன்றி சயந்தன். பதிப்புத் துறைக்குப் புதியவராயினும், பல்வேறு முனைகள் பற்றி இயன்றவரை ஏற்கனவே சிந்தித்துள்ளீர்கள் என்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கின்றது. "மரணத்தின் வாசனை" நூலினை வாசிப்பதற்கு ஆவலாயுள்ளேன்.

மேலும், விமர்சனங்களை காழ்ப்புணர்ச்சியின் நிமித்தம் முன்வைக்கின்றார்களா அல்லது கரிசனையில் முன்வைக்கின்றார்களா என்பது தொடர்பில் படைப்பாளர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்பது எனது பணிவான கருத்து. இல்லாததை ஒருவர் உருவாக்கிவிட முடியாது என்னபதனால் "இன்ன பக்கத்தில் உள்ள இந்த வரி பற்றி அல்லது இந்தப் பந்தி பற்றி எனது பார்வை இவ்வாறு அமைகிறது" என்ற அடிப்படையில் தான் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படலாம். அப்பார்வை ஏன் ஏற்பட்டது என்றாராய்வதை விடுத்து அப்படியான ஒரு பார்வையும் சாத்தியமாகியுள்ளது என்பதை மனதிருத்தல் மகிழ்ச்சியான உத்வேகமூட்டும் அனுபவமாக அமையும் என்பது எனது அபிப்பிராயம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தூய்ஸ், சயந்தன், அகிலன் மற்றும் இளைஞன்

எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் தான் என்ற கட்டிவைக்கப்பட்ட மறைப்பை விலத்துவோம். என்ற சயந்தனின் கருத்து நிறைவேறவும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மேதாவிகள் என நினைத்து விமர்சனங்கள் கொடுக்கின்ற பழக்கங்களை மாற்றிக் கொள்வதே பலருக்கு நன்மை பயக்கும். ஒரு எழுத்தாளன் தன்னுடைய ஆக்கங்களை வெளிக்கொண்டு வரும்போதுஇ ஏற்படும் சவால்களையும்இ பிரச்சனைகளையும் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கொண்டு வரப் போவதில்லை. அதை அறிவுரை வழங்குவதாக நினைக்கின்ற அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக எந்த எழுத்தாளனும் தன்னுடைய ஆக்கங்களை வெளியிடும்போது அனைத்து வாசகர்களும் வாங்கும் வண்ணமே அமைய வேண்டும் என எதிர்பார்ப்பான். வாசகர்கள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு தான் பிரசுரிப்பான். அது தான் தேவையும் கூடஇ

அல்லால், முதலலே வாங்குவது பற்றி முடிவெடுப்பது எல்லாம் பொருத்தமான ஒன்றல்ல..

Link to comment
Share on other sites

சயந்தன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு தாய் குழந்தையைப்பெற்றெடுப்பதிலு

Link to comment
Share on other sites

அகிலன், சயந்தன், தூயா எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

ஆனந்தவிகடன் கட்டுரை வாசித்த போதுதான் அகிலனின் "மரணத்தின் வாசனை" பற்றி அறியமுடிந்தது. நன்றாக இருக்குமென்றே நினைக்கிறேன்.

இங்கு சிட்னியில் எங்கு வாங்கலாம் என்று அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணத்தின் வாசனை - போர் தின்ற சனங்களின் கதை

ஆனந்த விகடன் 03-03-09

மரணத்தின் வாசனை நூலை இணையத்தில் வாங்க

கடைசிச் சவம் வீழ்ந்த பின்பு

கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுளின் பெயர்! - எஸ்.ஏ.நாசரின் இந்தக் கவிதை வரிகள் உலவும் வெளிகளில்தான், அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து, அகதியாக்கப்பட்ட 25 வயது ஈழத் தமிழ் இளைஞன் த.அகிலன், தன்னைக் கடந்துபோன, தான் கடந்துவந்த மரணங்களின் வாசனையைப் புத்தகமாக்கி இருக்கிறார்.

”அப்போது எங்கள் ஊரைச் சுற்றி இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்தது. மாலை 6 மணிக்குள் நாங்கள் வீடடைந்துவிட வேண்டும். அதன் பிறகு யாரும் உள்ளே நுழையவோ, வெளியேறவோ முடியாது. இரவு தொடங்கியிருந்த ஒரு நாளில் என் அப்பாவைப் பாம்பு கடித்து விட்டது. நுரை பொங்கும் வாயுடன் கிடந்த அவரைக் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், அமைதிப்படையின் ராணுவம் என் தந்தையின் துடிக்கும் உடம்பு பார்த்தும் மனம் இரங்கவில்லை. ஊர் கூடி நிற்க, இந்திய ஆர்மியின் கண்கள் பார்த்திருக்க, அவரது உயிர் மெதுவாகக் காற்றில் கரைந்தது.

என் அம்மம்மாவுக்கு திருநகரில் ‘கோயிலாச்சி’ என்று பெயர். அந்த ஊரின் அம்மன் கோயிலைக் கட்டியவளும், அதை ஊராக மாற்றியவளும் அவள்தான். கோயிலையும் ஊரையும் மனித உயிர்களுக்கும் அதிகமாக அவள் நேசித்தாள். யுத்தம் யாரைவிட்டது? அம்மம்மாவின் கதறல் காற்றைக் கிழிக்க, அவளையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ஸ்கந்தபுரத்துக்குப் புலம் பெயர்ந்தோம். ஏழு வருடங்கள் கழித்து ‘பொடியள் மறுபடியும் ஆனையிறவைப் பிடிச்சுட்டாங்களாம்’ என்று செய்தி வந்ததும் அம்மம்மாவுக்கு அத்தனை மகிழ்ச்சி. கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிறகு, சைக்கிளில் வைத்து அம்மம்மாவை திருநகருக்கு அழைத்துக்கொண்டு போனேன். கொடூரமாகச் சிதைக்கப்பட்ட சுடுகாட்டைப் போல ஊர் சிதிலமடைந்துகிடந்தது. எங்கள் வீடு இருந்த இடத்தைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அம்மம்மாவின் கண்களுக்கு அம்மன் கோயில் தெரிந்தது. ‘வேசை, இந்தக் கோலத்துலயாடி உன்னை நான் பார்க்க வேணும்?’ என்று மண் வாரித் தூற்றி கோயிலின் உடைந்த சுவரில் மோதி கீழே விழுந்தாள். மூர்ச்சையாகிச் சாய்ந்தவளின் கடைசி மூச்சு என் கரங்களில் பிரிந்தது.

காயத்ரி… என் அன்பான தோழி! குண்டுகள் எங்களை மணியங்குளத்துக்குத் துரத்தியபோதுதான் அவளைச் சந்தித்தேன். வார்த்தைகளுக்கு அப்பா லான நேசம் இருவரையும் இணைத்தது. பள்ளி இறுதி வகுப்பில் நான் பரிசு வாங்கிய கவிதைத் தாளை அவள்ஒளித்து வைத்துக்கொண்டாள். சடங்கு ஆல்பத்திலிருந்து அவளது புகைப்படத்தை நான் திருடிக்கொண்டேன். யுத்தத்தின் கொடுங்கரங்கள் என்னை அகதியாகத் தமிழகத்துக்குத் துரத்தியடித்தன.

என் மீதான காயத்ரியின் அன்பை நண்பர்கள் அவ்வப்போது உறுதி செய்தனர். பின்னொரு நாளில் தொலைபேசி குறுஞ்செய்தி வந்தது. ‘புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த சண்டையில் மன்னாரில் காயத்ரி பலியானாள்’. ‘காயத்ரி எப்போது இயக்கத்தில் சேர்ந்தாள்?’ என்ற கேள்வியை அவளது மரணம் தந்த அதிர்ச்சி தின்று செரித்தது.

அவளை ‘ஆம்பளை மாதிரி’ என்பார்கள் ஊருக்குள். என் அத்தை மகள்களில் மூத்த மச்சாள். கந்தசாமி கோயில் திருவிழாவில் தன் காசுக்கும் சேர்த்து எனக்கு ஐஸ் பழம் வாங்கித் தரும் அன்புக்காரி. கனகாம்பிகைக் குளத்து வயல்வெளிகளுக்கு மாடு மேய்க்கப் போனால் வீரப் பழம், நாவல் பழம் பிடுங்கித் தருவாள். இயக்கத்துக்காரியான பிறகு பேச்சு குறைந்தது. நான் தமிழகம் வந்த பிறகான ஒரு தொலைபேசி விசாரிப்பில் ‘அவளுக்கு எப்ப கல்யாணம்?’ என்றதற்கு, ‘வாற ஆவணில’ என்றார்கள் வீட்டில். ஆனி மாத மழை நாளில் எனக்கு வந்த மின்னஞ்சல் இப்படி இருந்தது. ‘காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும், தொண்டமான் நகர் கிளிநொச்சியைச் சொந்த ஊராகக்கொண்ட சபாரத்தினம் பாரதி…’ ஆம். என் மச்சாள் ஈழவேணியையும் போர் தின்றுவிட்டது!

இது என் கதை, எங்களின் கதை. சாவே எங்களுக்கு வாழ்வானது. இந்த கால் நூற்றாண்டு கால அநீதியான போர் எம் மக்களுக்கு மரணத்தை மட்டுமே பரிசளித்திருக்கிறது. இதோ இன்று முல்லைத் தீவின் குறுகிய நிலப்பரப்புக்குள் சாவிடம் மண்டியிட்டுக்கிடக்கின்றனர் எம் மக்கள். அந்த இரண்டரை லட்சம் தமிழர்களில் என் அம்மாவும் என் தம்பியும் இருக்கிறார்கள். ஓர் இஸ்லாமியர் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்துவதைப் போல தினமும் ஐந்து முறை இணையதளத்தில் செத்தவர்களின் பெயர் பட்டியல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

முன்பெல்லாம் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டு போட வரும்போது, அதன் சத்தம் முன்கூட்டியே கேட்கும். குண்டுகளோடு சேர்த்து, கொழும்பில் சேகரிக்கப்பட்ட மனித மலம் அடங்கிய பீப்பாய்களையும் வீசுவார்கள். பதுங்கு குழியில் இருந்தபடியே அவை கீழே வருவதைப் பார்ப்போம். ஆனால், இப்போது ‘கிபீர்’ எனப்படும் ஒலியைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய மிகையலி விமானங்கள் வந்து தாக்குகின்றன. இவை குண்டு போட்ட பின்புதான் ‘கிபீர்’ வந்திருக்கிறது என்பதே தெரியும்.

துவக்குப் பிடித்து களத்தில் நிற்பவன் மரணத்தை நிச்சயித்துக்கொண்டவன். யுத்த முனையில் களமாடுபவனின் உயிர் என்பதும் துப்பாக்கி குண்டு போல ஓர் ஆயுதமே. தான் ஒரு தமிழன் என்று உணர்ந்துகொள்ளக்கூடிய அளவுக்குக்கூட விவரம் இல்லாத குழந்தை களை ஏன் கொன்றழிக்கிறீர்கள்?

இடைவிடா யுத்தமும், குண்டுச் சத்தமும், உறவுகளின் இழப்பும், இடப் பெயர்வும் ஈழத்துக் குழந்தைகளின் உளவியலை மீட்கவியலாப் பள்ளத்தாக்குகளில் சிதைத்து வீசிவிட்டது. விமானம் என்பது ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனம் என்று எந்த ஈழத்துக் குழந்தையும் நம்பாது. அது ஆமிக்காரர்கள் குண்டு போட வரும் ஒரு வாகனம். விமானச் சத்தம் கேட்டால், பதறியடித்துப் பதுங்கு குழி தேடி ஓடுவதே ஈழத்துக் குழந்தையின் இயல்பு. இப்போதும் நள்ளிரவின் விழிப்புகளில் சென்னை நகரின் மேலே பறக்கும் விமானங்கள் என்னை உள்ளூர நடுக்கமூட்டுகின்றன.

ஈழத்தின் நிலைமை பற்றிப் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் தமிழகத் தமிழர்களிடமும் கணக்கிலடங்கா பரபரப்புகள் உலவுகின்றன. ‘சிங்களர்கள் 1,000 பேர் சாவு’, ‘புலிகள் 200 பேர் மரணம்’ என கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கும் மனநிலையோடு மரண எண்ணிக்கையும் பார்க்கப்படுகிறது. இத்தனை வருட ஈழத்தின் போர்ச் செய்திகளை ஒரு திரைப்படம் பார்க்கும் மனநிலையுடன் பார்த்த மக்கள், இப்போது பெரிய அளவிலான க்ளைமாக்ஸை எதிர்பார்க்கின்றனர்.

இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். கனவுகளைத் தின்று வாழ்ந்த காலமும் கற்பனைக் குதிரையில் கடந்த தொலைவுகளும் இப்போது இல்லை.

நான் மிகுந்த சுயநலத்துடன் கேட்கிறேன்… யுத்த முனையில் உயிரின் வதையுடன் தவித்துக்கிடக்கும் என் தாயையும் என் தம்பியையும் காப்பாற்றுங்கள் உலகத்தீரே!”

------------------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணத்தின் வாசனை

தமிழ்நெற்றில் வந்த விமர்சனம்

Civil war generation documents life amidst death in Vanni

[TamilNet, Saturday, 21 March 2009, 04:49 GMT]

The Odour of Death: An Account of People Devoured by War, a collection of narratives and features of personal experience expressed in the form of short stories by 1983-born T. Agiilan, is a significant example of creative writing coming from first hand impressions of a generation of Eezham Tamils that has seen nothing but war ever since birth. Another importance of the book is its documentation of war-torn Vanni of pre 2002 era from the perspectives of a person of that land.

Poar Thin'ra Changka'lin Kathai

Agiilan’s book in Tamil, ‘Mara’naththin Vaasanai: Poar Thin’ra Chanangka’lin Kathai’, brought out by E Pathippakam, Chennai, in January 2009, begins from the frames of his childhood memories at Thiru Nakar, Ki’linochchi, when a Sikh soldier of the IPKF, attempting to hold him in affection giving him a balloon to stop him crying.

He first experienced the odour of death when his father died after being denied permission by the IPKF to take him to a hospital.

The narrative continue with the killing of many of his relatives when 18 bombs of Colombo government fell at Thiruvaiyaa’ru, in Ki’linochchi district in the 1990s, a spirited girl-cousin of him and another older friend of him sacrificing lives joining the liberation fighters, people moving to Mallaavi, loss of more lives and identifying a teen-aged classmate of him as a skeleton in a mass grave when they return.

Compelled to flee to India crossing the sea, his family is abandoned at a sandbank close to coast and he loses a brother who braved to swim in order to bring in help.

The subsequent accounts in the book are hearing the deaths of dear ones including a lover who joined the ranks of the militants at home and recounting their memories in flashback.

It ends with recording the psychological trauma a generation faces, when there is no guarantee for any of the beloved ones, whether human beings, animals, nature or land – and no professional therapists either to tackle the situation.

The strength of Agiilan’s writing comes from his perception shaped by encountering death, says Ki Pi Aravinthan in the introduction to the book.

The beauty of the stories is that they didn’t fail in bringing out the spirit and thrill of life amidst encounters with death.

The fascinating human-environment relationship in the forests of Vanni, enjoyment of school days despite schools crumbling in the war and the emotional discovery of self in the adolescent love of teens, are all recorded with a creative touch of honesty and nostalgia.

A special feature noticeable in Agiilan’s writing is the spontaneity and ease with which he reflects the gender equality emerged through the struggle in the traditional society of Vanni. It is possible only for his generation.

In Agiilan’s writing, violent death and sacrifice of life are not extraordinary. They are very ordinary, inevitable part of every day life, and life goes on. The society is self-therapeutic.

The Odour of Death is not empty wailing. It is an account of people braving to live.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் இப்போ தமது வலைப்பதிவு மின்னணுப் பதிவில் உள்ள விடயங்களை அச்சுப் பொறிக்குள் பதியும் ஆர்வத்தை வளர்த்து வருகின்றனர். அவை ஆரோக்கியமான அம்சமும் கூட. அந்த வகையில் ஈழத்து பூர்வீகமுள்ள வலைப்பதிவர்கள் சிலரும் சில நூல்களை வெளியிட்டுள்ளனர்.

அகிலன் தூயா கானா பிரபா போன்றவர்களின் நூல்களையும் இங்கு பட்டியலிடுவதன் மூலம் கூடிய அறிமுகங்களை வழங்கலாம் என்பது என் கருத்து.

http://www.tamilmanam.net/blogger_books.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நெடுக்ஸ்..

தமிழ்மணத்திற்கு அனுப்பி இன்றொடு 17 நாட்கள்.

இனி அவர்களாக போட்டால் உண்டு..

போடுங்கள் போடுங்கள் என நெருக்க முடியாதல்லவா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தொடர்பிலான விமர்சனங்கள் முதலிய இன்னோரன்ன விடயங்கள் தான் ஒரு நூலை ஒருவர் வாங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைய முடியும்.

தமிழ்நெற்றில் புத்தக விமர்சனம் வந்த பிறகு - ஒன் லைனில் விற்பனை வேகம் அதிகரித்திருக்கிறது. நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வேளை பொறுப்பும் கூடுகிறது. பார்க்கலாம்.

மரணத்தின் வாசனையை தமிழக நூலாளர் ஒருவர் மலையாளத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாக கூறியிருக்கிறார். கால நேரங்கள் கூடி வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் உங்களுடைய மயற்சிகள் முழுவெற்றியடைய எனது மனப்புர்வமான வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தூயா, கானாபிரபா பற்றும் அனைத்து ஈழத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வடலி மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன்,

உதில நான் சொல்ல ஏதுமில்லை.

முந்தி நடந்த ஒரு விசயத்தை ஞாபகப்படுத்திறன்.

'உன்னை சரணடைந்தேன்' எண்டு ஒரு திரைப்படம் வந்தது.

அதில ஒற்று மிகாமல் தலைப்பு வைத்திருந்ததை உலகத்தமிழர் மாநாட்டில் போட்டு வறுத்தெடுத்தார்கள்.

அதுவும் அத்திரைப்படத் தயாரிப்பாளர் (எஸ்.பி.பியின் மகன் என்று நினைக்கிறேன்) எண்கணித முறைப்படி பார்த்துத்தான் அந்த ஒற்றை நீக்கினோம் என்று பதிலளித்ததை வேலு பிரபாகரன் சாடியிருந்தார்.

உந்த நிலைமை வடலிக்கோ தூயாவுக்கோ சயந்தனுக்கோ வந்திடக்கூடாது பாரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா,கானா மற்றும் சயந்தன் உறவுகளுக்கு என் வாழ்த்துகளும் வரவேற்புகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நன்றி நன்றி நன்றி நன்றி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.