Jump to content

வடலி வெளியீடும் தூயாவின் புதிய புத்தகமும்

Recommended Posts

கலக்குங்கோ தூயா.. வாழ்த்துக்கள்.. :icon_mrgreen:

புத்தகம் வந்தவுடன் எனக்கும் ஒன்று வேணும்.. எங்க வாங்குவது என்ற விபரங்கள் எழுதுங்கோ.

நிச்சமா வசிண்ணா...:D

தூயா,கானாபிரபா மற்றும் அனைத்துப்படைப்பாளிகளுக்கும
Link to comment
Share on other sites

புத்தகம் வந்தவுடன் எனக்கும் ஒன்று வேணும்.. எங்க வாங்குவது என்ற விபரங்கள் எழுதுங்கோ.

ஆனால் நான் வாங்கமாட்டேன். எனென்றால் சமையல் தெரியாது என்று வீட்டில சாப்பிடுகிறதுக்கு மட்டும் தான் அடுப்படிக்கு போகிறனான். ஆனால் உந்தப்புத்தகத்தை வாங்கினால் மனுசி, உதைப்படித்து சமைக்கச்சொன்னால்???

Link to comment
Share on other sites

ஆனால் நான் வாங்கமாட்டேன். எனென்றால் சமையல் தெரியாது என்று வீட்டில சாப்பிடுகிறதுக்கு மட்டும் தான் அடுப்படிக்கு போகிறனான். ஆனால் உந்தப்புத்தகத்தை வாங்கினால் மனுசி, உதைப்படித்து சமைக்கச்சொன்னால்???

உடாங் சம்பலின் பாதிப்போ!!!!

Link to comment
Share on other sites

சற்றுத் தாமதமாக தான் இந்த திரியினை பார்க்கின்றேன். ஆந்த விகடனில் வந்த பேட்டியினையும், தமிழ் நெட்டில் வந்த விமர்சனத்தினையும் பார்த்த பின்பு வாசிக்கவேண்டும் என ஆவலாக இருந்தேன். இப்போ இந்த திரியையும் அதில் சயந்தனின் அர்ப்பணிப்புடனான முயற்சியினையும் பார்த்து விட்டு உடனடியாக online இல் order பண்ணிவிட்டேன்.

புத்தகங்கள் கண்டாவில் வாங்குவது விற்பது பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். கனடாவிற்கு வந்த பின் நல்ல புத்தகங்களை எங்கு வாங்குவது என்று அல்லாடி போயுள்ளேன். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஒரு திரியையும் ஆரம்பித்து தககவல் கேட்டு இருந்தேன். ஈற்றில் online இல் order பண்ணுவது இலகுவானதாக இருப்பதால் இந்தியாவில் இருந்தே இப்போது புத்தகங்களை தருவிக்கின்றேன்.

தரமான எந்த புத்தகத்தினையும் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் பழக்கம் எனக்கு இருப்பதால் என்னால் நிச்சயம் வடலி வெளியிடும் தரமான புத்தகங்களை வாங்க முடியும். இது நான் வடலிக்கு செய்யும் உதவி அல்ல. வடலி எனக்கு செய்யும் உதவியாகவே பார்க்கின்றேன்.

வடலியின் முயற்சி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி.

வடலி ஒரு கூட்டுமுயற்சிதான். சென்னையிலிருந்து அகிலன் அதன் அத்தனை சமாச்சாரங்களையும் கையாளுகிறார். உண்மையில் தனிய ஒரு புத்தகத்தை பம்பல் பம்பலாக வெளியிடலாம் என்றுதான் தொடங்கினோம்.

அதற்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்புத்தான் பின்னர் வடலியாகியது.

இனி வெளியீட்டு விடயத்தில் பொறுப்பு கூடியிருக்கிறது. வருடத்திற்கு 12 புத்தகங்கள்.. 3 மாதத்திற்கொருதடவை 4 புத்தகங்கள். இதுதான் தற்போதை இலக்கு. இதில் இணைந்திருப்போர் எல்லோருக்குமே இதுவே பிரதான தொழில் இல்லையாதலால் இந்த நடைமுறைதான் தற்போதைக்கு சரிவருகிறது.

ஒவ்வொரு தடவையும் ஆகக்குறைந்தது 2 ஈழத்தில் இன்னமும் இருக்கிற அற்புதான படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுடைய படைப்புகளை தமிழகத்தில் பரவலடையச் செய்ய வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் ஈழத்து படைப்பாளிகள் என்றால் ஆகக் கூடியது ஒரு 5 பேரைச் சொல்வார்கள். அதனை மாற்ற வேண்டும் என்பது என் விருப்பங்களில் ஒன்று.

எதனையும் மிகச் சரியான விதத்தில் செய்தால் வரவேற்பு எங்கேயும் கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • 7 months later...

தூயாவிண்ட புத்தகம்தானே முதலாவதாய் வந்திச்சிது வடலிமூலம் வெளியிடப்படுவதாய். பிறகு காண இல்லை. தூயாவிண்ட புத்தகத்திற்கு என்ன நடந்திச்சிது பாண்டிய மன்னா? சில காலமாக வடலி இணையவழி வாங்கும் தளம் திருத்தவேலைகள் நடைபெறுகிது எண்டு காட்டிது. உங்கடை திருத்தவேலைகள் முடிவுற்று எப்ப இணையவழி கடை வழமைக்கு திரும்பும்?

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் !

வடலி பதிப்பகம் மேலும் பல தாயக எழுத்தாளர்களது எழுத்துக்களையும் வெளியிடுமென நம்புகிறேன்!!!

Link to comment
Share on other sites

தூயாவிண்ட புத்தகம்தானே முதலாவதாய் வந்திச்சிது வடலிமூலம் வெளியிடப்படுவதாய். பிறகு காண இல்லை. தூயாவிண்ட புத்தகத்திற்கு என்ன நடந்திச்சிது பாண்டிய மன்னா? சில காலமாக வடலி இணையவழி வாங்கும் தளம் திருத்தவேலைகள் நடைபெறுகிது எண்டு காட்டிது. உங்கடை திருத்தவேலைகள் முடிவுற்று எப்ப இணையவழி கடை வழமைக்கு திரும்பும்?

நான் அறிந்தவரையில் வடலி நான்கு புத்தகங்களை வெகுவிரைவில் கொண்டுவர இருக்கின்றது. தூயா தனது நூலின் நிலைபற்றி சொல்லலாம்தானே. சயந்தன் சிலகாலமாக மெளனம் சாதிக்கிறார். "ந்ல்லதோர் வீணை செய்தே.." பாரதி பாடல் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை..பார்ப்போம் மச்சான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது பொன்னியின் செல்வன். புழுதியில் எறியவில்லை. பொறுப்பு மிக்கவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். நான் இல்லையென்பதற்காக வடலி பட்டழிந்து போகாது. இங்கே நான் இல்லையென்பது கூட நானாகச் சொல்வதுதான். செயல்ரீதியான உழைப்பை வழங்கமுடியா நெருக்கடி நிலையில் அதுதான் சரியானதுமாக இருக்கும். எப்போதும் நான் நம்புவதுபோல

செயலில் செய்யமுடிகிற வலு இருந்தால் செய்து காட்டவேண்டும் - இல்லையேல்

பொத்திக் கொண்டு சும்மாயிருக்க வேண்டும் என்பது என்னில் பொருந்தியிருக்கிறது.

அவ்வளவுதான்.

வடலியில் வரும் ஜனவரி மாதம் 3 புதிய நூல்கள் வர இருக்கின்றன.

ஒலிக்காத இளவேனில்” இலங்கைப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு..

ஈழம் முரண்கதையாடல்கள் ” சோபாசக்திக்கும் தோழர் தியாகுவிற்கும் இடையேயான உரையாடல் தொகுப்பு

இரவி அருணாச்சலத்தின் சிறுகதைத் தொகுப்பு

நன்றி சயந்தன். வடலி இணையம் எப்போது மீண்டும் இயங்கத் தொடங்கும்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.