Jump to content

பி ஜே பி தடம் மாறுகிறது?


Recommended Posts

Support to LTTE will hurt cause of Lankan Tamils: BJP

The Indian BJP today said any support to the LTTE in Tamil Nadu would hurt the cause of Sri Lankan Tamils, as the image of the banned outfit has suffered a "setback" in the state following its involvement in the assassination of former prime minister Rajiv Gandhi.

BJP state president L Ganesan, in a statement said some persons from Tamil Nadu were vocally supporting the outlawed unit in the name of backing Sri Lankan Tamils and their actions went against the sovereignty and integrity of the nation.

"Such action by persons could dissuade people of Tamil Nadu from supporting the Sri Lankan Tamils issue as the LTTE had suffered a setback in the state after the killing of former prime minister Rajiv Gandhi, even though it was earlier looked upon as an outfit fighting for the cause of Sri Lankan Tamils," he said.

People of Tamil Nadu are interested in the welfare of the Sri Lankan Tamils and would not welcome any action which was against the sovereignty and integrity of India, he said.

samaylive

Link to comment
Share on other sites

புதிதாக எதையும் சொல்லவில்லை.யார் ஆட்சி செய்தாலும் தமிழனைகொல்வதை நிறுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

புலிகளை தடை செய்ததே பாஜக தான் . நம்மில் பலருக்கு இது கூட தெரியாது.

தமிழ் நாட்டில் புலிகளை வெளிப்படையாக ஆதரிப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் . வட இந்திய கட்சிகளுக்கு நிதர்சனம் புரியும் .

ஆனால் புலிகளை ஆதரிப்பவர்கள் முதுகெலும்பு உள்ளவர்கள் போல தெரியவில்லை . புலி ஆதரவு கூட்டணியும் வருவது போல தெரியவில்லை .

மக்களை கூட நம்பாதவர்கள் புலி ஆதரவு கட்சிக்காரர்கள் . நீங்களே சொல்லுங்கள் . மதிமுக , பாமக, விசி மூன்றும் இணைந்து திராவிடர் கழகம் , புரட்சி பாரதம் மற்றும் நெடுமாறன் பிரச்சாரம் செய்தால் எளிதாக எல்லோரையும் தூக்கி போட்டு மிதிக்க முடியும் . அதை விட்டு விட்டு ஒருவர் குழப்புகிறார் . இன்னொருவர் அம்மா சரணம் பாடுகிறார் . ( அம்மா என்றுமே புலிகளுக்கு எதிரி . வெளிப்படையாகவும் சொல்பவர் )

என்னவோ ஆனால் ஈழ பிரச்னை மட்டும் இவர்களால் மேலும் மேலும் குழப்பப்படுகிறதே தவிர அரசியல் ரீதியாக முடிவெடுக்க தயங்குகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2000 ஆம் ஆண்டில் இயக்கம் யாழ்ப்பாண்த்தை பிடிக்கும் போது குழப்பினதே இந்த BJP நாய்கள் தான் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தடை செய்ததே பாஜக தான் . நம்மில் பலருக்கு இது கூட தெரியாது.

92ம் ஆண்டு தடை செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்தது பிஜேபி அல்ல.தெரியாமல் உளறாதீர்கள்

Link to comment
Share on other sites

92ம் ஆண்டு தடை செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்தது பிஜேபி அல்ல.தெரியாமல் உளறாதீர்கள்

பாஜக ஆட்சிக்கு வந்ததே 1996 தான் . ஆனால் அய்யா 1992 ல் தடை செய்யப்பட்டதற்கான காரணம் ராஜீவ் கொலை . ஆனால் அப்போது புலிகள் தீவிரவாதிகள் என அறிவிக்கப்படவில்லை . மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் கூட ( ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது அரசியல் கொலையே தவிர தீவிரவாத தாக்குதல் அல்ல ). பின்னர் வந்த நரசிம்ம ராவ்வும் தடையை தொடர்ந்தார் . வட இந்தியரில் சிலரும் ( குல்தீப் நய்யார் / பால் தாக்கரே ) தடையை நீக்க கோரி அவ்வப்போது அவர்களுக்கு வேலை இல்லாத பொது கூறி வந்தனர் .

தடை செய்யப்பட இயக்கமாக இருந்ததே தவிர தீவிரவாதிகள் என முத்திரை குத்தபடவில்லை என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன் . இன்னும் சொல்லபோனால் 1997 முதலே வெளிநாட்டு தீவிரவாதிகள் என அமெரிக்கா தாக்குதலுக்கு முன்னரே அமெரிக்கா பட்டியல் இட்டிருந்தது . மேலும் இங்கிலாந்து கூட 2000 ஆண்டிலிருந்து தீவிரவாதிகள் என பட்டியல் இட்டிருந்தது . ஆனால் இந்தியாவில் தீவிரவாதிகள் என பட்டியல் இடப்பட வில்லை .

banned as a unauthorized group. 1992- 2001

banned as a terrorist group. 2001 - continues

புலிகள் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது 2001 - 2002. அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரே . அதன் பின் ஐக்கிய நாடுகளின் அறிக்கை படி தீவிரவாத செயல்கள் என குறிப்பிடப்படும் செயல்கள் உள்ள குழுக்களை தடை செய்ய உலக நாடுகளின் அழுத்தம் குறிப்பாக அமெரிக்கா காரணமாக அமெரிக்கனை மகிழ்விக்க பாஜக அரசு எடுத்த முடிவின் படி தீவிரவாதிகளின் பட்டியலில் புலிகள் சேர்க்கப்பட்டனர் . குறிப்பாக அத்வானி அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார்.

( இது பற்றி எனக்கு தெரிந்தது இதுதான் . இதைவிட தெளிவாக அல்லது இது தவறென்றாலும் எனது அறிவுக்காக விளக்கங்களை வரவேற்கிறேன் )

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட அமைப்புக்கும், தீவிரவாதத்துக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள் எனப் புரியவில்லை. அதிலும், அமெரிக்கா விததித்த தடைக்கு பிஜேபி தான் காரணம் என நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்யுமாகும். 97ம் ஆண்டு காலப்பகுதியில் பிஜேபிக்கும், அமெரிக்காவுக்கும் நல்லுறவு இருக்கவில்லை. அப்போது அணுகுண்டுப் பரிசோதனை( 97ம் ஆண்டு இறுதிப்பகுதி ) செய்தமையால், இந்தியா மீதான ஏற்றுமதித் தடையை அமெரிக்கா விதித்தது. இரண்டு நாடுகளுக்குமிடையே அறிக்கைகளால் வசைபாடும் அளவுக்கு பாரிய மனக்கசப்பு இருந்தது ஆனால் அந்த ஏற்றுமதித் தடை இந்தியாவினைப் பெரியளவில் பாதிக்காதாலும், ஒரு அணுஆயுத நாட்டை எதிராக வைத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் சிந்தித்துத் தான் கிளின்டன் அரசு தன் போக்கை தனது இறுதி ஆட்சிக்காலத்தில் தான் மாற்றிக் கொண்டது.

இந்தியாவிற்கு கிளின்டன் விஜயம் செய்த பின்னர், தான் உறவுமுறையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது.

சொல்லப் போனால் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இப்படியான செயற்பாடு நடக்கும் என அஞ்சிய வெளிநாட்டு சக்திகள், குறிப்பாக அமெரிக்கா உற்பட்ட நாடுகள் அன்று முதலும் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழக் காரணமாகவும் இருந்தன என்றும் நம்பப்படுகின்றது. இப்போதும் கூடக் அமெரிக்கா - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியா அரசுக்குப் பாதிப்பு என காங்கிரஸ் ஆட்சிக்குக் கம்னுயிஸ் கட்சி ஆதரவை விலத்தியபோது காங்கிரஸ் கவிழாமல் பணத்தை வாரி இறைத்தவை வெளிநாட்டு சக்திகள் தான்.

அதை விட அமெரிக்க அரசியலில் அத்வானி செல்வாக்குள்ளவராக இருந்தார் என்பது கூட ஏற்கக் கூடியதாக இல்லை. அத்வானி நல்லவரா வல்லவரா என்று எல்லாம் சொல்லவில்லை. ஒரு காலத்தில் சந்திரிக்கா அம்மையார் கூடவும் தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமளவுக்கு நட்புப் பாராட்டியவர்களில் ஒன்று அத்வானி, மற்றவர் மணிசங்கர் ஐயர். ஆனால் இங்கே சீண்டி முடியும் அளவுக்கு உங்களுக்குப் பின்ணனி என்ன என்பதை இந்த வசனம் தான் புலப்படுத்துகின்றது.

வட இந்தியரில் சிலரும் ( குல்தீப் நய்யார் / பால் தாக்கரே ) தடையை நீக்க கோரி அவ்வப்போது அவர்களுக்கு வேலை இல்லாத பொது கூறி வந்தனர் .

பால்தாக்ரேயும், குல்தீப் நாயரும் வேலை இல்லாதபோது, கூறிவந்தார்கள் என்ற வசனம்... சரி விடுங்கள். அவர்கள் வேலை இல்லாதபோதாவது கூறி வந்தார்கள். ஆனால் வேறு யார் அப்போது கூறினார்கள்....

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதற்கான காரணம் அத்வானி என நான் கூறவில்லை . 2001-2002 ல் இந்தியாவில் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் அமெரிக்கா என கூறி இருந்தேன் .

மேலும் நான் கூறிய வேலையில்லாத பொது என்ற வார்த்தை மிகவும் சரியானதே . புலிகளை ஆதரித்து அவ்வப்போது அறிக்கை விடும் பால் தாக்கரே இப்போது இவ்வளவு நடந்தும் எதுவும் விடவில்லை . அதனால் தான் அவர்களுக்கு வேலை இல்லாத பொது என்ற வார்த்தையை உபயோகபடுத்தினேன். வேறு எவர் கூறினார்கள் என கேட்டீர்கள் பிறரை விடுங்கள் . ஏன் ஜனவரி மாதம் கூட பாஜக சொன்னது என செய்திகள் வந்தது . அப்போது அவர்களுக்கு வேலை இல்லை என்று தானே அர்த்தம் ?????

http://www.tamilnet.com/art.html?artid=27918&catid=13

http://www.yarl.com/forum3/index.php?showtopic=54589

Link to comment
Share on other sites

அது எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் ஈழ பிரச்னையில் உதவுவார்கள் என நினைப்பது சரியல்ல . தமிழ் நாட்டிலுள்ள எதோ சில கட்சிகளை கொண்டு அழுத்தம் கொடுத்தால் ஒழிய அல்லது இலங்கை இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால் ஒழிய தேசிய கட்சிகள் நேரடியாக ஈழ பிரச்னையை ஆதரிக்கும் வாய்ப்பு எப்போதும் கிடையாது . இது நிதர்சனமான உண்மை . மேலும் தேசிய கட்சிகளுக்கு பல மாநிலங்களில் பல பிரச்னைகளை எதிர் நோக்க வேண்டி இருப்பதால் ஈழ பிரச்சினையை ஒரு மாநிலத்தின் பிரச்னையாக ( தமிழ் நாடு ) அணுகுவார்களே தவிர தலையாய பிரச்னையாக கருத மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

பாஜக

இந்த கட்சி தமிழ் நாட்டில் ஏறக்குறைய ஆறிலிருந்து ஒன்பதாவது இடத்திற்குள் இருக்கிறது . தனியாக நின்று ஒரு பாராளுமன்ற தொகுதி கூட ஜெயிக்க முடியாது .

தமிழ் நாட்டினால் பாஜக விற்கு எந்த லாபமும் நேரடியாக இல்லை . வேறு யாராவது ஆதரித்தால் மட்டுமே லாபம் . கூட்டணி சேர்ந்தால் கூட 6 தொகுதிக்கு மேல் யாரும் கொடுக்க மாட்டார்கள் . தேர்தலில் நிற்காவிட்டால் கூட திராவிட கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் தந்து தன் பக்கம் இழுத்து விடும் . இப்படிப்பட்ட கட்சி தமிழனுக்கு எப்படி உதவும் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக போராடுபவர்களுக்கு பிஜேபி வேண்டுகோள்

தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இலங்கை தமிழர்கள் நிரந்தரமாக சம உரிமை பெற வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசி, வீரம் காட்டுவதாக நினைத்தால் இவர்களது நடவடிக்கையால், ஆதரவு தெரிவிக்கும் தேசிய எண்ணம் கொண்டவர்கள் பின்வாங்குவார்கள்.

அதனால் இலங்கை தமிழர்களுக்காக போராடும் இயக்கங்களுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, இலங்கை தமிழர்கள் நலன் விரும்பும் தேசியவாதிகள், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக எந்த செயலையும் ஏற்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

- நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இள கணேசனின் செய்தி அரசியல் நோக்கோடு காங்கிரஸ் சார்பு மற்றும் தமிழகத்தில் தின்று கொழுக்கும் "மு" க்கள் காவும் திராவிடக் கட்சிகள் சார்பில் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு சிங்களவனும் உடந்தை. அவனும் திரிபுபடுத்தி சுகம் காண்கிறான்.

-----------------

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசி வீரம் காட்ட நினைத்தால் அது தமிழர்களின் நலனுக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் இன்னல் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அக்கறை கொண்டுள்ளார்கள். இலங்கை தமிழர்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் பாடுபடுகிறது என்கிற எண்ணத்தில் தமிழகத்தில் விடுதலைப் புலிகளது முகாம் செயல்பட்ட காலங்களில் பரவலாக மக்கள் ஆதரித்தார்கள்.

ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. சாதாரண மக்கள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த அமைப்புகளும் பின்வாங்கின. என்ன பொருள்? இலங்கை தமிழர் நலன் காக்க இந்திய தமிழர்கள் அக்கறை கொண்டிருந்தாலும், எந்த வகையிலும் அது இந்திய நாட்டை பாதிக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

தற்போது இலங்கை தமிழர்கள் போர் முனையில் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு நிரந்தரமாக இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.

இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக பேசி வீரம் காட்டுவதாக நினைத்தால் இவர்களது நடவடிக்கையால், ஆதரவு தெரிவிக்கும் தேசிய எண்ணம் கொண்ட பெருவாரியானவர்கள் பின்வாங்குவார்கள்.

அதனால், இலங்கை தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும். இவர்களது பேச்சு இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். எந்த காரணத்தை முன்னிட்டும் இலங்கை தமிழர்கள் நலன் விரும்பும் தேசியவாதிகள் இந்திய இறையாண்மைக்கும் எதிரான எந்த செயலையும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுகள் விவேகம் இல்லாத வீரம் என்று கூறியுள்ளார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

Link to comment
Share on other sites

நல்லவேளை நெடுக்கு வந்து இதை தெள்வுபடுத்தியது.... எதையும் ஆராயாமல் பதில் எழுதாதேங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.