Jump to content

நண்டு நறு நறுக்க..


Recommended Posts

இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக்

டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு பிடிக்க போக கள உறுப்பினர்கள் சிலரை அழைக்கிறார் முனிவர் நல்லா ஓடி பிடிக்கிறாக்கள் ஆஸ்ரமத்தை நாடவும் ஒரு மூன்று பேர் இல்லாத போது [சுப்பர் ,டங்கு, சுவி] :):lol:

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ நண்டு என்றால் எனக்கு எதிர்ப்பு..இங்க எங்கையோ உடன் நண்டு என்று வாங்கி வந்தார்கள்.. அண்ணா கொண்டு வந்து குடுத்தார்.. நான் என்ன இருக்கு என்று உள்ள பிரித்து பார்த்தால் நண்டு.. அது பார்த்தால் சாகலை என்னை பார்த்து முழுசுது.. அது தரையிலை இறங்கி ஒட தொடங்கி விட்டுது.. நான் ஒடவும் இடம் இல்லாமல் எங்க போயு தொங்கலாம் என்று பார்த்தால் பாழாய் போன வீட்டில் தொங்கவும் முடியாது.. ஐயோ நான் ஏல கடசிக்கு சாப்பாட்டு மேசை மேல் ஏறி இருந்தன்.. அதில் இருந்து நண்டு பக்கம் போவது இல்லிஅ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்! நண்டு வந்து வாலி மாதிரி. முன்னே நின்று பிடிக்கக்கூடாது. பிறகு அதுவும் கைகுலுக்க ஆரம்பித்துவிடும். பின் பக்கத்தால அப்படியே கோலினமாதிரிப் பிடித்தால் அது சமத்தாக டான்ஸ் ஆடும்.

தூயாவைப் பாரும், கெட்டிக்காரப் பிள்ளை அகப்பையாலேயே சமைச்சுடுறா. ம்... நாமெல்லாம் அடுப்பிலதான்!!! :):lol:

Link to comment
Share on other sites

தூயா நண்டு சூடு என்றா, ஆறவச்சு சாப்பிடுறது தானே.. சரி சரி - முருங்கை இலையை தனியா சமைச்சு பிறகு சேர்த்து சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

முருங்கை இலையை தனியா சமைச்சு பிறகு சேர்த்து சாப்பிடலாம்.

தப்பில்லை :

ஆனால் கறியுள் போடும் போது அது ஒரு சுவையை தரும் :icon_idea:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Crab meat is also somewhat high in cholesterol which can also raise your blood cholesterol level. Most major health organizations, such as the American Heart Association, recommend a daily limit of 300mg. It is important to note that saturated fatty acids are the chief culprit in raising blood cholesterol levels and that crab meat is very low in fat, and especially low in saturated fat. Consult your doctor or dietitian if you are on a very restricted diet.

நண்டு சூடோ சூடில்லையோ.. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ரோல் உள்ளவை நண்டை மட்டுப்படுத்தி உண்ண வேண்டும் என்பது தூயாவின் குறிப்பில் அடங்கி இருக்கிறது.

நிரம்பிய கொழுப்பு குறைவாக உள்ள போதும் இது நிகழ்கிறது.

நன்றி தூயா. சமையலும் சமையல்.. அதன் கூட உடலாரோக்கிய விசயங்களையும் உள்ளடக்கிறது நல்ல முயற்சி, ஏனெனில் எம்மவரின் சாப்பாட்டுப் பழக்கவழக்கமே அவர்களில் பல நோய்களுக்கு மூல காரணமாகும்.

அதனால் தான் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் கூட இந்தியர்கள் நல்லா கொட்டிக்கே சாவாங்க என்று மறைமுகமாகச் சொல்லி இருந்தார். அது உண்மையும் கூட..! :unsure:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா நண்டு சூடா?

குளிரில் நினறாலோ அல்லது தோய்ந்து முழுகினாலோ உடம்பு இளகி இருக்கும் தருணங்களில் நண்டு, கணவாய், இறால், ஆட்டிறைச்சி போன்றவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும் என்பார்கள்.

முருங்கை இலை உடம்பைச் சூடாக்கும் தன்மை கொண்டது. நீரை வறட்டும் மருத்துவக்குணம் கொண்டது. அநேகமாகக் காயம்பட்டவர்களுக்கு முருங்கையிலையை வறை செய்து உண்ணக் கொடுப்பதன் மூலம் உடலில் பட்ட காயத்தை விரைவில் ஆற்றிவிடலாம்.

நண்டு குளிர் உணவு ஆதலால் முருங்கையிலையை அதனுடன் சேர்ப்பதால் நண்டின் குளிர்தன்மையைக் குறைக்கிறது. இது எனக்குத் தெரிந்தவரையான காரணம்.

Link to comment
Share on other sites

ஆகா...அப்படியா? நண்டு சூடு என்று சொல்வதாக எனக்கு நினைவு...உடனே மாத்துறேன்.. :( நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.