Jump to content

தண்டவாளக் காதல்


Recommended Posts

இந்தத் தண்டவாளங்களுக்குத்தான் என்ன மனமோ?

ஒன்றை ஒன்று ஆழமாய்க் காதலிக்கின்றன….

அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ளாத பாசக் காரர்கள்….

முத்தம் மட்டும் பிறக்கும் போதும் பிரியும்போதும் கொடுத்துக் கொள்கின்றன…

ஆனாலும் கள்ளன் தொடர்வண்டி

அடிக்கடி வந்து போவான்…

அணைத்துமே முத்தமாய்க் கொடுப்பான்…

மறுபடி ஓடிவிடுவான்….

ஆனால் நேரந்தவறா முத்தம்

அதுமட்டும் கொடுப்பான்…

முத்தமிடும்போது உடற்சூடேற்றுவான்..

அவனது உள்ளமும், ஏன் உதடுகளும் கூட கொதித்துக் கொண்டிருக்கும்…

ஆனால் இவ்விரு தண்டவாளங்களும் அப்படியல்ல…

மானசீகக் காதலர்கள்….

ஒருவரை ஒருவர் பிரியாது காதலிக்கும் காதலர்கள்….

இவர்கள் பிரிந்தால் வந்துபோனவனின் இறப்பு நிச்சயம்

உடலால் பிரிந்து எட்டவே

இருந்தாலும் உண்மையான காதலர்கள்

www.nilavan.tk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.