Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

சமாதானத்தின் பெயரால்..

Recommended Posts

சமாதானத்தின் பெயரால்..

முந்தியெல்லாம் நாங்கள்

விழிநீர்

சிந்தியதே இல்லை

தந்தனத்தோம் பாடி

கெந்தித்தொட்டு ஆடி

தெரு மந்திகளைப் போல

வாழ்ந்திருந்தோம்

முந்திய வாழ்க்கை எல்லாம்

நாம்

சந்தித்த எதிரியாலே

பந்தி விட்டு ஓடியது

சந்தி கூடிச் சிரித்தது...

வந்தவன் ஆட்டி வைக்க

சொந்த மண் விட்டு

வெந்த புண் மனத்தோடு

சொந்த பந்தமதைப் பிரிந்து

குந்தியிருந்த

நிலத்தையும் இழந்து

மரம் விட்டு

மரம் தாவும்

மந்திகளைப் போல

ஊர் விட்டு

ஊரோடினோம்

கூடு பிரிந்த வாழ்க்கையது

தேடி வந்தது எம்மை

கேடென்று நினைக்கலாமோ

நாமதனை..?

நாடற்ற நமக்கு

வீடெதற்கு ?

வீண் வம்பெதற்கென

பாடித் திரிந்த

பண்பட்ட குயிலொன்று

ஆடி வந்த

ஆட்டிலறியில்

நாடித் துடிப்பிழந்து

நடுத் தெருவில்

கிடந்ததுவே...

சாதிப்பேன் நானென்றும்

சாதிப்பேய் நானென்றும்

சரித்திரவாதியென்றும்

வாசித்த கூற்றெல்லாம்

வழி தவறிப் போயினவோ..?

சுற்றும் பூமியது

மொத்த மனிதரையும்

பற்றிப் பிடிப்பது போல்

முற்றும் கிரகணத்துள்

மூழ்கிக் கிடந்தோமே...

இன்று

சுற்றம் இழந்து

முற்றும் துறந்து

பற்றற்ற முனிவராகி

இந்தப் பாரினில்

அலைகிறோமே...

வேர்வையது சிந்தி

விழிநீர் சிந்தி

போர்வையது இன்றி

பார்வையது மங்கி

பசிப்பிணியால் நாம் வாழும்

சோக நிலைதான்

தீராதோ..?

வானமதில் வலம் வந்து

ஈனமின்றிக்

கொன்றொழிக்கும்

பாதக நிலையிந்த

பாரினில் நீங்காதோ..?

எருக் கும்பம் போன்ற

சதைக் கும்பத்துக்குள்ளே

எம் உறவுகளை

தேட வைத்த கதையது

செத்தொழிந்து போகாதோ..?

அடுத்த ஊருக்கு எடுத்தவுடன்

போவதற்கு

என்னால் முடியவில்லை

வீதியெல்லாம் மூடிக் கிடக்க

வேண்டுமென்ற

விதி எமக்கு உள்ளபோது

நாதியற்ற தமிழன் சோதிக்காமல்

போவதெப்படி?

சோதிக்காதே எம்மைச் சோதிக்காதே

நடு வீதியில் வைத்து

எம்மை

அங்கமெல்லாம் தடவி

அரவணைப்புச் செய்யாதே.

பாவியடா நாங்கள்

சேதியொன்று தெரியுமோ?

மீன்பிடிக்கப் போன

மூன்று பேரைக்

காணல்லையாம்

ஊரெல்லாம் கூடி

ஒப்பாரி வைக்கிறது...

போன வாழ்வினை

மீண்டும் ஒருமுறை

கைதட்டி அழைக்க

என்னால் முடியவில்லை

போதுமடா சாமி

நேற்றுவரை வாழ்ந்த கதை

செத்தொழிந்து போய்

நித்திய சமாதானம்

இத்தீவில் உதயமாகி

பத்தியமாய் நாம் வாழ்ந்திட

சத்தியமாய் உனை

வேண்டுகிறோம்

நீ எமக்கு

வரமளிப்பாய்

எல்லோர்க்கும் பொதுவான

சமாதான தூதுவனே

Share this post


Link to post
Share on other sites

நித்தியமாய் சமாதானம் வாங்கி பத்தியமாய் நான் வாழ்ந்திட ஒரு வழி பிறக்கும் ..

.சற்று பொறுங்கள் .......சோதனை கடந்து ....வேதனையை சந்திக்கும் காலம் இனி

சாதனை படைக்கும் என நம்பியிருப்போம்

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா

உங்கள் வரிகள் கேட்க நல்லாயிருக்குது. நம்புவோம் நல்லதே நடக்கட்டும்.

ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு

இந்தக் கவிதை புதிதல்ல. இது 2000ஆம் ஆண்டு நான் எழுதியது. 2001இல் இலண்டன் ரைம்ஸில் வாசிக்கப்பட்டது.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்தக் கவிதையை ஒரு வரிகூட மாற்றாமல் பிரசுரிக்க முடிகிறதெனில் இதை என்னண்டு சொல்லிறது..........................???????????????

Share this post


Link to post
Share on other sites

தியா கவிதை அழகு

உங்களுடைய பல கவிதைகளில் இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது .

எளிய நடையும் மேடைக்கவிதையின் சாயலும் அழகாக உள்ளது

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • அனைத்து கிரிக்கெட் மேட்ச்களும் ‘பிக்சிங்தான்’- தரகர் சஞ்சீவ் சாவ்லா அதிர்ச்சித் தகவல்  2000-ம் ஆண்டு உலகை உலுக்கிய, ஹேன்சி குரோனியே சிக்கிய கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய தரகர் சஞ்சீவ் சாவ்லா, அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளும் பிக்சிங் செய்யப்பட்டதுதான் என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். டெல்லி போலீஸுக்கு இவர் அளித்த வாக்குமூல அறிக்கையில், “எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நியாயமாக நடப்பதில்லை, மக்கள் பார்த்த அனைத்து மேட்ச்களும் பிக்சிங் செய்யப்பட்டவைதான்” என்று கூறியுள்ளார். Powered by Ad.Plus      மேலும் கிரிக்கெட் போட்டிகள் திரைப்படங்கள் போல் வேறு ஒருவரால் இயக்கப்படுவடுதான் என்றும் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் ரொம்ப வருடங்களாக இந்த சூதாட்டத் தொழில் செய்து வருவதாகவும், ஆனால் தன்னால் பெயர்கள் எதையும் கூற முடியாது ஏனெனில் இது பெரிய சிண்டிகேட், லாபி, நிழலுலக தாதாக்கள் ஈடுபடும் தொழில், அவர்களைப் பற்றி தான் வாயைத் திறந்தால் கொல்லபடுவேன் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் சஞ்சய் சாவ்லா. விசாரணை காவலதிகாரி டிசிபி கிரைம் பிராஞ்ச் ஜி.ராம்கோபால் நாயக் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக இன்னொரு குண்டையும் போட்டுள்ளார் சஞ்சய் சாவ்லா. திஹார் ஜெயலில் இருக்கும் சாவ்லா மார்ச் 28ம் தேதி கரோனா காரணமாக ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். ஆனால் டெல்லி கோர்ட் அதை நிராகரித்து விட்டது. ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் சாவ்லாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/sports/557111-all-cricket-matches-which-people-see-are-fixed-claims-bookie-sanjeev-chawla-1.html  
  • நல்லதொரு முடிவு. ஒரு மிருகத்திடமிருந்து தூர விலகியிருப்பது நல்லது
  • இந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு   ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள். இந்த ஆண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 மாநாட்டின் தலைவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓரிரு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களை அழைக்க முடியும். கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் இந்த சூழலில் ஜி-7 நாடுகள் மாநாடு ஜூன் 10-12 வரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டை செப்டம்பரில் மாற்றி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக முடிவு செய்துள்ளார். ப்ளோரிடாவில் ஸ்ேபஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளிக்கு செல்லும் நிகழ்வை பார்த்துவிட்டு வாஷிங்டனுக்கு விமானத்தில் அதிபர் ட்ரம்ப் திரும்பினார். அப்போது அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில் “ ஜுன் இறுதியில் நடத்த தி்ட்டமிட்டிருந்த ஜி-7 நாடுகள் மாநாட்டை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கிறேன். இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளேன் ஜி-7 நாடுகள் மாநாடு என்பது, உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளி்ப்படுத்தும் மாநாடாக இல்லை என நான் நினைக்கிறேன். காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் இருக்கிறது” எனத் தெரிவித்தார் வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநர் அலிசா அலெக்சான்ட்ரா பாரா கூறுகையில் “ ஜி-7 நாடுகள் மாநாட்டில் பாரம்பரிய உறுப்புநாடுகள், நட்பு நாடுகளும் அழைக்கப்படும். சீனாவுடன் எதிர்காலத்தில் எவ்வாறு அணுகுவது குறித்து பேசப்படும்” எனத் தெரிவித்தார் இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்று குறையாத பட்சத்தில் , ஜி-7 மாநாட்டில் பங்ேகற்கமாட்டேன் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.hindutamil.in/news/world/557145-trump-postpones-g7-summit-wants-india-others-to-join-group-1.html
  • தாலி கட்டும் போது பலர் உதவிக்கு நிக்கிறாரகள்.அதுக்குப் பிறகு நினைக்கவே நெஞ்சு பக் என்டுது.
  • மினியாபொலிஸ் | கொலையாளியான பொலிஸ்காரரின் மனைவி விவாகரத்துக் கோருகிறார்!     மினியாபொலிஸ் நகரத்தில் வெள்ளை இனப் பொலிசார் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரைக் கைதுசெய்யும்போது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துபோனதைத் தொடர்ந்து கடந்த மூந்று நாட்களாகப் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மினியாபொலிஸ் நகர பொலிஸ் நிலையம் தாக்கி எரியூட்டப்பட்டிருந்தது. ஃபுளோயிட் (இடது) , ஷோவின் காலில் மிதிபட்டிருக்கும் ஃபுளோயிட் ( வலது) கைது செய்யும்போது மரணமடைந்த ஜோர்ஜ் ஃபுளோயிட் தொடர்பான காணொளி நாடெங்கும் ஏற்படுத்திவரும் எதிர்ப்பலைகளின் காரணமாக ஃபுளோயிட்டைக் கைது செய்த பொலிஸ்காரரான டெறெக் ஷோவின் மீது மூன்றாம் நிலைக் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இன் நிலையில் பொலிஸ்காரர் டெறெக் ஷோவினின் மனைவி கெலி, அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஃபொக்ஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. “திரு ஃபுளோயிட் அவர்களின் மரணத்தினால் கெலி ஷோவின் மனமுடைந்துபோயுள்ளார். ஃபுளோயிட்டின் மரணத்தால் துன்புறும் அவரது குடும்பம், அவரை நேசிப்பவர்கள், அவரது இழப்பையுற்றுக் க்வலைகொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் தனது ஆழ்ந்த அஞ்சலியை அவர் தெரிவிக்கிறார்” என கெலி ஷோவினின் வழக்கறிஞர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்போது டெறெக் ஷோவினுடன் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ்காரர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை பதியப்படவில்லை. https://marumoli.com/மினியாபொலிஸ்-கொலையாளிய/?fbclid=IwAR0w6nQbTqSA8lvUxZAY1__loOFeuL4hmA6Y9Cl2YSaBa8-zxF94sRI63k0