• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
வலைஞன்

யாழ் இணையம் - 11ஆவது அகவை

Recommended Posts

அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும்,

யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் - 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. ஆழ்ந்த அர்ப்பணிப்பு, விடா முயற்சி, பொறுமை, நோக்கம் தவறாமை - யாழ் இணைய உறவுகளின் அன்பும் ஆதரவும் - தளர்ந்து போகும் நேரங்களில் உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்கள் - ஆலோசனைகளை வழங்கி மெருகூட்டும் உறவுகள் - இத்தனையும் தான் இதனை சாத்தியமாக்கியது.

இன்று, இந்த வளர்ச்சியை - இந்த மகிழ்ச்சியை - கொண்டாடும் மனநிலையில் நாம் யாருமே இல்லை என்பதே உண்மை. எமது தமிழீழ நாடு - எமது மக்கள் - எமது போராளிகள் - எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழல் எம்மை துயருக்குள் தள்ளியுள்ளது. நாள்தோறும் சிங்கள இனவெறி அரசால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது போராளிகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் மண் மீட்கப் போராடி மாவீரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். இழப்புச் செய்திகளையும், மக்களின் அவலங்களையும் தாங்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் சோர்ந்துவிடவில்லை. சோரப்போவதுமில்லை. எமது எண்ணம், நோக்கு இரண்டும் மாறப்போவதுமில்லை.

எந்தச் சூழலாயிருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப - தமிழ் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப - யாழ் இணையம் தன்னைத் தகவமைத்து உருவமைத்து வெளிப்படும். மண் மீட்புப் போருக்காய், இனப்படுகொலைக்கு எதிராய் எழுச்சிகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களோடு யாழ் இணையமும் தன்னை ஒன்றிணைத்துள்ளது. மக்களின் இன்றைய உணர்வுகளை, எண்ணங்களை, எழுச்சியை காவும் ஒரு ஊடகமாய் தன்னை மையப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், எழுச்சிப் போராட்டங்கள் போன்றவற்றுக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறது. தாயக விடுதலைக்கான இணையம் சார்ந்த கூட்டுமுயற்சிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்கு உறுதுணையாக யாழ் இணைய கருத்துக்கள உறவுகள் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு + எழுச்சிப் பேரணிகளுக்கான பதாகைகளை உருவாக்கினோம். கொட்டொலிகளை எழுதினோம். இணைய ஊடக பரப்புரைக்கான ஒத்துழைப்புகளை வழங்கினோம். மக்களின் அவலங்களை - தமிழரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தோம். இனப்படுகொலை பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்க தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினோம். ஆங்கில வலைப்பதிவைத் தொடங்கினோம். "சிறிலங்காவைப் புறக்கணி" என்கிற முயற்சிக்கான ஆதரவை வழங்கினோம் - அதற்கான பதாகைகள் தயாரித்தோம் - அதற்கான இணையப்பக்கம் உருவாக்கினோம். இன்னும் இன்னும் எம்மாலானதைச் செய்துகொண்டிருக்கிறோம். நாம் என்றால் யார்? யாழ் இணைய உறவுகள் நீங்கள்.

நாம் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுவதல்ல நோக்கம். கூட்டுமுயற்சியாய் எம்மால் நிறைய செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இவற்றை பட்டியலிட்டோம். கூட்டுமுயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம். கூட்டுமுயற்சிகளை நாம் வரவேற்கிறோம். நாம் இன்னும் நிறைய செய்யவேண்டும் - என்ன செய்யவேண்டும், என்பதை எண்ணவேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது. பயனுள்ள - செயற்திறனுள்ள - புதிய - வித்தியாசமான - தாயக விடுதலை நோக்கிய கூட்டுமுயற்சிகளுக்கு தன்னாலான ஒத்துழைப்பை யாழ் இணையம் வழங்கும்.

இந்த நேரத்தில், யாழ் இணையத்தை நடாத்துவதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் எடுத்துச்சொல்ல விரும்புகிறோம்:

1. யாழ் இணையத்தை பராமரிப்பதற்கு நாம் செலவிடும் நேரம். வேலை நேரம், குடும்பத்துக்கான நேரம், தனிப்பட்ட வேறு வேலைகள் இத்தனைக்கு மத்தியில் தான் நாம் யாழ் இணையத்தை இயக்குகிறோம். பலநேரங்களில் வேலையில் இருந்துகொண்டு, யாழ் இணையத்தள வேலைகளைச் செய்கிறோம் - குறிப்பாக கருத்துக்களத்தை மட்டுறுத்தும் வேலை. எனவே கருத்துக்கள உறவுகள் பொறுப்புணர்ந்து கருத்துக்களை எழுதுவீர்களானால் எமக்கு மட்டுறுத்தும் நேரம் மிச்சப்படும்.

2. யாழ் இணையத்தை நடாத்துவதற்கான பொருளாதாரச் செலவு. இணைய வழங்கிக்கான மாதாந்தச் செலவு, மென்பொருட்களுக்கான செலவு, இற்றைப்படுத்தலுக்கான செலவு என்று பல்வேறு செலவுகள். விளம்பரங்களூடாக இவற்றை ஈடுகட்டவே நாம் விரும்புகிறோம். எனவே, யாழ் இணைய உறவுகள், உங்களுக்கு தெரிந்த நிறுவனங்களினூடாக விளம்பரங்களைப் பெற்றுதந்தால் பயனுள்ளதாக அமையும்.

3. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களால் வெளியிலிருந்து வரும் சில சிக்கல்கள். தொலைபேசி, மின்னஞ்சல்கள் ஊடான எச்சரிக்கைகள், வசவுகள், தனிப்பட்ட தாக்குதல்கள். இவற்றை நாம் கணக்கிலெடுப்பதில்லை. எனினும், கருத்துக்களத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் பொறுப்புணர்ந்து, பண்பான முறையில், நேர்மையாக வைக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும் - எமது மக்களோடும் - எமது போராளிகளோடும் - நாம் என்றும் இணைந்திருப்போம்.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்.

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.   21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும். வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள்.     காந்தி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை படமான 'காந்தி', பார்ப்பது வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனவுறுதியைத் தரும் படமாக அமையும். போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) இங்கிலாந்தில் 1970ல் துவங்கப்பட்ட ஒரு இசைக்குழுவின் வாழ்க்கை பயணம் தான் போஹோமியன் ராப்சோடி. 2019 ஆஸ்கர் விழாவில் 4 முக்கிய விருதுகளை வென்ற இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கன் ஸ்னைப்பர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய கிரிஸ் எனும் வீரர். அமெரிக்க படைகளை காக்க 150 பேரை ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தினார். அமெரிக்க வரலாற்றில் 150 எதிரிகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ். பீலே கால்பந்து ஜாம்பவான் பீலே, தன் வாழ்வில் நிகழந்ததை கூறும் இப்படம் பிரேசில் நாட்டை தாண்டி உலகம் முழுதும் பெரும் புகழ் பெற்றது. மேலும் இந்திய ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஏ.ஆர் ரகுமான் இசை கூடுதல் பலமாக அமைந்தது. தி தியரி ஆப் எவ்ரிதிங் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ன் வாழ்க்கை படமான தி தியரி ஆப் எவிதிங் 2014ம் ஆண்டு வெளியாகி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இன்னும் பல சாதனையாளர்களின் படங்கள் பட்டியலில் இருந்தாலும். இந்த ஐந்து படங்கள் வாழ்க்கை போராட்டத்தை உணர்த்துவதால், மன உறுதியை அதிகமாக்க உதவும். https://www.dinamalar.com/news_detail.asp?id=2511528  
  • மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76.     சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா.   தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2511532
  • இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்   ரோம்:   சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.   உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.    தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.    தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் 92 ஆயிரத்து 472 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 889 பேர் உயிரிழந்துள்ளனர்.    இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/03/29011622/1373237/Coronavirus-death-toll-passes-10-thousand-Italy.vpf
  • பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்மி வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கோப்பு படம்   பெங்களூரு:   உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 900-க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.    இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த முஜீப் முகமது தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார்.    அவர் தனது பேஸ்புக் பக்கதில், '' கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரசை பரப்புவோம்’’ என கருத்து பதிவிட்டிருந்தார்.     அவரது கருத்து சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து,சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.   இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை இன்போசிஸ் நிறுவனம் பணி நேற்று பணி நீக்கம் செய்துள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/03/29063521/1373243/Infosys-fires-employee-for-controversial-FB-post-on.vpf   இங்கும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானா பொண்மணி Woolworth Supermarket இல் வாழை பழங்களுக்கு மேல் துப்பியுள்ளார், சிலர் வேண்டுமென்றே செய்கின்றார்கள், கவனமாக இருங்கள்