• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வவு­னியா மாவட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைப்­பாளர் கரு­ணா­தா­சவின் ஏற்­பாட்டில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். குறித்த கூட்­டத்தில் சஜித் பிரே­ம­தா­சவின் சகோ­தரி துலாஞ்­சலி பிரே­ம­தாச, முன்னாள் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் ரோகித போகொல்­லா­கம உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர். இதில் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், கடந்த காலங்­களில் எங்­க­ளுக்கு நடை­பெற்ற அநீ­திகள், துன்­பங்கள் எல்லாம் உங்­க­ளுக்கு தெரியும். அதி­லி­ருந்து விடு­தலை பெற வேண்டும். கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக நாங்கள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அதற்கும் அப்பால் இன்று சஜித் பிரே­ம­தாச தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அவ­ரு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தா­சவின் ஆட்­சியில் வடக்கு–- கிழக்கு பிர­தே­சத்தில் வாழும் பெண்­களின் வாழ்­வா­தா­ரத்­துக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். சுயா­தீன ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்றார். போரால் பாதிக்­கப்­பட்ட, கண­வனால் கைவி­டப்­பட்ட பெண்கள் இருக்­கின்­றார்கள். பட்­ட­தா­ரிகள் தொடக்கம் இன்று வேலை­யில்­லாமல் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கானக கைத்­தொழில் பேட்­டை­களை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. நாட­ளா­விய ரீதியில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பின்னர் இவை­களை அவர் நிறை­வேற்றித் தருவார். இந்­த­முறை  ஜனா­தி­பதி ஆனதன் பின்னர் தொடர்ந்து 20 வரு­டங்கள் பய­ணிக்க இருக்­கின்றோம். கடந்த காலத்தில் ஏற்­பட்ட அநீ­தி­களை முள்­ளி­வாய்க்கால் கூறு­கின்­றது. முள்­ளி­வாய்க்கால் போன்ற கொடூ­ர­மான வாழ்க்­கையை நாம் கடந்த காலத்தில் வாழ்ந்­தி­ருக்­கின்றோம். அப்­ப­டி­யா­ன­வற்­றுக்கு நாம் இட­ம­ளிக்க கூடாது. வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் ஒவ்­வொரு குடும்­பமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இறுதி யுத்­தத்தால் மாற்றுத் திற­னா­ளிகள், பெண்­களை தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்கள் எனப் பலர் இருக்­கின்­றனர். குழந்­தைகள் பெற்­றோர்­களை இழந்திருக்­கி­றார்கள். பிள்­ளை­களை இழந்து முதி­யோர்கள் முதியோர் இல்­லங்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவைகள் எல்லாம் உங்­க­ளுக்கு ஞாப­கத்துக்கு வர­வேண்டும். குறு­கிய காலத்தில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்தில் ஒரு இலட்சம் வரை­யி­லான சமுர்த்தி பய­னா­ளர்­களை தெரிவு செய்­துள்­ளது. உட்­கட்­ட­மைப்பு மற்றும் வீதிகள் புன­ர­மைத்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கம்­ப­ர­லிய திட்­டத்தின் ஊடாக ஒரு தொகு­திக்கு 300 மில்­லியன் ரூபாய் நிதி ஒதுக்­கப்­பட்டு ஆல­யங்கள், பாட­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், சிறு­வீ­திகள் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன. வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்ட குடும்­பங்­களின் மின்­னி­ணைப்­புக்­காக ஒரு குடும்­பத்துக்கு 30 ஆயிரம் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண சர்­வ­தேச விமான நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தாச கிரா­மங்கள் தோறும் சென்று தனது அமைச்சின் ஊடாக குடி­யேற்­றத்­திட்­டங்­களை அமைத்து வீடு­களை வழங்­கி­யுள்ளார். எனவே குறு­கிய காலத்தில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்தி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி இந்த நாட்டை ஒரு ஜன­நா­யக நாடாக கொண்டு வந்­தி­ருக்­கின்றோம். இந்த வாக்­கு­களின் ஊடாக ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த முடியும். ஜன­நா­யக நாடு தான் எங்­க­ளுக்கு வேண்டும். வெள்­ளை வான் கலா­சாரம் வேண்டாம். எங்களுடைய காணிகள் வேண்டும். சிறையில் இருந்து அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம். மிகுதி கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்­படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத் துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/68883
  • 👍👍. அது எப்படிங்க நான் நினைக்கிறத அப்படியே சொல்லலுறீங்க. என்டோட மைன்ட்  வோய்ஸ் ஐக்கிய அமெரிக்காவரை கேட்குதா? 😂
  • அவரை ஏன் கேட்கிறீர்கள்?  Sampanthan refused to answer calls as LTTE political heads faced final moments https://www.tamilguardian.com/content/sampanthan-refused-answer-calls-ltte-political-heads-faced-final-moments இதை வாசித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது உண்மை. இதை கருத்தில் கொண்டு மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.
  • (எம்.எம்.எஸ். ஸாகிர்)இலங்கையிலுள்ள மலாய இனத்தை மதித்து மலாய இனத்தவர் ஒருவரை காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதிஆர். பிரேமதாஸ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமித்து மலாயர் சமூகத்துக்கு கௌரவம் அளித்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கே எந்தவித பக்கச் சார்பும் இல்லாதிருந்த இலங்கை வாழ் மலாய இனத்தவர், முதன்முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக துனிய மலாய் துனிய இஸ்லாம் (DMDI) அமைப்பின் இலங்கைத் தலைவர் டாக்டர் அன்வர் உலுமுத்தீன் தெரிவித்தார்.மலாய இனத்தவர்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சம்பந்தமாக கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,இலங்கையில் மலாய இனத்தவர் 80 ஆயிரம் பேர் தங்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனாலும் தற்போது மலாயர் இனத்தவர்கள் 90 ஆயிரத்துக்கும் ஓர் இலட்சத்துக்கும் இடையில் இலங்கை நாட்டில் வாழ்கின்றார்கள் எனக் கணிக்கலாம்.அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி உடையவர்களாகக் காணப்படுகின்றனர். அந்த வாக்குகளை நாங்கள் இந்தமுறை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அளிப்பதற்கு இருக்கின்றோம். 70 வருடத்துக்குப் பிறகு இந்த முயற்சியை நாங்கள் செய்கின்றோம்.நாங்கள் சஜித்தை ஆதரிப்பதற்கு ஒரே ஒரு காரணம், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ எங்களுக்கென்று ஓர் இடத்தைக் கொடுத்து, ஒரு எம்.பி.யைக் கொடுத்து, மலாயர் இனத்தவர்களைக் கௌரவப்படுத்தினார். அதே நேரத்தில் கொழும்பில் மலாயர் இனத்தவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்த ஒருவர். எனவே மலாய இனத்தவர்களுடைய உணர்வுகள், தேவைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் மலாய இனத்தவர்கள் இதுவரைக்கும் ஒன்றுமே கேட்டதில்லை. தங்களுக்கென்று ஒன்றும் கேட்காமலே சிங்கள மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்பவர்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.இன்றுள்ள நிலைமை ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் மலாய இனத்தவர்களாக இருந்து கொண்டு எங்களுக்கும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அதே தாக்கத்தைத்தான் உண்டாக்குகிறார்கள். அதனாலே நாங்களும் முஸ்லிம்கள் என்பதால் நாங்களும் முஸ்லிம்களோடு ஒன்று சேர்ந்து மற்ற இனத்தவர்களோடு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவைக் கொண்டு வந்தால் தான் எங்களுக்கும் பாதுகாப்பும், உத்தரவாதமும், அமைதியும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எங்களுக்கு பாதுகாப்பும் அமைதியும்தான் முக்கியம்.நாங்கள் முக்கியமான ஒரு கோரிக்கையை மட்டும் சஜித் பிரேமதாஸவிடம் விடுக்க இருக்கின்றோம். இலங்கையின் முதல் ஆமி ரெஜிமன்டாக மலாயர் ஒருவர்தான்தான் இருந்தார். அவருக்குப் பிறகு நிறைய மலாய ரெஜிமன்ட்கள் சாதித்தார்கள். இலங்கைக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள். இன்றைக்கும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லத்தீப் வரையில் இலங்கை நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கி, முன்னணியில் திகழ்பவர்கள் மலாயர்கள்தான்.அந்த அடிப்படையில் பழைய டீ.ஐ.ஜீமார் தற்போது இருக்கின்ற புதிய டீ.ஐ.ஜீ மார், பழைய எஸ்.எஸ்.பிமார், பிரிகேடியர்மார் என்று மலாயர்களை ஒரு குழுவாக ஒன்று சேர்த்து நாட்டுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக, பாதுகாப்பு விவகாரத்தில் ஓர் இடத்தை தருமாறு நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க இருக்கின்றோம். பாதுகாப்பு விடயத்தில் அப்படி ஓர் இடம் தந்தால் அதில் தொண்டராக வேலை செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதற்கு மலாயர் இனத்தவர் என்ற ரீதியில் எங்களால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து எங்களுக்குள் இருக்கின்ற 60ஆயிரம் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை நிச்சயமாக அவருக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.இதுவரை எங்கள் கணீப்பீட்டில் அம்பாந்தோட்டை, கொழும்பு ஆகிய இடங்களில் மலாயர் அடர்த்தியாகவும் மற்றும் ஊவா மாகாணம், பண்டாரவளை ஆகிய இடங்களிலும் நாட்டின் ஆங்காங்கு பல்வேறு இடங்களிலும் மலாயர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது பாதுகாப்பைக் கருதி, பிரிந்திருந்த மலாயர் இனத்தவர்கள் கூட ஒற்றுமைப்பட்டு,  இம்முறை சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க, ஒட்டுமொத்த மலாயர் சமூகமும் முன்வந்திருக்கின்றனர் என்று தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/11/DMDI.html
  • பாறுக் ஷிஹான்சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவினை ஆதரித்து புதன்கிழமை(13) மதியம்  கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தனது கருத்தில்எல்லோரும் சனாதிபதி தேர்தலில் நன்றாக பேசி வருகிறார்கள்.உங்களுக்கு தெரியும் இந்த சனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக ஒருபோதும் இல்லாத வகையில் மாற்றமடைந்து வருகின்றது. ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.யுத்தம் நடந்தால்  கொலை தான் இடம்பெறும் என்பது யாவரும் அறிவர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லீம் கட்சிகளை சஜீத் பிரேமதாச அரவணைத்து வருகின்றார்.இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது.சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று கூற விரும்புகின்றேன்.கோட்டாபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதா , சஜித் பிரேம தாஸவிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும்.நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் வந்தது 100 நாளைக்குள் பல வேலைத்திட்டங்களை செய்வோம் என்றார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை.மாறாக பழிவாங்கும் படலத்தை தந்தான் கையிலெடுத்தார்கள் .என்னையும் கைது செய்தார்கள் தான் நான் சொன்னேன் என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் ஏனென்றால் அவன்தான் எனக்கு ஆயுதம் தந்தவர் அவன்தான் அப்போது என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என்றபடியால் தான் என்னை விட்டார்கள். இப்படி பழி வாங்கும் வேலைகளை செய்தார்களே தவிர எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை.ஏற்றுக்கொள்ள முடியாத 13அம்ச கோரிக்கைகளை கொண்டு தமிழீழ பற்றாளர்களாக காட்டி கொண்டு பிழைப்பு நடார்த்துவதற்காக கொண்டுவந்த கோரிக்கை தான் அது. அவர்கள் நல்லவர்கள் என்றால் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கில் கூட இருக்காது . இந்த தடவை கிழக்கை விட வடக்கில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள் அந்தளவிற்கு அங்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இங்கும் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி காட்ட வேண்டும் அப்போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் .கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடார்த்தி வருகின்றனர் இன்னும் தீர்வு இல்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து என்னை செய்ய வேண்டும் என்று கேட்டார் நாங்கள் சொன்னோம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தான் கேட்டோம் . அப்போது அவர் கேட்டார் அம்பாறை பிரச்சினைகளை ஏன் இங்கு கதைக்கிறீர்கள் என்றார் நான் சொன்னேன் இது அம்பாறை பிரச்சினை இல்லை இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்றேன் உடனே கல்லடியில்  கல்முனை வடக்கு பிரதேச தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக பேசினார்.முஸ்லிம் தரப்பு எல்லை நிர்ணயம் செய்யாமல் தடுப்பதேன் அவர்கள் களவெடுத்து வைத்த காணியெல்லாம் பிடிபடும் என்றுதான்.இதற்கு தீர்வாக நாம் கிழக்கில் மொட்டு விற்கு வாக்களிப்போமானால் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.1983 யூலை கலவரம்  சத்துருக்கொண்டான் படுகொலை தொடக்கம் இந்த நாட்டிலே இன முறுகலை தோற்றுவித்து பாரிய யுத்தம் நடைபெற வழி வகுத்தது ஐக்கிய தேசிய கட்சி அவரகளுக்கு முட்டுக்கொடுத்து  வரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் உண்மையான தமிழின படுகொலையாழிகள்யுத்தத்தை முடித்து வைத்தது மஹிந்த ராஜபக்ச இன்று நன்றாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் உணர்வுகளை மறக்கவில்லை  தலைவர் பிரபாகரனை ஒருநாளும் குற்றம் சாட்டவில்லை . என் அண்ணனை கூட சுட்டது விடுதலை புலிகள் தான் அது அவர்களின் இயலாமை . அதற்காக தலைவர் பிரபாகரன் சாகும்வரை என்னை குற்றம் சாட்டவில்லை  போராட்டத்தில் என்னுடைய அருமை தலைவருக்கு தெரியும்  என்னுடைய கதையை அன்று கேட்டிருந்தால் அழிவை தடுத்திருக்கலாம். மட்டக்களப்பில் ரணிலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், யோகேஸ்வரன் அவர்களும் கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் . என்ன மொழியில் பேசினார்கள் என்று தெரியாது அவர்களுக்கு சிங்களம் தெரியாது .இப்போது சஜித் பிரேம தாஸவிற்கு வாக்கு கேட்கும் முஸ்லிம் தலைவர்கள் பெரும் இனவாதிகளாக இருக்கின்றனர் . அவர்களுடன் தமிழர்கள் சேர்வதுதான் துயரம் . முஸ்லிம் அரசியல் வாதிகள் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை சொல்கிறார்கள்.தமிழ் மக்களுக்காக சர்வதேசத்தில் பேச்சுவார்த்தை நடார்த்தியவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சம்பந்தரோ ,மாவையோ,சுமந்திரனோ பேச்சுவார்த்தை நடார்த்தவில்லை .ரணிலின் அரசாங்கம் தான் படுகொலை செய்தது என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ரணிலுடன் சேர்ந்துள்ளார்.  இவர்களுக்கு உண்மையாக செருப்படி கொடுக்க வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடக்கி வைத்தவன் நான்தான் . சிவராம் என்ற ஊடகவியலாளர்தான் நாங்கள் யுத்தம் செய்யும் போது இராணுவ  புத்தகங்களை எடுத்து தந்தவர் அவர்தான் அவர் சிறந்த ஆய்வாளர் .அவர்தான் அரசியல் சிந்தனையையும் பாராளுமன்றத்தில் எமது குரல் ஒலிக்க செய்ய வேண்டும் என  முடிவெடுத்து வன்னியில் வைத்து ஒப்பந்தங்களை செய்துதான் பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். யுத்தம் முடிய உடைத்துக்கொண்டு ஏமாற்ற தொடங்கி விட்டனர். அதற்காகத்தான் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவால் கூட்டமைப்பு உடையும்.கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைசாத்து இட்டுள்ளேன்.  12000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன் . இந்த தடவை  இவற்றை கணக்கிலெடுத்து கோட்டாபய ராஜபக்ச அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.இந்த நிகழ்வில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி உட்பட ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள். https://www.madawalaenews.com/2019/11/dna.html