Jump to content

சிங்களவனே சிங்களவனைக் கொல்லும் கொடூரம்


Recommended Posts

இன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது, அங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் ஓர் கட்டளை "கண்டதும் சுடு". அதாவது படையிலிருந்து தப்பி ஓடும் இராணுவ வீரர்களைக் கண்டால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போரில் மரணமடையும் இராணுவ வீரர்களை விட இவை பலமடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேவேளை கொல்லப்படும் இராணுவ வீரர்கள் கும்பலாக வெட்டிப் புதைப்பதற்கு என்று மன்னாரில் செயற்பட்டு வந்த ஊர்காவற் படையணி இப்போது முல்லைத்தீவைச் சுற்றி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு சடலங்கள் சேகரிக்கப் பட்டு வெட்டித் தாக்கப் பட்டோ எரிகப்பட்டோ வருகின்றது. உயரதிகாரிகளினதும் செல்வாக்கு தொடர்புள்ளவர்களதும் உடலங்கள் மட்டுமே வெளியில் அனுப்பப் பட்டு வருகின்றன்.

தங்களது உறவுகள் இராணுவத்தில் உள்ளனர் என நினைத்திருக்கும் சிங்கள மக்கள் இன்னமும் கள யதார்த்ததின் உண்மைத் தன்மையினை அறியாது இருக்கின்றனர். தயவு செய்து இதனை மொழிபெயர்க்கும் திறனுள்ளவர்கள் சிங்களம், ஆங்கிலம், மற்றும் வேற்று மொழிகளிலும், மொழிபெயர்த்து சிங்கள அரசு சிங்களவனை அழிக்கும் இச்செயலையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப் படுத்தவேண்டும்.

இறப்புக்கள், இழப்புக்கள் எமக்கு இருப்பது போன்றுதான் அப்பாவிச் சிங்களவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக களமுனைக்கு வருகின்றார்கள். அத்தோடு அவர்கள் சிங்கள அரசு சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு ஏமாற்றப் படுகின்றார்கள். புலி என்னும் மாயையை அரசியல் வாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். சிங்களவர்களும் தமிழருக்கு ஆதரவாக, சமாதான விரும்பிகளாக, சிங்கள அரசின் போர் வெறியை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் பெரும் பங்கு ஆற்றும். சிங்கள ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றன. சிங்களவனாக இருந்தால் என்ன, தமிழனாக இருந்தால் என்ன, கொல்லப் படுவது உயிர், மனித உயிருக்கு மதிப்பற்றுப் போகின்றது. இந்த உண்மையை உரத்துச் சொல்லுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தீயவாதி யாழ்நிலவருக்கு விண்ணப்பம்...

இதே மனிதாபமானத்ததை சிங்களவனிடம் எதிர்பார்க்கலாமோ? சடலங்களை புணர்வோரிடமும், இறந்த மாவீரர்களின் உடலை நிர்வாணப்படுத்தி களிப்புறும் மனநோயாளிகள் இந்த மிருக வம்சாவழியினர். எண்பது சதவீதத்திற்கு மேலே தமிழர்களின் இனவழிப்புக்கு போர் ஒன்றே சிறந்ததென புளங்காகிதத்துடன் வாக்களித்தவர்கள்...இன்றும் ஆதரிப்பவர்கள்...

மனிதாபமானம் காட்டலாம்..ஆனால் அதையுணர்ந்து மதிப்போருக்கு மட்டுமே! தமிழிலில் பழமொழியுண்டு...பாத்திரமறிந்-து பிச்சையிடு! இது கருணைக்கும் பொருந்துமன்றோ!

பதுங்கு குழிகளிலும், புதைகுழியிலும், உடல்சிதறி மரணிக்கும் சிறார்களை பார்க்கும்போது...வார்த்தைகள் வரவில்லை..

உங்கள் விருப்பம்!

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது, அங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் ஓர் கட்டளை "கண்டதும் சுடு". அதாவது படையிலிருந்து தப்பி ஓடும் இராணுவ வீரர்களைக் கண்டால் ட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரில் மரணமடையும் இராணுவ வீரர்களை விட இவை பலமடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேவேளை கொல்லப்படும் இராணுவ வீரர்கள் கும்பலாக வெட்டிப் புதைப்பதற்கு என்று மன்னாரில் செயற்பட்டு வந்த ஊர்காவற் படையணி இப்போது முல்லைத்தீவைச் சுற்றி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு சடலங்கள் சேகரிக்கப் பட்டு வெட்டித் தாக்கப் பட்டோ எரிகப்பட்டோ வருகின்றது. உயரதிகாரிகளினதும் செல்வாக்கு தொடர்புள்ளவர்களதும் உடலங்கள் மட்டுமே வெளியில் அனுப்பப் பட்டு வருகின்றன்.

தங்களது உறவுகள் இராணுவத்தில் உள்ளனர் என நினைத்திருக்கும் சிங்கள மக்கள் இன்னமும் கள யதார்த்ததின் உண்மைத் தன்மையினை அறியாது இருக்கின்றனர். தயவு செய்து இதனை மொழிபெயர்க்கும் திறனுள்ளவர்கள் சிங்களம், ஆங்கிலம், மற்றும் வேற்று மொழிகளிலும், மொழிபெயர்த்து சிங்கள அரசு சிங்களவனை அழிக்கும் இச்செயலையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப் படுத்தவேண்டும்.

இறப்புக்கள், இழப்புக்கள் எமக்கு இருப்பது போன்றுதான் அப்பாவிச் சிங்களவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக களமுனைக்கு வருகின்றார்கள். அத்தோடு அவர்கள் சிங்கள அரசு சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு ஏமாற்றப் படுகின்றார்கள். புலி என்னும் மாயையை அரசியல் வாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். சிங்களவர்களும் தமிழருக்கு ஆதரவாக, சமாதான விரும்பிகளாக, சிங்கள அரசின் போர் வெறியை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் பெரும் பங்கு ஆற்றும். சிங்கள ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றன. சிங்களவனாக இருந்தால் என்ன, தமிழனாக இருந்தால் என்ன, கொல்லப் படுவது உயிர், மனித உயிருக்கு மதிப்பற்றுப் போகின்றது. இந்த உண்மையை உரத்துச் சொல்லுவோம்.

சிறிலங்கா இராணுவத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் தமிழர்கள் வெற்றி பெறும் சாத்தியம் குறைவு. இது காந்தியம் அல்ல, மனிதாபிமானமும் அல்ல. வெற்றி பெறுவதற்கான ஒரு வழியாகும். எரித்திரிய விடுதலை போராட்டம் இப்படித்தான் எதியோப்பிய இராணுவத்தால் முழுமையாக முற்றுகையிடப்பட்ட நிலையில் தோற்றுப் போகவுள்ளதாக கருதப்பட்ட நிலையில், எதியோப்பிய இராணுவத்தில் கிளர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக வெற்றி பெற்றது.

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக களமுனைக்கு வருகின்றார்கள். அத்தோடு அவர்கள் சிங்கள அரசு சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு ஏமாற்றப் படுகின்றார்கள். புலி என்னும் மாயையை அரசியல் வாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள்.

நண்பரே! இதில் காந்தியவாதம் எங்கே இருக்கின்றது? சிங்களவர்களுக்கு இன்னமும் உண்மைத் தன்மை சென்றடையவில்லை சென்றடையும் பட்சத்தில் சிங்கள மக்களே அரசுக்கு எதிரான ஓர் பலமான போராட்டத்தை முன்னெடுப்பார்கள், அப்போது வெற்றி மாயையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் உண்மைத் தன்மையினை ஓரளவேனும் உணர்வார்கள், இது எமக்கென்று ஒரு நாட்டினை உறுதியாக அமைத்துக்கொள்ள, எமக்கென்று பலமான ஆதரவை திரட்டிக் கொள்ள வழிகோலும், பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கின்றது என்பது இதனைத்தான், உள்ளதிலேயே இராணுவத்திற்கு எண்ணிக்கை குறைவாகச் சேர்ந்த காலப்பகுதி என்று எடுத்துப் பார்த்தீர்களானால் கடந்த 2மாதங்கள் தான் அதாவது சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டு மாதமாக இலங்கை அரசும் நீண்ட முயற்சிகள் எடுத்தும் இராணுவத்தில் சேர்ந்து கொண்ட சிங்களவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது, வெற்றி கொள்ளப்படும் இராணுவத்தில் ஏன் மக்கள் சேர மறுக்கின்றார்கள் காரணங்கள்

1. அதிகளவான படையினரின் இறப்பும் அவர்கள் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்று சிங்கள அரசு பொய்களைக் கூறி அம்மக்களுக்கான சம்பளப் பணத்தினை கொடுக்காது மறுத்து வருகின்றமை.

2. போருக்கு சென்ற தமது உறவுகளின் நிலை அறியாது தாம் எவ்வாறு செல்வது என்ற எண்ணம்

3. காயமடைந்த பெருமளவான சிங்களவர்கள் மருத்துவ வசதிகள் செய்யப் படாமல் கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப் படுகின்றமை.

4. இறந்தவர்களின் உடலங்கள் போய்ச் சேராமை

5.பத்திரிகைச்சுதந்திரம் மறுக்கப்பட்டு உண்மைகள் மறைக்கப் பட்டமை

6.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி போருக்கான ஆதரவு

7. உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு

8.அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்படப்போகும் சம்பள உயர்வு

9. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தேவையான அரச திறைசேரிப்பணம் போருக்கு பயன்படுத்தப்பட்டமை

10. போர் வெற்றி என்பதை மட்டும் சிங்களவருக்கு தொடர்ந்து சொல்லி வந்த இராணுவம் 500 பேர் கொண்ட விடுதலைப் புலிகளை 25 கிலோ மீட்டருக்குள் முடக்கி 3மாதங்கள் கடுமையாக போராடியும் எதனையும் பிடிக்க முடியாமை என்பது சிங்களவர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது அத்தோடு சர்வதேசம் இப்போது தலையிடுதலும் சிங்களவர்களை ஓரளவு சிந்திக்க வைக்கின்றது. தம் உறவுகள் இவ்வாறு கொல்லப்படுகின்றார்கள் என்ற சேதி தெரியாது வறுமையில் உள்ள மக்கள் போருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இறந்த சிங்களச் சிப்பாய்களின் ஒட்டுமொத்த உறவினரின் திரட்சி என்பது அரசுக்குப் பலவீனமானது. எனவே இது காலம், அரசை மேலும் பலவீனப் படுத்த உண்மை நிலையை சிங்களவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எம்மிடம் உள்ளது. இதன் மூலம் சிங்களவர்களை அரசுக்கு எதிராகத் திருப்ப முடியும்.

சிங்களவர்கள் போராட்டம் நடத்தினால் சிங்களச் சிப்பாய்களுக்கு களமுனைக்கு செய்திகள் சென்றடையும், மன உளைச்சலில் உள்ள படையினர், இன்னமும் மனம் குன்றி போராட்டத்தை வெறுப்பார்கள். இதன் மூலம் சமாதனத்தினை ஏற்படுத்த வழிகோலும்.

நாமும் சிங்களவர்களிடமிருந்து விலத்தியே இருப்பதன் மூலம் சிங்கள அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்பி தமிழர்களைத் தப்புக்கணக்குப்போடுவதையும், அவர்களுக்கான ஓர் புரிந்துணர்வையும், ஏற்படுத்த முடியும். போராடுவோம், இது எங்களின் உரிமைப் போராட்டம். எங்கள் நாடு வேண்டும் என்றால் சிங்களவர்களுக்கு களத்தின் உண்மை நிலை சென்றடைய வேண்டும், அதற்கு நாம் தமிழிழ் சொல்வதன் மூலம் அவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை, சிங்களப் புலமை உள்ளவர்கள் உங்கள் புலமையை பாவிக்கும் தக்க தருணமிது.

(குறிப்பு: சிங்களத்தில் எழுதும்போது இலக்கண, எழுத்துப் பிழைகள் இன்றி அவர்களின் பரிகாசத்திற்கு உட்படாதவாறு நல்ல ஆக்கங்களைக் கொண்டு செல்லவேண்டும்)

மோகன் அண்ணாவுக்கு ஓர் அன்பான வெண்டுகோள் சிங்களத்தில் ஓர் இணையம் உருவாக்க முடியுமா? அன்றாடம் வரும் செய்திகளை உண்மைத் தன்மையோடு சிங்கள மொழியில் பிரசுரிக்கவேண்டும். இதனைப் பற்றி விவாதிக்கவும்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் நிலவனின் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறேன் . எந்த சூழ்நிலையிலும் தமிழனே தரத்தில் குணத்தில் பண்பில் உயர்ந்தவன் என நிருபிக்கும் கூற்று இது .

அன்று புலிகள் காட்டிய மனித நேயத்தால் கிடைத்தபோது ராணுவத்தினரை இரண்டு முறை விட்டதால் இன்று வந்த வினை நம் கண் முன்னே நிற்கிறது .

இன்று பெரும்பாலான சிங்கள மக்கள் உள்ளூர மகிழ்ச்சி கொண்டு இருப்பதாக கேள்விப்படுகிறோம் . மேலும் எங்கோ போகிற எதையோ இழுத்து போட்டுகொண்டு அப்புறம் எதோ பண்ணுதே என பின்னால் வருந்துவதும் நம் தமிழனின் பண்பே. அதனால் ராஜவன்னியன் கருத்துக்கு நான் உடன் படுகிறேன் . ( ஆனால் இவரின் பெயர்தான் எனக்கு அவ்வப்போது சிங்களவனை ஞாபகபடுத்துது).

jude அவர்களின் கருத்தும் சரியே . எனினும் அது தன்னால் உருவானதே தவிர உருவாக்கப்பட்டது அல்ல . எனவே எதையும் நாம் செய்யாமல் இவ்விஷயத்தில் வேடிக்கை பார்ப்பதே சிறந்தது என நினைக்கிறன் . நாம் என்ன செய்தாலும் இந்த உண்மையான விஷயம் நம்பக தன்மையை இழந்து விடும்.

ஆனால் இறப்பவர்கள் அனைவரும் ஏழை எளிய வீரர்கள் . மற்றும் இள வயதினர் . மற்றும் வேறு வழியில்லாமல் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் கொஞ்சம் மனதை பிசைகிறது

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் சிங்களவர்களிடமிருந்து விலத்தியே இருப்பதன் மூலம் சிங்கள அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்பி தமிலர்களைத் தப்புக்கணக்குப்போடுவதையும், அவர்களுக்கான ஓர் புரிந்துணர்வையும், ஏற்படுத்த முடியும். போராடுவோம், இது எங்களின் உரிமைப் போராட்டம். எங்கள் நாடு வேண்டும் என்றால் சிங்களவர்களுக்கு களத்தின் உண்மை நிலை சென்றடைய வேண்டும், அதற்கு நாம் தமிழிழ் சொல்வதன் மூலம் அவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை, சிங்களப் புலமை உள்ளவர்கள் உங்கள் புலமையை பாவிக்கும் தக்க தருணமிது. (குறிப்பு: சிங்களத்தில் எழுதும்போது இலக்கண, எழுத்துப் பிழைகள் இன்றி அவர்களின் பரிகாசத்திற்கு உட்படாதவாறு நல்ல ஆக்கங்களைக் கொண்டு செல்லவேண்டும்)

மோகன் அண்ணாவுக்கு ஓர் அன்பான வெண்டுகோள் சிங்களத்தில் ஓர் இணையம் உருவாக்க முடியுமா? அன்றாடம் வரும் செய்திகளை உண்மைத் தன்மையோடு சிங்கள மொழியில் பிரசுரிக்கவேண்டும். இதனைப் பற்றி விவாதிக்கவும்.

சிங்கள மக்களிடம் கொண்டு செல்லுதல். ஏன்? ஏதை?எப்போது?

உண்மையிலே களமுனையில் என்ன நடக்கிறது என்பது சிங்களவர்களுக்குத் தெரியாது மறைக்கப்பட்டு, ஒரு வெற்றிப் போதையுடன் இனவெறியூட்டப்பட்ட நிலையிலேயே சிங்கள உலகு நிற்கிறது. இதனை அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொள்வதோடு, சிங்களவர்களும் வெல்லுகின்ற தலைமயை ஆதரிப்பது இயல்பானதே.இதனைக் கருத்திற்கொண்டே புலிகளின் குரலானது சிங்கள மொழியிலான ஒலிபரப்பினை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். சிங்களவர் மட்டுமல்ல இணைத் தலைமைகள் கூட போட்ட ஆட்டம் தெரியாததல்ல.

தமிழருக்கு மட்டுமல்லச் சிங்களவருக்கும், அதாவது சிங்களப் படைகளுக்கும் இழப்பு வருகின்றது என்று சரியான புள்ளி விபரங்களுடனும் (பெயர்,ஊர் என்பன )வெளியிடப்படுமாயின் இனவெறிக்கப்பாலான பாசத்தின் தேடுதல் காரணமாக உறவுகள் ஒன்று குவியும்போது சிங்கள அரசுக்குப் பாரிய நெருக்கடி தோன்றும். இதன் விளைவாகச் சிங்கள அரசு இரட்டை நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் தோன்றக்கூடும்.

1) களமுனையில் படையினரின் போராடும் உளவுரன் பெருவீழ்ச்சியடையும்.

2) கொழும்பிலே உள்ள வெளிநாட்டு தூதுவராலயம் மற்றும் ஊடக மட்டத்திலே சிங்கள அரசின் பொய்பரப்புரை உடையும்.

சிங்கள அரசுக்கான கணிசமான இழப்புகள் வெளித் தெரிய (தமிழ் இணையங்களில்) தொடங்கியுள்ள வேளையில் இதுபோன்றதொரு பரப்புரைச் செயற்பாடு சிங்கள மக்களிடம் முறையாகத் திட்டமிட்டு, எமக்கு ஆதரவான புலமைசார் சிங்களவர்களிடம் அணுகி மொழி பெயர்ப்புகளை செய்வித்து அல்லது சிங்களப் புலமையாளர்களான எமது உறவுகள் யாராவது இணைந்து எமக்காக் குரல் கொடுக்கும் சிங்கள இனத்தவரையும் இணைத்து முன்னெடுக்கப்படுமாயின் சண்டையின் தீவிரத்தை சற்றுக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படுவதோடு ,எதிர்காலப் படை திரட்டலையும் பாதிப்பிற்குள்ளாக்கலாம். இது நடக்குமாயின் சிங்களவர்கள் மீதும் தனது படைகளை ஏவிவிடக் கூடிய ஏதுநிலை தோன்றும். சிறிலங்கா இன்னொரு மியான்மாராக மாறும்.( இன்றும் கிட்டத்தட்ட அப்படித்தான்)இது சிறிலங்கா அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துவதோடு,ஆக்கிரமிப்ப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இதெல்லாம் சரி நான் தடைபோடுறதுமாதிரி இங்கே கருத்து கூறவிரும்பவில்லை இதற்கெல்லாம் ஆதாரம் என்ற ஒண்றைக்கேட்பார்களே அதற்கு என'ன செய்வது ஆதாரமில்லாத செய்தியென்றால் எப்படி நம்புவார்கள் ஆதாரத்தோட சொல்லுறதையே நம்புறாங்களில்ல இதில இதையா நம்பப்போறாங்கள்

இவங்கலெல்லாம் பட்டாத்தான் திருந்துவாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வீண்வேலை

சிங்களவனுக்கு எல்லாம் தெரியும்

தமிழனை அழிப்பதில் என்ன விலையும் கொடுக்க.........

எந்தக்கட்சியும்

ஏன் எந்த தனிப்பட்ட சிங்களவனும் தயாராகவே உள்ளான்

அதில் அவர்கள் முற்றுமுழுதாக 100வீதம் உறுதியான பின் நாம்தான் அவர்களிலும் நல்லவன் இருக்கின்றானா என வேலைமினக்கட்டு தேடியலைகிறோம்

அப்படி யாரையாவது நாம் கண்டுபிடித்துவிட்டால் அதையும் சிங்களப்புலி என்று அவன் அடையாளப்படுத்தி அழித்துவிடுகிறான்

சிங்களவரில் பாமரமக்கள்தான் போராடவருவதாக நாம் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்

ஆனால் எந்த படித்த சிங்களவனையாவது இன்று பார்க்கமுடியுமா???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கொடுமைகளுக்கும், சாவிற்கும் நடுவே காட்டிக் கொடுப்புகள், பழிவாங்கல்கள்...இப்பொழுது புரிகிறது.. மட சாம்பிராணி சிங்களவனுக்குக் கூட இவ்வளவு எளிதில் வீரத்தமிழர்களை எளிதாக வீழ்த்த முடிந்ததென்று...

ஒற்றுமையின்மையே நமது பலவீனம்..அது தமிழகத்திலும் சரி, தமிழீழத்திலும் சரி..தமிழர்கள் அதை செவ்வனே கடைபிடிக்கிறார்கள்...

எம் பாரதி கண்டால் இன்னொரு வெண்பா தொகுப்பையே இதற்காக பாடியிருப்பான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநேரம்..........

அதில பொயிற்று வாறதுக்குள்ள ...........

இவ்வளவு நடந்திருக்கா???

வெட்டும் எக்கச்சக்கமா விழந்திருக்கு போல கிடக்கு

ஆனால் என் கருத்தில் மாற்றமில்லை

எது நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ

அது நன்றாகவே நடக்கிறத

எது நடக்கவேணுமோ

அதுவும் நன்றாகவே நடக்கும்

இதை எந்தக்கொம்பனாலும் தடுத்தநிறுத்தமுடியாது

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் எல்லோரும் பாமரர்களா யுத்த அவலம் பற்றி தெரியாதவர்களா

இனவாதக்கட்சிகளான ஜேவிபி கெலஉறுமய போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் யார்? இந்த படித்த சமூகம்.

அனைத்து சிங்களவருமே இன்று யுத்தத்திற்கு ஆதரவாகவிருக்கின்றார்கள். தமிழனை அழித்து முழு இலங்கையையுமே சிங்களமயப்படுத்தவிரும்புகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் எல்லோரும் பாமரர்களா யுத்த அவலம் பற்றி தெரியாதவர்களா

இனவாதக்கட்சிகளான ஜேவிபி கெலஉறுமய போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் யார்? இந்த படித்த சமூகம்.

அனைத்து சிங்களவருமே இன்று யுத்தத்திற்கு ஆதரவாகவிருக்கின்றார்கள். தமிழனை அழித்து முழு இலங்கையையுமே சிங்களமயப்படுத்தவிரும்புகி

Link to comment
Share on other sites

சிங்களவர்களுக்கு அவர்களின் இராணுவம் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஏனெனில் புரியக்கூடியவர்கள் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டார்கள்.. மிகுதி இருப்பவர்களுக்கு புரியவைப்பது என்பது நடக்காத காரியம்...

நான் தனிப்பட்ட முறையில் எத்தனையோ வருடங்களாக முயன்று தோற்றுப்போய்விட்டேன்.. ஆகவே வீணான வேலையை விட்டுவிட்டு நமக்கு பயன்தரக்கூடிய எதையாவது செய்ய முயலுவோம்..

உதாரணமாக ஒரு சிங்கள இளைஞனின் கருத்தை அப்படியே கீழே தருகின்றேன்.. வாசித்துவிட்டு நீங்களே தீர்மானியுங்கள்... இக்கருத்துக்கள் மக்களின் அவலங்கள் தொடர்பான ஒரு ஆக்கத்தை அவனுக்கு அனுப்பியபோது பதிலாக கிடைத்தது.... "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"

(1) "This was a nice effort to say the world that SL Government is doing this war against Tamils not terrorist. Can we get to know about the priest who visited the camp on behalf of LTTE. I believe it is Tamil , Muslim or Sinhalese should have their right to live peacefully. But that doesn’t mean we need to allow barbaric tigers to do what they need.

You have any evidence of any government allow terrorist to full fill their requirements. If you have real interest about Tamils say the actual truth to the world. Also try to stop who rob all essential which sending for public. Stop suicide attacks took place at refuge camps when people came for Government controlled areas. Also ask your leaders to release all civilians who kept as a human shield. In addition tell the truth about the people who killed by LTTE when they tried to escape from them.

Don’t try to be a sound of LTTE. Act like a real tamil who has real interest about public. We are ready to live with any body together peacefully. I have lot of Tamil friends & I never thought about them in a manner of other nationality. We are that much peace fully nation & proud to say it is not so far we are going to catch Prabakaran by his neck.

Finally I request you that if you really need to help the innocent people get together to full fill their basic need whit out blaming government to full fill all requirements.

B. Regards

(2) Now the cat jump out from the bag. Now I can understand really who you are. Time will give an answer for everything. We will talk that time & not now.

History has shown who are barbaric & unrealistic. What you know about the situation in Sri Lanka when you live at UK. I know real situation other than you.

How you got the figures about dead civilians at Vanni ? Tamilnet ? Sorry Kavitha you should think about these not as a part of LTTE. Sea the things by your naked eye.

I also don’t have enough time to talk these things with you. I know it is really wasting my time.

But finally we will never allow you to separate my mother land & also Tamil have no right to do so. If you ready we can live together in any area under one flag. No separate states

(3) If you really don’t know me, what’s the hell you send this mail to me. Now I’m sure you are a voice of LTTE not innocent Tamil people. Do you know who given the figures for UN for their report.

I’m also really worried about the people who suffered because of this war. You should understand not only Tamils suffered due this long war.

Finally I advise you not to insult me by using odd words if you are real person. I never insult you or any innocent Tamil.

Finally don’t send any reply me again because I have enough works to do without wasting my time for nonsense.

Will wait & see what will happen

(4) I don't know how you got my mail ID. Some times it is a tric of LTTE network to publish their things. Even I don't know you are a man or women.

But I can make sure one thing there is no different of yours than barbaric LTTE. It sense by your bellow mail. Or else you should need to know how to talk to people in good manner not like uncivilized people. Is this the way you are trying to say the world about yours. It is same as the way of LTTE.

Don't write me again. If you have enough confident to write me again, Pls write me with your full contact details .

Unless don't write me. I prefer open conversation face to face not by mail.

Once you separated my country we will meet together. Until that bye fore ever"

மேற்காணப்படும் கருத்துக்களில் எனது பதில்களை நீக்கிவிட்டேன் (இடம் போதாமை கருதி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநேரம்..........

அதில பொயிற்று வாறதுக்குள்ள ...........

இவ்வளவு நடந்திருக்கா???

வெட்டும் எக்கச்சக்கமா விழந்திருக்கு போல கிடக்கு

ஆனால் என் கருத்தில் மாற்றமில்லை

எது நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ

அது நன்றாகவே நடக்கிறத

எது நடக்கவேணுமோ

அதுவும் நன்றாகவே நடக்கும்

இதை எந்தக்கொம்பனாலும் தடுத்தநிறுத்தமுடியாது

இது யாழ் நிர்வாகத்திற்குவிடும் எச்சரிக்கைமாதிரித்தான் எனக்கு தெரியுது விசுகுஅண்ணே.

எந்த கொம்பனாலும் வெட்ட முடியாது என்றுn எனக்கு விளங்குது.

Link to comment
Share on other sites

சிங்களவனுக்கு அவனுடைய ரானுவம்பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை என்பது உண்மை தான், ஆனால் களத்தின் உண்மை நிலை பற்றி அறிய அவனுக்கு சந்தர்ப்பமே இல்லை, அதை நாங்கள்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் அதாவது கிடைக்கப்பெறும் ஆதாரத்துடன்.

ஒரு தொகுப்பாக சி.டி மூலமே அவர்களுக்கு சென்றடையப்பண்ணலாம். சிங்களவனையும், சிங்களவனையும் முட்டவைக்க இதுவொரு நல்ல சந்தர்ப்பம், முயற்சி செய்தால் முடியாதென்று ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

கருத்துக் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள், இங்கே ஓர் முக்கியமான விடயத்தினைப் பதிய இருக்கின்றேன், இங்கே இந்த ஆக்கம் இறப்பட்டதன் அடிப்படைத்தன்மையை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதற்கான விளக்கம் கூறவேண்டிய கடப்பாட்டில் நான் இங்கே இருக்கின்றேன்,

நான் இந்த ஆக்கம் இட்டது நாம் சிங்களவனோடு கூட்டுச் சேரவேண்டும் என்றோ, சிங்களவனுக்கு எமது நிலையைப் புரியவைக்க வேண்டும் என்றோ அல்ல. அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

போர் என்பது பலவகைப் பட்டாலும் அதன் தாங்கங்கள் பலதரப்பட்டாலும் வெற்றி என்பது பலமாக நாம் இருக்கும்போதே நிச்சயிக்கப்படும், நாம் இப்போதும் மனோபலத்துடனும், படைப்பலத்துடனும், ஏன் புலம்பெயர் தமிழரின் பலத்துடனும் தான் இந்தப் போராட்டம் முன்னகர்ந்து கொண்டு இருக்கின்றது. காலம் விட்டது என்ன எமக்கு என்று நாம் பார்ப்போமானால், கண்ணீரும், கவலைகளும், பிரிவுகளும் தான்.

போரினை களத்தில் நின்று களமாடிக்கொண்டிருக்கும் எம் உதரங்களை, நாம் மனத்தில் திண்ணமாக நினைத்துக் கொள்ளவேண்டும், அத்தோடு எத்தனை தடைவரினும் எம் உறுதி தளராத மனத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், இன்று நாம் களத்திலோ, அல்லது எழுத்திலோ சிங்களவர்களுடன் சமமாக இருந்தாலும் சிங்களவன் மனப்போராட்டத்தில் ஓரளவு வெற்றிகண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.

ஒரு வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் ஆயுதங்கள் மட்டுமில்லை, மனரீதியான பரப்புரைகள் மூலம் எம் மக்களையே திசை திருப்பி இருக்கின்றான். எல்லோரையும் என்று சொல்லவில்லை ஒருசிலரை. அவன் கூறும் செய்திகளை நாம் நம்பும் அளவிற்கு அவனால் சாதிக்க முடிகின்றது எதனால் என்பதனைப் பார்த்தால் அவன் எமது மொழியிலும் பரப்புரை மேற்கொள்கின்றான், உதாரணமாக ஒன்றைச் சொல்லப் போனால் பெருமளவு இழப்பு என்று அவன் கூறும் செய்தியானது எம்மவர்களின் மனத்தில் ஒரே தாக்கத்தினை கண்டிப்பாக ஏற்படுத்தும். இதை உணர மறுப்பவர்கள் திரும்பத் திரும்பக் கூறும் சொல் அவன் பொய் சொல்கின்றான். காரணம் அவனது சொற்களில் மயங்கி விட்டீர்கள் இல்லை என்றால் அதனைப்பற்றிக் கருத்துக் கூறவோ அதனைக் கவனத்திற் கொள்ளவோ மாட்டீர்கள்.

அவனுக்கு இவ்வளவு காலமும் கிடைத்து வந்தது வெற்றி வெற்றி என்னும் ஒரே வெற்றிச் செய்தியே ஒழிய தோல்வியோ, களத்தில் நிகழும் இழப்புக்களோ வெளியில் தெரிவதில்லை, இதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம், அநுராதபுரத்திலே கடந்த மாதம் இடம்பெற்ற மரணச் சடங்குகள். இலங்கை அரசு சொன்னது போன்று 4 இராணுவ வீரர்கள் இறந்திருந்தால் எப்படி அநுராதபுரத்தில் மட்டுமே 18 மரணச்சடங்குகள் இடம்பெறும் என சிங்களவர்கள் குழம்பியது. கல்மடு உடைப்பின் போது சென்ற சேதி கேட்டு சிங்களவர்கள் அரசுக்கு எதிராக திரண்டதும், அவர்களை தந்திரமாக திசைதிருப்பி அரசாங்கம் உண்மையை மறைத்ததும் கூட ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

நான் தாமதிகாது உடனடியாக செய்யவேண்டிய வேலை இது. சிங்களவர்களை அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெளச் செய்யவேண்டும். காலம் பார்த்து காத்திருக்கும் ஜேவிபி, தருணத்திலடிக்கும் ஐ,தே,க, மற்றும் பிக்குகள் கூட்டம் எல்லாம் இப்போது ஒன்றாக இருந்தாலும் மக்கள் அரசுக்கு எதிராக திருப்பப் படும்போது கண்டிப்பாக போரைப்பற்றி விளக்கம் ஏற்படும்.

எம் தமிழர்களைப் பொறுத்தவரை ஓரளவு தெரியும் ஒரு துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தால் சுவரில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு குண்டு வெடித்தால் பாதிப்பு எப்படி இருக்கும் என்று ஏனெனில் நாம் தினம் தினம் அதனோடு செத்தவர்கள். நமக்கு இழப்புக்கள் கண்ணீரைக் கொடுத்தன, அழுதழுது 20 வருடங்களாக தொடர்ந்து அழுது, காணவில்லை என்றால் தேடி, அலைந்து ஓரளவு மனதை ஆறுதற் படுத்த எம் தமிழன் தமிழனுக்கு ஓரளவு உதவியாக இருக்கின்றான் என்றால் உண்மைதான். ஆனால் சிங்கள தேசமோ, சிங்களவர்களுக்கோ துப்பாக்கிகளிலிருந்து குண்டு எந்தளவு, எவ்வளவு தாக்கம் ஏற்படும் என்பதுகூட பெரும்பான்மையானவர்களுக்குத

Link to comment
Share on other sites

நன்றி நொச்சி, நானும் இதே கருத்தைத் தான் சொல்லவந்தேன் ஆனால் நிறையப்பேர் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

Link to comment
Share on other sites

போரை சிங்களவன் வெறுக்க வேண்டும். நான் தொடர்ந்து போராடினான் நிச்சயம் சிங்களமே சொல்லும் போர் வேண்டாம் சமாதானம் பேசுவோம் என்று.

யாழ்நிலவன் தமிழர் என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லி விடுங்கோ?

( இதற்காக தனி மனித தாக்குதலில் யாரும் இறங்க வேண்டாம். கருத்தாடுங்கள். உங்கள் கருத்துகள்தான் உங்களுக்கு எதிராக திரும்புகிறது என்பதை தாக்குதல் தொடுக்கும் நண்பர்கள் மறக்க வேண்டாம். நன்றி)

Link to comment
Share on other sites

திரும்பவும் ஆங்லேய ஆட்சி வந்தால் வந்தால் சிங்களவர்களும் தமிழர்களம் ஒற்றுமையாக இருப்பார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ் நிர்வாகத்திற்குவிடும் எச்சரிக்கைமாதிரித்தான் எனக்கு தெரியுது விசுகுஅண்ணே.

எந்த கொம்பனாலும் வெட்ட முடியாது என்றுn எனக்கு விளங்குது.

என் கருத்தில்

உண்மை....

நியாயம்.....

வரலாற்றின் பின்பற்றுதல்....

தேசநலன்....

.....ஆகியன இருக்கும்போது.......

யாருக்கும் யால்ரா போடவேண்டிய அவசியம் எனக்கில்லை

ஆனால் வெட்டுவதும் விடுவதும் அவரத உரிமை

கடமை

அதில் ஒன்றும் கூற நான் விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் ஆயுதங்கள் மட்டுமில்லை, மனரீதியான பரப்புரைகள் மூலம் எம் மக்களையே திசை திருப்பி இருக்கின்றான். எல்லோரையும் என்று சொல்லவில்லை ஒருசிலரை. அவன் கூறும் செய்திகளை நாம் நம்பும் அளவிற்கு அவனால் சாதிக்க முடிகின்றது எதனால் என்பதனைப் பார்த்தால் அவன் எமது மொழியிலும் பரப்புரை மேற்கொள்கின்றான், உதாரணமாக ஒன்றைச் சொல்லப் போனால் பெருமளவு இழப்பு என்று அவன் கூறும் செய்தியானது எம்மவர்களின் மனத்தில் ஒரே தாக்கத்தினை கண்டிப்பாக ஏற்படுத்தும். இதை உணர மறுப்பவர்கள் திரும்பத் திரும்பக் கூறும் சொல் அவன் பொய் சொல்கின்றான். காரணம் அவனது சொற்களில் மயங்கி விட்டீர்கள் இல்லை என்றால் அதனைப்பற்றிக் கருத்துக் கூறவோ அதனைக் கவனத்திற் கொள்ளவோ மாட்டீர்கள்.

இதென்னவோ உண்மைதான்...

இந்த இனவழிப்புபோர் தமிழர்கள் அனைவரையும் கொடுமைகளை கண்டு மனம் கொதிக்க வைத்தாலும், கடந்த காலங்களில் புலிகளின் சில அபரிமிதமான வெற்றிகளின் தாக்கத்தால், தமிழர்கள் மத்தியில் புலிகளின் போர்த்திறமைகளின் மீது அதிநம்பிக்கையும் அவர்களின் தாகுதலால் சிங்களவன் முடங்கிபோய் தீவிர இராணுவ நடவடிக்கையை மட்டுபடுத்தவோ, இல்லை கைவிடவோ செய்யும் பலனும் இருந்ததால், எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள், விடுதலையை அவர்கள் பெற்று எம் கைகளில் கொடுப்பார்களென எல்லோரும் நம்பிக்கை இருந்தார்கள்.. ஆகவே சிங்களம் என்ன பொய் பரப்புரை செய்தாலும் அதன் தாக்கம் பெரிதாக யாரிடமும் இல்லை. ஆனால் இன்று புலிகளின் தொடர் பின்வாங்களாலும்(அது தந்திரமாக இருப்பினும்), போரின் படுமோசமான விளவுகளாலும் மக்கள் ஒரு மனசோர்வு நிலையை அடைந்திருக்கும் போது சிங்களவன் சரியாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு மாயை தோற்றத்தை எழுப்பிவிட்டதன் பலன் தான் இந்த வெறிக் கூச்சல்களும், அதனை தொடர்ந்து வரும் சதுரங்க காய் நகர்த்தல்களும். இதை முறியடிக்க அல்லது சமன்படுத்த அடுத்துவரும் புலிகளின் வெற்றிச் செய்தியோ அல்லது சர்வதேச அரசியல் தலையீடு ஒன்றினாலேய முடியும். எந்த விஷயமும் அவரவர் தாய்மொழியில் சொல்லும்போது அதனை கிரகிக்க செய்வ்து எளிது. ஆனால் அச்செய்தின் தாக்கம் அல்லது பலன் எவ்வளவு தூரம் என்பது கிரகிப்போரின் மனநிலையை பொறுத்ததன்றோ!

நான் தாமதிகாது உடனடியாக செய்யவேண்டிய வேலை இது. சிங்களவர்களை அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெளச் செய்யவேண்டும். காலம் பார்த்து காத்திருக்கும் ஜேவிபி, தருணத்திலடிக்கும் ஐ,தே,க, மற்றும் பிக்குகள் கூட்டம் எல்லாம் இப்போது ஒன்றாக இருந்தாலும் மக்கள் அரசுக்கு எதிராக திருப்பப் படும்போது கண்டிப்பாக போரைப்பற்றி விளக்கம் ஏற்படும்.

மிக நீண்டுவிட்ட போராட்டத்தின் பாதைகளில் சில தொய்வுகள் வந்தாலும், நீங்கள் கூறியுள்ள திட்டம் உடனடி பயனை தருமா என்பதும், அது எந்தளவிற்கு மனமாற்றத்தை ஏற்படுத்துமென்பது சிந்திக்க வேண்டிய விஷயம். ஏனெனில் இன்று ஓவ்வொறு சிங்களனும் அவனுடைய முதல் வகுப்பிலிருந்தும் மத ரீதியாக மகாவம்ச கட்டுக்கதைகளின் மூலமும் இன துவேஷத்ததையுண்டு வளர்ந்துள்ளான்.. போதாக்குறைக்கு இப்போதிருக்கும் வெற்றிக்கான அண்மை தோற்றமும், மமதையும், வெறியூட்டலும்...!

இறப்பு என்று வரும்போது கொண்டுசெல்லப் படும் உடலங்கள் உயர் அதிகாரிகளினுடையவை மட்டும் என்பதனால் கஸ்டத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அல்லற் படும் மக்கள் மத்தியில் கண்ணால் காணாத இராஜ மரியாதை கொடுக்கப் பட்டு சடலங்கள் கொண்டுசெல்லப் படும்போது அவர்களை அறியாமலேயே மனதில் ஓர் எண்ணம் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது "என் மகனும் நாட்டுக்காக இறந்தால் இவ்வாறு எல்லாம் கிடைக்கும் தானே". இது அவர்கள் பிள்ளைகள் இறந்தும் கூட இன்னமும் தெரியாமல் வாழும் பல குடும்பங்கள். தம் பிள்ளைகள் இன்னமும் உயிருடன் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற மாயைத் தோற்றத்தினை அவர்கள் கண்முன்னே நிறுத்தி இருக்கின்றது. எம்மாற் தான் முடியும், எம்மால் மட்டுமே முடியும் சிங்களவர்களுக்கும் நாம் உண்மைச் செய்தியைக் கொண்டு சேர்க்கவேண்டும், இதன் மூலம் சிங்களவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும், போரை சிங்களவன் வெறுக்க வேண்டும். நான் தொடர்ந்து போராடினான் நிச்சயம் சிங்களமே சொல்லும் போர் வேண்டாம் சமாதானம் பேசுவோம் என்று.

இந்த இறுதி ஊர்வல அலங்கரிப்புக் காட்சியைப் பார்த்து மனநிறைவெய்தும் சிங்கள குடும்பங்களுக்கு போரின் வலியென்ன? அதன் தாக்கம் எவ்வளவு கொடியது? என்ற எண்ணம் இன்னமும் சிறிது இல்லையெனும் போது பட்டறிவே தகுந்த மாற்றத்தைக் கொடுக்க வல்லது. அதன் வலியை உணரும்போதும், பொருளாரத்தில் பின்னடைவு ஏற்படும்போதும் தானாகவே வழிக்கு வர வாய்ப்புள்ளது. இது உடனடி சிகிச்சை..அதாவது அறுவை சிகிச்சை மாதிரி....நீங்கள் இயம்புவது நாட்டு வைத்தியம் மாதிரி...மருந்து எப்போதும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.. குறிப்பிட்ட பலனை அடைய காலம் பிடிக்கும்..!

இப்போதைக்கு எது சிறந்தது என்பதை காலத்தின்/களத்தின் நிலையை பொறுத்து மாறும்.

திரும்பவும் ஆங்லேய ஆட்சி வந்தால் வந்தால் சிங்களவர்களும் தமிழர்களம் ஒற்றுமையாக இருப்பார்கள். :lol:

அப்போதும் பொன்னம்பலத்தாரர்கள் இருக்கவும் செய்வர்.. அப்போதென்ன செய்வீர்கள்? தேரிழுப்பீர்களோ? :D

Link to comment
Share on other sites

சிங்களவன் தமிழரது போராட்டங்களை திசைதிருப்பும் வழியில் மும்முரமாக ஈடுபடுத்தப் படப்போகின்றான் ஏனென்றால் எதிர் வரும் வாரங்களில் நடாத்தப் பட இருக்கும் தமிழர்களின் அழிவை சர்வதேசம் தடுத்து நிறுத்தும் இதனால் இதைத் தடுக்க தமிழர்களின் போராட்டங்களை மழுங்கடித்தல் அத்தோடு தமிழருக்கு எதிரான போராட்டங்களை சர்வதேசத்தின் மத்தியில் பிரச்சாரப் படுத்தல், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடல் போன்ற செயல்களில் ஈடுபடப் போகின்றான். தான் செய்யும் செயல்களை தமிழர்கள் மேல் பழியைப் போடக் காத்திருக்கின்றான். புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் போராட்டங்களை அடக்க பலவழிகளில் அவன் எடுக்கும் முயற்சிகளை முறையடித்து இம்முறை புலம்பெயர் தேசமெங்கும் பலத்த போராட்டங்கள் மூலம் தமிழரின் உரிமையை வென்றெடுப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

யாழ்நிலவன் தமிழர் என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லி விடுங்கோ?

ஒவ்வொரு தமிழனும் தனதுரிமையைக் கேளுங்கள். எமது வாழ்வியலின் உறுதிப்பாட்டைக்கேளுங்கள் சர்வதேசத்திடம் அதுவே எம் விடுதலைக்கு வித்திடும்

திரும்பவும் ஆங்லேய ஆட்சி வந்தால் வந்தால் சிங்களவர்களும் தமிழர்களம் ஒற்றுமையாக இருப்பார்கள்.

சட்டத் துறையிலிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளைக்கொண்டு இங்கிலாந்து அரசிடம் ஓர் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்... எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படக்காரணமாக இங்கிலாந்தும் ஓர்வகையில் பங்காற்றியிருக்கின்றதல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.