Jump to content

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்

Recommended Posts

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை முட்டாள் ஆக்கும் தகமையை நீங்களும் பெற்றுள்ளீர்கள் என்கின்றீர்களா சபேசன் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

Link to comment
Share on other sites

சிலரை சில நேரம் முட்டாளாக்கலாம். அனைவரையும் எப்போதும் முட்டாளாக்க நினைப்பது இயலாத காரியம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உங்களுடைய கருத்தாகவே இருக்கமுடியும்.

கருணாநிதி சொன்னார் என்பதற்காக நாம் எதற்காக நம் முறையை மாற்ற வேண்டும்.

தமிழ் பற்று பேசும் அவர் உண்மையில் ஒரு தமிழனே இல்லை.

இங்கு தமிழனே சாகப்போறான். பிறகென்ன தமிழ் புத்தாண்டு.

இது தமிழ் புத்தாண்டு என்பதை விட இந்து புத்தாண்டாகவே சொல்ல முடியும்.

காரணம் இந்து சமயம் சார்பாகவே இது கணிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சமயம் பார்த்து சந்துல சிந்து பாடுகிறார்கள் போல இருக்குது.

Link to comment
Share on other sites

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

சரியான கருத்து.....

தம்மை தமிழ் தேசிய விடுதலையின் பேராதரவாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் தமிழ் தேசிய வாதத்தினை முற்றாக எதிர்த்து நின்று கொண்டு, தமிழ் தேசியத்தினை அழிக்க எல்லா வழிகளிலும் ஆதரவும் கொடுத்து கொண்டு இருக்கும் ஆரிய கலாச்சாரத்தினை, பார்ப்பனிய கோட்பாட்டினை தூக்கி பிடிப்பது தான் வேடிக்கை. இரு படகுகளில் பயணம் செய்ய முடியாது. இரு வேடம் பல நாட்கள் நிலைக்காது. ஒன்றில் தமிழ் தேசிய விடுதலை, அல்லது அதன் எதிரியான பார்பனியத்திற்கான ஆதரவு... இரண்டில் ஒன்றைத் தான் ஒருவரால் ஆதரிக்க முடியும்.

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :D:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Apr 2 2009, 08:47 PM' post='502503']

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :):lol::(

எழுத்தாடல் என்பது எல்லாவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி தருவது. ஆகவே எந்த நேரத்தில் செய்யபட்டது என்பது முக்கியமல்ல என்ன செய்ய பட்தென்பதே முக்கியம். சிவப்பு வர்ணம் அடித்த வார்த்தைகள். உங்களை மிகவும் ஒரு சிறியவனாக காட்டிநிற்பதாக நான் உணருகிறேன். கொஞசம் பக்குவம் இருந்தால் மட்டுமே பக்குவமாக ஒன்றினை பகுத்தாய முடியும். இல்லையேல் உதறிய குலையில் பதறிய பழங்களாகவே இருக்கும். சித்திரையில் புதுவருடம் என்பது உலகத்தின் சுழற்சிகாரணமாக ஏற்புதலுக்கு உடையது மட்டுமல்ல பழைய காலமும் அதையே நம்பியுமுள்ளது. காரணம் இலைதுளிர்காலம் சித்திரையில்தான் தோன்றுகின்றது. பூமியில் எல்லாம் புதிதாக தோன்றுகின்றன ஒரு புதுவாழ்வை தொடங்குவதாக ஒரு உணர்வு மலர்கிறது. ஆனால் பாழாய்போன இந்த ஜனவரி ஒன்று இதற்குள் ஏன் வந்துமதட்டிற்றோ தெரியவில்லை.

இப்போதைய கேள்வியும் கருத்தாடலும். புதுவருடமென்று கொண்டாட ஏப்ரல் மாதத்திற்கு உலகத்தை அழைக்க முடியுமா என்பதே?

என்னத்தை அடிப்படையா வைச்சு.. இதை ஆராயப் போறீங்க.

புகலிடத்தில் உள்ள தமிழர்களை அடிப்படையா வைச்சா. தமிழகத்தில் வாழும் தமிழர்களை அடிப்படையா வைச்சா.. இல்ல ஈழத்தில் உள்ள தமிழர்களை வைச்சா..??!

அடிப்படையில் புகலிடத்தில் உள்ள தமிழர்கள் தம்மை அந்தந்த நாடுகளின் சமூக வாழ்வியலோடு காலவோட்டத்தில் கலக்கச் செய்து விடுவர். அதுதான் யதார்த்தம். அங்கு இந்த வெற்று வேட்டு கட்டுரைகளுக்கு மதிப்பிருக்க வாய்ப்பில்லை.

உலகம் என்பது தென்னிந்திய பூகோள அமைவிடத்தைக் கொண்டதல்ல. பூமிப்பந்து எங்கனும் பல ஒத்திசைவுகளோடு ஒத்திசைவற்ற அம்சங்களும் இருக்கின்றன. அவை அந்தந்த தேசங்களில் வாழும் மக்களின் சமூக வாழ்விலும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த அடிப்படைகளை ஆராயாமல்.. சகட்டு மேனிக்கு அங்க மாறுது.. இங்க மாறினா என்ன என்ற கேள்விகளை முன்வைப்பது அர்த்தமற்றது. அறிவிலித்தனமானது.

தமிழகம்.. தெளிவாக அரசியல் ரீதியான நகர்வுகளை கண்டு உணர்கிறது. அதற்கென்று தனியான ஒரு ஆய்வு மையம் இது தொடர்பான மாற்றங்களை சமூக மற்றும் வரலாற்று அறிவியல் பின்னணிகளோடு ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரை எந்த அறிவியல் அடிப்படைகளும் இன்றி.. எழுதப்பட்டுள்ள.. ஒரு மேம்போக்கான கட்டுரை மட்டுமே. இது ஈழத்தமிழர்களை நோக்கி ஒரு குழப்பகரமான அரசியல் சமூகச் சூழலில் திணிக்கப்படும் கட்டுரை. ஈழத்தமிழன் ஒன்றும் வெற்று வேட்டுக்கு அங்கீகாரம் வழங்கும் முட்டாள் அல்ல. எமக்கென்றான தனித் தன்மைகள்.. அறிவியல்.. சமூக.. வரலாற்று அணுகுமுறைகள் இருக்கின்றன. அதன் கீழ் இவற்றை ஆராய வேண்டும்.

சும்மா உலகம் மாறுது.. நாமும் மாத்திக்கனும் என்பதில் அர்த்தமில்லை. உலகத்தில என்ன மாறுது.. ஏன் மாறுது.. நாம் ஏன் மாத்திக்கனும்.. அதன் நன்மை தீமை என்ன..ஏதாவது ஆராய்ஞ்சு பார்த்திருக்கமா..??! நாலு பேரு சொன்னானா.. ஆரியம்.. வகுத்தது அது... நாம காவி போட்ட திராவிடனாம்.. அதை எதிர்க்கனுமாம் என்ற கீழ்த்தரமான சிந்தனைக்கு இடமளிக்கின்ற உணர்ச்சி ஊற்றுக்கள் அல்ல.. எமது கேள்விக்கு விடை கொடுக்கக் கூடியவை.

நிறைய விடயங்கள் ஆராயப்படனும். ஆழமாக. பருமட்டாக்கக் கூட அல்ல. ஆனால்.. வெறும் இணையமும்.. கணணியும் இருக்கு என்றதற்காக சோடிப்பு வார்த்தைகள் கொண்டு எழுதுவதை எல்லாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. அந்த அடிப்படையில்.. இந்த அடிப்படை அற்ற கட்டுரைகள் இன்றைய எமக்கு... ஈழத்தமிழருக்கு அவசியமற்றவை..! அர்த்தமற்றவை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

இதையே நான் பிறந்ததில் இருந்து எம்மவர் பத்திரிகைகளில்.. இணையங்களில் வாசிச்சுக் கொண்டிருக்கிறன். ஆனால்.. இரண்டு தசாப்தங்களாகியும் இவை எதுவும் எம்மவர் மத்தியில் எந்தத் தாக்கங்களையும் செய்யவில்லை. ஏன் அப்படி.. வெறும் வெட்டு வேத்துகளாகவே.. இவை இருக்கின்றன.. என்ற ஆராய்ச்சி முக்கியமானது. எத்தனை பேர் ஆதரிக்கிறது என்பது முக்கியமல்ல. சொல்லப்படுற விடயம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க.. அடிப்படைகளை அறிவை வழங்கக் கூடியதா என்பதுதான் அவசியம். அது இல்லை என்பதே தசாப்தங்கள் கடந்தும்.. மாற்றங்கள் என்பது மலினப்பட்டுப் போய் இருக்கக் காரணமாகின்றன.

கள்ளச்சாமி என்று சிறையில பிடிச்சுப் போட்டும்.. சிறையில கூட சாமி என்று கும்பிடு போடுறான் என்றால்.. ஏன் அவன் சாமியைத் தேடுறான்.. அதற்கான அவசியம் என்ன என்பதை ஆராய்வதை விடுத்து.. அவனிட்டப் போய் அவன் கள்ளச்சாமிடா என்றால் அவன் அதை ஏற்கப்போவதில்லை. நாம் மக்களை ஆராயாமல்.. வெட்டிக்கு.. புகழை பெயரை எதிர்பார்த்து வெட்டிக்கு புரட்சி என்று பதம் பாவிச்சு எழுதிறதெல்லாம்.. ஏட்டுச் சுரக்காயா.. இருக்க இதுதான் காரணம்.

இன்னும் நூறாண்டுகள் போனாலும்.. அறிவியலற்ற.. ஆராய்ச்சியற்ற.. மக்களின் மனப்பாங்கு.. தேவை.. சமூக நிலை அறியாத ஆராயாத எந்தக் கட்டுரைகளும் மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தா. ஆனால் சிலர் எழுதிவிட்டு.. தமக்குத் தாமே பன்னாடைகள் மன்னிக்கனும் பொன்னாடைகள் போர்த்திக்க மட்டும் இவை உபயோகமாக இருக்கும்.

உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்கிறேன்.

மூடநம்பிக்கைகள் எவை..??!

எந்த அடிப்படையில் அவை மூடநம்பிக்கைகள் என்று இனங்காட்டுகிறீர்கள்..??!

நீங்கள் மூட நம்பிக்கை என்று இனங்காட்ட பாவித்த அறிவியல் தளம் என்ன..??!

அந்த மூட நம்பிக்கையை மக்கள் நாடிச் செல்வதற்கான மக்களின் தேவை என்ன..??!

நீங்கள் இனங்காணும் அம்சங்களையும் அவற்றுக்கான அறிவியல் பூர்வமான விடைகளையும் எவ்வாறு வேறு காத்திரமான வழிகளில் முன்வைத்து மக்களை மூடநம்பிக்கையற்ற வழிக்கு வழிகாட்டப் போறீங்க..??!

இதற்கான அறிவூட்டலை மக்களிடம் எப்படிக் கொண்டு போகப் போறீர்கள்..??!

இவை அனைத்துக்கும் கணணிக்கு முன்னால் குந்தி இருந்தோ அல்லது நாலு புத்தக்கத்தை பிரட்டிட்டோ.. இல்ல 1970 களில் யாரோ ஒருவர் உணர்ச்சிப் பெருக்கில் காழ்ப்புணர்ச்சியில் மேடைகளில் பேசியதை வைச்சோ செயல்படுத்த முடியாது. நிகழ்கால உலகில்.. நிகழ்கால மக்களின் சிந்தனைப் போக்கில்.. இதனை வைச்சு ஆராயனும்.. மக்களிடம் அவர்கள் ஏற்கக் கூடிய வழிமுறைகளில் ஆதார அடிப்படைகளோடு காரண காரியங்களோடு முன் வைக்க வேண்டும். ஒரு உதாரணத்தை எடுத்து இதைச் செய்யுங்கள் பார்க்கலாம்.

சும்மா ஆளாளுக்கு வந்து.. மூடநம்பிக்கை என்றீங்க.. பகுத்தறிவு இல்லை என்றீங்க.. அதுக்கு ஒத்தூதுறீங்க.. ஆனால் சமூகத்தில.. பகுத்தறிவு பேசிறவனே.. தன்னை ஒளிச்சு வைச்சிட்டு.. தன்ர மனிசியை கோவிலுக்கு விட்டு யாகம் பண்ணுவிக்கிறான். சமூகத்துக்கு தாலி வேண்டாம் என்பவனே தனக்கு என்றவுடன் 20 பவுனில் கட்டிக்கிறான். கற்பு என்றால் என்ன என்பவனே தனக்கு கன்னிப் பெண் வேணும் என்கிறான். சிவனை நிந்திக்கிறவன் ஜேசுவைப் போற்றுறான். ஜேசுவை நித்திக்கிறவன் அல்லாவை மெச்சுறான். இந்தப் பிறழ்வுகளோடு.. சமூகத்தை அணுகினால்.. நிச்சயம்.. நூற்றாண்டென்ன மிலேனியங்கள் கடந்தாலும்.. உண்மையான மாற்றங்களை இவ்வாறான எழுத்துக்கள் உண்டு பண்ணா..! இவையே வெற்று வேட்டுக்கள் என்றாகின்றன.:lol::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.சபேசன் வந்து எழுதிய பிறகு தான் எனக்கு வருடப் பிறப்பு எத்தனையாம் திகதி பிறக்குது எனத் தெரியும்.

அதே மாதிரி தான் மற்றவர்களும் இருப்பார்கள் என நினைத்தது என் தப்பு தான்.உங்கள் ஆனாதிக்கத்தை காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

உறவே நீங்கள் சொன்னது மிக மிக சரி நாங்கள் எங்களுக்க ஆயிரம் பிரிவையும்

கருத்து வேறுபாடுகளையும் சுயநலத்தையும் தருணம் பார்த்து தள்ளி விழுத்தும் மனநிலயையும் வைச்சுக் கொண்டு

பேந்து ஏன் மற்ரவனை குறை கூற வேண்டும்??????. நாளைக்கு எங்கட நாடு விடுதலை பெற்றால் மற்ரவையே

போய் இருக்க போயினம்.............

Link to comment
Share on other sites

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

நீங்கள் சொன்னது உண்மை தான் நிழலி நான் ஞானப்பழம் தான் உங்களை மாதிரி நான் பத்திரிகையில் எழுதியதில்லை.கருணாநிதி தானே இதை சட்டமாகக் கொண்டு வந்தார் அதுக்கு அடிப்படையாக எந்த தமிழறிஞர்கள் இருந்தார்கள் என அவர்கள் பெயர் விபரங்களோடு ஆதாரத்துடன் விபரமாக கூற முடியுமா? அவர்கள் யாரக இருந்தாலும் பாரம்பரியமாக கடைப் பிடிக்கும் ஒரு வழக்கத்தை திடிரென மாற்ற முடியாது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

மக்கள் பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கத்தை திடீரென மாற்ற முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மைதான். அதனாற்தான் முட்டாள்களுக்கான நாளும் உருவாகியது.

16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டுமுறை ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. தமிழர்களும் தைப் புத்தாண்டை ஏற்றுக் கொள்ள நாள் ஆகலாம். அப்படியே ஏப்ரல் பதின்மூன்று தமிழர்களின் முட்டாள்கள் நாளாகவும் ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

சபேசன் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாரும் தைப் பொங்கலை தான் வருடப் பிறப்பாக கொண்டு வர முயன்றார்கள் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே,எந்த நூலில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்?

என்ன கார‌ணத்திற்காக தைப் பொங்கலை தமிழர்களின் வருட‌ப் பிறப்பு ஆக மாற்றச் சொன்னார்கள்?[ஆதாரத்துடன் சொல்லுங்கள்]

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 1930 ம் ஆண்டுக்கு முதல் தமிழறிஞர்களே இல்லை போல கிடக்குது.

Link to comment
Share on other sites

ரதி,

உங்களுக்கு நேரம் கிடைத்தால், நான் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்கள் பற்றி தேடி வாசியுங்கள். அல்லது திருவள்ளுவர் ஆண்டு முறை பற்றி வாசித்தாலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் அவுஸ்ரேலியா சபேசன் எழுதிய இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இவைகளையும் படியுங்கள்

http://www.tamilnaatham.com/articles/2008/jan/sabesan/14.htm

http://www.tamilnaatham.com/articles/2008/apr/sabesan/11.htm

Link to comment
Share on other sites

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

ஒருவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையே முட்டாள் என்று கூறுவார். அதை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டும். அவரை முட்டாள் என்று திருப்பி கூறினால் அது தனி மனித தாக்குதல். நல்லாயிருக்கின்றது உங்களது நியாயம்.

இந்துக்களின் நம்பிக்கைகளை முட்டாள்தனம் என்று கூறுபவர்களே

முதலில் உங்கள் குடும்பத்தில் அதனை செயற்படுத்துங்கள்.

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா? இல்லை. ஆனால் மற்றவனுக்கு உபதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது உரிமை என்பது மற்றவனின் மூக்கில் உங்கள் விரல் துனி படும் வரையிலே...!

உங்களுக்கு முட்டாள்த்தனமாக படுபவை மற்றவனுக்கு சரியாகப்படலாம். உங்களுக்கு சரியாகப்படுபவை மற்றவர்களுக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம். இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த விடயங்கள்.

ஊரே பற்றி எறியும் போது தீயை அணைக்க வழிதேட வேண்டும், மாறாக தீ எரிகிறது எரிந்து முடியும் அது முடிந்த பின் புதிய வீடுகட்ட வேண்டும் அதற்கு பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்று நாம் விட்டுவிடுதல் ஆகாது. ஒரு கருத்தை வைக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப வைத்தல் நன்று அதை விடுத்து எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திணித்தால் யாராலும் ஜீரணிக்க முடியாது.

நான் சித்திரை புத்தாண்டையும் கொண்டாடுகின்றேன்... அதே போல தமிழ் புத்தாண்டான தைப் பொங்கலையும் கொண்டாடுகின்றேன். காரணம் அடிப்படையில் நாம் தமிழர்... ஆனால் எமது நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையில் சித்திரைப்புத்தாண்டை ஆதரிக்கின்றேன். எப்படி வியாபார ஸ்தாபனங்கள் எல்லா திருநாட்களையும் வைத்து சம்பாதிக்க முடியுமோ அப்படியே நாமும் மகிழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பங்களை நழுவ விடுவதில்லை. ஆனால் இப்போது புத்தாண்டு கொண்டாடும் மன நிலை யாருக்கு இருக்கிறது என்பது கட:டுரையாளாருக்கு மட்டுமே வெளிச்சம்.

நிழலி அவர்கள் சொன்னக்கு ஒரு கருத்து...

பார்ப்பனியம் என்றால் என்ன? எங்கு தொட்டாலும் பார்ப்பனியம்... பார்ப்பான் என்று தான் பொதுவாக பகுத்தறிவு மிக்கவர்கள் பேசுகின்றனர். ஆனால் எந்த பார்ப்பனியர்கள் சித்திரை வருடப்பிறப்பை புதுவருடமாக கொண்டாடுகின்றனர்? இதை சற்று தெளி படுத்துங்கள். அது மட்டுமன்றி இந்த சித்திரை புத்தாண்டு எந்த வகையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக அமைகின்றது?

________________

கருணாநிதி ஒரு துரோகி என்றால்... ஜெயலலிதா எதிரி.... நேரடியான எதிரியை விட மறைமுகமான துரோகி ஆபத்தானவன்...

கருணாநிதி தேர்தலில் தோற்று ஜெயலலிதாவின் கட்சி வெற்றி பெற்றால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்!

Link to comment
Share on other sites

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா?

நான் இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கிறேன்

ஓம் அண்ண நீங்களே சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்குது நீங்கள் இருக்கிறீங்கள் என்று. என்ன செய்வம்.. இவ்வளவு சுய விளம்பரம் கொடுத்தும்.. கனக்கெடுக்கிறாங்கில்லையே..!! :(

தாலியை இழிச்சுப் பழிச்சு கதையெழுதிய தாங்களே.. அம்மாவிற்காக தாலி கட்டி திருமணம் செய்பவராச்சே..! அப்படி இருக்கேக்க.. இதென்ன.. நாளை உங்கள் தாத்தாவிற்காக.. பிள்ளையின் குறிப்பையும் எழுதி வைக்கமாட்டீங்களா என்ன..??! யார் கண்டா உங்கள் வீட்டுத்தோட்டத்தில மேயுற பன்றிக் குட்டிகளை..??! இணையத்தில எழுத்தால உருமறைப்புச் செய்தாப் போல பன்றிக் குட்டி.. பசுக்கன்றாக முடியுமா..??! :lol: :lol:

Link to comment
Share on other sites

சில விடயங்களை சிலருக்கு நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்: ஆனால் சாமி கும்பிடாத, சாதகம் பார்க்காத வைபவங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத பலர் இருக்கின்றார்கள். நானும் இருக்கின்றேன்.

நான் சாமி கும்பிடுவது இல்லை. சாதகம், நாள், நட்சத்திரம் நான் பார்ப்பது இல்லை. தாய்க்கோ, மனைவிக்கோ, பிள்ளைக்கோ நோய் வருகின்ற பொழுது கடவுளை வேண்டுவது இல்லை. நேர்த்தி வைப்பது இல்லை.

தாலி கட்டியதும் நான் நேரம் பார்த்து செய்யவில்லை. நாள் பார்த்தோ, நேரம் பார்த்தோ திருமணம் செய்யவில்லை.

தாலி கட்டியது என்னுடைய அம்மாவிற்காக அன்று. இதைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது.

தாலிக்கு சமூகம் கொடுக்கும் அர்த்தமற்ற புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் எதிர்ப்பது, கேலி செய்வது என்பது வேறு. தாலியை ஒரு அன்புப் பரிசாக அணிவதை ஆதரிப்பது வேறு. இரண்டையும் பகுத்து அறிய வேண்டும். அதற்கு பகுத்தறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.