Jump to content

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாலியை ஒரு அன்புப் பரிசாக அணிவதை ஆதரிப்பது வேறு. இரண்டையும் பகுத்து அறிய வேண்டும். அதற்கு பகுத்தறிவு வேண்டும்.

ஆமா.. ஆயிரம் பொருட்கள் இருக்கு அன்புப் பரிசா அணியக் கொடுக்க. ஏன் தன்னையே அன்புப் பரிசா கொடுத்திட்டுப் போறது. ஏன் பொருள் தாலியைக் கொடுக்கனும்..??! தாலி கட்டிறதுதான் அன்புப்பரிசு என்று நினைக்க ஒரு பகுத்தறிவு வேணும் தான்.. என்ன... பகுத்தறிவு பேசுற பகுத்தறிவற்ற கதைகளைக் கேட்டா அழுகிறதோ சிரிக்கிறதோ என்றிருக்குது. :(

அம்மாவுக்காக தாலி கட்டிக் கலியாணம் முடிச்சக்கலாம்.. அம்மாவுக்காக.. குறிப்பு எழுதி வைக்கக் கூடாதாம். என்னே பகுத்தறிவு..! ஒருவேளை இப்பதான் குரங்கில் இருந்து கூர்ப்பாகி இருப்பார்களோ.. அடிக்கடி இல்லாததை வரவழைக்கிறதா.. பகுத்தறிவு பகுத்தறிவு என்கின்றனர் சிலர் தமக்குத்தாமே..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

நிழலி அவர்கள் சொன்னக்கு ஒரு கருத்து...

பார்ப்பனியம் என்றால் என்ன? எங்கு தொட்டாலும் பார்ப்பனியம்... பார்ப்பான் என்று தான் பொதுவாக பகுத்தறிவு மிக்கவர்கள் பேசுகின்றனர். ஆனால் எந்த பார்ப்பனியர்கள் சித்திரை வருடப்பிறப்பை புதுவருடமாக கொண்டாடுகின்றனர்? இதை சற்று தெளி படுத்துங்கள். அது மட்டுமன்றி இந்த சித்திரை புத்தாண்டு எந்த வகையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக அமைகின்றது?

ஆரிய அப்பட்டமான வழித்தோன்றல்களான சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர். திராவிட பரம்பரையில் வந்த தமிழனும், ஆரிய பரம்பரையில் வந்த சிங்களவனுக்கும் பொதுவாக ஒரு புத்தாண்டு அல்லது பொது திருநாள் வருவது என்பதே அடிப்படைத் தவறு.

எம் தேசிய விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அல்ல 3000 ஆண்டுகளாக நடக்கும் ஆரிய - திராவிட போர் என்று அண்மையில் வெளியான புலிகளின் பாடல் ஒன்றின் ஆரம்பத்தில் இருந்த உரையாடலில் மேற்கொள் காட்டி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

அன்புப் பரிசாக எதைக் கொடுக்க வேண்டும் என்பது கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்தது. அதைக் கொடுக்கலாமே, இதைக் கொடுக்கலாமே என்று அனைத்திற்கும் சொல்ல முடியும்.

தானாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு கருத்து சொல்வது அர்த்தம் அற்றது.

அம்மாவுக்காக தாலி கட்டவில்லை என்று பல முறை விளங்கப்படுத்திச் சொல்லியும், வெறுமனே பிடிவாதம் பிடித்து என்னுடைய திருமண நிகழ்வு பற்றி தவறான தகவலை பரப்ப முனைவது கையாலாகத்தனமானது.

சிலருக்கு பகுத்து அறிகின்ற தன்மை இல்லை

கடவுளை வணங்காதே என்று சொல்பவர்கள், கோயிலில் தமிழில் வழிபாடு நடத்துவதை ஆதரிக்கின்றார்கள்.

கலைஞரின் தமிழை நேசிப்பவர்கள், அவரின் அரசியலை எதிர்க்கிறார்கள்.

நடிகர் சூர்யாவின் நடிப்பைப் பார்த்து பிரமிப்பவர்கள், சன் நிறுவனத்தின் அயன் திரைப்படத்தை புறக்கணிக்கிறார்கள்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள், ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்தார்கள்.

தாலிக்கு சமூகம் கொடுக்கும் அர்த்தமற்ற மகிமையையும் புனிதத்தையும் எதிர்ப்பவர்கள், அதை ஒரு அன்புச் சின்னமாக அணிவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இப்படி ஒரே விடயங்களில் பகுத்தறிவு உள்ளவர்கள் எதை எதிர்க்க வேண்டும், எதை ஆதரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

சிலர் அறிவற்ற முறையில் அனைத்தையும் போட்டுக் குழப்புவார்கள். சிலர் அறிந்திருந்தும் வாதத்திற்கு பதில் சொல்ல முடியாததால் வேண்டும் என்றே குழப்பிக் கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் தான் சொன்னீங்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் தை திருநாள் தான் வருடப்பிறப்பு என 1930 ஆண்டே சொன்னார்கள் என ஆனால் அதற்கான ஆதாரம் கேட்டால் போய் தேடி பிடித்து வாசிக்கவும் என சொல்கிறீர்கள் உண்மையில் அதற்கான ஆதாரம் உங்களிடம் இல்லை.மேலும் உண்மையிலே அவர்கள் சொல்லியிருந்தாலும் நூற்றாண்டு காலமாக இந்து மதத்தில் இருந்து வந்ததை மாற்றுவதற்கு அவர்கள் யார்?

[அவுஸ்ரேலியா சபேசன் அவர் யார்? தமிழறிஞரா?]

Link to comment
Share on other sites

அன்பு பரிசாக மங்கள நாணை மனைவிக்கு போடுறவையிடம் ஒரு கேள்வி...??

மனைவி ஏன் அன்பு பரிசாக இன்னும் ஒரு மங்கள நாணை கணவனுக்கு போடவில்லையே ஏன்...?? கழுத்திலை போடும் மங்கள நாண் எப்படி பெண் விடுதலைக்கு பங்கு அளிக்கிறது...?

தாலி பெண்ணுக்கு வேலி எண்டுதானே சொல்லுகினம்... :D அந்த வேலியை ஏன் அன்பு பரிசு அளிச்சவருக்கு அந்த மண மேடையில் வைத்து மனைவி கணவனுக்கும் கட்டி இருக்க கூடாது...??

Link to comment
Share on other sites

....மேலும் உண்மையிலே அவர்கள் சொல்லியிருந்தாலும் நூற்றாண்டு காலமாக இந்து மதத்தில் இருந்து வந்ததை மாற்றுவதற்கு அவர்கள் யார்?

[அவுஸ்ரேலியா சபேசன் அவர் யார்? தமிழறிஞரா?]

உடன் கட்டை ஏறுதல், கணவன் இறந்தால் மனைவிக்கு மொட்டை அடித்து வெள்ளை ஆடை அணிந்து மூலையில் குந்த வைப்பது , வர்ணாசிரமத்தின் நியதிப் படி மக்கள் கூட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்தி தலித்துகளை கோயில் பக்கமே கால் வைக்க விடாமல் தடுத்தது என்பன போன்றனவும் பன்னெடுங்காலமாக இந்து மதத்தின் அடிப்படையில் நடந்தவை தான். அவை நூற்றாண்டுகள் வழக்கத்தில் இருந்து அண்மைய காலகட்டத்தில் நிற்பாட்டப் பட்ட விடயங்க.. அவற்றை மீண்டும் கொண்டுவருவமா?

மற்றது, கம்பர், கபிலன், ஒளவை ஆகியோரில் இருந்து பன்னெடுங்காலமாக வடமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் பயன் படுத்தி வந்த வழக்கத்தினையும் இப்ப கொஞ்ச காலமாகத் தான் மாற்றப் பட்டுக் தனித் தமிழ் எழுத்து முறை வழக்கத்திற்கு வந்து கொண்டு இருக்கு... அதையும் பல நூற்றாண்டு காலமாக இருந்த பழக்கம் ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்டுவ வடமொழிச் சொற்களை மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு பரிசாக மங்கள நாணை மனைவிக்கு போடுறவையிடம் ஒரு கேள்வி...??

மனைவி ஏன் அன்பு பரிசாக இன்னும் ஒரு மங்கள நாணை கணவனுக்கு போடவில்லையே ஏன்...?? கழுத்திலை போடும் மங்கள நாண் எப்படி பெண் விடுதலைக்கு பங்கு அளிக்கிறது...?

தாலி பெண்ணுக்கு வேலி எண்டுதானே சொல்லுகினம்... :D அந்த வேலியை ஏன் அன்பு பரிசு அளிச்சவருக்கு அந்த மண மேடையில் வைத்து மனைவி கணவனுக்கும் கட்டி இருக்க கூடாது...??

இது ஊரில சீதனத்தடைச் சட்டம் கொண்டு வந்ததும்.. சனம் நன்கொடை என்று சீதனம் கொடுத்தது போல. நேற்று வரை தாலியை தூசிச்சவை இன்று அதையே அன்புப் பரிசா அதுவும் கலியாண மேடையில கட்டினமாம். நல்லா அளக்கிறாங்க.. கேட்கிறவன் கேணயன்.. தாங்கள் தான் அறிவாளிகள் என்ற தற்துணிவு செய்து வாழும் சில ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை மட்டும் தெளிவாச் சொல்ல முடியுது.

அதுக்குள்ள அயன்.. சூரியா.. ஜோதிகா.. அவைட பிள்ளை.. இதுகளையும் கூட்டிக் கொண்டு வந்திடினம். புறக்கணிக்கிறது அவரவர் விருப்பும். யாரும் சொல்லி எவனும் புறக்கணிக்கிற நிலை இல்லை என்றே நினைக்கிறேன். அவரவர் காணும் நியாயத்தின் அடிப்படையில் தான் பலரும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் சிலரோ தாம் சொல்லித்தான் உலகம் உருள்வதாக கற்பனையில்.. வாழ்ந்து கொண்டு தம்மை தாமே சிந்தனாவாதிகள்.. பகுத்தறிவாளர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இந்தக் கேவலமான நிலையும் எமது சமூகத்துக்கு ஒரு சாபக்கேடு..! :D:lol:

Link to comment
Share on other sites

:D அந்த வேலியை ஏன் அன்பு பரிசு அளிச்சவருக்கு அந்த மண மேடையில் வைத்து மனைவி கணவனுக்கும் கட்டி இருக்க கூடாது...??

எனக்கும் இப்படி ஒரு சந்தேகம் உரு வாச்சு... நீங்களே போட்டு விட்டிர்கள்.. அதுதானே கணவனுக்கு ஏன் கட்டி விட கூடாது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி ஒரு சந்தேகம் உரு வாச்சு... நீங்களே போட்டு விட்டிர்கள்.. அதுதானே கணவனுக்கு ஏன் கட்டி விட கூடாது?????

நான் என்றால் சொல்லிப்போடுவன் 20 பவுணில எனக்குமொரு தங்கச் சங்கிலியை அன்புப்பரிசா கட்டி விடுங்கோ என்று. பிறகு தேவைக்கு விற்றால் நல்ல காசு வரும்..! :lol::D

Link to comment
Share on other sites

நான் என்றால் சொல்லிப்போடுவன் 20 பவுணில எனக்குமொரு தங்கச் சங்கிலியை அன்புப்பரிசா கட்டி விடுங்கோ என்று. பிறகு தேவைக்கு விற்றால் நல்ல காசு வரும்..! :lol::D

நெடுக்கு அண்ணா அதுதான் பெண்களுக்கு மாட்டுறார்களோ? ஆண்கள் எல்லாம் வித்து விடுவார்கள் என்றுதான் பெண்களுக்கு மாட்டுறார்கள் போல... என்னமோ நாம் அறியோம் பார பரமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன் கட்டை ஏறுதல், கணவன் இறந்தால் மனைவிக்கு மொட்டை அடித்து வெள்ளை ஆடை அணிந்து மூலையில் குந்த வைப்பது , வர்ணாசிரமத்தின் நியதிப் படி மக்கள் கூட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்தி தலித்துகளை கோயில் பக்கமே கால் வைக்க விடாமல் தடுத்தது என்பன போன்றனவும் பன்னெடுங்காலமாக இந்து மதத்தின் அடிப்படையில் நடந்தவை தான். அவை நூற்றாண்டுகள் வழக்கத்தில் இருந்து அண்மைய காலகட்டத்தில் நிற்பாட்டப் பட்ட விடயங்க.. அவற்றை மீண்டும் கொண்டுவருவமா?

மற்றது, கம்பர், கபிலன், ஒளவை ஆகியோரில் இருந்து பன்னெடுங்காலமாக வடமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் பயன் படுத்தி வந்த வழக்கத்தினையும் இப்ப கொஞ்ச காலமாகத் தான் மாற்றப் பட்டுக் தனித் தமிழ் எழுத்து முறை வழக்கத்திற்கு வந்து கொண்டு இருக்கு... அதையும் பல நூற்றாண்டு காலமாக இருந்த பழக்கம் ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்டுவ வடமொழிச் சொற்களை மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்போமா?

நான் கேட்டதுக்கு உங்களிடமோ,சபேசனிடமோ ஒழுங்கான ஆதாரமோ,பதிலோ இல்லை. நாங்கள் விழா கொண்டாடுவது என்பது உருவ வழிபாடு எப்போது தோன்றியதோ அப்போதே கிரகங்களையும்,நட்சத்திரங்கள

Link to comment
Share on other sites

நான் கேட்டதுக்கு உங்களிடமோ,சபேசனிடமோ ஒழுங்கான ஆதாரமோ,பதிலோ இல்லை. நாங்கள் விழா கொண்டாடுவது என்பது உருவ வழிபாடு எப்போது தோன்றியதோ அப்போதே கிரகங்களையும்,நட்சத்திரங்கள
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை வருடப் பிறப்பு கொண்டாடுவது பற்றிய உங்களின் கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், அது தமிழர்களின் / திராவிடர்களின் உண்மையான திருநாள் அல்ல என்பதே. கைபர் கணவாயினூடு வந்த ஆரியர்களின் கலாச்சாரம் எம் தமிழில் திணிக்கப் பட்டமையால் ஏற்படுத்தப் பட்ட 'விழா'. சித்திரை வருடப் பிறப்பு திராவிடர்களின் 'திரு நாளோ' அல்லது தனக்கென பிரத்தியேக வழக்கத்தினை கொண்டிருக்கின்ற தமிழர்களின் புது வருடப் பிறப்போ அல்ல. தமிழர்களின் புது வருடம், தமிழர்களின் ஆண்டான தை முதலாம் திகதி ஆரம்பம் ஆகின்றது. அதுவே தமிழர் திருநாள், அதுவே தமிழரின் புது வருடப் பிறப்பு. சிங்களவர்கள் ஆரியர்கள் என்பதால், சித்திரை வருடப் பிறப்பினை தம் திருநாளாக கொண்டாடுகின்றனர். அதில் தவறில்லை.

சிங்கள பெளத்தர்கள் தம்மை ஆரியர்களின் வழித்தோன்றல் என்பதை மறுப்பதில்லை. ஆனால் தமிழர்களாகிய நாம் தான் திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என்று எம்மை அடையாளப் படுத்துவதில் தயங்குகி எம்மையே நாம் சிறுமைப் படுத்துகின்றோம். ஆரியர் வழி வந்த சிங்களவனின் திருநாளை சேர்ந்து கொண்டாடி மகிழ முற்படுகின்றோம்

நிழலி நான் கேட்டது எதை வைத்து அதாவது என்ன காரணத்தை வைத்து தைத்திரு நாள் தான் தமிழர்களின் வருடப்பிறப்பு எனச் சொல்கிறீர்கள்? [நீங்கள் தைத் திருநாள் தான் தமிழர்களின் வருடப்பிறப்பு எனச் சொல்கிறீர்கள் ஆனால் அதற்கான காரணம் கேட்டால் சொல்கிறீர்கள் இல்லை.]ஆரியரால் கலச்சாரம் திணிக்கப் பட்டமையால் தான் சித்திரையில் வருடப்பிறப்பு திராவிடர் கொண்டாடினராயின் அதற்கு முன் அதாவது ஆரியரின் வருகைற்கு முன் திராவிடர் தையிலா வருடம் கொண்டாடினார்கள்? ஆரியர் சித்திரையில் வருடப் பிறப்பு கொண்டாடியிருக்கா விட்டால் தமிழர் கொண்டாடட்டும் என பேசாமல் விட்டு விடுவீர்களா? எதை வைத்து ஆரியர்களை நாம் பின்பற்றுகுறோம் எனச் சொல்கிறீர்கள் ஏன் எம்மை பார்த்து அவர்கள் சித்திரையில் வருடம் கொண்டாடியிருக்க கூடாதா?

நீங்கள் சொல்வது சரி தான் எனக்கு உங்களை மாதிரி வாசிப்பறிவோ,எழுத்தறிவோ குறைவு தான் அது தான் நீங்களே சொல்லி விட்டீர்களே நான் ஞானப்பழம் என தெரிந்து கொள்ளத் தான் கருத்து களத்தில் வந்து கேட்கிறேன் உங்கக்கு தெரிந்தால் பதிலளியுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

நிழலி நான் கேட்டது எதை வைத்து அதாவது என்ன காரணத்தை வைத்து தைத்திரு நாள் தான் தமிழர்களின் வருடப்பிறப்பு எனச் சொல்கிறீர்கள்? [நீங்கள் தைத் திருநாள் தான் தமிழர்களின் வருடப்பிறப்பு எனச் சொல்கிறீர்கள் ஆனால் அதற்கான காரணம் கேட்டால் சொல்கிறீர்கள் இல்லை.]ஆரியரால் கலச்சாரம் திணிக்கப் பட்டமையால் தான் சித்திரையில் வருடப்பிறப்பு திராவிடர் கொண்டாடினராயின் அதற்கு முன் அதாவது ஆரியரின் வருகைற்கு முன் திராவிடர் தையிலா வருடம் கொண்டாடினார்கள்? ஆரியர் சித்திரையில் வருடப் பிறப்பு கொண்டாடியிருக்கா விட்டால் தமிழர் கொண்டாடட்டும் என பேசாமல் விட்டு விடுவீர்களா? எதை வைத்து ஆரியர்களை நாம் பின்பற்றுகுறோம் எனச் சொல்கிறீர்கள் ஏன் எம்மை பார்த்து அவர்கள் சித்திரையில் வருடம் கொண்டாடியிருக்க கூடாதா?

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் சபேசன் இணைத்த தமிழ்நாததின் இணைப்புகளில் தெளிவாக இருக்கின்றது. ஒரு முறையாவது படிக்கவும். அதனை அப்படியே இங்கு மீண்டும் பிரசுரிக்க தேவையில்லை. அதைப் போல் கனடாடில் வாழும் 'நக்கீரன்' ஐயாவின் கட்டுரைகளையும் வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கேட்ட கேள்விகள் போல.. பல கேள்விகள் இருக்கின்றன.

தமிழ்நெட்டில் வந்த இந்த ஆக்கம் கூட சில கேள்விகளை ஆழப்படுத்துகின்றன. விடையின்றி..??!

Tamil New Year

[TamilNet, Sunday, 13 April 2008, 02:30 GMT]

The Tamil New Year day falls on Sunday, 13th April, since 2008 is a leap year. On other years, it is 14th April. It is not only the Tamil New year, but also the New Year of Sinhalese and Malayalis. It is not appropriate to call it a Hindu New Year since vast majority of Hindus in India don't celebrate it a New Year. It is only an auspicious day called Mesha-samkraanti for them. But, the Sikhs celebrate it a New Year. It is equally inappropriate to call it a Buddhist New Year, as Buddhists don’t celebrate it universally. The calculation for the commencement of this New Year and the calendar based on it are entirely astronomical.

Opinion Columnist Ampalam

The Tamil New Year day falls on Sunday, 13th April, since 2008 is a leap year. On other years, it is 14th April.

It is not only the Tamil New year, but also the New Year of Sinhalese (Alut Avurudu) and Malayalis (Vishu), even though the Kollam Era of Malayalam begins from the month of Aava'ni (August-September).

It is not appropriate to call it a Hindu New Year since vast majority of Hindus in India don't celebrate it a New Year. Yet, it is an auspicious day called Mesha-samkraanti for them. In Orissa, it is observed as Paana-samkraanti. The Sikhs and some Assamese also celebrate it as New Year under different names.

It is equally inappropriate to call it a Buddhist New Year, as Buddhists don’t celebrate it universally.

In Sri Lanka, since both Sinhalese and Tamils share this occasion of New Year, it has been termed as Sinhala-Tamil New Year. In recent times, there is also a tendency to term it as Sinhala-Hindu New Year by certain sections.

Since the people who practice this New Year are predominantly Tamils in Canada, the Canadian Prime Minister chose to term it as Tamil New Year and established a practice of wishing Canadian Tamils well on the occasion, in recent years. We can be sure that the Canadian Prime Minister must have also wished the Canadian Sikhs on this occasion choosing the term Vaisakhi.

The calculation for the commencement of this New Year and the calendar based on it are entirely astronomical.

There are two ways of reckoning the Year in the astronomical texts of South Asia: one is Solar (Sauramaana in Sanskrit) and the other is Lunar (Caandramaana in Sanskrit). The calendar and terminologies are mostly a combination of both (luni-solar).

The commencement of New Year observed by Tamils, Malayalis and Sinhalese is a solar reckoning, but it also involves a stellar perspective. In this calculation, the entry of the Sun into the first degree of the Fixed Zodiac (Nirayana in Sanskrit), i.e., the first degree of the constellation of Achchuvini or the first degree of the zodiacal sign of Aries (Mesha in Sanskrit and Thakar in Tamil) is taken as the beginning of the year.

Most of the Hindus observe the Lunar New Year, based on the number of full moon and new moon days, which is commonly known as Yugaadhi (Caandramaana Yugaadhi). It falls in the solar month of Pangkuni (March-April), but its corresponding date with the Gregorian calendar, the Western calendar widely used in the world today, varies.

The co-existence of both the solar and lunar systems and even related controversies are known from the times of Mahabharata. When the Pandavas reappeared after their banishment of 13 years, Duryodhana countered them saying that the 13 years were only lunar years and they had not fulfilled the requirement according to solar years and therefore should get into banishment again. Bhishma had to intervene to say that 13 solar years were also over and Duryodhana's almanac was wrong.

Anyway, for some reasons the Solar New Year found much currency in the southern parts of South Asia. It is associated with the Salivaahana Era, the reckoning of which is found predominantly in the inscriptions of South India and Sri Lanka. The Era begins in 77-78 AD.

The Solar New Year in April is also associated with the 60 years cycle that has rendered names for the years. This cycle is based on the calculation of the relative positions of Jupiter and Saturn, the two major planets of the solar system, supposed to be exerting special impact on the climate and natural phenomena in a year, in addition to the usual impact of earth's revolution around the sun. In this cycle, the relative positions of Jupiter and Saturn will repeat after 60 years.

Once again, the 60 years cycle is peculiar to Tamil astronomical texts. The names of the years are widely used only by the Tamils. The system is essentially a southern innovation despite the names being in Sanskrit.

Even though the beginning of the year and the beginnings of the months are calculated on the basis of the sun's transit, it should be noted that the names of the months in Tamil indicate their origins from lunar calendar.

The names of the months originated from the names of the constellations in which the full moon will occur in that month.

Chiththirai:

full moon in Chiththirai constellation (Spica)

Vaikaasi:

full moon in Visaakam constellation (α, β, γ, ι of Librae)

Aani:

full moon in Moolam (Aa'ni) constellation (ε, ζ, η, θ, ι, κ, λ, υ, μ and ν Scorpii)

Aadi:

full moon in Uththaraadam (Uththara-Aadam) constellation (ζ and σ Sagittarii)

Aava’ni:

full moon in Aviddam constellation (α to δ Delphini)

Puraddaathi:

full moon in Pooraddaathi constellation (α and β Pegasi)

Aippasi:

full moon in Achchuvini / Asvini constellation (β and γ Arietis)

Kaarthikai:

full moon in Kaarthikai constellation (Pleiades)

Maarkazhi:

full moon in Mirukaseeridam constellation (λ, φ Orionis)

Thai:

full moon in Poosam constellation (γ, δ and θ Cancri)

Maasi:

full moon in Makam constellation (Regulus)

Pangkuni:

full moon in Uththaram constellation (Denebola).

These full moon days are festival days in the classical and folk traditions of South Asia since time immemorial. Note how they mark the festival days in the Tamil tradition. For example the full moon day in Pangkuni was celebrated in the sandy stretches of the Kaveri delta, as Pangkuni Muyakkam, according to Changkam literature. Today, it is the most important annual festival day in the Siva temples of Tamil Nadu and Sri Lanka as Pangkuni-uththaram.

Therefore, the Tamil calender is actually Luni-Solar, despite its base of reckoning is in the sun's transit. This is because, accuracy is achieved better in calculations based on the sun's transit.

A unique reckoning, exclusively based on the sun's transit through the constellations is the traditional Maldivian Calendar.

Coming under a common pattern of extreme peninsular India and Sri Lanka, comprising Tamils, Malayalis and Sinhalese, the Dhivehi (Maldivian) calendar also begins in April, with the entry of the sun into the constellation Asvini / Assidha. But, they take it as occurring on the 8th of April (the precession position of roughly 9th century AD).

The concept of the Maldivian calendar is unique to suit its equatorial location, climatic fluctuations and to help them in ascertaining the arrival of the schools of fish, compared to the agrarian based calendars of the rest of South Asia.

There are 27 months in this calendar based on the sun's transit in the 27 constellations (Nadchaththiram), each month having 13 or 14 days.

The original ideas behind the designing of the solar calendars were to make them coincide with the equinoxes and solstices.

The vernal equinox was occurring on the 14th of April, at the time when Varaha Mihira, the astronomer of Ujjaini, perfected the solar calendar. Today the equinox takes place on the 20 / 21st of March. The date advanced due to the precession of the earth's axis. For the same reason, the Winter Solstice, i.e., the returning of the sun from the tropic of Capricorn towards north, which was taking place earlier on the 14th of January, now occurs on the 21 / 22nd of December.

Our astronomers were very well aware of this shift caused by precession, which in their term is Ayanamsa. However, they didn't want to change the dates of the New Year of April 14th and Thaip-pongkal / Makara-samkraanti of January 14th, which was originally the Winter Solstice.

Their argument is that the calendar is not merely solar but also stellar.

The beginning point of the zodiac in their opinion is a fixed star Asvini, and the sun's transit in it is important.

For the progressive year, for which the beginning date would change along with vernal equinox, they have another reckoning called, Saayana Year (of the Moving Zodiac, opposite to Nirayana or the Fixed Zodiac).

The justifications of the arguments need further scrutiny since the constellation Asvini itself was not the beginning of the zodiac in the remote past. It shifted from Mirukaseeridam, through Rohini and Kaarthikai as testified by literature and now is in Uththaraddaathi first quarter.

The recent development is a call from Karunanidhi, the Chief Minister of Tamil Nadu to the world Tamils to observe Thaip-pongkal as the Tamil New Year Day. A law has been passed recently in the Tamil Nadu State Assembly to this effect in February 2008. Mr. Karunanidhi is reported to have said that this change marks the rise and revolution of Tamils.

The arguments for the need of this new myth are not clear.

Disowning the beginning, cannot disown the concepts and science behind the system.

Whatever pros and cons can be said about April New Year can also be said about Thaip-pongkal, which is Makara-samkraanti to the rest of India.

The only difference it can make is that the Tamils would lose one of their secular festivals of astronomical significance that links them closely with the Dravidian legacies of the South.

The critics of the DMK government's move feel that such exercises of 'shallow myths' in the name of the noble venture of forging a prestigious global Tamil identity, remind of the Jayalalitha government's effort to ban certain folk practices and the subsequent quick retreat from it.

One has to see how fervently and colourfully the April New Year is celebrated by the Sinhalese of Sri Lanka, reminding us of the forgotten folk culture of the Dravidian South. It was the same before the war among the Tamils of Sri Lanka too.

Anyway, the doyen of Tamil writing, Puthumaippiththan, wrote long back in one of his short stories Kayittaravu, how the reckoning of time is an attribution we ourselves impose on us. (Naangka'laakap poaddukko'nda vakka'naika'l).

Authentic, academic details on the topic can be found in L.D. Swamikkannu Pillai's works, 'Panchanka and Calender', 'Indian Chronology', and D.C. Sircar's book on Indian Epigraphy.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25298

Link to comment
Share on other sites

ரதி,

நீங்கள் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே உங்களை தேடி வாசியுங்கள் என்று சொன்னேன்.

தமிழர்கள் சித்திரையில் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. சித்திரை மாதத்தை போற்றியதற்கும் சான்றுகள் இல்லை.

அத்துடன் சித்திரைப் புத்தாண்டின் எந்த ஒரு பெயரும் தமிழில் இல்லை. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் சொல்லப்படுகின்ற கதை மிகவும் வக்கிரமானதும் ஆபாசமானதும் ஆகும். அறுபது ஆண்டுக் கணக்கு முறைக்கும் தமிழர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஜனவரி முதலாம் திகதியையும் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள். ஐந்நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு ஜனவரி முதலாம் திகதியை தமிழர்களின் புத்தாண்டு என்று சொன்னால் ஏற்பீர்களா? அப்பொழுதும் ஜனவரி முதலாம் திகதியை தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடுகின்றார்கள் என்று காரணம் சொல்லக்கூடும்.

ஆகவே இன்றைக்கு ஒரு விழாவைக் கொண்டாடுகிறோம் என்பதற்காகவே, அது தமிழர்களின் விழா என்று ஆகி விடாது.

தமிழர்களுக்கு என்று ஒரு புத்தாண்டு தேவை என்பதன் அடிப்படையிலேயே பல தமிழ் அறிஞர்களால் தைத்திருநாள் முன்மொழியப்பட்டது. தைத்திருநாள் கொண்டாடப்படும் முறையே அது ஒரு புத்தாண்டு தினம் என்பதற்கு ஆதாரம். இதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. ஆரியத்தில் இருந்து விடுதலை ஆக விரும்புகின்ற தமிழர்கள் தைத்திருநாளை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் விரோதி ஆண்டையும், குரோதி ஆண்டையும் கொண்டாடட்டும். நாம் அதற்கு என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி.. அர்த்தமற்ற ஆதார அடிப்படைகள் அற்ற வெறும் வார்த்தையாலங்களால்.. வரலாற்றை மாற்றி எழுதிட முடியாது என்ற உங்கள் கருத்து நியாயமானதே..!

சிலர் தங்களின் அறிவுமட்டத்திற்கு ஏற்பதான் சிந்திப்பார்கள். உங்களிடம் வாசிப்புப்பழக்கம் இல்லை என்றும் சொல்வார்கள். ஏதோ அவர்கள் நாசாவில் வானியல் விற்பன்னர்களாக இருந்தது போல.. அளந்து கட்டுவார்கள்.

உங்களின் கேள்விகளில் பல நியாயங்கள் இருக்கின்றன. அதனை தமிழ்நெட்டின் ஆக்கமும் உறுதிப்படுத்திச் செல்கிறது. ஆதாரங்கள் அடிப்படைகள் அறிவியல் ஆராய்ச்சிகளுள்ள எந்த விளக்கங்களும் இன்றி வெறும் மாற்றங்களைக் கோருவதென்பது.. சில சுய விளம்பரதாரருக்கு உதவுமே அன்றி... சமூகத்திற்கு உதவாது.

இப்பவும் தமிழகம்.. சித்திரைப் புத்தாண்டு பட வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் சித்திரைப் புத்தாண்டை மாற்றியவர்களும் முதலீடுகள் செய்து.. படங்களை வெளியிட உள்ளனர். இதெல்லாம் அரசியல் தேவைகளுக்காக புகழுக்காக மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளே அன்றி அறிவுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டவையன்று..! :D

Link to comment
Share on other sites

ஆனால் ஒருவரும் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.. தங்கள் தங்கள் கொள்கையிலேயே உறுதியாய் இருப்பர்.. எனவே சபேசன் நெடுக்ஸ் ஏன் நேரத்தை வீணடிக்கிறீங்கள்????

போய் வேறு உருப்படியான வேலைகளை பார்கலாமே? ஒருவர் கருத்தை ஒருவர் பார்த்து ரென்சன் ஆகி ரத்தக்கொதிப்பு வரப்போகுது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் ஒருவரும் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.. தங்கள் தங்கள் கொள்கையிலேயே உறுதியாய் இருப்பர்.. எனவே சபேசன் நெடுக்ஸ் ஏன் நேரத்தை வீணடிக்கிறீங்கள்????

போய் வேறு உருப்படியான வேலைகளை பார்கலாமே? ஒருவர் கருத்தை ஒருவர் பார்த்து ரென்சன் ஆகி ரத்தக்கொதிப்பு வரப்போகுது..!

வசி எனக்கும் அப்படித்தான் தெரியுது.

இவங்க ரண்டுபேர் வீட்டுக்கு பக்கத்திலை நான் இருந்தால் ரத்தக்கொதிப்புக்கு வைத்தியம் பார்த்தே உழைத்திடுவன். எதுக்கும்

விலாசத்தை தாங்கோப்பா.... :wub::lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசி எனக்கும் அப்படித்தான் தெரியுது.

இவங்க ரண்டுபேர் வீட்டுக்கு பக்கத்திலை நான் இருந்தால் ரத்தக்கொதிப்புக்கு வைத்தியம் பார்த்தே உழைத்திடுவன். எதுக்கும்

விலாசத்தை தாங்கோப்பா.... :wub::lol: :lol: :lol:

நான் அடிக்கடி எனது குருதி அழுத்தத்தை சோதனை செய்வம். அது 120/80 ஆகவே இருக்குது. அதுவும் இலட்சிய அளவில் இருக்குது. கூடுறதும் இல்ல குறையிறதும் இல்ல. ஏப்பா நமக்குள் தோன்றிர நம்ம கருத்தைச் சொல்ல கொதிப்படையனும்.நாம சொல்லுற எல்லாத்தையும் செய்யனும் என்றில்லை. எமக்கு தோணுற நியாயத்தை.. கருத்தைச் சொல்ல ஏன் தயங்கனும். எனது நியாயம் இன்னொருவருக்கு அநியாயமாக் கூட இருக்கலாம். அதற்காக தோன்றிற கருத்தை நாகரிகத்தோட சொல்லப்படாது என்றில்லை. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்றுக் கொண்டா.. உலகத்தில மாற்றம் என்பதே இருக்காது. எதையும் மாத்தி யோசிச்சும் பார்க்கனும்.

கொஞ்சம் மாத்தி யோசி..! :lol:

Link to comment
Share on other sites

சிலருடைய கருத்துகளை படிக்கின்ற பொழுது "என்னடா இவங்கள், இப்பிடி வெங்காயங்களாக இருக்கிறாங்களே" என்ற எண்ணம் வரும். சிலர் வேண்டும் என்றே அர்த்தமற்ற முறையில் விதண்டாவதம் செய்கின்ற பொழுது, உதாரணமாக "நீங்கள் எதற்கு நீலக் கலரில் ஜீன்ஸ் அணிந்திருக்கிறீர்கள்? பச்சைக் கலரில் அணிந்தால் என்ன?", போன்ற கேள்விகளை வைக்கின்ற பொழுது அவர்கள் மீது பரிதாபம் வரும்.

சிலர் ஆழமான கருத்துகளை வைத்து வாதம் செய்கின்ற பொழுது, அது சிந்திக்கவும் எமது அறிவை வளர்க்கவும் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதம் ஒன்றில் வென்றாலும், தோற்றாலும் அதில் நன்மை உண்டு. வென்றால் நாம் மற்றவர்களுக்கு நல்ல கருத்துகளை வழங்கி வாதத்திலும் வென்றோம் என்கின்ற மகிழ்ச்சி உண்டாகும். தோற்றால் எதிராளியிடம் இருந்து நல்ல கருத்துகளை பெற்று நாம் எமது அறிவை வளர்த்துக் கொண்டோம் என்ற பயன் உண்டாகும்.

விவாதத்தில் பொதுவாக ரத்தக் கொதிப்பு வருவதற்கு சந்தர்ப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நான் அவுஸ்ரேலியா சபேசன் எழுதிய கட்டுரையை வடிவாய் வாசித்த பின்னர் எனது முந்தைய பதிவில் கேட்டேன் அவர் என்ன தமிழறிஞரா என[இதன் நோக்கம் அவரை மட்டம் தட்ட இல்லை] நீங்கள் சொன்ன படியால் திரும்பவும் வாசித்தேன் அதில் எனக்கு விளங்கிய வரை தைப் பொங்கலின் சிறப்பையும் ஜப்பான் நாட்டுக்காரன் முதலானோர் இளவேனிற் காலத்தில் வருடப் பிறப்பு கொண்டாடுகிறார்கள் நாங்கள் கொண்டாடினால் என்ன என கேட்டுள்ளார்.தைப் பொங்கல் சைவர்களின் பெருநாள் இல்லை தமிழர்களின் பெருநாள் எனச் சொல்லியுள்ளார் ஆனால் எனக்குத் தெரிந்த வரை எந்தவொரு கிரிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதாக எனக்குத் தெரியவில்லை.[எனக்கு நிறைய கிரிஸ்தவ நண்பகர்கள் உண்டு.]நீங்கள் சொல்வதின் படி பார்த்தாலும் தை தமிழரின் வருடப்பிறப்பு என்றால் சைவர்களின் வருடப் பிறப்பு எப்போ என சொல்லுவீங்களா? ஏன் என்றால் தமிழர்களில் கிரிஸ்தவர்கள் தை முதலாம் திகதியை தங்கள் வருட பிறப்பாகவும்,முஸ்லீம்கள் ஒரு நாளை தங்களின் வருடப் பிறப்பாகவும் கொண்டாடுகிறார்கள்.மேலும் அவர் தன் கட்டுரையில் தையில் தான் வருடப்பிறப்பு என சொன்னாரே தவிர சித்திரையில் ஏன் கொண்டாடக் கூடாது என்பதற்கு காரணம் சொல்லவில்லை.மற்றவர்கள் இளவேனிற் காலத்தில் வருடம் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக நாமும் இளவேனிற் காலத்தில் கொண்டாட நினைப்பது எந்த விதத்தில் சரி?

வட நாட்டு மன்னனால் தான் வருடப் பிறப்பு சித்திரைக்கு மாற்றப்பட்டது நம்ப கூடியதாய் இல்லை.அவர்களை பார்த்து நாங்கள் மாறி இருந்தோமானால் நாங்கள் தீபாவளியைத் தான் வருடமாக கொண்டாடி இருக்க வேண்டும்.எனக்கு தெரிந்த வரை வட இந்தியர்கள் தீபாவளியைத் தான் வருடப் பிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இதற்கு மேலும் இது பற்றி உங்களோடு வாதிப்பதில் பிரயோசனம் இல்லை.கருத்தாடும் போது உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தமிழர்கள் சித்திரையில் வருடம் கொண்டாடியதற்கு சான்றோ,வரலாறோ இல்லை என எழுதியிருந்தீர்கள் ஆனால் அவர்கள் தையில் வருடம் கொண்டாடியதற்கு உங்களிடம் சான்றோ,வரலாறோ உண்டா?

ஜனவரி முதலாம் திகதியை ஆங்கில வருடம் எனச் சொல்கிறோமே தவிர எங்கள் வருடம் எனச் சொல்வதில்லை.புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நத்தார் கொண்டாடுகிறார்கள்[முஸ்லீம் உட்பட‌]அதற்காக நத்தார் எங்கள் பண்டிகை ஆகி விடுமா?

தையில் கொண்டாடினால் தமிழர்கள் என்கிறீர்கள் ஆனால் தையில் கொண்டாடுவது எந்த விதத்தில் தமிழர்களின் தனித் தன்மையை நிலை நாட்டும் என்பதை கூற தவறுகிறீர்கள்.சும்மா தையில் கொண்டாடு எனச் சொன்னால் சரியா? அதற்கு சரியான காரணம் கூற வேண்டும் ஆனால் அதற்கு சரியான காரணம் உங்களிடம் இல்லை என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் என்ன கூற முனைகின்றீர்கள் என்று புரியவில்லை..ஆனால் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர் என்று மட்டும் தெரிகின்றது. உங்கள் கேள்விகளுக்கு என் விளக்கம் இது தான். நாம் செய்வது மூட நம்பிக்கையான செயல் என்று நாம் அறிய எல்லோருக்கும் ஒரு காலம் வரும். அது 16 இலும் வரலாம் 56இலும் வரலாம். நம்பிக்கைகள் - அது என்ன வகையாயினும், அவற்றை உய்த்துணர பக்குவம் வர வேண்டும். புத்தன் கூட துறவறம் சென்றது திருமணம் புரிந்த பின்னர் தான். நம்பிக்கைகளை திணிக்க முடியாது. எமது கலாச்சாரமானது எம்மை நாம் பக்குவப்படும் வரை வளர்க்கின்றது. அந்த வளர்ப்பினிலே நாம் இருக்கும் போது அக்கலாச்சாரம் எமக்கு புகட்டும் சில மூட நம்பிக்கைகளுடன் நாமும் ஒத்து போகின்றோம். அதற்காக நாம் பக்குவப்பட்ட பின்னரும் அதனையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. பக்குவப்பட்ட பின்னரும் பாவம் செய்பவர்கள் தாம் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.