• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தராக்கி

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்

Recommended Posts

நான் அடிக்கடி எனது குருதி அழுத்தத்தை சோதனை செய்வம். அது 120/80 ஆகவே இருக்குது. அதுவும் இலட்சிய அளவில் இருக்குது. கூடுறதும் இல்ல குறையிறதும் இல்ல. ஏப்பா நமக்குள் தோன்றிர நம்ம கருத்தைச் சொல்ல கொதிப்படையனும்.நாம சொல்லுற எல்லாத்தையும் செய்யனும் என்றில்லை. எமக்கு தோணுற நியாயத்தை.. கருத்தைச் சொல்ல ஏன் தயங்கனும். எனது நியாயம் இன்னொருவருக்கு அநியாயமாக் கூட இருக்கலாம். அதற்காக தோன்றிற கருத்தை நாகரிகத்தோட சொல்லப்படாது என்றில்லை. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்றுக் கொண்டா.. உலகத்தில மாற்றம் என்பதே இருக்காது. எதையும் மாத்தி யோசிச்சும் பார்க்கனும்.

கொஞ்சம் மாத்தி யோசி..! :lol:

நெடுக்ஸ் கூல்டவுண்!கூல்டவுண்!!கூல்டவுண்!!! :wub:

நாம ஒரு காமெடிக்கு தாம்பா அப்படி சொன்னோம்.

மாத்தி என்ன பிரண்டு பிரண்டு யோசித்தால் கூட ஒரே மாதிரிதான் இருக்கு :lol:

எங்கையோ இடிக்குதே...

சரி சரி... நீங்க ஆரம்பியுங்கப்பா(யோசிக்க)

Share this post


Link to post
Share on other sites

மேற்கண்ட பதில் நெடுக்கால்புலவனுக்கு மட்டுமே..

Share this post


Link to post
Share on other sites

ரதி,

தைத்திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக இருந்தது என்பதற்கு ஆதரமாக அது கொண்டாடப்படும் முறையையே எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அடுத்த ஆண்டு நன்மையாக அமைய வேண்டும் என்று விரும்புவான். நடப்பு ஆண்டில் நன்மையை பெற்றவனும் அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவான்.

இதை தமிழர்கள் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு முதன் நாள் "போகி" கொண்டாடுவார்கள். அன்றைக்கு பழைய தேவையற்ற பொருட்களை எரிப்பார்கள். இதனுடைய பொருள் பழைய ஆண்டு கழிந்து புதிய ஆண்டு உருவாகிறது என்பதாகும். ஒரு ஆண்டை போக்கி விட்டோம் என்பதை "போகி" என்று சொல்வார்கள்.

சூரியனை பூமி ஒரு ஆண்டு சுற்றி வந்ததும் அடுத்த ஆண்டு பிறக்கின்றது. வானத்தில் இருக்கும் சூரியனுக்கு பொங்கல் செய்து புதிய ஆண்டை வரவேற்பார்கள்.

புதிய ஆண்டில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று "காணும் பொங்கலையும்" கொண்டாடுவார்கள். தமது வாழ்க்கைத் தரத்திற்கு உறுதுணையாக இருந்த மாட்டிற்கும் விழா எடுப்பார்கள்.

இவைகள் தைத்திருநாள் தமிழர்களின் புத்தாண்டு என்பதற்கான அகச் சான்றுகளாக அமைகின்றன.

ரதி!

நீங்கள் இன்னும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் இருந்த எத்தனையோ நூல்களும் வரலாற்றுச் சான்றுகளும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. தமிழில் இருந்த காரணத்திற்காக ஆயிரக் கணக்கான தேவரங்களையே அவர்கள் அழித்து விட்டார்கள்.

நாம்தான் எமது பண்பாடுகளை ஆய்வுகளின் மூலம் மீட்டெடுக்க வேண்டும். சித்திரைப் புத்தாண்டு தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாதது. நீங்கள் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட விரும்பினால் கொண்டாடுங்கள். அதற்கு யாரும் தடை இல்லை. அதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதையே நாம் எதிர்க்கின்றோம்.

"விரோதி வருஷம்" எப்படி தமிழ் புத்தாண்டாக இருக்க முடியும்? இதற்கு என்ன ஆதாரம்?

Share this post


Link to post
Share on other sites

ரதி,

இன்னும் ஒரு விடயம். உங்களுடைய பார்வையில் யார் தமிழறிஞர்? அவுஸ்ரேலியா சபேசன் தமிழறிஞர் இல்லை என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?

தமிழறிஞர்கள் பலர் உண்டு. அதில் பெரும்பான்மையினர் பாடல்கள் உருவாக்குவதிலேயே காலத்தை முடித்து விட்டார்கள். தமிழர்களின் பண்பாட்டு மீட்பிற்கு எதுவுமே செய்யவில்லை. மறைமலை அடிகள் போன்ற சிலர்தான் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஆகவே இவர்களிற்கு முன்பு தமிழறிஞர்கள் இருக்கவில்லையா என்ற கேள்வி அர்த்தமற்றது. இருந்தார்கள், ஆனால் பாடல்கள் இயற்றுவதோடு நின்று விட்டார்கள் என்பதுதான் சோகமான உண்மை.

Share this post


Link to post
Share on other sites

(என்னை கேட்டால் புதுவருடம் கொண்டாடுவதே வீண் விரயம் எண்டு சொல்லுவன்... அதுதான் பகுத்தறிவுக்கு ஒப்பானதாகவும் இருக்கு...)

இதுக்கை தையிலை புதுவருடமா.? , சித்திரயிலை புதுவருடமா எண்டு கொண்டு... இரண்டுமே வன்னியிலை கஸ்ரப்படும் சனத்துக்கு ஒரு பருக்கை சோறு போடவும் இல்லை போடப்போவதும் இல்லை...

எனக்கு தெரிந்தது எல்லாம் சிறுபாண்மையாக (பணம்) இருப்பவன் எதை வேண்டுமானாலும் கொண்டாடலாம்... பெருண்பாண்மையாக (எதுவுமே) இல்லாதவன் அதை வேடிக்கை பாக்கலாம்... புது வருடத்தை இருப்பவன் கொண்டாடலாம் , இல்லாதவர்கள் அப்படியா எண்று வேடிக்கை பாக்கலாம்... இருப்பவர்கள்( மகிழ்ச்சி, இன்னும் பலவும்) புலம்பெயந்தும் இருக்கிறார்கள் இல்லாதவர்கள் தாயகத்திலையும் இருக்கிறார்கள்... இங்கை இல்லாமை போய் சமத்துவம் வந்து எப்ப எல்லாரும் புதுவருடம் கொண்டாடும் நிலை வரும் எண்டது யாருக்கு தெரியும்...?

இப்படி இரண்டு கூட்டம் மட்டுமே இருக்கும் உலகத்திலை மூண்டாவதாய் ஒரு கூட்டமும் இருக்கு... அது புதுவருடத்தை எப்ப கொண்டாடலாம் எண்டு விவாதம் செய்யும்.... எல்லாம் புளிச்ச ஏப்பம் செய்யும் வேலை...

தமிழீழத்திலை தையிலோ, சித்திரையிலோ சனம் மகிழ்ச்சியாக புதுவருடம் கொண்டாடி எவ்வளவு காலமாச்சு....?? எங்கட மக்களின் நிலையை மாத்தி புதுவருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாட செய்யுங்கோ எண்டு கேட்டால் அதை எப்ப கொண்டாட வேணும் எண்டு விவாதம் போடுகினம்..

திருந்த மாட்டாங்கள்... மற்றவனை திருந்த விடவும் மாட்டாங்கள்...

Share this post


Link to post
Share on other sites

ரதி,

இன்னும் ஒரு விடயம். உங்களுடைய பார்வையில் யார் தமிழறிஞர்? அவுஸ்ரேலியா சபேசன் தமிழறிஞர் இல்லை என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?

தமிழறிஞர்கள் பலர் உண்டு. அதில் பெரும்பான்மையினர் பாடல்கள் உருவாக்குவதிலேயே காலத்தை முடித்து விட்டார்கள். தமிழர்களின் பண்பாட்டு மீட்பிற்கு எதுவுமே செய்யவில்லை. மறைமலை அடிகள் போன்ற சிலர்தான் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஆகவே இவர்களிற்கு முன்பு தமிழறிஞர்கள் இருக்கவில்லையா என்ற கேள்வி அர்த்தமற்றது. இருந்தார்கள், ஆனால் பாடல்கள் இயற்றுவதோடு நின்று விட்டார்கள் என்பதுதான் சோகமான உண்மை.

மன்னிக்கவும் சபேசன் இதை எழுவதற்கு தற்போதைய காலத்தில் நிறைய பேர் இணையத்தினூடாக எழுதுகிறார்கள்.எனக்கு நல்ல கட்டுரை எழுத தெரிந்திருந்தால் பல்கலைகளகத்தில் தமிழ் படித்துப் போட்டு, 4,5 தமிழ் இலக்கண,வரலாற்று புத்தகங்களை வாசித்துப் போட்டு இரண்டு,மூன்று கட்டுரைகள் எழுதினால் என்னை தமிழறிஞர் எனச் சொல்வீர்களா? மற்றும் படி அவரை பற்றி தனிப்பட்ட ரீதியில் தாக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்லவில்லை.

தயா நானும் புதுவருடம் கொண்டாடி 5,6 வருடத்திற்கு மேல் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

ஆரிய அப்பட்டமான வழித்தோன்றல்களான சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர். திராவிட பரம்பரையில் வந்த தமிழனும், ஆரிய பரம்பரையில் வந்த சிங்களவனுக்கும் பொதுவாக ஒரு புத்தாண்டு அல்லது பொது திருநாள் வருவது என்பதே அடிப்படைத் தவறு.

எம் தேசிய விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அல்ல 3000 ஆண்டுகளாக நடக்கும் ஆரிய - திராவிட போர் என்று அண்மையில் வெளியான புலிகளின் பாடல் ஒன்றின் ஆரம்பத்தில் இருந்த உரையாடலில் மேற்கொள் காட்டி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களவர் ஆரியர்களின் வழித்தொன்றல்கள் என்பதற்கான ஆதாரம் எங்கே மகாவம்சத்தில் இருந்தா எடுத்தீர்கள்? :wub: சிங்களவர்கள் தம்மை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதே ஒரு புரட்டு என ஒரு பக்கத்தார் சொல்லும் போது? :lol:

இது நிழலிக்கு சொல்லவில்லை. என்னை பற்றி நானே சொல்லி கொள்வது.

எனக்கு செத்த வீட்டில் பிணமாகவும், கலியாணவீட்டில் மணமகனாகவும் இருக்க மட்டுமே விருப்பம். :lol:

Share this post


Link to post
Share on other sites

தாங்கள் என்ன கூற முனைகின்றீர்கள் என்று புரியவில்லை..ஆனால் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர் என்று மட்டும் தெரிகின்றது. உங்கள் கேள்விகளுக்கு என் விளக்கம் இது தான். நாம் செய்வது மூட நம்பிக்கையான செயல் என்று நாம் அறிய எல்லோருக்கும் ஒரு காலம் வரும். அது 16 இலும் வரலாம் 56இலும் வரலாம். நம்பிக்கைகள் - அது என்ன வகையாயினும், அவற்றை உய்த்துணர பக்குவம் வர வேண்டும். புத்தன் கூட துறவறம் சென்றது திருமணம் புரிந்த பின்னர் தான். நம்பிக்கைகளை திணிக்க முடியாது. எமது கலாச்சாரமானது எம்மை நாம் பக்குவப்படும் வரை வளர்க்கின்றது. அந்த வளர்ப்பினிலே நாம் இருக்கும் போது அக்கலாச்சாரம் எமக்கு புகட்டும் சில மூட நம்பிக்கைகளுடன் நாமும் ஒத்து போகின்றோம். அதற்காக நாம் பக்குவப்பட்ட பின்னரும் அதனையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. பக்குவப்பட்ட பின்னரும் பாவம் செய்பவர்கள் தாம் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள்.

நான் எதுவும் புதுசாச் சொல்லேல்ல.. தமிழர்களை இரண்டு பேர் முட்டாள் ஆக்கினம்.

1. அடிப்படை வரலாற்று ஆதார அறிவியல் ஆராய்வின்றி விடயங்களை சந்ததிக்கு கடத்திறவை.

2. ஆராய்வின்றி.. விடயங்களை மாத்திறம் புரட்சி பண்ணுறம் என்று தங்கள் தங்கள் அறியாமைகளுக்கு புரட்சி வடிவம் கொடுத்து திணிக்கிறவை. இவை அதிகம் விரும்புவது தாங்கள் புரட்சிவாதிகள்.. பகுத்தறிவாளர்கள் என்று இனங்காட்டப்பட வேண்டும்.. அதனூடு புகழ் தேட வேண்டும் என்பதே..!

இந்த இரு தரப்பும் எமக்கு ஆபத்தானது. இந்தக் கட்டுரையாளர் வகை 2 ஐ சார்ந்தவர். இதைவிட உங்களுக்கு தெளிவாச் சொல்ல எனக்குத் தெரியல்ல. எதுக்கும் தமிழ்நெட் கட்டுரையையும் ஒருக்கா வாசியுங்கோ. ஆங்கிலம் வாசிக்க பஞ்சி இல்லை என்றால்..! :wub:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்
  • மட்டுவில் வியாளனுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு போல படுகுது. பிள்ளையான் கட்டாயம் வெல்லுவார்  இம்முறை கூத்தமைப்பு கிழக்கில் மரண அடி  வாங்கவேண்டும், கிழக்கின் அரசியல் வேறு வடக்கின் அரசியல்வேறு என்று இந்த கூத்தாடிகளுக்கு புரிய வேண்டும். கும்மான் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் ,முஸ்லிம்களுக்கு இவரது பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைவதால் இம்முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்   
  • மழை மேகம் பொழியுமா... நிழல் தந்து விலகுமா...
  • சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020     கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல்லிக்காட்டினார். எனக்கு கம்பதாசனைப்பற்றி அவர் எழுதிய சிறுநூலையும் அளித்தார் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் கம்பதாசனை கொஞ்சம் கவனம் எடுத்து படித்தது அதன் பிறகுதான். அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் ஓர் இலக்கியவிழாவில் சந்தித்தேன். மீண்டும் கம்பதாசன் பற்றிய பேச்சு, ஒரு கவிதையை அன்றும் பாடிக்காட்டினார் கம்பதாசன்   இப்படி ஒருவரின் ஆத்மாவை மறைந்த ஒரு படைப்பாளி கொள்ளைகொள்வது இலக்கியத்தின் வியப்புகளில் ஒன்று. சென்ற ஆண்டு விந்தனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது – அதாவது ஒரே ஒருவரால். அவர் விந்தனின் பெரும்பக்தர். விந்தனின் நூல்களை தானே அச்சிட்டு கிட்டத்தட்ட இலவசமாக வினியோகம் செய்தார். என்னை ஓர் இலக்கியவிழாவில் சந்தித்து விந்தனின் நூல்களை அளித்து விந்தனைப்பற்றி எழுதவேண்டும் என்று கோரினார். நான் எழுதினேன் திராவிட இயக்க எழுத்தாளரான விந்தனுக்கு திராவிட இயக்க ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பணமேதும் சேர்க்கவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று நான் சொல்லியும்கூட எவரும் அவரைப் படித்ததாகவோ ஏதேனும் எழுதியதாகவோ தெரியவில்லை. ஆனால் ஒருவன் எஞ்சியிருக்கிறான். அவன் எப்போதுமிருப்பான் சிலோன் விஜயேந்திரன் திருப்பூர் கிருஷ்ணன் பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் சிலோன் விஜயேந்திரன் போல் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். *சிலோன் விஜயேந்திரன் என்ற எழுத்தாளரை இன்று எத்தனைபேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ஆகஸ்ட் 26 அன்று தம் 58 வயதில், சென்னை திருவல்லிக்கேணி அருகே தாம் தங்கியிருந்த குடியிருப்பில், ஒரு தீவிபத்திற்கு ஆட்பட்டு இறந்து போனார் அவர். இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு பத்திரிகைச் செய்தி மூலம் இத்தகவலை அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் கண்டிருக்கிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. சிலோன் விஜயேந்திரன் ஒரு வில்லன் நடிகர். நடிகர் சிவாஜி கணேசனோடு நடித்த `பைலட் பிரேம்நாத்` என்ற அவரது முதல் படமே அவருக்குப் பெரும்புகழ் தந்தது. பிறகு `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். நடிகர் சுமன் மூலமாக `பிரளய சிம்மன்` என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். பின் தெலுங்குப் பட உலகிலும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் பெரிதும் வில்லன் பாத்திரங்களிலேயே நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கேற்ற வகையில் இருந்தது. குணத்தில் அவர் வில்லனல்ல, குழந்தை. சிறந்த நாடக நடிகரும் கூட. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். நாடக நடிப்பிற்காக `நவரச மன்னன்` என்ற பட்டம் பெற்றவர். கவிஞர் கம்பதாசனின் மாபெரும் ரசிகராக வாழ்ந்தவர். கம்பதாசனின் அற்புதமான கவிதையாற்றலைத் தமிழுலகிற்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். `கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார். `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். `அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான். அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது. மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் எனத் தமிழகத்தின் பல மூத்த பதிப்பகங்கள் சிலோன் விஜயேந்திரன் எழுத்துக்கு ஆதரவு கொடுத்தன. அவர் நிறைய எழுதினார். நடிப்பதை விடவும் எழுதுவதே அவருக்கு மிகப் பிடித்திருந்தது. மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பலரால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர். தமிழின் பழைய இலக்கியம் முழுவதையும் கற்றுத் துறைபோகியவர். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரது இலக்கிய அறிவு வியக்கச் செய்வது. பல பழம்பாடல்களை கண்களில் ஒரு மயக்கத்தோடு அவர் கடகடவென ஒப்பிப்பார். காலமாவதற்குச் சில நாட்கள் முன்பு திருவல்லிக்கேணி அருகே தற்செயலாக அவரைச் சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு அளவிட முடியாத பாசத்தோடு அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன். பல காலம் கழித்து என்னைச் சந்திக்க நேர்ந்ததால் அவரது விழிகளில் தென்பட்ட அன்பின் பளபளப்பு இன்றும் நினைக்கும் போதெல்லாம் என்னை நெகிழச் செய்கிறது. பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். வாழ்நாள் முழுவதும் வறுமை அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. தன் புத்தகங்ளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார். நான் அவருடைய ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அது நான் படிக்க விரும்பும் சிறந்த நூலாகத்தான் இருக்கும். சிறந்த நூல் அல்லாத எதையும் அவர் எழுதியதில்லை. ஆபாசக் கலப்பில்லாமல் சமூகப் பொறுப்போடு எழுதியவர். புது நூல் வெளிவந்ததும் அவர் என்னைச் சந்திக்க வருவது ஏதோ என் மூலம் ஒரு பிரதி விற்றுவிட முடிகிறது என்றல்ல. என்னைச் சந்திக்க அப்படி ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் அவர் உண்டாக்கிக் கொண்டார். நாங்கள் மணிக்கணக்கில் பேசினோமா, நாள்கணக்கில் பேசினோமா தெரியாது. பழைய இலக்கியங்கள் குறித்து அவர் பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தன் நூல் ஒன்று நா.பா. தலைமையில் வெளியிடப் படவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. நா.பா. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தார். சென்னையில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் அந்தக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இறுதியில் ஏற்புரை சொல்லும்போது சிலோன் விஜயேந்திரன் `நா.பா.வின் தலைமையில் நூல் வெளியீடு` என்ற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், நா.பா.வுக்கு நன்றி தெரிவித்து ஒலிபெருக்கியிலேயே விம்மிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார். நா.பா. காலமானபோது அவர் அடைந்த துயரம் அளவிட இயலாதது. விஜயேந்திரன் தோற்றம் வித்தியாசமானது. செம்மை கலந்து பளபளக்கும் தலைமுடி. கண்களில் எப்போதும் ஒரு சிவப்பு. கரகரப்பான குரல். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். பொதுத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட ஒரு தன்மை அவரிடம் இருந்தது. அவரின் தோற்றம்தான் அவரை வில்லன் நடிகராக ஆக்கியிருக்க வேண்டும். வாழ்வில் யாருக்கும் அவர் வில்லனல்ல. என்போன்ற பலருக்கு இனிய நண்பர் அவர். முரட்டுத் தோற்றத்தோடு அவர் திகழ்ந்தாலும் அவரைப் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் அபூர்வம். ஈ எறும்புக்குக் கூட அவரால் கெடுதல் நினைக்க முடியாது. விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். (எந்தப் பொருளில் பாடச் சொன்னாலும் சொன்னவுடன் அடுத்த கணமே தங்குதடை இல்லாமல் உடனே கவிதை பாடுபவர்களை `ஆசுகவி` என்பார்கள். தமிழ் எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் ஆசுகவியாகத் திகழ்ந்தவர். இடைக்காலப் புலவர்களில் பல ஆசுகவிகள் உண்டு.) விஜயேந்திரனும் சொன்னவடன் கவிதை பாடக்கூடிய ஆற்றல் படைத்தவர். `ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு` என்பது விஜயேந்திரன் எழுதிய நூல்களில் ஒன்று. தம் தாயார் மதுரையில் பிறந்தவர் என்றும் தந்தை ஈழத்தில் பிறந்தவர் என்றும் விஜயேந்திரன் சொன்னதுண்டு. மற்றபடி அவர் குடும்பம், உறவுகள் போன்றவை குறித்து நான் கேட்டதில்லை. `நவரசத் தனிநடிப்பு` என்றொரு நிகழ்ச்சியைப் பல இடங்களில் நிகழ்த்தினார். எழுத்தால் வருமானம் வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால் நடிப்பாலும் அதிக வருமானத்தை அவர் ஈட்ட முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். ஏதோ நடிகர்களெல்லாம் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சமூகத்தில் தவறான ஒரு பிரமை இருக்கிறது. அந்த பிரமை பெரும் வெளிச்சத்தில் மின்னும் முதல்நிலை நடிகர்களைப் பொறுத்தவரை சரி. மற்றபடி துணை நடிகர்களின் பொருளாதார நிலை சொல்லும் தரமுடையது அல்ல. இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை துணைநடிகர்கள் பொருளாதார ரீதியாக எவ்விதமெல்லாம் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தால் மனம் பதறுகிறது. விஜயேந்திரன் அவரது கடைசிக் காலங்களில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். `சாப்பிட்டீர்களா?` என்றேன். பேசாமலிருந்தார். `வாருங்கள்` என்று உணவகம் அழைத்துச் சென்றேன். நானும் அவருமாகச் சாப்பிட்டோம். கைகழுவிக்கொண்டு வந்த அவர், `இப்படி வயிறாரச் சாப்பிட்டு நெடுநாள் ஆகிறது!` என்றார். அதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்னையே கூர்மையாகப் பாசத்தோடு பார்த்த அவர், தன் கைகளால் என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் காட்சியை வியப்போடு அந்த உணவகத்தின் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இலக்கிய உலகில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த சிலோன் விஜயேந்திரன் போன்றவர்கள் பாரதியாரின் இலக்கியத்திற்கு மட்டும் வாரிசு அல்ல. அவரது வறுமைக்கும் வாரிசு. இவரைப் போன்ற பலர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரதியைப் பொருளாதார வறட்சியில் வறுத்தெடுத்த தமிழ்ச் சமூகம், அவரது இலக்கிய வாரிசுகளையும் அவ்விதமே பாரதிக்கு இணையாகத் தொடர்ந்து கெளரவித்து வருவது குறித்து நாம் மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்!     திருப்பூர் கிருஷ்ணன்     https://www.jeyamohan.in/132375/